Tuesday, December 22, 2009

அனானிகள், ஆட்சென்ஸ், கருத்துச் சுதந்திரம் - ஈரோடு சங்கமம் - கலந்துரையாடல்

கலந்துரையாடல்களில் அனைவரது கவனத்தையும் சிதறாமல் வைத்திருக்க முடியுமா? முடியும் என்றே தோன்றுகிறது ஈரோடு மாநகரில் நடைபெற்ற பதிவர்கள் & வாசகர்கள் சந்திப்பில் நடைபெற்ற கலந்துரையாடலைப் பார்த்த பொழுது..

4 மணிக்கு ஆரம்பித்த நிகழ்ச்சி வாழ்த்துப்பாடல், வரவேற்புரை, சிறப்புரைகள், வாழ்த்துரை என்று சீரே நடைபெற்றது. யார் யார் என்னென்ன தலைப்புகளில் பேசினார்கள் என்பதைப் பற்றி முந்தைய இடுகையில் குறிப்பிட்டிருந்தேன். அதற்குப் பிறகு கலந்துரையாடல் ஆரம்பம் ஆனது.

கலந்துரையாடல் நிகழ்ச்சியை வழி நடத்த அன்பர்கள் லதானந்த், பழமைபேசி, கேபிள் சங்கர், அப்துல்லா, வெயிலான் மற்றும் ஸ்ரீதர் மேடையேறினர்.




அரங்கில் இருப்பவர்கள் கேள்விகளைக் கேட்கலாம் என்று கூறியவுடன் வந்த முதல் கேள்வி அனானிகள் பற்றித்தான்.

அனானிகளை என்ன செய்வது? அனானிகளின் பின்னூட்டத்தை மட்டறுப்பது தேவையா? போன்ற கேள்விகள் எழுந்தன.

அனானிகளின் எதிர்மறைக் கருத்துகளைத் தாங்கிக்கொள்ளும் பக்குவம் இருக்கிறது என்று சிலரும், முகமே இல்லாமல் பின்னூட்டமிடுபவர்களுக்கு எதற்கு மரியாதை என்று சிலரும் காரசாரமாக விவாதித்தனர். இடையே அனானிகளின் பின்னூட்டங்களில் உள்ள கருத்துகளுக்கு பதிவுத்தளத்தை உருவாக்கியவர் என்ற முறையில் பதிவரே பொறுப்பு என்று கூறப்பட்டது.

பிறகு தமிழில் பதிவெழுதுவோரால் ஏன் ஆட்சென்ஸைப் பயன்படுத்த முடியவில்லை என்ற விவாதம் நடந்தது. ஆட்சென்ஸைப் பயன்படுத்த வேண்டுமென்றால், நம் பதிவின் மையக்கருத்துடன் ஒத்த தமிழ்த் தளங்களைச் சேர்க்க வேண்டும். தமிழில் எத்தனை தளங்கள் ஆட்சென்ஸைப் பயன்படுத்தத் தயாராக உள்ளனர்? என்ற கேள்வியைக் கேட்ட பொழுது பதில் இல்லை!! அன்பர் கேபிள் சங்கர் கடைப்பிடித்து வரும் முறை தான் இன்றைக்கு விளம்பர வருமானம் கிடைக்க வழி என்று தோன்றியது.

அண்மையில், விக்ரம் புத்தி என்ற ஐஐடி பட்டதாரி அமெரிக்காவின் முன்னாள் அதிபரைச் சாடி அவதூறாகக் குறிப்பிட்டு இருந்த கருத்துகளுக்காக 4 ஆண்டுகள் ஜெயில் தண்டனையைச் சந்தித்து உள்ளார். இது போலவே சிலவமயம் பதிவர்களும் தங்கள் கருத்துகளை அவதூறாக வெளியிடுவதைப் பார்க்க முடிகிறது.

கருத்துச் சுதந்திரம் தேவை என்ற போதிலும், பதிவர்கள்  தங்கள் கருத்துக்களையும் வெளியிடுவதில் உள்ள சிக்கல்களைப் பற்றிக் கூறும்படி நான் கலந்துரையாடல் நடத்துனர்களைக் கேட்டுக்கொண்டேன்!! அன்பர்கள் என்னையே கூறுமாறு கேட்டுக் கொண்டதால் நானே சில சிக்கல்களைக் கூறினேன். இது குறித்த பதிவை வழக்கறிஞர் பிரபு ராஜதுரை எழுதியுள்ளதை பதிவர் நந்து நினைவு கூற, அந்தப் பதிவில் உள்ள கருத்துகளை விளக்கினேன்.

