Monday, March 22, 2010

ஜெய்ஹோ!! சென்னை!!

யார் சொன்னது 20-20 கிரிக்கெட் சுவாரஸ்யம் இல்லை என்று?

"என்னங்க இது!! சும்மா சிக்ஸும் ஃபோருமா அடிச்சுத் தள்ளறாங்க!! பௌலர்களப் பார்க்கவே பாவமா இருக்கு!!" என்று கூறியது நானே தான்!! 

விளையாட்டு மைதானங்களைச் சிறியதாக்கி, பொழுதுபோக்கை மட்டுமே மையமாகக் கொண்ட கிரிக்கெட் வடிவம் என்பதால், 'டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளின் தீவிர ரசிகன்' என்ற முறையில் எனக்கு 20-20 மீது பெரிய ஈடுபாடு இருந்ததில்லை!! 

ஆனால், எனது கருத்தை மாற்றியே தீர வேண்டும்!! இன்று (21.03)  நடந்த சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியைப் பார்த்த பிறகு!! 

ooo

137 என்னும் எளிதில் எட்டக்கூடிய இலக்கு சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியினர்க்கு!! சென்னை அணியின் துவக்க ஆட்டக்காரர் மாத்யூ ஹைடன் விலாச ஆரம்பித்தவுடன் ஃபாக்ஸ்மூவிஸ் (Fox Movies), எம்.பி.சி (MBC) , ஸ்டார் மூவீஸ்(Star Movies) போன்ற சேனல்களுக்குத் தாவ ஆரம்பித்துவிட்டேன்!!

36 பந்துகளில் 34 ஓட்டங்கள் என்று எளிதில் எட்டக்கூடிய நிலையில் இருந்த ஆட்டத்தில் 'மட மட'வென ஆட்டக்காரர்கள் ஆட்டமிழக்க மீண்டும் "கிரிக்-ஒன்"(அமீரகத்தில் ஒளிபரப்ப உரிமம் பெற்ற சானல் Cric-one) சானலிற்கு மாறினேன்!!

பார்திவ் படேலும் மார்க்கலும் அழகாக ஒன்று, இரண்டு என்ற ஓட்டங்களை எடுத்துவர 18 பந்துகளில் 20 ஓட்டங்கள் என்ற நிலைக்கு வந்தது!! யார் வெற்றி பெறுவார்கள் என சென்னை அரங்கம் முழுவதும் ஒரே பரபரப்பு!! 'ஒரு புறம் நகத்தைக் கடிக்கும் பிரீத்தி ஜிந்தா, இன்னொரு புறம் டென்ஷனாக திரிஷா' என்று நமக்கும் ஒரே பதைபதைப்பு :)



18 பந்துகள் 20 ஓட்டங்கள்: பையூஸ் சாவ்லா பந்துவீச வர முதல் பந்தை பவுண்டரிக்கு அனுப்பினார் பார்த்திவ்.

17 பந்துகள் 16 ஓட்டங்கள்: இறங்கி ஆட நினைத்த பார்த்திவ் பந்தைத் தவற விட, பைல்ஸைத் தூக்கினார் சங்காகரா!!

பிறகு களமிறங்கிய கோணியும் மார்க்கலும் ஒவ்வொரு ஓட்டங்களை எடுக்க.. 

12 பந்துகளில் 12 ஓட்டங்கள் என்ற நிலைக்கு வந்தது ஆட்டம்!!

பஞ்சாப் அணியில் புதிதாக களமிறங்கிய தீரான் (ஆட்ட நாயகன்) 19வது ஓவரில் 2 ஓட்டங்களை மட்டுமே கொடுத்து கோணியையும் ஆட்டமிழக்கச் செய்தார்!!

கடைசி ஓவர்!!

6 பந்துகளில் 10 ஓட்டங்கள்: 

யாரப்பா பௌலர்? பத்தான் கையில் பந்து சென்றவுடன் சென்னை ரசிகர்களுக்கு 'சென்னை ஜெயித்துவிட்டது' போன்ற மகிழ்ச்சி!!அவர்கள் மகிழ்ச்சி வீணாகவில்லை!! முதல் பந்தை வெளியே போட்டுத்தர விளாசிய மார்க்கெலின் மட்டையில் பட்டு பவுண்டரிக்குச் சென்றது.

5 பந்துகளில் 6 ஓட்டங்கள்:

அடுத்த பந்தில் இரண்டு சொற்ப ஓட்டங்களை பை (Bye) முறையில் எடுத்த பொழுது "என்ன தான் ஐ.பி.எல். னாலும் நாங்க இப்படி கோட்டை விடுவோம்"னு சொல்ற மாதிரி இருந்தது!! மீண்டும் ஒரே கரகோஷம் தான்!!

4 பந்துகளில் 4 ஓட்டங்கள்:

பத்தானின் பந்தை எதிர்நோக்கிய மார்க்கெல் ஒரு ஓட்டத்தைப் பெற்று அடுத்த முனைக்குச் சென்றார். புதிதாகக் களமிறங்கிய "அஸ்வின்" பந்தை எதிர் கொள்ளத் தயாரானார்.

