Friday, March 20, 2009

லூசா நீ? மாம்பழம் சாப்பிடறியே!!


சில வாரங்களாக தொலைக்காட்சிகளில் வரும் ஒரு விளம்பரம் தான் இந்த blog எழுத தூண்டியது!! அது என்ன விளம்பரம்?

ஒரு பன்னாட்டு நிறுவன ( மாம்பழ ருசி கொண்ட) குளிர்பான விளம்பரம் தான் அது!! அந்த விளம்பரத்தில் ஒரு வயதானவர் மாம்பழ விரும்பியாக இருப்பார். பல நாட்களாக மாம்பழம் கிடைக்காததால் அந்த குளிர்பானம் குடிக்க ஆரம்பித்து விடுவார்.. பிறகு ஒருவருடன் தொலைப்பேசியில் பேசும் போது "யாராவது மாம்பழம் சாப்பிடுவாங்களா லூசு!!" என்று கூறி முடிப்பார்..

இது தான் "வியாபார உத்தி" போல...

ஒரு பன்னாட்டு குளிர்பான நிறுவனம் தனது வியாபார உத்தியைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது, "தங்களது குளிர்பானத்திற்கு தண்ணீரைத்தான் முதல் போட்டியாக நாம் குறிப்பிட வேண்டும்" என்பது தான் அது!! அனைவருக்கும் அமீர்கானின் இந்த விளம்பரம் ஞாபகம் இருக்கக்கூடும், ""Thanda mathlab ........ ". அதாவது "குளிர்ச்சி என்றால்................"

நாம் இப்போதெல்லாம் பேருந்திலோ அல்லது ரயிலிலோ செல்லும் போது, பயனிகள் வீட்டில் இருந்து தண்ணிர் எடுத்து வருவதை பார்ப்பது மிகவும் அரிதாக இருக்கிறது. மேலே குறிப்பிட்ட குளிர்பானத்தையோ அல்லது பன்னாட்டு நிறுவனம் விற்கும் குடி நீர் பாட்டிலையோ தான் வாங்குகிறார்கள். இந்த குளிர்பானத்தை தயாரிக்க ஒரு ருபாய் கூட செலவாகத போது நாம் இதற்கு கொடுப்பது 12/-. பாக்கி பதினோரு ருபாய் நமது கிரிக்கட் வீரர்களுக்கும் நடிகர்களுக்கும் அமெரிக்காவில் உள்ள பங்குதாரர்களுக்கும் தான் பெருமளவு போய் சேர்கிறது!! இந்த பன்னாட்டு நிற்வனங்கள் ஒன்றும் கூட நம்நாட்டு பங்கு சந்தைகளில் செயல்படவில்லை என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? நமது நாட்டில் தயாராகிக் கொண்டு இருந்த கோலிசோடா, ரோஸ்மில்க், பாதாம்பால் போன்றவை இன்று காணாமல் போய் விட்டது என்பது ஒரு சோகமான விஷயம்!!

நல்ல வேளையாக நமது கூட்டுறவு நிறுவனங்களில் பால் விநியோகம் நல்ல முறையில் நடந்து வருவதால் பன்னாட்டு நிறுவனங்கள் இன்னும் அந்த துறையை ஆதிக்கம் செலுத்தாமல் உள்ளனர். ஆனால், சென்னை போன்ற நகரங்களில், தினமும் பால் வாங்கும் பழக்கம் மெதுவாக மாறிக் கொண்டு தான் இருக்கிறது. தொலைக்காட்சியில், "நீ என்ன பைத்தியமா, daily பால் வாங்கற? ஒரு pocket N*S*L* பால் வாங்குனா 3 மாசம் வச்சுக்கலாம்ல?" என்று விளம்பரம் வந்தாலும் சந்தேகப் படுவதற்கில்லை!!