பதிவர்கள் அனைவரும் படிக்க வேண்டிய பதிவு இது!! கொஞ்சம் பயமுறுத்துவது போலத் தெரிந்தாலும் வழக்கறிஞர் பிரபு குறிப்பிட்டுள்ள கருத்துகள் நடக்க வாய்ப்புகள் உள்ளன என்பது உண்மை!! அந்தப் பதிவு இதோ..

இந்தக் கலந்துரையாடல் நடக்கும் பொழுது "நம் பதிவுகள் அனைத்தும் தமிழக அரசு உளவுத்துறையினரால் பார்க்கப்படுகிறது" என்று அன்பர் அப்துல்லா கூறியது பலருக்கு கிர்ர்ர்ர்ரென்று இருந்தது.

"நம் கருத்துகளைச் சரியான முறையில் ஆனால் யாரையும், எந்த அமைப்பினரையும் அவதூறு செய்யாமல் வெளியிடுவது மிகவும் தேவையான ஒன்று. அதனால் எதற்கும் பயப்பட வேண்டாம்" என்று அன்பர் பழமைபேசி கூறியது பரவலாக வரவேற்கப்பட்டது.

இதையடுத்து அன்பர் வால்பையன் ஹாக்கிங் செய்வதில் இருந்து தவிர்க்க செய்ய வேண்டியது என்ன என்பதைப் பற்றியும், எவ்வாறு நம் ஜிமெயில் பயனர் முகவரியும் கடவுச்சொல்லும் சூரையாடப்படுகிறது என்பதைப் பற்றியும் விளக்கினார்.

கலகலப்பாகவும் பயனுள்ளதாகவும் சென்ற கலந்துரையாடல் 7 மணியளவில் முடிவிற்கு வந்தது. அன்பர் கதிரின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி முடிவிற்கு வந்தது. பிறகு, பரவலாக அனைவரிடமும் பேசிக்கொண்டிருக்கையில், ஈரோடு அன்பர்கள் இரவு விருந்திற்கு அழைத்தனர். விருந்திற்குச் செல்லும் முன் அனைவருக்கும் இலவசமாக ஈரோடு வரலாறு பற்றிய நூலை வழங்கினார்கள். அகநாழிகை பதிப்பகத்தில் வெளியான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.


சைவம், அசைவம் என இருவகையான உணவை பாக்கு மட்டைத் தட்டின் மேல் வாழை இலையுடன் பரிமாறியது எங்கள் (கொங்கு) மண்ணின் பாரம்பரியத்தை நினைவூட்டியது.

எங்களுக்கு மீண்டும் 3 மணி நேரப்பயணம் இருந்ததால் எட்டு மணியளவில் அன்பர்களிடம் விடைபெற்றுக்கொண்டோம்.

வழக்கமாக விடுமுறை நாட்களில் உறவினர்களுடனும், நண்பர்களுடனும் செலவழித்த நிறைவு ஈரோட்டில் இருந்து கிளம்பிய பொழுது எங்களுக்கு ஏற்பட்டது!! தமிழால் எனக்கு இத்தனை உறவினர்கள் கிடைத்திருக்கிறார்கள் என்று நினைவும் நிறைவும் ஏற்பட்டது!!

ஈரோடு அன்பர்களுக்கு என் நன்றிகளும் வாழ்த்துகளும்!!

******************


கலந்து கொண்ட அன்பர்கள்:

(சென்னையில் இருந்து)

கேபிள் சங்கர், தண்டோரா, பொன்.வாசுதேவன், பட்டர்பிளை சூர்யா, புதுகை அப்துல்லா, ரம்யா, வானம்பாடிகள்

( திருப்பூரில் இருந்து )

வெயிலான், ஈரவெங்காயம், சொல்லரசன், பரிசல்காரன், முரளிகுமார் பத்மநாபன், நிகழ்காலத்தில், ராமன்

( மதுரையில் இருந்து )

ஸ்ரீதர், சீனா, தேவராஜ் விட்டலன், ஜெர்ரி, கார்த்திகைப்பண்டியன்

(ஈரோட்டில் இருந்து)

