Saturday, January 8, 2011

கிரிக்கெட் என்றொரு மார்க்கமாம்..

கிரிக்கெட் என்றொரு மார்க்கமாம் 
உப கடவுளர்களின் அணிவகுப்பாம்
ஊடக ஆராதனையில் ஏலமாம்
ஆதீன முதலாளிகளிடம் போட்டியாம்!
ஊருக்கொரு வழிபாட்டுத் தலமாம்
கடவுளர்களாம் உபகடவுளர்களாம்!!

பத்து கோடிக்கொரு கடவுள்
எட்டு கோடிக்கொரு கடவுள்
ஆறு கோடிக்கொரு கடவுள் 
கோடானுகோடி ஏழை பக்தர்களுக்காக!!

நாட்டின் முதன்மை மார்க்கம்
நாடாள்பவர் விரும்பும் மார்க்கம்
நாடாள் மன்றம் போல 
இம்மார்க்கத்திலும்
இல்லை வேறுபாலருக்கு இடஒதுக்கீடு!!

கடவுளர்கள் விரும்பும்,

குளிர்பானமே தீர்த்தமாக
இனிப்புகளே பிரசாதமாக
உணவுகளே அமுதமாக
ஆனார்கள்
பக்தர்கள் மாக்களாக!!

வான்பொய்த் தாலும் விசாரமில்லை
மண்மலடானாலும் மனக்கவலை யில்லை
சுயம்அழிந்தாலும் சிந்தையிற் கலக்கமில்லை
சஞ்சலம் தீர்க்க மார்க்கமுண்டு
களிப்பூட்டக் கடவுளர்களின் கிரிக்கெட்டுண்டு 

மாசியில் வருதே உலகக்கோப்பை
வைகாசியில் வருதே உள்ளூர்க்கோப்பை
உலகக்கோப்பையோ உள்ளூர்க்கோப்பையோ
கடவுளர்களின் தரிசனம் ஒன்றே போதும்!!

கடவுளர்க் கிடையில் ஆட்டம்
பக்தர்கள் மனதில் கொண்டாட்டம்
பண முதலைகளின் வெறியாட்டம்
ஆட்டமானதே சூதாட்டம் இகலாட்டம்
பக்தகோடிக்கு 
மிஞ்சியதே இளிச்சவாய்ப் பட்டம்.


8 comments:

மதுரை சரவணன் said...

kavithai arumai.vaalththukkal. nikalkaalaththai urikkirathu.

vasu balaji said...

கடவுளச் சொல்லப் போச்சான்னு சண்டைக்கு வருவாய்ங்க:)

ஜோதிஜி said...

இந்த கிரிக்கெட் என்ற வார்த்தை என்று எனக்கு முதன் முதலாக அறிமுகமானதோ அன்று முதல் இன்று வரைக்கும் நான் கொண்டுருக்கும் கருத்து தான் இந்த சூதாட்டம். இதன் நீட்சி தான் சச்சின் பஞ்சு பதுக்கி விற்பது வரைக்கும்.

ஈரோடு கதிர் said...

இளிச்சவாயர்களாவதில் நடக்கும் போட்டிக்கே கூட பெட் கட்டலாம் போல!

பிரபாகர் said...

என்ன சொல்லியும் செவிடன் காதில் ஊதிய சங்குதான் செந்தில். விளியாட்டு விளியாட்டாய் ஆகி ரொம்ப நாளாயிற்று...

பிரபாகர்...

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

@ மதுரை சரவணன்,

நன்றிங்க.

@ வானம்பாடிகள்,

//கடவுளச் சொல்லப் போச்சான்னு சண்டைக்கு வருவாய்ங்க:)//

வராம இருந்தாத் தான் சந்தேகம். ஏன்னா கடவுளாச்சே.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

@ ஜோதிஜி,

நன்றிங்க. சரியா சொன்னீங்க.

@ கதிர்,

ஹாஹா உண்மை. அதுவும் நல்லாத்தான் இருக்கும் போல.

@ பிரபாகர்,

சரிதாங்க. நன்றி.

NADESAN said...

லட்ச கணக்கான மக்கள் ஒரு நேர உணவு இல்லை ஒழுகாத அரசு பள்ளி இல்லை ஒழுகாத அரசு பஸ் இல்லை இங்கே கோடி ஏலம் இந்த கோடிகள் எந்த கணக்கும் இல்லாதது இந்த ஏலங்களை ஒழிக்க வேண்டும்

நெல்லை பெ. நடேசன்
அமீரகம்

Related Posts with Thumbnails