இன்று புதிதாகக் முளைத்துள்ள Mallகளில் நம் கண்களில் தெரிவது பீசா, பர்கர், பொறித்த கோழிகளை விற்கும் பன்னாட்டு நிறுவனங்கள் தான்!! ஒரு பிரட் மேல கொஞ்சம் வெண்ணய தடவி, மேல சிக்கன் தூவி கொடுக்கறதுக்கு நம்ம கொடுக்கறது Rs. 350/- இந்த உணவுவகைகள் அனைத்துமே உடல் நலத்திற்குப் பங்கம் விளைவிப்பவை. ஆனால் இதனை சாப்பிடுபவர்கள் தான் நாகரிகமானவராகளாக கருதப்படுகிறார்கள். வரும் நாட்களில் வடை பஜ்ஜி, போண்டா, பானிபூரி, பேல்பூரி போன்றவையை சாப்பிடுபவரை கிண்டலடிக்கும் விளம்பரம் வரலாம்!!.

நமது பல்பொருள் அங்காடிகளை சுற்றி வந்தாலோ, எங்கும் தெரிவது வெளிநாட்டுப் பொருள்கள் தான்!! நாம் வாங்கும் ஆப்பிள், ஆரன்சு, திராட்சை எல்லாமே விளைவது அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் தான்!! ஒரு கிலோ ஆப்பிள் விலை 120/-. காஷ்மீர் ஆப்பிளோ அல்லது நாக்பூர் ஆரஞ்சோ விற்பது கிடையாது. நாம் கொடுக்கும் 120 ரூபாய் போய் சேருவது அமெரிக்காவில் உள்ள விவசாயிகளுக்கு, குளிர்சாதன நிற்வனங்களுகு மற்றும் கார்கோ நிறுவனங்களுக்கோ தான்!! நாம் வாங்கும் வத்தல், சிப்ஸ் வகையறா அனைத்துமே பன்னாட்டு நிறுவனங்களின் தயாரிப்பு தான்!!

நல்ல வேளையாக உணவு தயாரிப்புகளில் பன்னாட்டு நிறுவனங்களின் வரவு இன்னமும் பெரிதாக இல்லை. இன்று அதிகமாக உட்கொள்ளப்படும் உணவுகளில் நூடுல்சும் ஒன்றாக உள்ளது. நூடுல்ஸ் சமைக்க 2 நிமிடம் தான் ஆகும் என்றால் இட்லியோ, பணியாரமோ, தோசையோ சமைக்க எவ்வளவு நிமிடம் ஆகும்? ஒரு குடும்பத்திற்கு தேவையான நூடுல்ஸ் வாங்க 52 ரூபாய் ஆகும், அதுவே இட்லிக்கு வீட்டில் மாவு அறைத்தால் 4 ரூபாயும், கடையில் கிடைக்கும் மாவிற்க்கு 20 ரூபாயும் தான் தேவை!!

ஆட்ட கடிச்சு மாட்ட கடிச்சு கடைசியில் மனுசன கடிக்கற கதையா இருக்கு இப்ப நம்ம பார்க்கறது!!

முதலில், இளநீர், மோர் போன்றவையை தவிர்த்து குளிர்பானம் குடிக்க ஆரம்பித்தோம்.. பிறகு, காற்றையும் மாசு படுத்தினோம், நல்ல உணவை மறங்தோம்.கடலை உருண்டை, எள்ளூ உருண்டை, கடலை மிட்டாய், கம்மர்கட்டு, ரவா லட்டு, கம்மங்கூழ் என்றால் என்ன தான் கேட்கும் நிலையில் உள்ளோம். நாவல் பழம், எலந்த பழம் போன்றவை எப்படி இருக்கும் என்பதை encyclopaediaவில் தான் காட்டும் நிலையில் உள்ளோம்.

