Wednesday, January 6, 2010

புத்தாண்டில் ஓர் உறுதிமொழி..


"செந்தில், இந்த வருசத்துக்கு என்ன ரெசல்யூசன் எடுத்திருக்க?" முனிர் கேட்டான் மதிய உணவு வேளையின் பொழுது..

"போன வருசம் எடுத்த ரெசல்யூசனை ஒழுங்கா கடைப்பிடிக்கனும்னு" என்றேன்.

"இது தான வேணாங்கறது"

"எடுக்கற உறுதிமொழியைக் கடைப்பிடிக்கணும். இல்லீன்னா எதுக்கு எடுத்துட்டு. ஆமா நீ என்ன உறுதிமொழி எடுத்திருக்க?" என்றேன்.

"உடம்பக் குறைக்கணும்னு உறுதிமொழி எடுத்திருக்கேன். பாரு.. மொத நாளே முடிய ஒட்ட வெட்டீட்டு வந்துட்டேன்" என்றான் சிரித்துக்கொண்டே..

"உனக்கொரு ரெசல்யூசன் நான் சொல்லட்டுமா" என்று இடைமறித்தார் நஸீம்.

"பார்டா.. நீ என்ன ஐடியா கொடுக்கப் போற"

"அதுக்கு முன்னாடி உன்னோட பர்ஸக் காட்டு"

"காசுக்கெல்லாம் உன் ஐடியா வேண்டாம்" என்றேன்.

" முஜிபர்க்கு (நஸீமின் கணவர்) நடந்த மாதிரி நடக்காம இருக்க ஒரு விசயம் சொல்லலாம்னு நினைச்சேன். உன் இஷ்டம்" என்றாள்.

"ஏன்? என்னாச்சு முஜிபர்க்கு" என்றேன்.

"அவரோட மணிப்பர்ஸ் தொலைஞ்சு போயிடுச்சு"

"ஓ.. நான் பர்ஸத் தொலைச்சா எத்தனை பணம் போகும்னு பாக்கறியா?" என்றேன்.

"உனக்கு..."

"சரி.. என்னாச்சு? எங்க தொலைச்சார்?"

"நாங்க டிசம்பர் 31ம் தேதி பார்ட்டிக்கு அவங்க நண்பர்களோட போயிருந்தோம். நுழைவுக் கட்டணத்தக் கூட முஜி தான் கிரெடிட் கார்டுல கட்டினார். அதுக்கப்புறம் அவரோட ஓவர் கோட்ல பர்ஸ வைச்சிருக்கார். பார்டில "ஓவரா" மூழ்கிட்டதால ஓவர் கோட்ட எங்கியோ தவற விட்டுட்டார். நானும் கவனிக்கல. காலைல எழுந்தப்போ தான் பார்த்தோம்" என்றார்.

"பர்ஸ்ல எவ்வளவு பணம் வச்சிருந்தார்?"

"பணம்னாலும் பரவாயில்லையே. நாலு கிரெடிட் கார்டு, டிரைவிங் லைசன்ஸ், எமிரேட்ஸ் ஐடி ( அமீரக அடையாள அட்டை), அவரோட கனடா நிரந்தர குடியுரிமை அட்டை ( Permanent Resident Card), இன்ஸ்யூரன்ஸ் அட்டை எல்லாம் வச்சிருந்தார்"என்ற பொழுது "பொளீர்"னு பிடறில அடித்தது போல இருந்தது. நானும் முஜிபரைப் போல எல்லா அட்டைகளையும் காசுப்பையில் தான் வைத்திருக்கிறேன்.

"கிரெடிட் கார்டை ப்ளாக் (Block) பண்ணியாச்சா?"