3 பந்துகளில் 3 ஓட்டங்கள்: அஸ்வின் - இரண்டு ஓட்டங்கள்..

2 பந்துகளில் 1 ஓட்டம்: ஓட்டங்கள் எதுவும் இல்லை!!

1 பந்தில் 1 ஓட்டம்: பந்தைப் போடும் முன்பு மீண்டும் எங்கும் பரபரப்பு!! ஆட்டம் "டை( Tie)"யானால் என்ன ஆகும் என்பதைப் பற்றி கமெண்டேட்டர் ரவி சாஸ்திரி கூற ஆரம்பித்தார். 20-20 போட்டிகளில் டை ஆனால் டை-பிரேக்கராக சூப்பர் ஓவர் போடுப்படுமாம்!! "இதையெல்லாம் எதற்குச் சொல்கிறார், அதெல்லாம் நடக்காது அஸ்வின் அடித்துவிடுவார்" என்று நம்பிக்கொண்டிருக்கும் பொழுதே "பப்பரப்பே" என்று காட்ச் கொடுத்து அவுட் ஆக ஆட்டம் டை ஆனது. ஆக.. ரவி சாஸ்திரி கூறியது போல சூப்பர் ஓவர் நிலைக்குச் சென்றது!!

அதென்னா சூப்பர் ஓவர் ( Super Over )?

"ஆட்டம் டை ஆகனும்னா சூப்பரா இருந்திருக்கணும்ல!! அதுக்காக இந்தப் பெயர் வைத்திருப்பார்கள்"என்று நான் நினைத்தது போலெல்லாம் நினைக்க வேண்டாம்!!

சூப்பர் ஓவரின் முறை: ஒவ்வொரு அணிக்கும் ஒவ்வொரு ஓவர் அளிக்கப்படும். மூன்று மட்டையாளர்கள் விளையாடலாம். இரண்டு விக்கட்கள் விழுந்துவிட்டால் ஆட்டம் முடிந்துவிடும். பிறகு அடுத்த அணி விளையாட ஆரம்பிக்கும்.

இந்த ஆட்டத்தில் சூப்பர் ஓவரின் விளையாட..சென்னை அணியிலிருந்து ஹைடன், சுரேஷ் ரைனா, மார்க்கெலும்; பஞ்சாப் அணியிலிருந்து யுவராஜ், பத்தான், ஜெயவர்த்தனாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சென்னை அணியின் ஓவரைப் போட முரளிதரனும் பஞ்சாம் அணிக்கு தீரானும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

சூப்பர் ஓவர்: சென்னை அணியில் ஹைடன் களமிறங்க.. ஒரு ஓவரின் குறைந்தது 20 ஓட்டங்கள் எடுத்துவிடுவார் என்று நினைத்தோம். ஆனால் "பொசுக்"கென ரன் எடுக்காமல் அவுட் ஆக.. சுரேஷ் ரைனா ஒரு சிக்சரும், சில ஓட்டங்களும் எடுத்து சென்னை அணியின் ஸ்கோர் 9ஆக இருக்கும் பொழுது ஆட்டமிழந்தார்.

பஞ்சாப் அணி வெற்றியடைய 10 ஓட்டங்கள் தேவை!! மீண்டும் பஞ்சாப் ரசிகர்கள் ஆரவாரம்!! மீண்டும் ப்ரீத்தி, திரிஷா, பரபரப்பு... நமக்கும் பதைபதைப்பு!!

முரளிதரன் முதல் பந்தைவீச வர ஜெயவர்த்தனே எதிர்கொண்டார் ஜெயவர்த்தனே!! முதல் பந்தில் சிக்சர்!! மீண்டும் பஞ்சாம் ஆரவாரம்!! அடுத்த பந்தில் ஜெயவர்த்தனே ஆட்டமிழக்க மீண்டும் சென்னை ஆரவாரம்!! அடுத்த பந்தை எதிர்கொண்ட யுவராஜ் சிங்.. பவுண்டரிக்கு பந்தை விரட்ட பஞ்சாம் ஐ.பி.எல்-3ல் கணக்கைத் துவங்கியது!!



சென்னை ரசிகர்கள்!!

கிரிக்கெட் வரலாற்றில் சென்னை மைதானத்திற்கும் சென்னை ரசிகர்களுக்கும் ஒரு தனி இடம் இருக்கத்தான் செய்கிறது. "கிரிக்கெட்டில் நுட்பமான அறிவுள்ளவர்கள், தரமான ரசிகர்கள்" என்ற பரவலாகப் புகழப்படுவது தவறல்ல என்பதை சென்னை ரசிகர்கள் மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார்கள்!! பஞ்சாம் அணி வெற்றியடையும் நிலைக்கு வந்த பொழுதும் ஊக்குவிப்பது, அவர்கள் வெற்றியடைந்த பிறகு சென்னை ரசிகர்கள் பாராட்டியது போல கொல்கத்தா ரசிகர்களோ மும்பை ரசிகர்களோ பாராட்டுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது!!