ஆரூரன், கதிர், பாலாசி, வால்பையன், வசந்தகுமார், அகல்விளக்கு, கார்த்திக், கோடீஸ்வரன், நந்து, சண்முகராஜன், தாமோதர் சந்துரு, சங்கமேஸ்வரன், சுமஜ்லா, ஈரோடுவாசி, நண்டு நோரண்டு, சிவாஜி,வி.என்.தங்கமணி

(உடுமலையில் இருந்து)

செந்தில்வேலன், நாகா, உடுமலை.காம் சிதம்பரம்

(கோவையில் இருந்து)

தமிழ்மணம் காசி, லதானந்த், பழமைபேசி, என். கணேசன், சங்கவி

கரூரில் இருந்து இளையகவி, நாமக்கலில் இருந்து முனைவர் இரா.குணசீலன், நாமக்கல் சிபி, பெங்களுரில் இருந்து பட்டிக்காட்டான், தாராபுரத்தில் இருந்து அப்பன் மற்றும் வாசகர்கள். (அன்பர்கள் பெயர் விடுபட்டிருந்தால் தெரிவிக்கவும்.)

...

34 comments:

vasu balaji said...

வழக்கறிஞர் பிரபுவின் இடுகையை பகிர்ந்தமைக்கு நன்றி. தங்களோடு இன்று அலைபேசியில் பேசியது மிக்க மகிழ்வாயிருந்தது.

ஈரோடு கதிர் said...

மீண்டும் மிக அருமையான தொகுப்பு...

முடிந்த வரையில் கலந்து கொண்ட பதிவர்கள் பெயர் சேகரிக்கப்பட்டிருக்கிறது..

அகலவிளக்கு ராஜா பொறுப்பில் அது இருக்கிறது... இரண்டு நாட்களில் அந்த விபரம் வெளிவரும் என நம்புகிறேன்

நன்றி செந்தில்

குப்பன்.யாஹூ said...

But in Future this bloggers group will go for what, to form a political party or to do free eye check up camps, or whats the goal, bloggers are going for.

வால்பையன் said...

me the first!

வால்பையன் said...

முழுமையான பகிர்வு தல! மிக்க நன்றி

cheena (சீனா) said...

அன்பின் செந்தில்

நல்லதொரு இடுகை - சந்திப்பினை அழகாக விளக்கியது நன்று

நல்வாழ்த்துகள் செந்தில்

butterfly Surya said...

நன்றி நண்பா.

இராகவன் நைஜிரியா said...

// கலந்து கொண்ட அன்பர்கள்: //

உடலால் கலந்துக் கொள்ள இயலவில்லை. மனதால் கலந்துக் கொண்டேங்க..

இராகவன் நைஜிரியா said...

சுவையாக சொல்லியிருக்கின்றீர்கள் செந்தில். வாழ்த்துகள்.

geethappriyan said...

அருமை நண்பரே
இரண்டாம் பகுதியும் நன்று.

எம்.எம்.அப்துல்லா said...

அண்ணே,

உங்களை அன்று சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சி எனக்கு.

:)

Anonymous said...

என்ன ஈரோட்டிலிருந்து நாமக்கல் சிபியா??? அவர் பேர்லயே நாமக்கல் இருங்குதுங்க. பழமைபேசி உடுமலைக்காரர் இல்லையா?

ஆரூரன் விசுவநாதன் said...

நிகழ்ச்சிகளை அழகாக, தொகுத்து வழங்கியிருக்கிறீர்கள் செந்தில....வாழ்த்துக்கள்.....

கலையரசன் said...

ம்.. ரைட்டு போகட்டும்!!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

நன்றி பாலாண்ணே, உங்களுடன் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது.

நன்றி கதிர், தொகுப்பை வெளியிடுங்கள்.

@Kuppan Yahoo, Come on.. This is not a political party. Erode Bloggers groups has some plans and they will let u know by their actions.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

நன்றி வால்பையன்.

நன்றி சீனா சார். தங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி.

நன்றி வண்ணத்துப்பூச்சியார்.

சிதம்பரம் said...

முக்கியமாக தமிழ்மண காசி அவர்களை விட்டு விட்டீர்கள் செந்தில்? அருமையான பதிவு

கண்ணா.. said...

பாஸ் அதுக்குள்ள அடுத்த பார்டா..?

