Wednesday, September 29, 2010

ஊடகங்கள் + காமன்வெல்த் போட்டிகள்!!

இன்று உங்கள் மனத்திரையை ஆக்கிரமித்துள்ள விசயங்கள் எவையவை? அவற்றுள் எத்தனை சதவிகிதம் ஊடகத் திணிப்பால் மனதினுள்ளே புகுந்துள்ளன? 


இன்றைய ஊடகங்கள் நம் மனத்திரையைக் ( Mind share) கைப்பற்றுவதையே குறிக்கோளாகக் கொண்டு இயங்கி வருகின்றன. இல்லாதவற்றை இருப்பதாகக் காட்டுவது, இருப்பதன் தன்மையை வேறுமாதிரியாக மனதில் பதிய வைப்பது, செய்திகளில் சிலவற்றை மட்டுமே வெளிச்சம் போட்டுக்காட்டுவது என்று ஊடக நுகர்வோரை எப்படியெல்லாம் வேப்பிலை அடிக்க வேண்டுமோ.. அதைக் கச்சிதமாகச் செய்து வருகின்றன.

ஊடகங்கள் எந்த அளவிற்கு நம் கருத்தைத் தீர்மானிக்கின்றன?

பெருமளவு நம் கருத்தை ஊடகங்களே தீர்மானிக்கும் நிலை தான் இன்று நிலவுகின்றன. எந்த அமைப்பு, கட்சி சார்புடைய ஊடகங்களை நாம் பார்க்கிறோமோ படிக்கிறோமோ, அதில் வரும் கருத்துகளே நம் மனதிலும் நிற்கின்றன. சிலர் மாற்றுக் கருத்தைக் கூறும் ஊடகங்களைப் படிப்பதையும் விரும்புவதில்லை என்பது தான் உண்மை. உதாரணத்திற்கு பிபிசியையோ, சி.என்.என்னை மட்டுமோ பார்த்து வருபவர்களுக்கு அமெரிக்கப் படைகள் ஆப்கனில் சேவையாற்றி வருவதாகத் தோன்றும். ஒரு முறை அல் ஜசீராவைப் பாருங்கள். மறுபக்கத்தையும் காட்டுகிறார்கள். 

இந்திய ஊடகங்களைப் பொருத்த வரை காஷ்மீர் இந்தியாவின் ஓர் அங்கம். மேற்கத்திய ஊடகங்களைப் பொருத்த வரை இந்தியாவால் நிர்மானிக்கப்படும் காஷ்மீர் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். இதுவே வளைகுடா ஊடகங்கள் என்றால்.. இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் இந்தியக் காஷ்மீர் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள். இம்மூன்று ஊடகங்களைப் பார்த்து வருபவர்களுக்கு ஒவ்வொருவருடைய நிலைப்பாட்டைப் புரிந்துகொள்ள முடிகிறது. வரலாற்று அறிவோ, அரசியல் புரிதலோ இல்லாதவர் ஏதாவது ஒரு ஊடகத்தை மட்டும் படித்து வந்தால் என்ன மாதிரியான கருத்துகள் மனதில் பதியும்?

நடுநிலை அல்லது சார்பற்ற ஊடகங்களை இன்று எங்கு தேடினாலும் காணமுடிவில்லை. ஒவ்வொரு ஊடகமும் ஒவ்வொரு விசயத்திலும் ஒரு நிலைப்பாட்டை எடுத்துக் கொண்டு மாற்றுக் கருத்தை இருட்டடிப்பு செய்வதையே குறிக்கோளாகக் கொண்டிருக்கின்றன. நடுநிலையாகச் செய்திகளைத் தருவதாகப் புரிந்துகொள்ளப் பட்ட ஆங்கிலச் சேனல்களும் 'பரபரப்பை ஏற்படுத்தும்' விசயங்களை பரபரப்பு எற்படுத்தும் விதத்திலேயே தருவதைக் குறிக்கோளாகக் கொண்டிருக்கின்றன.

