Tuesday, August 11, 2009

ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்!

2030ம் ஆண்டு - "மின்சக்தியை வழங்கி நாட்டின் வறுமையை ஒழித்த ஞாயிறைப் போற்றி வெயில் அதிகமாக இருக்கும் மே மாதத்தின் முதல் நாளை சூரியசக்தித் திருநாளாகக் கொண்டாடவோம்" என்று அரசு ஆணையிட்டால் எப்படி இருக்கும்?

ஏப்பா இருக்கற பண்டிகைகள் போதாதா? என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. ஆனால் உலகெங்கும் நடந்து வரும் மாற்றங்களைக் கவனிக்கையில் இது சாத்தியம் என்றே தோன்றுகிறது.

மின்சக்தி இல்லாமல் நம்மால் ஏதாவதொரு வேலையைச் செய்ய முடிகிறதா? அப்படி மின்சக்தி உற்பத்திக்காக இப்பொழுது நாம் பயன்படுத்தும் நிலக்கரி, கச்சா எண்ணெய் போன்வை தீர்ந்து விட்டால் என்ன செய்வோம்?

"நிலக்கரி, கச்சா எண்ணெய் போன்ற புதைவடிவ எரிபொருள்கள் யாவும் இந்த நூற்றாண்டிற்குள் தீர்ந்து விடும் என்று ஆராய்ச்சிக் கட்டுரைகள் கூறிவருவது அதிர்ச்சியளிக்கிறது. புதைவடிவ எரிபொருள்களுக்கு மாற்று என்ன என்று பார்க்க வேளையில், காற்றாற்றல், சூரிய சக்தி, உயிரெரிபொருள், நீர்மின்சாரம், கடலலை போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வகைகளைக் கூறலாம்.

இதில், சூரியசக்தியை உலக நாடுகள் அனைத்தும் வெகுவாக பயன்படுத்த ஆரம்பித்துள்ளன.

ஐக்கிய அரபு நாட்டின் அரசு, அபுதாபியை அடுத்து உருவாக்கி வரும் மஸ்தார் என்னும் நகரின் மொத்த மின்சக்தி தேவையையும் சூரிய சக்தியின் மூலமே பூர்த்தி செய்வது என்று திட்டமிட்டுள்ளனர். அமெரிக்காவில் உள்ள சான் ஜோஸ் என்ற நகரத்தின் மின்சக்தித் தேவையைச் சூரிய சக்தியின் மூலமே பூர்த்தி செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

நம் மத்திய அரசும் "2020ம் ஆண்டில் 20,000 மெகா வாட் அளவிற்கு சூரியசக்தியை உற்பத்தி செய்ய முதலீடு செய்யும்" என்று அறிவித்துள்ளது.
நாட்டின் வளர்ச்சியை மின்சக்தி உற்பத்தியின் வளர்ச்சியோடு ஒப்பிடுவது மிகவும் பொருத்தமுடையது. உழவுத்தொழில், மருத்துவம், கல்வி, தொழில்துறை என எந்தத் துறையானாலும் மின்சக்தியின் பங்கு இன்றியமையாதது. ஆக மின்சக்தியின் வளர்ச்சி வறுமையை ஒழிக்க வல்லது!

இரவில் விண்வெளியில் இருந்து பூமியை எடுத்த புகைப்படங்களைப் பார்த்திருக்கிறீர்களா?

கருநீல வண்ணத்தில் வெவ்வேறு நாடுகளும், கண்டங்களும் அழகாக காட்சியளிக்கும். ஐரோப்பா, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளின் படங்களைப் பார்க்கும் போது ஒளிவெள்ளமாகவும், ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளின் மேலிருந்து எடுத்த படங்களைப் பார்த்தால் பெரும்பாலும் இருட்டாகவும் ஆங்காங்கே மின்மினிப் பூச்சி போல ஒளியும் காட்சியளிக்கும்.

இந்தியாவின் மேலிருந்து எடுத்த படங்களைப் பார்த்தால் ஓரளவு ஒளியும், இருண்டும் காட்சியளிக்கும்.

"அட, எவ்வளவு அழகா இருக்குது பாரேன்" என்று நாமும் ரசித்துவிட்டு செல்வதுண்டு!

ஆனால், எப்போதாவது இந்த இருளை வறுமையோடு ஒப்பிட்டதுண்டா? நம் நாட்டில் இன்னமும் 30 சதவிதத்தினர்க்கு மின்சக்தி கிடைக்காத வறுமை நிலையைத் தான் மேலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களின் இருள் காட்டுகின்றன. இப்படி நாட்டின் வறுமையைப் போக்க இந்திய அரசு அறிவித்துள்ள திட்டம் மிகவும் பாராட்டத்தக்கதே!