உங்கள் சுறுசுறுப்பு வியக்க வைக்கிறது..

//எம்.எம்.அப்துல்லா said...
அண்ணே,

உங்களை அன்று சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சி எனக்கு//


அப்துல்லா அண்ணே உங்க தன்னடக்கத்துக்கு அளவே இல்லையாண்ணே.....

எல்லாரையும் அண்ணேன்னு சொல்லுறீங்க....

க.பாலாசி said...

கோவையிலிருந்து சங்கவி (http://sangkavi.blogspot.com/) என்ற அன்பரும் வந்திருந்தார்.

நன்றி நண்பரே...இவ்வளவு நிகழ்வுகளையும் தொகுத்து விரிவானதொரு இடுகையாய் அளித்தமைக்கு...

Anonymous said...

So, you decided about anonyomous commentators in blogs that they are like vermins to avoid.

Anonoymous commentators are like porn sites. Internet does not block such sites, do they? The idea behind allowing such sites is that sex - of any kind - is an integrated part of human life; and, the more we block such things, the more crashing our failures. We cant stop natural act. Can we? Such sites serve society in the same way brothels serve. A good society should allow such things; and leave it to people the choice to accept or reject it, at their personal level.

Coming to anonyomous commentators in your blogs, they are of both kinds: good and bad. People resort to anonymity because internet affords it, and, as the lawyer has told us, divulging one's identity, esp. if one is a female, is fraught with a varieity of undesirable consequences.

Anonoymous commentators feel free to comment upon your blogposts. So all that they write is 100/100 honest. Their comments hurt you, because, more often, the bloggers expect only praise; and, to be honest is to pass adverse comments too. So, bloggers are afraid of adverse comments from anonymous commentators.

It is a craven cowardice அப்பட்டமான கோழைத்தனம் to try to gag the commentators' mouth on the plea they are nameless. The bloggers who spoke against anonymous commentators are cowardly.

Come one, write back to me. I will tell you more.

If you conduct a meeting at Chennai, I will appear there and speak on this subject, on the stage, with my own name which is ANONYMOUS COMMENTATOR OF TAMIL BLOGS.

Jazeela said...

உண்மையில் நெகிழ்வாக உணர்கிறேன் செந்தில். எந்த உறவும் நட்புமில்லாதவர்களை வெறும் எழுத்தில் உணர்ந்து அவர்களை சந்திக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் சென்னை, மதுரை, திருப்பூர், கோவை என்று பல்வேறு இடத்திலிருந்து கலந்துக் கொண்டது மிக சிறப்பு. பகிர்வுக்கு நன்றி.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாங்க இராகவன் அண்ணே, நன்றி.

வாங்க கார்த்திகேயன், நன்றி.

வாங்க அப்துல்லா அண்ணே. உங்களைச் சந்தித்ததில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அனானி அன்பரே, தவறிற்கு வருந்துகிறேன். இப்பொழுது திருத்திவிட்டேன். நன்றி.

நன்றி ஆரூரன் விசுவநாதன்.

வாங்க கலை. நன்றி.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாங்க கண்ணா, அப்துல்லா அண்ணானுக்கு எல்லோர் மனதிலும் தனி இடம் இருப்பது அதனால் தான்.

வாங்க பாலாசி. பதிவர் சங்கவியின் பெயரைச் சேர்த்துவிட்டேன். நன்றி

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

Hi Anonymous commentator, you have give nice comments.

Bloggers meet were not against those you are commenting in positive note.

If you were following blogs, you should be aware of people using Anonymous mask for passing abusive comments. Bloggers are mostly ready to accept all types of comments. But, comments abusing individuals, organisation and beliefs are not acceptable.

I hope you understand this stand. Pl. give your comments.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாங்க ஜெஸிலா. வெவ்வேறு ஊர்களில் இருந்து எழுத்தின் மீது ஆர்வம் கொண்டு வந்தவர்களை நினைத்தால் நெகிழ்வாகத்தான் இருக்கிறது.

V.N.Thangamani said...

செந்தில் உங்களை தெரியாமல் என்ன
நன்றாக நினைவிருக்கிறது.
உங்கள் கருத்தோடு நான் உடன்படுகிறேன்
என்று சொன்னீர்களே.
உங்கள் மெயில் முகவரி அனுப்புங்கள்.
thangamani@gmail.com
மேலே உள்ள பதிவில் என் பெயரைகாணோம்
நானும் உள்ளேனய்யா!