காமன்வெல்த் போட்டிகள் பற்றிய செய்திகளைப் பார்த்தால் சர்வதேசப் போட்டிகளை நடைபெறுவதற்கே ஒவ்வொரு இந்தியரும் தலைகுனிய வேண்டும் என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கத் தவறவில்லை. இங்கே இடிந்துவிட்டது, அங்கே வழுக்கிவிட்டது என்ற தோரணையிலேயே செய்திகளைத் தரும் வேளையில் நிறைகளைப் பற்றிய செய்திகளை எங்கேயும் காணவில்லை. உண்மை தான். பெருத்த ஊழல் நடைபெற்றிருப்பதற்கான அறிகுறிகள் பலவும் தெரிகின்றன. ஆனால், குறைகளை மட்டுமே காட்டும் வேளையில் சர்வதேசப் போட்டிகளை பார்த்துரசிக்க எண்ணும் ரசிகர்களை விளையாட்டு மைதானத்திற்கு வெளியிலேயே நிற்க வைக்க விருப்புகின்றனவோ ஊடகங்கள்!!
இந்தியாவில் கடைசியாக சர்வதேச அளவில் தடகளப்போட்டிகள் நடைபெற்றது 1982 ஆசியப் போட்டிகளில். கடந்த 30 ஆண்டுகளாக இத்தகைய அளவில் போட்டிகள் நடைபெறாத பொழுது, இப்பொழுது நடைபெறுவது குறைந்தது தில்லியைச் சுற்றியுள்ள மக்களுக்கு நல்ல அனுபவமாகத் தானே இருக்கும்.
இந்திய மக்களில் 40% சதவிதத்தினர் வறுமைக்கோட்டிற்குக் கீழே இருக்கும் பொழுது இப்படி ஒரு போட்டிகள் தேவையா? என்ற கேள்வி வராமல் இல்லை. ஆனால் அந்தக் கேள்வியைக் கேட்டிருக்க வேண்டியது ஆறேழு ஆண்டுகளுக்கு முன்பு.
மீண்டும் மீண்டும் இந்தியாவைப் பற்றியும் தடகளப் போட்டிகளைப் பற்றியும் இந்திய ஊடகங்கள் குறை கூறும் பொழுது எப்படி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிற்கு வருவார்கள்? கடந்த சில வாரங்களாக அமீரகத்தில் உள்ள செய்தித்தளங்கள் அனைத்தும், இந்திய ஊடகங்களை மேற்கோள் காட்டி, போட்டிகளையும் இந்தியாவையும் கிண்டல் செய்து வருகின்றன.
இன்னும் சில நாட்களே இருக்கின்றன போட்டிகள் ஆரம்பிக்க. இதற்கு மேல் தூற்றி ஒன்றும் ஆகப்போவதில்லை. ஊழல் செய்தவர்களைக் கட்டாயம் (??) சட்டம் (வேடிக்கை) பார்த்துக் கொள்ளும்.
ஆகவே போட்டிகள் தொடர்பான நல்ல விசயங்கள் என்னவென்று பார்ப்போம். போட்டிகள் வெற்றியடைய நம் ஆதரவை நல்குவோம்!!
நேரம் இருந்தால் இந்த முகநூல் (Facebook) பக்கத்தில் உள்ள படங்களைப் பாருங்கள்!!  

17 comments:

புதிய மனிதா said...

சரியாய் சொன்னீங்க ...

ஜோதிஜி said...

இதைவிட அற்புதமாய் வேறு எவராலும் புரிய வைக்க முடியாது செந்தில்.

உண்மை தான்.

சட்டம் வேடிக்கை பார்கக மட்டுமே செய்யும்.

க.பாலாசி said...

இத்தனை அழகான கட்டமைப்புகள் உண்மையில் சர்வதேச அரங்கில் நம் இந்தியர்களை தலைநிமிரச் செய்யக்கூடியவை. கடந்த இருவாரங்களாக எல்லாப்பத்திரிக்கைகளிலும் குறைகள் மட்டுமே மேற்கோள் காட்டப்பட்டுள்ளனவே தவிர எந்த நிறைகளையும் கூறவில்லையென்பது உண்மையான கூற்று.

நம்மீது நாமே சேற்றைப்பூசிக்கொள்ளும் செயல் இதுவென்றாலும் இதில் நடக்கின்ற ஊழல்களையும், மேம்போக்குத்தனத்தையும், அரசியல்வாதிகளின் அஜால்குஜால் வேலைகளையும் மக்களுக்கு வெளிச்சம் போட்டுக்காண்பிக்கவேண்டிய கடமை ஊடகங்களுக்கு இருக்கிறதென்பதை மறுக்கமுடியாது. எப்படியோ இதுவரை சர்வதேச அரங்கில் கட்டமைப்பில் இந்தியாவுக்கு உண்டான தலைகுனிவை இந்த போட்டிகளை வெற்றிகரமாக நடத்திக்காட்டி நிமிரவைக்கவேண்டும்.

நல்ல கட்டுரைங்க.

சென்ஷி said...

நல்ல கட்டுரை செந்தில்.