இப்படி சூரியசக்தியின் உற்பத்தியை அதிகரிக்க இந்திய அரசு முயல்வது இந்தத் துறை சார்ந்த தொழில்துறையை வளர்க்கக் கிடைத்த அருமையான வாய்ப்பாகும்!

இங்கே, தமிழகத்தின் கால்வாசிப் பரப்பளவே உள்ள டென்மார்க் நாட்டில் நிகழ்ந்த மாற்றத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். 1980களில், அந்த நாட்டினர் நாட்டின் எண்ணெய் சார்பைக் குறைக்க காற்றாலைகளை நிறுவுவது என முடிவெடுத்து செயல்படுத்தினர். இன்று டென்மார்க்கின் 80% மின்சக்தித் தேவையைக் காற்றாலைகளில் இருந்தே எடுத்துக் கொள்கிறார்கள். அத்துடன் காற்றாலை தொடர்பான கருவிகள் உற்பத்தியிலும் முன்னனியில் உள்ளனர். உலகின் முன்னனி காற்றாலை உற்பத்தி நிறுவனமான வெஸ்டாஸும் டென்மார்க்கைச் சேர்ந்ததே!

இது போல, நம் நாட்டில் சூரியசக்தியின் உற்பத்தியைப் பெருக்கும் பொழுது நம் நாடும் இத்துறையில் முன்னனியில் வருவதுடன் இலட்சக் கணக்கானோர்க்கு வேலையும் கிடைக்க வாய்ப்புள்ளது!

சூரியசக்தியை ஏதோ அரசு மட்டும் தான் நிறுவ வேண்டும் என்று நினைக்க வேண்டாம். நம் வீடுகளில், அலுவலகங்களில், குடியிருப்புகளில் கூட நிறுவலாம். 20000 ரூபாய் செலவளித்து நம் வீட்டின் கூரையில் சூரியசக்தியை உற்பத்தி செய்யும் கருவியை நிறுவி விட்டால் போதும். வீட்டில் உள்ள ஒரு தொலைக்காட்சிப்பெட்டி, நான்கைந்து குழல் விளக்குகள், காத்தாடிகள் போன்றவற்றை இயக்கலாம். ஆரம்பத்தில் விலை அதிகமாகத் தெரிந்தாலும் பரவலாக விற்பனையாகும் பொழுது விலை குறைந்துவிடும்.

இது தொடர்பான விளம்பரங்களைச் சில மாதங்களுக்கு முன்பே கோவை ரெயின்போ பண்பலையில் கேட்டிருக்கிறேன்!

இப்படி நாமே நமக்குத் தேவையான மின்சக்தியை உற்பத்தி செய்துகொண்டால் மின்வெட்டில் விடுபடுவதுடன், நாட்டின் முன்னேற்றத்திலும் பங்குபெற முடியுமே! ஆகவே..

ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்!

உங்கள் கருத்துகளைக் கீழே தெரிவிக்கவும்! இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணத்திலும், தமிழிஷ்லயும் வாக்களியுங்கள். பலரும் படிக்கட்டும்.
.

20 comments:

தமிழ்நெஞ்சம் said...

அருமையாக எழுதி அசத்தி உள்ளீர்கள். காலத்தின் அருமையை விளக்கும் பதிவு.

ச.செந்தில்வேலன் said...

தமிழ் நெஞ்சம்.. வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி

D.R.Ashok said...

ஓம் சூரியாய நமஹ..

நிறைய சொல்றிங்க.... நன்றி

sakthi said...

தமிழகத்தின் கால்வாசிப் பரப்பளவே உள்ள டென்மார்க் நாட்டில் நிகழ்ந்த மாற்றத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். 1980களில், அந்த நாட்டினர் நாட்டின் எண்ணெய் சார்பைக் குறைக்க காற்றாலைகளை நிறுவுவது என முடிவெடுத்து செயல்படுத்தினர். இன்று டென்மார்க்கின் 80% மின்சக்தித் தேவையைக் காற்றாலைகளில் இருந்தே எடுத்துக் கொள்கிறார்கள். அத்துடன் காற்றாலை தொடர்பான கருவிகள் உற்பத்தியிலும் முன்னனியில் உள்ளனர். உலகின் முன்னனி காற்றாலை உற்பத்தி நிறுவனமான வெஸ்டாஸும் டென்மார்க்கைச் சேர்ந்ததே!


நல்ல பகிர்வு செந்தில் உங்கள் பதிவுகள் அனைத்தும் ஆக்கபூர்வமாக உள்ளது

வாழ்த்துக்கள்!!!

