Wednesday, January 5, 2011

கொலாஜ் - 05-01-11

நான் அன்றாடம் படிக்கும், கேள்விப்படும் விசயங்களுள் சிறந்தவற்றை அன்பர்களுடன் பகிரும் ஊடகமாகவே என் பதிவுத் தளத்தைக் கருதி வருகிறேன். சில விசயங்கள் விரிவானதாக எழுதும் வகையிலும், பல விசயங்கள் துணுக்கு பாணியிலும் இருக்கும். இப்படி சின்னச் சின்ன விசயங்களை அளவின் காரணமாகப் பதிவாக எழுதுவதைத் தவிர்த்து வந்தேன். இவற்றை "கொலாஜ் - Collage" என்ற பெயரில் தொகுத்து பதிவேற்றவுள்ளேன். 

கொலாஜ்

நான் எழுதும் பதிவுகளில் பெரும்பாலானவை இணையத்திலோ, புத்தகங்களிலோ படித்தவையாகவே உள்ளன. அவற்றைப் பதிவாக்கும் பொழுது ஒன்று வெட்டி ஒட்டுகிறேன், அல்லது பிரதியெடுக்கிறேன். இப்படிப் பல துணுக்குகளைப் வெட்டியோ, பிரதியோ எடுத்து எழுதும் பதிவிற்கு "கொலாஜ்" என்ற பெயரை வைக்கிறேன். "கொலாஜ்"ல் பெரும்பாலானவை சுட்ட செய்தியாக இருந்தாலும் அங்காங்கே அனுபவங்களாலும், கருத்துகளாலும் வண்ணமிட்டுத் தரவுள்ளேன். (இதற்கு முன்பு பாதசாரி என்ற பெயரில் எழுதி வந்த பதிவர் கொலாஜ்களைத் தந்துள்ளார் என்பது குறுஞ்செய்தி) 

2011 எப்படி இருக்கும் என்ற ஆருடங்களை ஏற்கனவே பல இடங்களில் படித்திருக்கிறோம். வணிகத்துறை, இணையத்துறை, தொழில்நுட்பத்துறைகளில் 2011ல் கவனிக்க வேண்டிய விசயங்களுள் சில..

எஃப்-வணிகம் (F-Commerce) 

ஈ-காமெர்ஸ், எம்-காமெர்ஸ் எல்லாம் நமக்குப் பழகிய கேள்விப்பட்ட விசயமாகிவிட்டது. அல்லது அசைபோட்ட விசயங்களாகிவிட்டன. இதோ இப்பொழுது எஃப்-காமெர்ஸ். எஃப்(F) - ஃபேஸ்புக் Facebook. இது வரையில் ஃபேஸ்புக் தளத்தை நண்பர்களுக்கு நம் நிலையைப் புதுப்பிக்கவும், தகவல்களைப் பரிமாற்றம் செய்யவும் பயன்படுத்துகிறோம். கூடவே சில வணிக நிறுவனங்களின் பக்கங்களை "லைக்"கவும் செய்கிறோம். "லைக்"கிக் கொண்டே இருந்தால் வணிக நிறுவனங்களுக்கு என்ன பயன்? அதற்கு விடையளிப்பதே எஃப்-வணிகம். ஃபேஸ்புக் தளத்தில் இருந்தே பொருட்களை வாங்கவும் விற்கவும் வழிவகைகளைக் கொண்டதாக எஃப்-வணிகம் அமையும்.

எம்-காமெர்ஸ் - என்பது தெரியாதவர்களுக்கு.. எம் - மொபைல்.  

காப்ட்சா விளம்பரம் ( CAPTCHA Advertising)

இணைய தளங்களிலேயே குடி கொண்டிருப்பவர்களுக்கு CAPTCHA தெரிந்திருக்கும். ஏதாவதொரு தளத்தில் கடவுச்சொல்லை உள்ளீடு செய்யும் பொழுது நம்மை சோதிக்கும் வகையில் கோணல்மானலாக எழுத்தைப் படித்து எழுதச் சொல்லும். அதற்குப் பெயர் தான் CAPTCHA (Completely Automated Public Turing test to tell Computers and Humans Apart). கடவுச்சொல்லை உள்ளீடு செய்வது மனிதர் தானா என்பதைச் சோதிப்பதே இதன் நோக்கம். சரி.. இதை வைத்து எப்படி விளம்பரம் செய்வது?

நாம் சில செய்தித் தளங்களுக்குச் செல்லும் பொழுது சில விளம்பரங்கள் வெளித் தோன்றும் (POP UP). நாமும் அவற்றை மூடிவிட்டு செய்தித்தளத்தைப் பார்வையிட சென்றுவிடுவோம். இப்படி நான் விளம்பரங்களைப் பார்வையிடாமல் போவதால் விளம்பரதாரரிற்கு என்ன இலாபம்? இதற்கு விடையளிப்பதே CAPTCHA விளம்பரங்களின் நோக்கம். நாம் அந்த விளம்பரங்களின் மீது உள்ள CAPTCHA வார்த்தையை உள்ளீடு செய்த பிறகு தளத்தை வாசிக்க முடியும்.