"கிரெடிட் கார்டை பேங்க்ல கூப்பிட்டு ப்ளாக் (செயலிழப்பு) பண்ணியாச்சு. போலிஸ்ல போய் புகார் கொடுக்கப் போனா, அலுவலகத்துல இருந்து லெட்டர் வாங்கி வரச் சொல்றாங்க. அலுவலகத்துல கேட்டா, உங்க கிரெடிட் கார்ட் தொலைச்சதுக்கு நாங்க எதுக்கு லெட்டர் கொடுக்கனும்ங்கறாங்க. ஒரு வழியா அலுவலகத்துல இருந்து லெட்டர் வாங்கிக் கொடுத்தா அரபில கொடுக்கச் சொல்றாங்க. புத்தாண்டு ஆரம்பிச்சதுல இருந்து மூணு நாளா இதுக்கே அலைச்சுட்டிருக்கார். எவ்வளவு டென்சன் தெரியுமா?" என்றவர்

"இதுக்கு மேல கனடா எம்பஸில (Embassy) போய் புகார் கொடுக்கனும். அவங்க கொடுக்கற ஒரு டாக்குமெண்ட வச்சிட்டுத் தான் கனடா போகனும். அங்க போய் தான் திரும்ப பி.ஆர் கார்டுக்கு அப்ளை பண்ணனும். இன்னும் எதெதுக்கெல்லாம் அலைய வேண்டியதிருக்குமோ தெரியல" என்று மூச்சு விடாமல் சொல்லி முடித்தார்.

"ஹேய்.. சாரி நஸீம்" என்றேன்.


"உன்னோட சாரி எல்லாம் வேண்டாம். உன்னோட பர்ஸக் காட்டு" என்று கேட்ட நஸீமிடம் பர்ஸைக் கொடுத்த பொழுது பர்ஸில், "இந்திய ஓட்டுனர் உரிமம், அமீரக அடையாள அட்டை (Emirates ID), அமீரக பத்தாக்கா ( Work Permit Card), இரண்டு கடனட்டைகள் (Credit Card), இரண்டு காசளிப்பு அட்டைகள் (Debit Card), மெடிக்கிளைம் அட்டை என்று பத்து அட்டைகள் வைத்திருந்தேன்.

"எதுக்கு இத்தனை? நாங்க எல்லாம் சொன்னாக் கேட்க மாட்டீங்க. தொலைச்சாத்தான் தெரியும்" என்ற நஸீம் சொன்ன பொழுது "எப்படி என் மனைவி கூறும் அதே அறிவுரையை வார்த்தை பிசகாமல் சொல்கிறார்" என்று நினைத்துக் கொண்டேன்.

"முதல்ல ஒன்னோ ரெண்டோ தேவையான அட்டைகளை மட்டும் வைச்சுக்கறேன். இதையே இந்த வருச உறுதிமொழியாவும் எடுத்துக்கறேன். தாங்க்ஸ் நஸீம்" என்றேன்.

"இட்ஸ் ஓகே.. மீட்டிங் இருக்கு. சியா(CYA)!!" என்று கிளம்பினார் நஸீம்.

****

என்ன நண்பர்களே நஸிமின் கணவருக்கு நடந்தது போல நமக்கு நடந்தால் என்ன செய்வோம்?  கொஞ்சம் அட்டைகளைக் குறைப்பது அல்லது கையில் வைத்துக்கொள்வதைத் தவிர்ப்பது என்று ஒரு உறுதிமொழியை எடுத்தால் நன்றாகத் தானே இருக்கும்?

****


12 comments:

ஈரோடு கதிர் said...

எனக்கே.... எனக்குனு சொன்ன மாதிரியே இருக்குங்க செந்தில்

பின்னோக்கி said...

//உடும்பக் குறைக்கணும்னு

உடும்புக் கறி ரொம்ப டேஸ்ட்டா இருக்கும்னு சொல்லுவாங்க :)

கண்ணா.. said...

//என்ன நண்பர்களே நஸிமின் கணவருக்கு நடந்தது போல நமக்கு நடந்தால் என்ன செய்வோம்? //

அட்டைகளில் எடுக்க முடியாத அளவிற்கு நானே ஊரை சுற்றி கடன் வாங்கி வைத்திருப்பதால் அதை கண்டு கொள்ளாமலே விட்டு விடுவேன்.

:)

நல்ல பதிவு செந்தில்

geethappriyan said...

