Friday, January 15, 2010

நிலா நீ வானம் காற்று..


இசைக்கு மயங்காதவர் யாரேனும் இருக்க முடியுமா? அதுவும் அழகான வரிகளுடன், இதமான இசை அமைந்தால் சொல்லவா வேண்டும்.  இசை மற்றும் பாடல் வரிகளுடன் நீங்கள் மிகவும் நேசிப்பவரை நினைத்துப் பார்க்கும் பொழுது கிடைக்கும் உணர்வு இருக்கிறதே..


ஓரிரு நாட்களாக நான் அதிகமாகக் கேட்கும் பாடல், ஏன் அண்மையில் ஒரு பாடலைப் பல முறை கேட்டதென்றால் அது இதுவாகத் தான் இருக்கும்!! பொக்கிஷம் படத்தில் வரும் "நிலா நீ வானம் காற்று.." என்ற பாடல்..

சபேஷமுரளியின் இதமான இசை யுகபாரதியின் வரிகளைச் சிதைக்காமல் இருப்பது இந்தப் பாடலிற்கு அழகூட்டியுள்ளது. விஜய் யேசுதாஸும் சின்மயியும் வரிகளுக்கு உயிர் கொடுத்த விதம் பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

அதில் சின்மயியின் குரலில் கீழே வரும் வரிகள் இருக்கிறதே.. அடடா..

தன் கணவனையோ, காதலனையோ நினைத்து இது விட அழகாகப் பாட முடியுமா?

அன்புள்ள மன்னா அன்புள்ள கணவா
அன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே
அன்புள்ள ஒளியே அன்புள்ள தமிழே
அன்புள்ள செய்யுளே அன்புள்ள இலக்கணமே
அன்புள்ள திருக்குறளே அன்புள்ள நற்றினையே
அன்புள்ள படவா அன்புள்ள திருடா
அன்புள்ள ரசிகா அன்புள்ள கிறுக்கா
அன்புள்ள திமிரே அன்புள்ள தவறே
அன்புள்ள உயிரே அன்புள்ள அன்பே
இதில் யாவுமே இங்கு நீதான் என்றால்
என்ன தான் சொல்ல சொல் நீயே
பேர் அன்பிலே ஒன்று நான் சேர்ந்திட
வீண் வார்த்தைகள் இனி ஏன் தேடிட..


முதலில் மன்னா, கணவா என்று வரும் வரிகள், அன்புள்ள ஒளியே, அன்புள்ள தமிழே அன்புள்ள செய்யுளே அன்புள்ள இலக்கணமே அன்புள்ள திருக்குறளே அன்புள்ள நற்றினையே என்று செல்வது ஒரு புது அனுபவத்தைத் தருகிறது. பிறகு செல்லமாக படவா, திருடா, கிறுக்கா என்று வரும் வார்த்தைகளுக்காகவே யுகபாரதிக்கு ஒரு ராயல் சல்யூட்!!

ஹம்மா.காம் (Hummaa.com) இணையதளத்திற்கு என் நன்றிகள்!! என்னைப் பொங்கல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் களேபரங்களில் இருந்து காப்பாற்றியதற்காக!!

..

11 comments:

வானம்பாடிகள் said...

எனக்கும் மிகப் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று. :)

பின்னோக்கி said...

பாடல் கேட்கும் போது இனிமையாக இருக்கும். படம் சரியாக போகாததால், பாடல்கள் கவனிக்கப்படாமல் போய் விட்டது. எனக்கும் பிடித்த பாடல்.

நாஞ்சில் பிரதாப் said...

புதிய பாடல்களை கேட்க விருப்பமில்லாததல் அதிகம் கேட்பதில்லை, இதுபோன்ற நல்லபாடல்களும் வருகின்றன. பகிர்வுக்கு நன்றி செந்தில்.

பிரபாகர் said...

செந்தில்,

இசை நம்மை பண்படுத்தும், நமது நடப்பு நிகழ்வுகளை துளியும் கெடுக்காமல் நம்மோடு இயைந்து தாலாட்டி மனதை சாந்தப்படுத்தும். அதனால்தான் நான் கடைபிடிப்பது தொன்னூறு சதம் இசை, பத்து சதம் டி.வி.

பிரபாகர்.

வினோத்கெளதம் said...

எனக்கும் கேக்க கேக்க இந்தப்பாடல் மிகவும் பிடித்துப்போனது..
நடுவுல வர இசை நம் உணர்வுகளில் எதோ ஒரு Magic செய்யும் இந்தப்பாடலை கேக்கும்பொழுது.

கலையரசன் said...

செந்திலுக்கு ஒரு ராயல் சல்யூட்!!

கண்ணா.. said...

இது வரை கேட்டதில்லை....

கேட்டு விடுவோம்.

:)

பொதுவாக சேரன் விரும்பும் ஓவர் செண்டிமெண்ட் வரிகள், மற்றும் காட்சிகளென்றால் எனக்கு கொஞ்சம் அலர்ஜி.. அதனாலயே “ஓவ்வொரு பூக்களுமே” பாடல எனக்கு பிடிக்காமல் போனது.

இந்த பாடலை கேட்டு விட்டு சொல்கிறேன்

செ.சரவணக்குமார் said...

நல்ல பதிவு நண்பரே, அன்புள்ள மன்னா என்று தொடங்கும் யுகபாரதியின் வரிகள் அத்தனை அருமையாக இருக்கும். இந்த வரிகளுக்காகவே மீண்டும் மீண்டும் கேட்டு ரசிக்கும் பாடல் இது.

Chitra said...

nice song. nice pic - water drop in the shape of a heart. nice review.

ச.செந்தில்வேலன் said...

நன்றி பாலாண்ணே

நன்றி அன்பர் பின்னோக்கி. உண்மை தான் வெற்றியடையாத படங்களின் பாடல்கள் நமக்கும் மறந்துவிடுகிறது.

நன்றி பிரதாப்

நன்றி பிரபாகர். எனக்கும் உங்கள் கருத்தே..

நன்றி வினோத்.

நன்றி கலை.

நன்றி கண்ணா.

நன்றி சரவணக்குமார். யுகபாரதி கலக்கியிருக்கிறார்.

நன்றி சித்ரா.

வே. இளஞ்செழியன் said...

திரைப்படத்தில் இப்பாடல் இடம்பெற்ற போது அது மனதில் இடம் பிடிக்கத் தவறியது. நல்ல பாடல்; ஆனால், பத்தோடு பதினொன்றாகத் தோன்றியது.

பின்னர், பாடலை மீண்டும் கேட்கும் வாய்ப்பு சில நாட்களுக்கு முன் கிட்டியது. தொலைகாட்சியில் இடைச்செருகல். ஏனோ பாடல் வரிகளை உன்னிப்பாகக் கேட்டேன்.

ஆகா ... என்ன ஒரு பாடல்! "அன்புள்ள மன்னா..." என்று தொடங்கி "அன்புள்ள படவா..." என்று பாடல் தொடர்வதற்குள் என் கண்களில் தாரை தாரையாக நீர்.

காதலை, அது கொடுக்கும் வலியை, இவ்வளவு பக்குவத்துடனும் நேர்த்தியுடனும் செறிவுடனும் வேறொரு திரைப்பாடல் இந்நாள்வரை கொடுத்திருக்கவில்லை என்பதே என் கருத்து. இப்பாடலே இனி வரும் திரைப்படக் காதல் பாடல்களுக்கு எல்லை.

Related Posts with Thumbnails