Saturday, March 20, 2010

எனிக்மா - மர்மத்தின் உச்சகட்டம்!!

"இசைக்கு மொழியில்லை" என்று கூறுவதுண்டு.  குருவிகளின் சத்தம், கிளிகள் ஓசை, மைனாக்களின் கீச்சல்கள் என ஒவ்வொரு ஓசையையும் இசையாக நினைத்துப் பார்த்தால் "மொழியையும் ஒரு இசையாக அனுபவித்தால் என்ன"வென்று தோன்றும். அப்படி அனுபவித்துக் கேட்கும் பொழுது "இசையை ரசிக்க மொழி தேவையில்லை" என்ற விசயம் விளங்கும்.

வாத்திய இசையை "Instrumental Music" என்ற வடிவில் கேட்பது நமக்கு வழக்கப்பட்ட ஒன்றே. மிருதங்கம், நாதஸ்வரம், வீணை, புல்லாங்குழல், வயலின், மாண்டலின் முதல் சாக்ஸபோன் வரை நம்மவர்கள் வாசிப்பதை இசையாக மட்டுமே கேட்பது நமக்கு வழக்கமே!! இந்த இசைக் கருவிகளின் இசையைக் கேட்கும் பொழுது மகிழ்ச்சி, சோகம், பரிதவிப்பி என்று ஒவ்வொரு விதமான உணர்வு ஏற்படுவதை மறுப்பதற்கில்லை!!

ஆனால், ஒரே இசையில் பல விதமான உணர்வுகளை ஏற்படுத்த முடியுமா?


அது தான் "எனிக்மா"வின் தனிச்சிறப்பு!!

பயம், மர்மம், மகிழ்ச்சி, ஏக்கம், அழுகை, ஏதோ வேறு உலகத்தில் பயணக்கும் உணர்வு, சிறகுகள் முளைத்துப் பறப்பது போன்ற சிலிர்ப்பு, இசையில் வினோதத்தில் ஏற்படும் புல்லரிப்பு என்று சொல்லிக்கொண்டே போகலாம் எனிக்மாவின் இசையைப் பற்றி!! 

எனிக்மாவின் இசைக்கோப்புகளில் மொழிகளை வெகுக் குறைவாகவே பயன்படுத்தியிருப்பார்கள். "எனிக்மா" இசைத் திட்டத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மைக்கேல் கிரேது ரோமானியாவில் பிறந்தவர். இவருடன் இவரது துணைவியார், நண்பர்களுடன் இணைந்து உருவாக்கியது "எனிக்மா" இசைக்கோப்புகள்!! உலகெங்கும் உள்ள பிரதாமான இசைக்கருவிகள், இசைப் பயன்பாடுகள் அனைத்தையும் இணைந்த வடிவம் தான் "எனிக்மா" இசை.

"எனிக்மா"வின் இசையில் மறக்கமுடியாதது "சோகம் -Sadness" என்ற தலைப்பில் வெளிவந்த இசைக்கோப்பு தான். ஏதோ மந்திரம் ஓதுவது போன்ற பின்னனி இசையில் தடதடத்து ஆரம்பிக்கும் இசை, ஒரு வித சோக இழையோடி, பரவசம், இனிமை, மகிழ்ச்சி, ஏக்கம் என்ற பல தளங்களிலும் நம்மை பயணிக்க வைக்கும்!!


அதே போல அவர்களது இசையில் "Return to Innocence", "voyager", "Rescue Me - Invisible Love" போன்ற பாடல்கள் மிகவும் பிரபலம். இவர்களின் பாடல்களுக்கான காணொளிகளும் அவர்களது இசையைப் போல மிகவும் வித்தயாசமானதே!! இந்த "Return to Innocence" என்ற (கீழே) காணொளியைப் பார்க்கும் பொழுது சிறுவயது நினைவுகள் வருவதைத் தவிர்க்க முடியாது.


கடந்த 20 ஆண்டுகளில் கல்லூரிகளில் படித்து முடித்தவர்கள் அல்லது கல்லூரி விழாக்களில் கலந்துகொண்டவர்கள் எவரும் "எனிக்மா"வின் இசையைக் கேட்காமல் இருந்திருக்கமாட்டார்கள். போட்டிகளின் நடுவே, போட்டிகளின் முடிவுகளை அறிவிக்கும் பொழுது என "தடதடக்கும்" இசை கேட்ட நினைவிருந்தால் அது "எனிக்மா"வாகத் தான் இருக்கும்.

இன்றளவும் கல்லூரிகளின், மாநரங்களில் நடைபெறும் ஆடைவடிவமைப்புப் போட்டிகள், பூனை நடைப்போட்டிகளின் பொழுது இதமாகத் தவிழவிடும் இசை "எனிக்மா" தான்!!

"எனிக்மா"வின் இசையைக் கேட்டு புது வித அனுபவத்திற்குச் செல்ல வாழ்த்துகள்!! எத்தனையோ (மொக்கை இசையைப்) கேட்டுட்டோம், இதைக் கேட்கவா மாட்டோம்!! எனிக்மாவைக் கேட்ட பிறகு "இந்தப் படத்தில் காப்பி அடித்தார்கள், அந்தப் படத்தில் காப்பி அடித்தார்கள்" என்று உங்களுக்குத் தோன்றினால் கம்பெனி பொறுப்பாகாது :)

எனிக்மாவின் இசையை அனுபவிக்க "ஹம்மா.காம்"ன் சுட்டி
..

7 comments:

geethappriyan said...

அருமையான அறிமுகம்
நான் கூட கேட்&ஸாம் மெண்டஸ் நடித்த படமோ என நினைத்துவிட்டேன்.
சுட்டிக்கு நன்றி

சந்தனமுல்லை said...

வாவ் வாவ் வாவ்..எனக்கும் எனிக்மாவின் இசை மிகவும் பிடிக்கும். invisible love - one of my fav songs! இடுகைக்கு நன்றி!

Chitra said...

எனிக்மாவைக் கேட்ட பிறகு "இந்தப் படத்தில் காப்பி அடித்தார்கள், அந்தப் படத்தில் காப்பி அடித்தார்கள்" என்று உங்களுக்குத் தோன்றினால் கம்பெனி பொறுப்பாகாது :)


............ ha,ha,ha,ha.....

பிரபாகர் said...

செந்தில்,

கல்லூரி சமயத்தில் ரொம்ப அருமையென சொல்லுவார்கள்...
அதிகம் கேட்டதில்லை.

உங்களின் பரிந்துரைக்குப்பின் கேட்டுவிடவேண்டியதுதான்...

பிரபாகர்...

Shyam said...

இசை ரொம்ப நல்ல இருக்கு சார்

ஹாய் அரும்பாவூர் said...

சிறப்பான ஒரு திறனாய்வு
அழகிய வீடியோ தொகுப்பு நன்றி

கண்ணா.. said...

நான் இது வரை கேட்டதில்லை..

சுட்டிக்கு நன்றி

கேட்டு விடுகிறேன்

Related Posts with Thumbnails