ம்ம்.. சில வருடங்களில் பதிவர்களின் தளங்களைப் பார்வையிடமும் CAPTCHA வருமோ?

அலுவலகத்தில் தூக்கம் - என் அலுவலகத்தில் "நம் அலுவலகத்தில் என்னென்ன வசதிகள் இல்லை?" என்ற கேள்வியுடன் ஒரு படிவத்தை நிரப்புமாறு கூறினார்கள். நான் கூறியது தூங்குவதற்கென தனி இடம் அல்லது அறை. அலுவலக வேளையில் எதற்குத் தூக்கம்? அலுவலகங்களில் வேலையின் நடுவே ஒரு அரை மணி நேரம் தூங்குவது அல்லது ஓய்வெடுப்பது நம் மூளையை உற்சாகப்படுத்துமாம். மதிய நேரம் நம்ம வீட்டில் சாப்பிட்ட பிறகு தூங்குவோமே அதோ போல.. ஆனால் 15 முதல் 30 நிமிடம் மட்டும் தூங்கினால் போதுமாம். அதற்கு மேல் தூங்கினால் விழித்த பிறகு கலக்கமாக இருக்கும். இதற்கு "Sleep Inertia" என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள். (படத்தில் உள்ளது கூகுள் நிறுவனத்தின் ஒரு அலுவலக அறை)

மங்களூர் விமான விபத்திற்கு முக்கிய காரணமாகக் கூறியிருப்பது விமானத்தின் பைலட் தரையிறங்கும் பொழுது "Sleep inertia"வில் இருந்தாராம்.  

*

அமீரகத்தில் சமீபத்தில் விசாவிற்கான சட்டத்தை மாற்றியிருக்கிறார்கள். முன்பெல்லாம் வேலை நிமித்தமான "Work Permit" விசாவை மூன்றாண்டுகளுக்குத் தருவார்கள். 2011ல் புதிதாக விண்ணப்பம் செய்பவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்குத் தான் தருவார்கள். இந்த மாற்றத்தினால் பணியாளர்களுக்குச் சாதகமும் உண்டு பாதகமும் உண்டு. மூன்று வருடங்களுக்கு ஒரே நிறுவனத்தில் பணியாற்ற வேண்டிய கட்டாயம் இருக்காது.  அதே நேரம் சரியாக பணியாற்றாத பணியாளர்களை நீக்க தொழில் நிறுவனங்களுக்கு இந்த சட்டம் உதவியாக இருக்கும். இரண்டாடிற்கு ஒரு முறை புதிதாக விசாவைப் புதுப்பிப்பது நிறுவனங்களுக்கு பொருளாதார சுமையாகவும் கருதுகிறார்கள்.

பணியாளர்களைப் பொருத்த வரையில், இரண்டாண்டு முடிந்த பிறகு ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறுவது எளிதாகிறது.  முன்பைப் போல 6 மாத தடை ( BAN) இனி இல்லை. சுமூகமாக இரண்டாண்டை முடித்துவிட்டு வெளியேறினால் அடுத்த நிறுவனத்திற்கு மாறுவதில் பிரச்சனையிருக்கப் போவதில்லை.

அமீரகத்தில் வேலைக்கான விசா இரண்டு வருடத்திற்குத் தான் என்பதைப் புதிதாக வர விரும்புபவர்கள் மனதில் கொள்வது நல்லது. அதோடு.. தரகரிடம் கொடுக்கும் பணமும்.. அதை இரண்டாண்டில் மீட்க முடியுமா என்பதும்!! தரகர்களிடம் பணம் கொடுத்து அமீரகம் வரும் எவருக்கும் இந்தப் பதிவைப் படிக்கும் வசதியிருக்காது. ஆகவே இதைப் படிப்பவர்கள் இச்செய்தியை தெரிந்தவர்களுக்குப் பகிருங்கள்.

*

இந்தக் கொலாஜைப் பற்றிய கருத்துகளைப் பின்னூட்டமிடுங்கள்!!

17 comments:

sathishsangkavi.blogspot.com said...

அனைத்து தகவலும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று...

மதியம் தூங்கினால் குட்டித்தூக்கம் என்கிறோம் அதற்கு பின் நாம் செய்யும் வேலைகள் மிக வேகமாக நடைபெறும் என்பது என் அனுபவ உண்மை...

Anonymous said...

அருந்தமிழில் எவ்வளவோ நல்ல வார்த்தைகள் கொட்டிக்கிடக்க, collage என்னும் ஆங்கில வார்த்தையை இனிமேல் பல ஆயிரம் தமிழர் மனதில் அடிக்கடி கொண்டுபோய் நிறுத்துமாறு தேர்வு செய்து இருக்கிறீர்களே நான் உண்மையிலேயே மிகவும் வருந்துகிறேன்.