தொடருங்கள் உங்களின் அரிய பணியை!!!

ச.செந்தில்வேலன் said...

வாங்க அசோக்... வருகைக்கு நன்றி

வாங்க சக்தி. உங்க ஆதரவிற்கும் பாராட்டிற்கும் நன்றி!

இராகவன் நைஜிரியா said...

சூரிய சக்தியைக் கொண்டு நிறையச் செய்யலாம். ஆனால் நீங்க சொன்ன மாதிரி விலைத்தான் ஏறுமாறாக இருக்கின்றது.

விலை குறைந்தால் நிறைய வீடுகளில் சூரிய சக்தியை உபயோகப் படுத்துவதைப் பார்க்கலாம்.

தங்களின் அருமையான இடுகைக்கு நன்றிகள்.

வண்ணத்துபூச்சியார் said...

அருமையான பதிவு.


நேற்று NDTVயில் சூரிய சக்தியை கொண்டு 20 கிராமங்களில் கை விளக்குகள் ஏற்படுத்தி கொடுத்ததை பற்றியும் அதன் பயன்கள் பற்றியும் பிராணாய்ராய் பேசினார். நடிகர் ஷாருக்கான் அதற்காக ஸ்பான்ஸர் செய்தது பற்றியும் கூறியிருந்தார். பார்தீர்களா..??

நாற்காலி கனவு காணும் நம்ம ஊர் நடிகர்களும் இதை போல ஏதாவது உருப்படியாய் செய்யலாமே என்று எழுதலாம் என்று எண்ணியிருந்தேன்.


அருமையான பகிர்விற்கு நன்றி.

chidambaram said...

அருமையான பதிவு செந்தில்

Sundari said...

Asusual a very very informative article..

also Have you heard of this zero carbon city..i read somewhere that Abudhabi is going to build the first zero carbon city..if possible throw some lights on "zero carbon" when time permits..:)

ச.செந்தில்வேலன் said...

//
இராகவன் நைஜிரியா said...
சூரிய சக்தியைக் கொண்டு நிறையச் செய்யலாம். ஆனால் நீங்க சொன்ன மாதிரி விலைத்தான் ஏறுமாறாக இருக்கின்றது.

விலை குறைந்தால் நிறைய வீடுகளில் சூரிய சக்தியை உபயோகப் படுத்துவதைப் பார்க்கலாம்.

//
வாங்க இராகவன் அண்ணா.. ஆமாங்க கொஞ்சம் விலை குறைந்தால் நல்ல இருக்கும்

ச.செந்தில்வேலன் said...

//
வண்ணத்துபூச்சியார் said...
அருமையான பதிவு.


நேற்று NDTVயில் சூரிய சக்தியை கொண்டு 20 கிராமங்களில் கை விளக்குகள் ஏற்படுத்தி கொடுத்ததை பற்றியும் அதன் பயன்கள் பற்றியும் பிராணாய்ராய் பேசினார். நடிகர் ஷாருக்கான் அதற்காக ஸ்பான்ஸர் செய்தது பற்றியும் கூறியிருந்தார். பார்தீர்களா..??

நாற்காலி கனவு காணும் நம்ம ஊர் நடிகர்களும் இதை போல ஏதாவது உருப்படியாய் செய்யலாமே என்று எழுதலாம் என்று எண்ணியிருந்தேன்
//

வாங்க வண்ணத்துப்பூச்சியார், ஆமாங்க.. நீங்க சொல்றது மிகவும் சரியானதே.. அமீர் கான் கூட சுற்றுலாத் துறை சார்ந்த விளம்பரங்களில் வருகிறார்..

கலையரசன் said...

குறைந்த செலவில் சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்க எளிதான தொழில் நுட்பம் எதுவும் இருந்தால் ஏதுவாக இருக்கும் செந்தில்..

சூரிய ஒளி மூலம் ஒரு மெகாவாட் மின்சாரம் தயாரிக்க ரூ.22 கோடி செலவாகுமாம். இதையே ரூ.10 கோடியாக குறைக்க முடிஞ்சா மத்திய அரசு உதவியுடன் இதுல அதிகமா ஈடுபடலாம்.

போதிய காற்று வீசாததால் காற்றாலைகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியவில்லை. தமிழ்நாட்டில் மின்சார உற்பத்தி குறைந்துவிட்டதற்கு இதுதான் செந்தில் காரணம். இயற்கையும் நம்மவர்களை சதி செய்கிறது பாருங்கள்..

நான் எழுதுற மொக்கையை விட பல மடங்கு நல்ல பதிவு செந்தில் உங்களுடையது!!