KARTHIK said...

தல அந்தன்னைக்கு உங்கள பாத்ததும் ரொம் சந்தோசம்
நீங்களும் ரொம்ப நல்லா பேசுனீங்க
அதுலையும் விக்கிபீடியாவோட வளர்ச்சிபத்தி,தமிழ் மற்றும் பின்லாந்து மொழிகளோட பங்களிப்பு பத்தி...
வந்திருந்தவங்களல ஒருசிலராவது அது பத்தி கண்டிப்பா யோசிப்பாங்க செயல்படுவாங்க அந்த பெருமை உங்களையே சேரும் :-))

அப்புறம் ஒரு கேள்விங்க
அது என்னங்க சினிமா படம் மாதிரி ஒருத்தர் இங்லீஸ்ல கேள்வி கேட்டா பதிலும் ஆங்கிலத்துலையே சொல்லுரீங்க.
தல நான்லாம் கைநாட்டு கேஸ் :-))

@ ராம்ஜி
// whats the goal,//

என்னங்க நாலுபேர் சேந்தா அது எதாவது இலக்க நோக்கித்தான் இருக்கோனுமாங்க
இப்படி நாலாத்திசைகள்ல இருந்து வந்தவங்கள சந்திக்கவெச்சதே கோல்தானுங்க :-))

Anonymous said...

So you want me to write back.

//I hope you understand this stand. Pl. give your comments.//

Have you written anything that is difficult to understand?

I understood quite clearly. Your point is that using the anonyomous mask, people put in nasty comments provocative and obscene.

That angers you - and rightly. Ok.

What, if a person with his real name, puts in the same comments - provocative and obscene. Will you give him a different treatment?

I raise this question because, the mere fact of being nameless provokes you more than that of being with a name!

In your meeting, there was a general objection to all kinds of anonymous commentators or not?

The crucial point I make and want it to be accepted is this:

WHETHER ANONYOMOUS OR WITH A NAME, ALL OBSCENE AND PROVOCATIVE COMMENTS WITH THE INTENT TO MALIGN INDIVIDUALS AND INSTITUTIONS, SHOULD BE HATED.

THERE IS NO QUESTION WHO IS TO BE HATED MORE BAD AND WHO, LESS.

I dont hope you understand. Because I know you will understand. It is so easy Mr.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

Anonymous said...

//What, if a person with his real name, puts in the same comments - provocative and obscene. Will you give him a different treatment?

I raise this question because, the mere fact of being nameless provokes you more than that of being with a name!//

Dear Friend, whether nameless or not treatment is going to be the same.

If he comes with his name, we could know the person behind obscene comments.

//The crucial point I make and want it to be accepted is this:

WHETHER ANONYOMOUS OR WITH A NAME, ALL OBSCENE AND PROVOCATIVE COMMENTS WITH THE INTENT TO MALIGN INDIVIDUALS AND INSTITUTIONS, SHOULD BE HATED.

THERE IS NO QUESTION WHO IS TO BE HATED MORE BAD AND WHO, LESS.//

True and I agree with you. Stand is same with all bloggers. But, people passing obscene don't use their name or email id.

Thanks for your comments!!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

தங்கமணி ஐயா, வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. மன்னிக்கவும். தங்கள் பெயர் இப்பொழுது திருத்திவிட்டேன்.

வாங்க கார்த்திக். தங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. சிலவமயம் ஆங்கில பின்னூட்டங்களுக்கு ஆங்கிலத்தில் எழுதுவது சரியாகத் தோன்றியது.

பழமைபேசி said...

Very Nice!

முனைவர் இரா.குணசீலன் said...

அருமையான பதிவை அறிமுகம் செய்துள்ளீர்கள் அனைவரும் படிக்கவேண்டிய பதிவு தான் இது..!

Anonymous said...

//WHETHER ANONYOMOUS OR WITH A NAME, ALL OBSCENE AND PROVOCATIVE COMMENTS WITH THE INTENT TO MALIGN INDIVIDUALS AND INSTITUTIONS, SHOULD BE HATED.//

Repeat and add to the above: AND SUCH COMMENTS COULD BE MODERATED BY THE BLOG AUTHOR AT HIS OWN DISCRETION.

Another anonymous

Related Posts with Thumbnails