Saturday, March 27, 2010

விளக்கை அணைக்க ஆசையா?

ஒரு கிளுகிளுப்பான விசயத்தைப் பற்றிய பதிவோ என்று உள்ளே நுழைந்திருந்தால், "மன்னிக்கவும்!! இது கிளுகிளுப்பை விட முக்கியமான விசயத்தைப் பற்றிய பதிவு!!"

திங்கட்கிழமை அலுவலகத்திற்குச் செல்லும் பொழுதே பெரும்பாலானோரின் எண்ணம் "அடுத்த வெள்ளிக்கிழமை/ சனிக்கிழமை எப்பொழுது வரும்!!" என்பதைப் பற்றித் தான் இருக்கிறது. இதை "Monday Morning Blues" என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறார்கள்!! வார விடுமுறை எடுத்த ஓய்வு, கிடைத்த புத்துணர்ச்சியால், அடுத்த ஓய்வு நாள் எப்பொழுது வரும் என்பதைப் பற்றி யோசிக்க வைக்கிறது!!

மனிதர்கள், விலங்கினங்கள், பறவைகள், மரம், செடிகொடிகள் இன்னபிற உயிரினங்கள் அனைத்தும் ஓய்வெடுத்து நம்மைப் புதுப்பிக்கின்றன. ஆனால், நம்மை எல்லாம் தாங்கும் "பூமித்தாய்" என்றாவது ஓய்வெடுத்துள்ளாளா?


பூமி தோன்றிய காலத்திலிருந்து அயராது சுழன்று கொண்டே இருக்கிறாளே!! பூமித்தாயின் சுழற்சியால் தான் நமக்கும் பகல், இரவு, கால நிலை மாற்றம், அதனால் வரும் மழை, உணவு, வாழ்வாதாரம் எல்லாம் நடந்துகொண்டிருக்கிறது!!

திடீரென்று பூமித்தாய் தன் சுழற்சியை நிறுத்திவிட்டால் என்னவாகும்? 

இரவாக இருக்குமிடங்கள் எல்லாம் இரவாகவே இருந்துவிடும். பகலாக இருக்குமிடங்கள் எல்லாமே பகலாகவே இருந்துவிடும். இன்றும் ஃபின்லாந்து, நார்வே போன்ற நாடுகளில் இது போன்ற காலநிலை வருடத்தில் நான்கைந்து மாதங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அந்த நாட்டு மக்களில் பலர் மன உளைச்சலிற்கும், போதிய உறக்கமின்றியும் இருந்து அவதிப்படுகின்றனர்.  அது போன்ற காலநிலை எல்லாம் இல்லாத ஒரு இடத்தில் பிறந்ததிற்காகவே நாம் மகிழ்ச்சியடைவேண்டும்!!  பூமித்தாய்க்கு நன்றி சொல்லியாக வேண்டும்!!

ஆனால் நாமோ "பூமித்தாயின் வளங்களை அழித்தும், இரவையே பகலாக்கும் அளவிற்கு ஒளிமாசை ஏற்படுத்தியும்" நமது நன்றிக்கடனை செலுத்தி வருகிறோம்!! 

பூமித்தாய்க்கு எப்படி நன்றி சொல்வது? ஒளிமாசை எப்படி குறைப்பது, பூமித்தாய்க்கு எப்படி நன்றி சொல்வது? மக்களிடம் விழிப்புணர்ச்சியை எப்படி ஏற்படுத்துவது?

இதற்காக உலக இயற்கை நிதியம் (World Wide Fund - Nature) ஆண்டு தோறும் மார்ச் மாதம் கடைசி சனிக்கிழமைகளில் புவி மணி(Earth Hour)யைக் கடைப்பிடிக்க வலியுறுத்துகின்றனர்.

அது என்ன புவி மணி?

புவி மணி (Earth Hour) என்பது, வீடுகளில், வணிக நிறுவனங்களிலும் உள்ள உள்ள விளக்குகளையும், அவசியம் இல்லாத மின் கருவிகளையும் ஒரு மணி நேரம் அணைத்துவிடுமாறு கோரும் ஒரு அனைத்துலக நிகழ்வு!! இது இன்று 27ம் தேதி இரவு 8:30 மணி முதல் 9:30 மணி வரை அனுசரிக்க ஏற்பாடாகியுள்ளது.



உலக நாடுகள் பலவும் புவிமணியைக் கடைப்பிடிக்க உத்தேசித்துள்ளன. துபாயில் உள்ள புர்ஜ் கலிபா, சிட்னி நகரின் ஓபேரா, எகிப்து பிரமிட்கள் என உலகப் பிரசித்தி பெற்ற இடங்கள் அனைத்திலும் விளக்குகள் அணைக்கப்படும்!! 

இவர்களுடன் சேர்ந்து நாம் என்ன செய்ய முடியும்?

வீட்டில் உள்ள விளக்குகளை அணைத்துவிட்டு இருந்து பார்த்தால் என்ன? அக்கம்பக்கத்தில் உள்ள அனைவரும் நிறுத்திவிட்டு ஒரு மணி நட்சத்திரங்கள் எங்கெங்கே இருக்கிறதென குழந்தைகளுக்குக் காட்டலாம்!!

