Saturday, April 3, 2010

பையா கார் லிப்ட்டும் பூனா கேங்-ரேப்பும்!!

வியாழக்கிழமை மதியமானால் ஷார்ஜா - கன்கார்டு திரையரங்கிற்குப் போன் செய்து "ஏதாவது தமிழ்ப் படம் வெளியாகியுள்ளதா?" என்று கேட்பது வாடிக்கையாகியுள்ளது. அது போல இந்த வாரம் கேட்டபொழுது வியாழன் முதல் மதியம், இரவு என இரண்டு காட்சிகளாக "பையா" வெளியாகியுள்ளது என்றனர். நான் கடைசியாக திரையரங்கில் பார்த்த படம் "ஆயிரத்தில் ஒருவன்". கார்த்தியின் நடிப்பின் மேல் உள்ள எதிர்பார்ப்பால் இந்தப் படத்தையும் பார்ப்பதென்று முடிவெடுத்திருந்தேன்.

நேற்று மாலை திரையரங்கிற்கு சென்று நுழைவுச்சீட்டை வாங்கி உள்ளே சென்றேன். படம் போட சில நிமிடங்கள் இருந்ததால் வலையில் என்ன நடக்கிறதென்று அலைபேசி(??) மூலம என்.டி.டி.வி(NDTV)யின் செய்தித்தளத்தில் உலாவ ஆரம்பித்தேன். பளீரென்று தெரிந்தது அந்த செய்தி!! 

"பூனாவில் 25 வயது எம்.பி.ஏ பட்டதாரிப் பெண் நான்கு பேரால் கற்பழிக்கப்பட்டிருக்கிறார்" என்ற செய்தி தான் அது!!

ஒரு மாத காலமாக பூனாவில் வசித்து வரும் இந்தப் பெண், ஐ.டி. நிறுவனமொன்றில் நேர்முகத் தேர்விற்காகத் தயாராகியிருக்கிறார். 25 கி.மீட்டர் தொலைவில் இருக்கும் ஐ.டி.பூங்காவிற்குச் செல்ல வேண்டியவர். தான் இருக்குமிடத்தில் இருந்து மதிய நேரத்தில் போதிய பேருந்து வசதியில்லாததால், ஏதாவது டாக்ஸி, அல்லது "கார்-லிப்ட்" மூலம் செல்வதாகத் திட்டம். நீண்ட நேரம் நின்றிருந்தவர்க்கு நான்கு பேர் கொண்ட கும்பல் "லிஃப்ட்" கொடுத்திருக்கிறது.

பிறகு நடந்தது தான் கோர சம்பவம்!!


அந்தப் பெண்ணிற்கு நேர்ந்திருக்கும் துயரை வார்த்தைகளால் மருந்திட முடியாது!! ஆனால், சமூகத்தின் மீதும் கோபப்படாமலும் அந்தப் பெண்ணின் மீதும் வருத்தப்படாமலும் இருக்க முடியவில்லை!!

இந்தியத் தொழில்துறை நகரங்களில் பூனாவிற்கு என்று தனியிடம் இருக்கத்தான் செய்கிறது. மும்பைக்கு மிக அருகில் இருப்பது, கோடிக்கணக்கில் முதலீடுகளைக் கொட்டும் பன்னாட்டு நிறுவனங்கள் என்று பூனாவைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், போதிய வசதிகள் இல்லாமல் தொழில்துறையில் முன்னேறி என்ன பயன்? யாருக்குச் செல்கிறது இந்தப் பணம்? மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் பொழுது போக்குவரத்து வசதிகளுள் தமிழகம் பரவாயில்லை என்று தான் சொல்ல வேண்டும். இரவு பத்து மணிவரை கிராமப்புறங்கள், நகர்ப்புறங்கள் என எங்கும் ஓரளவு பேருந்து வசதியிருக்கத்தான் செய்கிறது!! பூனா ஐ.பி.எல். அணியை விலை கொடுத்து சஹாரா நிறுவனம் வாங்கியிருக்கும் தொகையை நினைத்தால் ............ 

ஒரு நிறுவனத்தில் இன்ன நேரத்தில் நேர்முகத் தேர்வென்றால், முன்னரே எப்படிச் செல்லப் போகிறோம்? போக்குவரத்து வசதிகள் எப்படி? என்றெல்லாம் யோசித்து முன்னேற்பாடு செய்ய வேண்டாமா? புதிதாக ஒரு நகரத்திற்கு செல்கிறோம் என்றால் அந்நகரம் எப்படிப் பட்டது? அந்நகரின் பாதுகாப்பு வசதிகள் எப்படி இருக்கிறது என்றெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டாமா? பிறகு படித்து என்ன பயன்?

இங்கே காட்டுமிராண்டிகளைப் பற்றிக் கூற ஒன்றுமில்லை!! சட்டம் தன் வேலையைச் செய்யும் :((

o

பையாவைப் பற்றி எழுத ஆரம்பித்து எங்கோ சென்றுவிட்டேன்!! பையா படம் போடும் வரை என் மனதில் ஓடிய எண்ணங்கள் தான் மேலே குறிப்பிட்டவை!!

பையா படம் ஆரம்பித்தது..


படத்தின் ஆரம்பித்திலேயே கார்த்தி தமன்னாவைப் பார்த்துவிட்டு காதல் வயப்படுகிறார். தன் நண்பன் ஒருவரை ரயில் நிலையத்தில் அழைக்கச் சென்ற கார்த்தியிடம் ரயிலைத் தவற விட்ட தமன்னா சென்னை வரை லிஃப்ட் தர முடியுமாவென்று கேட்கிறார். பிறகு தமன்னா, அவருடன் வந்த நபரை கழட்டிவிட்டு விட்டு மும்பைக்குக் காரை ஓட்டச் சொல்கிறார். கார்த்தியும் தமன்னாவை மும்பை அழைத்துச் செல்கிறார்!!