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

மிக சிறந்த அலசல் நண்பரே . புகைப்படங்களுடன் தகுந்த தகவல்கள் அனைத்தும் சிறப்பு . இதுவரை இவை பற்றி நான் அறிந்திராத பல தகவல்களை இன்று அறியத் தந்தது தங்களின் பதிவு .
பகிர்வுக்கு நன்றி .

பழமைபேசி said...

நன்று!

தீர்மாணிக்கும் -- தீர்மானம்

வானம்பாடிகள் said...

மின்னஞ்சலில் பார்த்தேன். நல்ல கட்டுரை

சந்தனமுல்லை said...

Gud one!

முகிலன் said...

சரியாகச் சொன்னீர்கள். 

தயவு செய்து facebook-ஐ முகநூல் என்று அழைப்பதை நிறுத்துங்கள். அது ஒரு ப்ரண்ட் நேம். 

sakthi said...

கடந்த சில வாரங்களாக அமீரகத்தில் உள்ள செய்தித்தளங்கள் அனைத்தும், இந்திய ஊடகங்களை மேற்கோள் காட்டி, போட்டிகளையும் இந்தியாவையும் கிண்டல் செய்து வருகின்றன

kashtama than erukku ketka

sweatha said...

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்கள் அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில்
ஜீஜிக்ஸ் அதிகம் பார்க்கப்பட்ட சமுதாய, பொழுதுபோக்கு நோக்கோடு எழுதும்
தலை சிறந்த எழுத்தாளர்களை ஊக்குவித்து வாரம் 500 பரிசும் தருகிறார்கள் .உங்களுடைய சக ப்ளாகர்ஸ் நிறைய பேர் பரிசும் பெற்றிருகிரார்கள் .(இயற்கை விவசாயம், பிளாஸ்டிக் கழிவுகள், அரசியல் எதிர்பார்ப்புகள், மரம் வளர்ப்பு, சுகாதாரம், மழை நீர் சேமிப்பு , மக்கள் விடுதலை, சமுதாய குறைபாடுகள், சத்தான உணவுகள், உடல் நலம், மருத்துவம், கணினி, தொழில்

வளர்ச்சி, பங்கு சந்தை, கோபம் குறைக்கும் வழிகள், குடும்பத்தில் அன்பு பாராட்டும் செயல்கள், அன்பு புரிதல்கள், பிள்ளை வளர்ப்புகள் , கல்வி) இதில் எதை பற்றி வேண்டுமானாலும் நீங்கள் எழுதலாம்

பழமைபேசி said...

//அது ஒரு ப்ரண்ட் நேம்//

front name??

brand name???

friend name???

முகிலன், சித்த விளக்கிச் சொல்லுமய்யா???

ஹுஸைனம்மா said...

ஊடகங்களுக்கு சுய கட்டுப்பாடு ஒருபோதும் வராது. கடுமையான கட்டுப்பாடுகள் இதுபோன்ற விஷயங்களில் கட்டாயம் தேவை.

அப்துல்மாலிக் said...

//தொடர்பான நல்ல விசயங்கள் என்னவென்று பார்ப்போம். போட்டிகள் வெற்றியடைய நம் ஆதரவை நல்குவோம்!!//

கண்டிப்பாக..

Vetrimagal said...

//மீண்டும் மீண்டும் இந்தியாவைப் பற்றியும் தடகளப் போட்டிகளைப் பற்றியும் இந்திய ஊடகங்கள் குறை கூறும் பொழுது எப்படி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிற்கு வருவார்கள்? கடந்த சில வாரங்களாக அமீரகத்தில் உள்ள செய்தித்தளங்கள் அனைத்தும், இந்திய ஊடகங்களை மேற்கோள் காட்டி, போட்டிகளையும் இந்தியாவையும் கிண்டல் செய்து வருகின்றன.
இன்னும் சில நாட்களே இருக்கின்றன போட்டிகள் ஆரம்பிக்க. இதற்கு மேல் தூற்றி ஒன்றும் ஆகப்போவதில்லை. ஊழல் செய்தவர்களைக் கட்டாயம் (??) சட்டம் (வேடிக்கை) பார்த்துக் கொள்ளும்//

Very well said. Nice blog, Thanks.

ஈரோடு கதிர் said...

||சட்டம் (வேடிக்கை) பார்த்துக் கொள்ளும்||

கண்ணை மூடிக்கொண்டிருக்காதுன்னு உச்ச நீதிமன்றம் சொல்லியிருக்குங்க

Tzeals said...

Well said see the pictures here by Canada hockey team here http://www.facebook.com/home.php?#!/album.php?aid=235412&id=151599479507

u will realize how media is biased
sorry for not using tamil

Related Posts with Thumbnails