இதற்காக முதல் ஜெய் ஹோ!!

"Chennai is Known for Close contests" என்ற வாதமும் மீண்டுமொரு முறை நிரூபனம் ஆகியுள்ளது!! 

1986ல் - இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நடந்த போட்டி டையில் முடிந்தது சென்னையில்!!

1999ல் - இந்தியா - பாக்கிஸ்தான் அணிகளுக்கிடையே நடந்த  போட்டியில், வெற்றி பெறும் நிலையில் இருந்து தவற விட்ட பொழுது வித்தியாசம் 14 ஓட்டங்கள். மைதானம் சென்னை!!

2001ல் - இந்தியா - ஆஸ்திரேலியா - 5வது நாளின் ஆட்டம் முடிந்து விடும் நிலையில் தொடரை வென்றது சென்னையில்!!

கிரிக்கெட் போட்டிகள் சுவாரஸ்யம் உள்ளதாக மாற்றுவதில் இது போன்ற பரபரப்பான ஆட்டங்கள் தான் காரணம்!! இது போன்ற ஆட்டங்களில் சென்னைக்கு என்றுமே தனி இடம் அமைந்துவிடுவது சிறப்பே!!

இதற்காக மற்றுமொரு முறை ஜெய் ஹோ!! 

ஜெய் ஹோ சென்னை!!

9 comments:

பிரபாகர் said...

மேட்ச் போலவே உங்கள் இடுகையும் பயங்கர பரபரப்பு!

சென்னையில் நடந்த ஆட்டங்களை நினைவுபடுத்தி கலக்கியிருக்கிறீர்கள்...

சூட்டோடு சூடாய் நல்ல இடுகை...

கமெண்ட்ரியும் அருமையாய் இருந்தது, எல்லாம் நகம் கடிச்சிகிட்டு டென்ஷனா இருக்காங்க, அது இதுன்னு!

ஜெய் ஹோ.... கிரிக்கெட்....

பிரபாகர்...

ஹாய் அரும்பாவூர் said...

நேரலை ஒளிபரப்பு பார்க்க வில்லை
ஆனால் உங்கள் பதிவை படிக்கும் போது அந்த உணர்வு ஏற்பட்டது

இந்தியாவில் எல்லா விளையாட்டை விட கிரிக்கெட் மட்டும் முதல் இடம் பெற மீடியாக்கள் செய்யும் யுக்தி தவிர வேறு எதவும் இல்லை

புட் பால் விளையாட்டில் நாம் இன்னும் தகுதியே பெற வில்லை ஆனால் அதை பற்றி யாருக்கும் தெரியாமல் இருப்பதில் ஆகட்டும்

கிரிக்கெட் பற்றி சின்ன சின்ன விஷயங்கள் பற்றி கூட மீடியாக்கள் செய்யும் விளம்பரம் மிக பெரியது

இதில் தேச பக்தி விட கோடிகணக்கில் புரளும் பணமே காரணம்

கிரிக்கெட் நாங்கள் எல்லாம் பர்ர்க்க மாட்டோம் நாங்க புட் பால் விசிறி என்று சொன்ன கேரள சேட்டன்களை
கிரிக்கெட் பைத்தியம் பிடித்து ஆட்டுவிக்க இந்த மீடியா செய்த மாயமே காரணம்

கொச்சி அணி வேறு வர போகிறது இனி கேரளா முழுவதும் கிரிக்கெட் தவிர வேற எதை பற்றியும் பேச மாட்டார்கள்

வாழ்க கிரிகெட் வளர்க மீடியா

vasu balaji said...

அதே விருவிருப்புடன் தகவல்:).

Chitra said...

Jai Ho!

CS. Mohan Kumar said...

நேரில் பாத்து வெறுத்து போனேன்

கண்ணா.. said...

நல்ல விறுவிறுப்பான கமெண்ட்ரி...

ஆனாலும் ஃப்ரீத்தி ஜிந்தாவின் படத்தை போட்டு விட்டு திரிஷாவின் படத்தை போடாததை வன்மையாக கண்டிக்கிறேன்...

:)

அப்துல்மாலிக் said...

இதே டென்ஷனில் நானும் இருந்தேன், ஜெயிக்க வேண்டிய மேட்ச் தோற்றுப்போனதில் எனக்கும் வருத்தம்தான்

அழகான வர்ணனை

geethappriyan said...

கலக்கலான பதிவு
நேரடி ஒளிபர்ப்பிற்கு இணைய தள சுட்டி இருந்தால் வெளியிடுங்கள்,எல்லோருக்கும் பயனளிக்கும்.

க.பாலாசி said...

உங்களோட ஆரம்ப நிலைப்பாடுதாங்க இப்ப எனக்கு....

Related Posts with Thumbnails