Saturday, May 2, 2009

முதியோர்களால் ஆளப்படும் நாட்டில் முதியோர்கள் நிலை?

ஒரு ஏழையின் வேதனை ஏழைக்குத்தான் தெரியும் என்பதைப் போல ஒவ்வொரு சமூகத்தின் வலியும் அந்த சமூகத்தை சேர்ந்தவர்களால் தான் நன்றாகப் புரிந்து கொள்ள இயலும். இந்த காரணத்தினால் தான், நாம் அனைத்து சமூகத்தில் இருந்தும் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கிறோம்.


நாம் இத்தனை வருடங்களாக தேர்ந்தெடுத்த உறுப்பினர்களுக்குள் இருக்கும் ஒரு ஒற்றுமை என்ன?


பெரும்பாலானோர் முதியோர் என்பது தான் ஒற்றுமை!


நடந்து முடியும் பாராளமன்றத்தின் உறுப்பினர்களை எடுத்துக்கொண்டால் 55 வயதிற்கு அதிமானோர் எண்ணிக்கை 239. அதாவது, நாம் தேர்ந்தெடுத்த உறுப்பினர்களில் 40 சதவிதத்தினர் முதியோர் தான். மக்களவை உறுப்பினர்கள் மட்டுமல்லாமல், நமது பிரதமர்களில் பெரும்பாலானோர் ஓய்வடையும் வயதைக் கடந்தவர்கள் தான். இந்தத் தேர்தலிலும் , இரண்டு அணியின் பிரதமராக நிறுத்தப்படுபவர்கள் கூட 75 வயதைக் கடந்தவர்கள் தான்.


இப்படி பெரும்பாலும் முதியோர்கள் உறுப்பினர்களாக இருக்கும் நாட்டில் முதியோர்களின் நிலை எப்படி உள்ளது?

அவர்களுடைய தேவைகளை எப்படி எதிர்கொள்கிறார்கள்?உதாரணத்திற்கு, நெடுந்தூரம் பேரூந்தில் செல்வதற்கோ ரயிலில் செல்வதற்கோ முன்பதிவு செய்வதை எடுத்துக்கொள்வோம். முன்பதிவு ஆரம்பித்த அரை மணி நேரத்தில் பயணச்சீட்டுகள் அனைத்தும் தீர்ந்துவிடும் நிலையில், முதியோர்கள் எப்படி முன்பதிவு செய்யமுடியும்?


நாடெங்கும் சாலைகளை அகலப்படுத்துவது நன்மையே.. அதே சமயம், சாலையின் எதிர்புறம் இருக்கும் தன் வயலிற்கோ அல்லது கடைக்கோ செல்ல 4 கிலோ மீட்டர் சுற்றித்தான் வரவேண்டும் என்றால் எப்படி இயல்பாக இருக்கமுடியும் வயதானவர்களால்?


மேலும், எந்த சேவை நிறுவனங்கள் ஆனாலும், தொடர்பு கொள்ள ஒரு எண்ணை கொடுக்கிறார்கள். அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டால், எந்தெந்த சேவைகள் உள்ளது என்று கூறி 1ல் இருந்து 9 வரை ஏதாவது ஒரு எண்ணை அழுத்த சொல்கிறார்கள். அப்படியே நாம் புரிந்தும் புரியாமலும் ஒரு எண்ணை அழுத்தினால், ஒரு சேவை அதிகாரி போனை எடுத்து, வேறு எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு கூறுகிறார். இளைஞர்களுக்கே இது போன்ற சேவைகளை உபயோகிப்பதில் திணறல் வரும் போது, முதியவர்களின் நிலை என்னவாக இருக்கும்?

முதியோர்கள் தனியார்துறை வங்கிகளில் கணக்குத் துவங்காமல் இருப்பதற்கும் ஏடிஎம் அட்டைகளை அதிகம் உபயோகிக்காமல் இருப்பதற்கும் கூட மேலே குறிப்பிட்ட விஷயம் ஒரு முக்கிய காரணம்.