இப்போது இது முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்திற்கும் வந்துள்ளது!! ஆங்கில வார்த்தையான "Mango"வோட மூலமே நமது நாட்டைதான் காட்டுகிறது. "Mango" என்கிற வார்த்தையைக் கொடுத்த நாட்டிலேயே "மாம்பழம் சாப்பிடுபவன் முட்டாள்" என்கிற பிரச்சாரம் நடக்கிறது என்பது தான் சோகமான விஷயம்...

இந்த பிரச்சாரம் தொடர்ந்தால், சில வருடங்களுக்குப் பிறகு மாம்பழத்தை விநாயகர் கையில் தான் பார்க்க வேண்டும்!!



http://youthful.vikatan.com/youth/senthilstory21032009.asp
.

11 comments:

பாலா said...

sypper post senthil

வேலன். said...

ஏதெதற்கோ கட்டுப்பாடு விதிக்கும் நீதித்துறை இந்த விளம்பரத்திற்கும் கட்டுப்பாடு விதிக்கவேண்டும்.நீங்கள் சொல்வதுபோல் மாம்பழம்சாப்பிடுபவர்கள் லூசா? விரைவில் இட்லி சாப்பிடுபவன் பைத்தியக்காரன் என்று சொன்னாலும் சொல் வார்கள்.
நல்ல பதிவு.
உங்கள் கருத்துரையில் வேர்ட் வெரிபிகேசனை நீக்கவும் செந்தில்(வேலன்)அவர்களே.

வாழ்க வளமுடன்,
வேலன்.

எட்வின் said...

//ஆட்ட கடிச்சு மாட்ட கடிச்சு கடைசியில் மனுசன கடிக்கற கதையா இருக்கு இப்ப நம்ம பார்க்கறது!!
//

உண்மை...

அருமையாக எழுதி இருக்கிறீர்கள். நாம் தான் சுதாரிப்பாக இருக்க வேண்டும்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

@ ச்சின்னப் பையன் - Thanks ச்சின்னப் பையன்..

@ sayrabala - Thanks Sayrabala..

@ வேலன் - word verification neekkiyachu Velan..

@ எட்வின் - Mikka Nandri Edwin..

பட்டாம்பூச்சி said...

நியாயமான ஆதங்கம்தான்.
இந்த மாதிரி பொருட்களை உபயோகிப்பதுதான் கெளரவம் என்ற போலி மாயையில் நிறைய பேர் சிக்கி கொண்டுள்ளனர்.
முதலில் அதை உபயோகிக்கும் நம் மக்களுக்கு புத்தி வரவேண்டும்.

Anonymous said...

Very good post.
-Juergen Krueger

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//. "Mango" என்கிற வார்த்தையைக் கொடுத்த நாட்டிலேயே "மாம்பழம் சாப்பிடுபவன் முட்டாள்"//


தமிழன் என்று சொல்லடா..

தலை நுமிர்ந்து நில்லடா...

படிச்சு இருக்கீங்கல்ல ப்ரதர்

ஜீவா said...

அன்பு செந்தில், உங்கள் பதிவு மிகவும் அருமை, இப்பொழுது உள்ள மக்கள், fsat Food சாப்பிட்டு , பாஸ்டாக மேல போக நினைகிறார்கள், நல்ல பதிவு கொடுத்த உங்களுக்கு ஏன் வாழ்த்துக்கள்
அன்புடன்
ஜீவா

Felix Raj said...

sinthika venidiya pathivu, niraya per padikavendum ithai

எட்வின் said...

உங்கள் பதிவிற்கு எனது பதிவில் உங்களை கேட்காமலே link கொடுத்திருக்கிறேன் மன்னித்து கொள்ளுங்கள் http://thamizhanedwin.blogspot.com/2009/03/blog-post_29.html

cheena (சீனா) said...

ஆகா ஆகா - எவனோ மடையன் சொல்றானேன்னு நாம மாம்பழம் சாப்பிடறதே நிறுத்த வேணாம் -நாம லூஸாவே இருப்போம்

Related Posts with Thumbnails