ச.செந்தில்வேலன் said...

வாங்க சிதம்பரம். நன்றி ..

//
Sundari said...
Asusual a very very informative article..

also Have you heard of this zero carbon city..i read somewhere that Abudhabi is going to build the first zero carbon city..if possible throw some lights on "zero carbon" when time permits..:)
//

சுந்தரி, இந்தப் பதிவில் குறிப்பிட்ட "மஸ்தார்" நகரம் தான் கார்பன் இல்லா நகரம்.. கண்டிப்பாக அதைப்பற்றி ஒரு பதிவு எழுதுகிறேன்

ச.செந்தில்வேலன் said...

வாங்க கலை. நீங்க சொல்ற மாதிரி உற்பத்தி விலை குறைவது நல்லது... மிகப்பெரிய அளவில் கருவிகளை உற்பத்தி செய்ய ஆரம்பிக்கும் பொழுது விலை குறையும்.. இது தான் பொருளாதார நியதி.

பிறகு.. காற்றாலை பற்றி கூறி உள்ளீர்கள்.. காற்றாலை நகரைச் சேர்ந்தவன் என்பதால் இதை விளக்க நினைக்கிறேன்.. காற்றின் வேகம் ஒன்றும் பெரிதாக குறையவில்லை.. ஆடி மாதம் உற்பத்தி செய்த மின்சாரத்தை மார்கழியில் கழித்து கொள்கிறேன் என்று அரசிடம் கேட்பதால் தான் காற்றாலை மேல் ஒரு தவறான கருத்து பரவி வருகிறது. மார்கழி காற்று குறைந்து விடும் என்பது வெளியில் இருப்பவர்களுக்கு தெரியாது :)

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

கதிர் - ஈரோடு said...

அருமையான பதிவு செந்தில்

//ஆரம்பத்தில் விலை அதிகமாகத் தெரிந்தாலும் பரவலாக விற்பனையாகும் பொழுது விலை குறைந்துவிடும்.//

விலையை குறைக்க அரசு உதவ் வேண்டும்.
மழை நீர் சேகரிப்புத் தொட்டி போல் கண்துடைப்பாக இல்லாமல் வருங்காலத்தில் கட்டாயமாக்கப் படவேண்டும்

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. said...

என்னை பொறுத்தவரை நீங்கள் சொன்ன விலை என்பது நியாயமான ஒன்றே.
இப்போது அனைத்து வீடுகளிலும் ஏற கணிச்தனர் பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர்.
அதன் விலையே 26 ஆயிரம் ரூபாய் ஆகிறது.(1.5TON WITH INSTALLATION)

அழிவுக்கு கொடுக்கும் விலையை
ஆக்கத்திற்கு கொடுக்கலாம் என்பதே என் தாழ்மையான கருத்து.
எங்கள் வீட்டில் இதை நிறுவ ஆசை படுகிறேன்.
ஏதாவது சென்னை தொலைபேசி எண் அனுப்புங்க ..

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. said...

என்னை பொறுத்தவரை நீங்கள் சொன்ன விலை என்பது நியாயமான ஒன்றே.
இப்போது அனைத்து வீடுகளிலும் AIR CONDITIONER பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர்.
அதன் விலையே 26 ஆயிரம் ரூபாய் ஆகிறது.(1.5TON WITH STABLIZER /INSTALLATION CHARGES)

அழிவுக்கு கொடுக்கும் விலையை
ஆக்கத்திற்கு கொடுக்கலாம் என்பதே என் தாழ்மையான கருத்து.
எங்கள் வீட்டில் இதை நிறுவ ஆசை படுகிறேன்.
ஏதாவது சென்னை தொலைபேசி எண் அனுப்புங்க ..

அது ஒரு கனாக் காலம் said...

நல்ல பதிவு ...வரும் காலங்களில் ஒளி, காற்று, வெப்பம், அழுத்தம், .... நிறய பேசப்படும். பெரும் தன காரர்கள் / தொழிலதிபர்கள் /அரசாங்கம் .... நிறைய புதிய /மாற்று முயற்சியில் ஈடுபட வேண்டும் .....பாலிடெக்னிக் / கல்லூரி / இவைகள் எல்லாம் சேர்ந்து ..நிச்சயம் நிறைய பயன் பாடு வரும்

valaivikadan said...

தங்கள் படைப்பு வந்துள்ளதா என அறிந்துகொள்ளுங்கள்

http://valaivikadan.blogspot.com/2009/08/blog-post_12.html

RAVI said...

Nandri! Thiru Senthilvelan.

Related Posts with Thumbnails