Saturday, March 12, 2011

சின்ன சின்ன நடை நடந்து...

இன்னிசைப் பாடல்களை மனது தேடித்தேடி ரசித்தாலும், பழைய பாடல்களில் உள்ள இனிமையை ரசிக்க ஒருவிதத் தயக்கம் இருக்கத்தான் செய்கிறது. பழைய பாடல்களின் காட்சியைமைப்புகளும் மிகைப்படுத்தப்பட்ட முகபாவனைகள் காரணமாக இருக்கலாம். ஆனால், கடந்த ஓரிரு மாதமாக இணையத்தில் இருந்து பழைய பாடல்கள் பலவற்றைத் தரவிறக்கம் செய்து வருகிறேன், அப்பாவின் விருப்பத்திற்கிணங்க.

முப்பது நாற்பது ஆண்டுகள் முன்பு தான் கேட்டு ரசித்த பாடல்களை எல்லாம் நினைவுபடுத்தி இணையத்தில் தேடிப்பார்க்கச் சொல்கிறார். நானும் பல தளங்களைத் தேடி அப்பாவின் விருப்பப்பாடல்களை எடுத்துத் தருகிறேன். Cooltoad.com தளம் பல பழைய பாடல்களை எல்லாம் அளித்துவருகிறது. இணையத்தில் கிடைத்த பாடல்களை அவரது செல்பேசியில் சேமித்து வருகிறேன். செல்பேசிகள் டேப்ரெக்காடர்களுக்கு அஞ்சலி பாடிப் பல வருடங்களாகின்றன. 

செல்பேசிகள் வாங்கும் பொழுது ஒரு விசயத்தை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். செல்பேசிகளின் உள்ள ஹெட்செட் மாட்டும் வசதியை பார்த்துக்கொள்ள வேண்டும். ஹெட்செட் மாட்டும் துழாயின் அளவு 3.5mm  ஆக இருந்தால் வெளியே ஸ்பீக்கரில் சேர்த்துவிடலாம். இன்னொரு விசயம் எத்தனை ஜிபி(GB) மெமரிகார்டை செல்பேசியுடன் இணைக்கமுடியும் என்பதையும் கவனத்தில் கொள்ளவும். 3000 ரூபாய் மதிப்புள்ள செல்பேசியில் கூட 16 ஜிபி வரை மெமரிகார்டை இணைத்துக்கொள்ளலாம். பிறகென்ன நூற்றுக்கணக்கான பாடல்கள் உங்கள் கைக்குள்...

*
பழைய பாடல்கள் பலவற்றைத் தேடிப்பிடித்தாலும் எனக்கு மிகவும் பிடித்தது 'காவேரியின் கணவன்' படத்தில் வந்த இந்த பாடல் தான். பி.சுசீலாவின் குரலில் இந்தப் பாடலைக் கேட்டுப்பாருங்கள்... கண்கள் சொருகுவது நிச்சயம்!!


சின்ன சின்ன நடை நடந்து
செம்பவள வாய் திறந்து
சின்ன சின்ன நடை நடந்து
செம்பவள வாய் திறந்து

அம்மாவென்று நீ அழைத்தால்
அமுத கானம் பொழியுமடா
அமுத கானம் பொழியுமடா

ஆடி வரும் தென்றல் என்பார்
பாடி வரும் அருவி என்பார்
ஆடி வரும் தென்றல் என்பார்
பாடி வரும் அருவி என்பார்

தேடி வரும் செல்வம் உன் போல்
தெய்வம் வேறு இல்லையடா
தேடி வரும் செல்வம் உன் போல்
தெய்வம் வேறு இல்லையடா

கொஞ்சும் அழகை கேட்கையிலே
குழலும் யாழும் பொய்யன்றோ
கொஞ்சும் அழகை கேட்கையிலே
குழலும் யாழும் பொய்யன்றோ

மேவும் தமிழே உன்னையன்றி
வேறு சொந்தம் இல்லையடா
மேவும் தமிழே உன்னையன்றி
வேறு சொந்தம் இல்லையடா

சின்ன சின்ன நடை நடந்து
செம்பவள வாய் திறந்து
சின்ன சின்ன நடை நடந்து
செம்பவள வாய் திறந்து

அம்மாவென்று நீ அழைத்தால்
அமுத கானம் பொழியுமடா
அமுத கானம் பொழியுமடா!!


*

கீழே உள்ள சுட்டிகளில் இந்தப்பாடலைக் கேட்கவும் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.



7 comments:

vasu balaji said...

எனக்கும் மிகப் பிடித்த பாடல் இது. பானுமதியின் பூவாகிக் காயாகி பாடல் கேட்டிருக்கிறீர்களா?

க.பாலாசி said...

பெரும்பாலும் பழையப்பாடல் கேட்க கேட்க திகட்டாதவை.. கேட்கமட்டுமே, ஒரு சில பாடல்கள் விதிவிலக்கு.

சுமார் 120 பாடல்கள் வரையும் பழையப்பாடல்களை செல்லில் வைத்திருந்தேன்.. இப்போதும் 50 பாடல்கள்வரை வைத்திருக்கிறேன்.

நல்ல பாடல் இது.. நல்ல பகிர்வும்கூட.

jothi said...

ப‌கிர்விற்கு ந‌ன்றி
அது எப்ப‌டிங்க‌ செந்தில் என்னுடைய‌ நேற்றைய‌ ப‌திவும் இதே ர‌க‌ம்தான்

ஹுஸைனம்மா said...

தலைப்பப் பாத்து உங்க மகன் முதல் அடி வைத்து நடந்த பரவசத்தைச் சொல்கிறீர்களோ என ஆவலாக வந்தேன்!! :-))))))))))

ஆச்சி ஸ்ரீதர் said...

நல்ல பகிர்வு.

நீங்கள் இன்னும் என்னை அடையாளம் கண்டீர்களா இல்லையா என்று தெரியவில்லை,இல்லையெனில் சிறிது வருத்தம்தான்.எனது மெயில் வந்திருக்கும்னு நினைக்கிறேன்.

செந்தில்குமார் said...

பழைய பாடல்கள்....எப்போதுமே...
அமுதம்போல..இனித்திருக்கும்

செந்தில்..எப்போதுமே...

இராஜராஜேஸ்வரி said...

அழகான பகிர்வு.

Related Posts with Thumbnails