"என்னப்பா செந்திலு, சன் டிவில டீலா நோ டீலா பார்க்கணும், ஐ.பி.எல் மாட்ச் பார்க்கணும்.. நீ வேற.." என்று நினைப்பவர்களுக்கு "பூமித்தாயின் சார்பில் ஒரு நன்றியை உதிர்க்கிறேன் :)" 

விளக்கை அணைக்க ஆசைப்படுகிற அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி! நன்றி!!

இந்தச் செய்தி மற்றவர்களையும் சென்றடைய "தமிழிஷ்/ தமிழ்மணத்தில்" ஓட்டளிக்க வேண்டுகிறேன்.

..

15 comments:

Prathap Kumar S. said...

செந்திலு... இது நம்மூர்ல தேவையே இல்லயே... அதை மின்சாரவாரியமே தனியா பண்ணும்போது நம்மமக்கள் பண்ணதேவையேயில்லை...

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

@@ நாஞ்சில் பிரதாப்,

இந்தக் கேள்வி வரும் என்று தெரியும்!! ஒரு மணி நேரம் "சுற்றுப்புறச் சூழலையும், பூமித்தாயையும் நினைத்து" விளக்குகளை அணைப்பது போல மின்வெட்டுகள் இருக்காதே!!

மின்வெட்டில் நம் பங்கு ஒன்றுமில்லை!! ஆனால் "புவிமணி"யில் முக்கியமே விழிப்புணர்வும் நன்றியுணர்ச்சியும் தான்.

ஸ்ரீ.கிருஷ்ணா said...

, அருமை ...

ராம்ஜி_யாஹூ said...

As said by nanjil sambath, in Tamilnadu, TNEB takes care of that.

Whatever the quantity of pollution/global warming we are going to save in today's 1 hour will be immediately compensated by the serial lights arranged in Pennagaram election campaign or the new MLA hostel inauguration function.


This light off is total drama. How much warm we are adding through IPL day night matches.,

Cant we conduct IPL matches between 6 am to 11 am.

நட்புடன் ஜமால் said...

புதிய செய்தி

நல்ல பகிர்வு நன்றி.

☀நான் ஆதவன்☀ said...

நல்ல பதிவு செந்தில்

//As said by nanjil sambath//

:)))

க.பாலாசி said...

நல்லவேளை நான் எந்த டி.வி நிகழ்ச்சிகளுக்கும் அடிமையாகவில்லை. அதனால் என் ஒருமணிநேரபொழுது நிலவோடுதான்...

நல்ல இடுகை....

Chitra said...

செந்திலு... இது நம்மூர்ல தேவையே இல்லயே... அதை மின்சாரவாரியமே தனியா பண்ணும்போது நம்மமக்கள் பண்ணதேவையேயில்லை...


......யோசிக்க வேண்டிய விஷயம் தான்...... எப்பொழுது மின்சாரம் வரும், வீட்டு வேலைகளை முடிக்க என்று காத்து கொண்டிருப்பவர்களுக்கு ......

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

நல்ல அவசியமான பகிர்வுக்கு வாழ்த்துக்கள் .

சொல்லச் சொல்ல said...

நிறைவேற்றி விட்டோம் இன்று! அச்சச்சோ அவசரப் பட்டுட்டேன்னு பயந்துடாதீங்க... இருப்பது ஆஸ்திரேலியா வாச்சே , புது வருடம் முதல் எல்லாவற்றுக்கும் முந்திக் கொள்ள வேண்டிய அவசியம். மற்ற நாடுகளில் வசிப்போரும் அதை பின்பற்ற எங்கள் வாழ்த்துக்கள்.

ஈரோடு கதிர் said...

அருமையான பகிர்வு...செந்தில்

//பூமித்தாயின் சார்பில் ஒரு நன்றியை உதிர்க்கிறேன் :)" //

புரிகிறது

geethappriyan said...

கண்டிப்பா செய்து விடுகிறேன்,எவ்வளவோ செய்துட்டோம்,இதை செய்யமாட்டோமா?
சமுதாய விழிப்புணர்வுடன் ஒரு இடுகைக்கு ஜே!!காலையிலேயே ஓட்டுக்கள் போட்டுவிட்டேன்.

பனித்துளி சங்கர் said...

அருமையான விளக்கத்துடன் கோரிக்கயை விடுத்து இருக்கிறீர்கள்!!

பகிர்விற்கு நன்றி!!

கண்ணா.. said...

நேற்று இந்த் அடையாள விளக்கணைப்பு துபாயில் அதிகளவில் இல்லாமல் இருந்தது.

ஆம் நமக்கு விழிப்புணர்வு அதிகளவில் தேவைதான்.

பின்னோக்கி said...

இது பரவலாக அனுசரிக்கப்பட்டால், வானியலில் ஆர்வம் உள்ளவர்கள், தொலைநோக்கி வழி பிரபஞ்சத்தை பார்க்க உதவியாக இருக்கும்.

அமெரிக்காவின் சில மாநிலங்களில், இந்த வழக்கம் இருக்கிறது.

Related Posts with Thumbnails