இப்படி அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யவே திணறும் முதியோர்களுக்காக, நம் நாட்டை ஆளும் முதியோர்கள் என்னென்ன திட்டங்களை வகுத்துள்ளனர், என்பதைத் இணையதளத்தில் தேடினால் கிடைத்தவைகளில் சில்...

* 65 வயதிற்கு அதிமானோர்க்கு ஓய்வூதியமாக மாததிற்கு ரூ 75/- ம், 10 கிலோ உணவு தாணியங்களும் கொடுக்க வேண்டும் ( மாதத்திற்கு ரூ 75/-ஐ வைத்து என்ன செய்ய முடியும்? )
* வருமான வரியில் மேலும் ரூ15000/- விலக்கு அளிக்கப்படும்.
* முதியோர் என்றால் வங்கிகளில், 0.5% வட்டி அதிகம் கொடுக்கப்படும்.
* பேருந்துகளில் இரண்டு இருக்கைகள் முதியோர்களுக்கு ஒதுக்க வேண்டும்.
* ரயில், விமானம் போன்றவற்றுள் பயணச்சீட்டில் தள்ளுபடி கொடுக்க வேண்டும்.. போன்றவை தான்...


வருமான வரியில் மேலும் விலக்கு, பயனச்சீட்டில் தள்ளுபடி போன்றவற்றால் முதியோர்களுக்கு நன்மையே!! ஆனால், பயனச்சீட்டே கிடைக்கவில்லை என்றால் தள்ளுபடியால் என்ன பயன்? நம் நாடு தொழில்நுட்பத்தில் முன்னேறி உள்ளது, தொலைத்தொடர்பில் வளர்ச்சி அடைகிறது என்று பெருமைபட்டுக் கொள்ளும் அதே நேரம், அது அனைவருக்கும் சென்றடைகிறதா என்பதை யோசிப்பது நல்லது.


பெரும்பாலான அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளைப் பார்த்தால், முதியோர்களின் தேவைகளைப் பற்றி யோசித்தார்களா என்பதே ஐயமாகத்தான் உள்ளது. தங்களைப்போன்ற சக முதியோர்களின் தேவைகளையே புரிந்து கொள்ள முடியாத முதிய அரசியல்வாதிகளால் நாட்டின் தேவைகளை எப்படி புரிந்து கொள்ள முடியும்?


எத்தனையோ இலவசங்களையும், இட ஒதுக்கீடுகளையும் மறக்காமல் அறிவிக்கும் போது சக முதியோர்களை மட்டும் மறப்பதை என்னவென்று சொல்ல...

தயாராவோம்.... முதியோர்களை வரவேற்க....

.

9 comments:

Anonymous said...

கடைசிச் செலவுக்கு எதுவுமே இல்லையா?

KRICONS said...

வாழ்த்துக்கள் உங்களின் இந்த பதிவு யூத்ஃபுல் விகடனில் வெளியாகியுள்ளது

S Senthilvelan said...

pukalini..

வருகைக்கு நன்றி!!

S Senthilvelan said...

கிர்க்கான்ஸ்...

வருகைக்கு நன்றி!!

Anonymous said...

Senthil, nalla blog...Maram naduvadhai patriya ungal blog pola, naam indha nilaikku enna seyyalaam yenbhadhaiyum blogil continued pakkangalaga ezhudhavum.. Innum sirakkum indha vaiyagam

Uma Senthil

karthick said...

sendil i could see the progress in your writings. keep on growing

Anonymous said...

Excellant Senthil.,
Nithi.

Ramkumar said...

senthil: melum sila kurippugal.. indiya-vin makkal thogai-il 20 vizhukkadu 60-vayadhai kadandhavar.. avargatku.. maruthuva sevai megavum mukkiyam.. anaal nam nattin indraiya nilai.. thaniyar kaappeedu kazhagam 60 vadhai kadandhor-ku kappedu tharuvadhu illai.. podu thurai niruvanangal patri kelvi vendam..

anaal idharku theervu thaan enna. konjam alasi irukkalaame??

Anonymous said...

Dear Senthil,

This is really a superb article,
published at right time.
Keep up the good work.
Regards,
Rajesh-Mettupalayam

Related Posts with Thumbnails