அருமை நண்பர் செந்தில்வேலன்,
விழிப்புணர்வு இருந்தால் போதும், கூட்டமான ஏரியாவுக்கோ, பக்கா திருட்டு நடக்கும் ஏரியாவுக்கோ செல்லும் போது பின்னால் உள்ள பர்சை முன்னால் வைக்க வேண்டும்,அமீரகத்தில் நிறைய பேர்கள் பெட் ஸ்பேசில் வசிப்போர், அவர்கள் அட்டையை அறையில் வைப்பது மிக ஆபத்து, அடையாள அட்டையை எப்போதும் வைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம், இல்லை என்றால் போலீஸ் ஸ்டேஷனுக்கே கூட்டி சென்று விசாரிக்க அதிகாரம் உண்டு, கடன் அட்டைகள் இரண்டாவது இருந்தால் தான் பில் டேட்டிற்கு தகுந்தாற்போல ஒரு மாதம் க்ரெடிட் கிடைக்கும்படி வாங்க முடியும், மெடிகல் அட்டை எப்போதும் இருந்தால் தான் இந்த கடும் குளிரில் ஜுரம் கண்டவுடனே எந்த மருத்துவமனைக்கு வேண்டுமானால் ஓடலாம்.
மொத்தத்தில் பர்சை உள் பாக்கெட்டிலோ, டிக்கட் பாக்கெட்டிலோ வைக்கலாம். கோட் பாக்கெட்டில் கண்டிப்பாய் வைத்தல் கூடாது. அது காரில் பின்னால் அமர்ந்து போய்வருபவருக்கு மட்டுமே வசதியாய் இருக்கும் என்பது பனிவான கருத்து.
ஒருசிலர் பர்சை எடுத்து மேசைமேல் வைத்து விட்டு தான் வேலைபார்ப்பார்கள், அதுவும் மிக ஆபத்தே, நீங்கள் மீட்டிங் போய்விட்டால் பர்ஸ் யார் கைக்கு வேண்டுமானாலும் போகும். நல்ல பதிவு நண்பரே

இராகவன் நைஜிரியா said...

சரியாக சொன்னீர்கள் செந்தில்.

பர்சில் எதை வைக்க வேண்டுமோ அதை மட்டும் வைத்தால் போதுமானது.

vasu balaji said...

ஒரு கூட குப்ப கடுதாசியோட மேச்சட்ட பாக்கட்டுல வைக்கிறது நம்ம டெக்னிக். பர்ஸ்ல கந்தசாமி கோவில் விபூதி, ஏழுமலையான் படம் வச்சும் காசு உள்ள இருக்கமாட்டேங்குது:)). Jokes apart மிக மிக முக்கியமான இடுகை இது. மாற்றுப் பேச்சுக்கே இடமில்லை.நன்றி செந்தில்.

புது வலைமனை அழகு.

ஆரூரன் விசுவநாதன் said...

நல்ல பகிர்வு, கண்டிப்பாக அனைவருக்கும் பயன்படும்

வாழ்த்துக்கள்

கலையரசன் said...

கிரிடிட் கார்டே இல்லாதவன் எங்க வைக்கலாம்??? ஐ மீன் பர்சை எங்க வைக்கலாம்னு கேட்டேன்!!

உங்களுக்கு அல்வா சாப்பிடுற மாதிரியான விஷயம் ஒன்றிற்க்கு உங்களை அழைத்திருக்கிறேன்!!

http://kalakalkalai.blogspot.com/2010/01/blog-post.html

sathishsangkavi.blogspot.com said...

அழகாகவும், ஆழமாகவும் சொல்லியிருக்கறீங்க செந்தில்...

வெற்றி-[க்]-கதிரவன் said...

template super, pathivum thaan -:)))

வினோத் கெளதம் said...

என்கிட்டே தான் Credit card இல்லையே..:)

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாங்க கதிர். நன்றி. பலருக்கும் இந்தப் பிரச்சனை இருக்குதுங்க.

வாங்க பின்னோக்கி. பிழையைத் திருத்திவிட்டேன்.

வாங்க கண்ணா. நன்றி.

வாங்க கார்த்திகேயன். நீங்கள் கடைப்பிடிக்கும் முறை நல்லது தான்.

வாங்க இராகவன் அண்ணே. நன்றி.

வாங்க வானம்பாடிகள். நன்றி.

வாங்க ஆரூரன் விசுவநாதன். நன்றி.

வாங்க கலை. வழக்கம் போல கலகலப்பான கருத்திற்கு நன்றி.

வாங்க சங்கவி. நன்றி.

வாங்க ஞானப்பித்தன் @ வெற்றிக்கதிரவன். நன்றி.

வாங்க வினோத்கௌதம். நன்றி.

Related Posts with Thumbnails