'கலவை' என்று சொன்னால் நாம் குறைந்துபோய்விடுவோமா? இல்லை அடுத்த வேளை சோறு கிடைக்காமல் போய்விடுமா?

மனதறிந்து தமிழுக்கு துரோகம் செய்யாதீர்கள்.

பிரபாகர் said...

ரொம்ப நல்லாருக்குங்க. எல்லாவற்றையும் தமிழ்ப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை, தொடர்ந்து பகிருங்க செந்தில்...

பிரபாகர்...

Chitra said...

Collage - பேருக்கேற்ற கதம்ப மாலை..... அசத்தல்! தொடருங்கள்!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அன்பர் சாய்தாசன்,

தங்கள் கருத்திற்கும் அன்பிற்கும் நன்றி.

கலவை, கலம்பகம், வானவில், கதம்பம் போன்ற வார்த்தைகள் மனதில் தோன்றின. எனினும்... இந்த வார்த்தையைத் தேர்ந்தெடுத்துவிட்டேன். காரணத்தை விளக்கியும் உள்ளேன்.

கொலாஜிற்குத் தமிழ் வார்த்தை என்ன என்பதை சில ஓவியர்களிடமும் கேட்டேன். கலவை ஓவியம், கலவை ஒட்டு ஓவியம் என்றெல்லாம் கூறுகிறார்கள்.

பெயர் மட்டுமே ஆங்கிலப் பெயரே ஒழிய.. அதில் எழுதப்போகும் விசயங்களைத் நல்ல தமிழிலேயே எழுதவுள்ளேன். அது என் தளத்தில் மாறாது.

a said...

nalla pala thagavalgal. kurippaga 2 Year Visa matrum tharagar kamisan mettar apparam..

vasu balaji said...

நல்ல தொகுப்பு. தொடருங்கள்

Sri said...

நல்ல பதிவு. தனது பெயரிலேயே வடமொழி கலப்புடன் கூடிய பெயர் கொண்ட ஒருவர் பிறரை குறை கூறி, "தமிழுக்கு துரோகம் செய்யாதீர்கள்" என சொல்வது மிகவும் முரண்நகையாக படுகிறது. வேறு என்ன சொல்ல?

Srini

இளங்கோ said...

All are nice..
Thank you for sharing..

ஈரோடு கதிர் said...

||கடவுச்சொல்லை உள்ளீடு செய்வது மனிதர் தானா என்பதைச் சோதிப்பதே இதன் நோக்கம்.||

ஓ இதுதான் காரணமா!?

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

@ சங்கவி,

நன்றிங்க நண்பா.

@ பிரபாகர்,

நன்றிங்க ஊக்கத்திற்கு

@ சித்ரா,

நன்றிங்க

@ யோகேஷ்,

நன்றிங்க. ஆமாங்க... விசா விசயம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று

ஜோதிஜி said...

செந்தில் பழமைபேசி போல நீங்களும் அத்தனை வலைகுழுமங்களிலும் சேர்ந்து விடுங்க. காரணம் நீங்க எழுதுவது ஒவ்வொன்றும் பலருக்கும் பயன் அளிக்கக்கூடியது. அதில் இணையும் போது இது இன்னும் கொஞ்சம் அதிக தூரம் செல்லும். உணர்ந்தவர்கள் பாக்கியவான்கள்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

@ வானம்பாடிகள்,

நன்றிங்க

@ Sri,

நன்றிங்க. அவரது கருத்தையும் நான் மதிக்கவே செய்கிறேங்க. தமிழ்ப்பற்று என்பது நம் பெயரில் வராதுதானே.

@ இளங்கோ,

நன்றிங்க

@ ஜோதிஜி,

நன்றிங்க. கண்டிப்பா சேர்க்கிறேங்க.

Anonymous said...

@ sri

ஆங்கிலக்கலப்பைவிட வடமொழி கலப்பு மேல்.

பாரதிதாசன் -இந்த பெயரில் எது வடமொழிக்கலப்பு?

கற்றோர் இருக்கும் சபையில் வந்து உளறி அவமானத்துக்கு ஆளாக வேண்டாம்.

செந்தில் சொன்ன சப்பைக்கட்டை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. உறுப்பினர் வரிசையில் இருந்து விலகுகிறேன்.

Philosophy Prabhakaran said...

கொலாஜ் வெற்றி பெற வாழ்த்துக்கள்... நல்லாவே இருக்கு... யாருங்க அந்த மைனஸ் ஓட்டை போட்டது...

தாராபுரத்தான் said...

தெரிந்து எடுத்த செய்திகள்..நன்று.

jothi said...

கொலாஜ் ந‌ம் க‌ல்லூரி க‌ல‌க்ருதியில் ஒரு போட்டி என‌ நினைவு,..

அமீர‌க‌த்தைப்ப‌ற்றிய‌ த‌க‌வ‌ல்க‌ளுக்கு ந‌ன்றி

Related Posts with Thumbnails