எனக்கு ராம்கோவால்வர்மா இயக்கிய ROAD படம் நினைவில் வர ஆரம்பித்தது. விவேக் ஓபராய் தன் காதலி அந்தரா மாலியுடன் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் பொழுது, லிஃப்ட் கேட்கும் மனோஜ் பாஜ்பாய், விவேக் ஓபராயை காரிலிருந்து இறக்கிவிட்டு விட்டு அந்தரா மாலியை கடத்திச் செல்வது போல படம் செல்லும். நல்ல விறுவிறுப்பான படம்!! 

பையா படத்தில் தமன்னா கார்-லிஃப்ட் கேட்பது என்னவோ ஹீரோ கார்த்தியிடம்!! ஆகவே பூனாவில் நடந்தது போல (??) எல்லாம் நடக்காமல் படம் கார் ரேஸ், காதல், சண்டைகள், குளுகுளு ஒளிப்பதிவு, இனிமையான இசை என செல்கிறது! லாஜிக் பார்க்காதவர்கள் ஒரு முறை பார்க்கலாம்!!

o

ஆனால் தோழிகளே, தோழர்களே (இந்தக் காலத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்), தமன்னா கார்த்தியிடம் கார் லிஃப்ட் கேட்டுச் சென்றதைப் போலெல்லாம் செல்லும் முன்பு கொஞ்சம் யோசியுங்கள்!! உங்கள் தற்காப்பு நிலை என்னவென்று!! டீசண்டாக, நல்ல ஸ்மார்டாக இருக்கிறார் என்றெல்லாம் யாரையும் நம்பி விடவேண்டாம். அதெல்லாம் சினிமாவில் மட்டும் தான்!!

"தீவிரவாதிக எல்லாம் என்னை மாதிரி கோரமா இருக்க மாட்டங்க. (மாதவனை நோக்கி) உங்களை மாதிரி நல்ல ஸ்மார்ட்டாத் தான் இருப்பாங்க!!" என்று அன்பே சிவம் படத்தில் தலைவர் கூறும் வசனம் தான் நினைவிற்கு வருகிறது இன்னேரத்தில்!!

o

பையா விமர்சனம் என்று நினைத்து வந்தால் "ராவித் தள்ளறாண்டா" என்று நினைப்பவர்களுக்கு ஒரு சின்ன :((

o

11 comments:

manjoorraja said...

road நல்ல படம்.

இந்த படம் பார்த்துட்டு சொல்றேன்.

manjoorraja said...

இந்த படத்திற்கு ராவி தள்ளியதே போதும்னு நினைக்கிறேன்.

பிரபாகர் said...

விமர்சனம் வித்தியாசமா இருக்கு செந்தில்...

இரு விஷயங்களை சம்மந்தப்படுத்தி உங்கள் வழக்கமான சமூக அக்கறையுடன்...கலக்குங்கள்...

பிரபாகர்...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

//
பையா விமர்சனம் என்று நினைத்து வந்தால் "ராவித் தள்ளறாண்டா" என்று நினைப்பவர்களுக்கு ஒரு சின்ன :((o
//

அண்ணே..அப்படியெல்லாம் நினைக்கமாட்டோமுண்ணே.. படம் பார்க்கலாமா வேண்டாமா.. என எதுக்கும், பூ போட்டு பார்த்துக்கிறேன்..

செ.சரவணக்குமார் said...

அருமையான பதிவு செந்தில்.

பழமைபேசி said...

//பையா விமர்சனம் என்று நினைத்து வந்தால் "ராவித் தள்ளறாண்டா" என்று நினைப்பவர்களுக்கு ஒரு சின்ன :((//

அஃகஃகா... வி.வி.சி!

//செ.சரவணக்குமார் said...
அருமையான பதிவு செந்தில்.//

இந்த களேபரத்துலயு ம் இந்தத் தம்பி... இஃகிஃகி!!

வினோத் கெளதம் said...

பையா பார்க்கலாம் போல..
பூனா விஷயம் ..என்னத்த சொல்ல..

Vijay Ramaswamy said...

மேல் கூறிய செய்தியை நான் செய்திதாளில் படித்தேன்.... வரிகளை கொள்ளையடிக்கும் அரசுக்கு ;மக்களின் அடிப்படை பாதுகாப்பை கூட கொடுக்க துப்பு இல்லாததையே இது காட்டுகிறது... இதை போன்ற சம்பவங்கள் எவளவு டான் படிப்பது... சிறிது நாட்களுக்கு முன் இதே சம்பவம் கோவாவில்., சில நாட்கள் முன் மும்பையில், பெங்களூரில்,,,, இப்படி போய் கொண்டே இருக்கிறது....யாரை குறை சொல்வது ? உங்கள் கருத்துடன் எனது சிறிய கருத்தையும் சேர்த்து கொள்கிறேன்.... எந்த அரசும் மக்களை காக்காது நாம் தான் மிக மிக எச்சரிகையாக இருக்கவேண்டும்..... பல தற்காப்பு கலைகளை கற்றுக்கொள்ளவேண்டும் முக்கியமாக பெண்கள்.

S Maharajan said...

அப்போ படம் பார்க்க வேண்டாமா?
நீங்களும் ஷர்ஜாஹ் தான் இருக்கீங்களா..

ராம்ஜி_யாஹூ said...

yes it seems the film is boring

சாமக்கோடங்கி said...

படத்தை ஒரு முறை தாராளமாக பார்க்கலாம்..

நன்றி..

Related Posts with Thumbnails