Saturday, August 22, 2009

படைப்புகளை விமர்சனங்களால் கொல்லாதீர்கள்!

நீங்கள் மடிக்கணினியைப் பயன்படுத்துகிறீர்களா? உங்களிடம் ஒரு கேள்வி!

அது உங்கள் கைக்கு வரும் வரை என்ன நடக்கிறதென்று தெரியுமா?

முதலில் சந்தையைப் பற்றிய ஆராய்ச்சி நடத்த வேண்டும். அதில், அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் என்னென்ன மாறுதல்கள் வரும், மக்கள் விருப்பம் தேவை என்னென்ன, தொழில் நுட்ப மாற்றங்கள் என்ன என்று ஆராய வேண்டும். பிறகு, போட்டி நிறுவனத்தினர் என்ன செய்கிறார்கள் அவர்கள் பொருள்கள் என்னென்ன, நாம் வித்தியாசமாக என்ன செய்யப்போகிறோம், நம் பொருளை ( இங்கே மடிக்கணினி ) எப்படி சந்தைப்படுத்துவது போன்றவற்றை முடிவெடுக்க வேண்டும்.

இதை கருவுடன் ஒப்பிடலாம் ( Product Conceptualisation ).பிறகு அந்தப் பொருளை எங்கே தயாரிப்பது, தேவையான உபகரணங்களை எங்கே தயாரிப்பது, எத்தனை பேரை வேலைக்கு அமர்த்துவது போன்றவற்றை திட்டமிட்டு செயல்படுத்தவேண்டும். ( Planning )


பொருள் தயாரான பிறகு பொருளைச் சந்தைக்கு வருவதைப் பற்றிய விளம்பரங்களைத் தயாரித்தல், சந்தையில் போதிய எதிர்பார்ப்பு வந்த பிறகு பொருளை சந்தையில் வெளியிடுவது. ( New Product Introduction )சந்தைக்கு வந்த பொருள் ஆரம்ப நிலையை எப்படிக் கடக்கிறது என்பதைப் பொருத்தே அந்தப் பொருளின் வெற்றியும். அதற்காகவே, ஒரு பொருள் சந்தைக்கு வரும்பொழுது அந்தத் துறை சார்ந்த விமர்சகர்களை வைத்து விமர்சிக்கவும் செய்வார்கள்!

பிறகு அந்தப் பொருளை முதலில் வாங்குவோரின் வாய் வார்த்தையின் மூலமாக பொருள் பிரபலமடைய ஆரம்பிக்கும். அதுவே சில வாரங்கள் கழியும் போது வெற்றியும் அடையும். இங்கே தயாரிக்கும் பொருள் வெற்றியடைவதும் தோற்பதும் வெளியாகும் ஆரம்ப நிலையை எப்படிக் கடக்கிறது என்பதைப் பொருத்தே அமைகிறது!!

இது மடிக்கணினிக்கு மட்டுமல்ல எல்லா பொருள்களுக்கும் இதே நிலை தான்!

இது திரைப்படங்களுக்கும் பொருந்தும்!

ஒரு படத்தின் இயக்குனர் கதையை எடுப்பதற்கு முன்னர் குறைந்தது சில ஆண்டுகளாவது மனதிலேயே ஓட்டி, அந்தக் கதையுடனே வாழ்கின்றனர். தேவர்மகன், குணா, அன்பே சிவம் போன்ற படங்களின் கதையெல்லாம் தன் மனதில் பத்தாண்டுகளுக்கும் மேலாக இருந்தது என்று உலக நாயகன் கமலஹாசன் ஒரு பேட்டியில் கூறியது நினைவிற்கு வருகிறது.

இது அவருக்கு மட்டுமல்ல, எல்லா இயக்குனர்களுக்கும் பொருந்தும்!

அப்படி பல ஆண்டுகளாக நினைத்திருந்த கதையை படமாக எடுக்கும் இயக்குனர்கள் எதிர்பார்ப்பு என்னவாக இருக்கும்? தன் பொருள் வெற்றியடைய வேண்டும் என்பதாகவே இருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

ஆனால் இன்று அப்படி வெளியாகும் படங்கள் ஆரம்ப நிலையைக் கடக்க முடிகிறதா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்!

என்ன காரணம்?

படங்கள் அவ்வளவு மோசமாக இருக்கிறதா? இல்லை மோசமாக இருக்கிறதென்ற விமர்சனம் பரவுகிறதா?

ஒரு சில படங்கள் மோசமாக இருக்கிறதென்றாலும் எல்லா படங்களுமா மோசமாகவா இருக்கிறது?

இல்லை. நல்ல படங்களும் வருகிறது என்றால், பிறகு ஏன் நல்ல படங்கள் தோல்வியடைகின்றன?

விமர்சனமும் படங்கள் தோல்விக்கு காரணாக உள்ளது என்பதைத் தான் நான் இங்கே கூறவருவது. கடந்த இரண்டு வாரங்களாக இணைய தளங்களைப் பார்த்து வருகிறவராக இருந்தால் இது உங்களுக்குத் தெரியும்!

இயக்குனர் சேரன் இயக்கிய "பொக்கிஷம்" என்ற படத்தைக் குறைந்தது நூறு பேரும், நடிகர் விக்ரம் நடித்த "கந்தசாமி" என்ற படத்தைப் பற்றி ஏராளமான விமர்சனங்களும் வந்த வண்ணம் உள்ளன! சில மாதங்களுக்கு முன்பு வெளியாகிய நாடோடிகள் என்ற படமும் விமர்சனங்களில் இருந்து தப்பவில்லை!


ஒரு படத்தின் மீது அதீத எதிர்பார்ப்புகளை வளர்த்துவிட்டு, அந்தப் படம் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வில்லை என்றால் கடுமையாக விமர்சனம் செய்வது நன்றாகவா உள்ளது?

நல்ல படங்கள் என்றால் ரசிகர்களுக்குப் பிடித்தே தீரும், வெற்றியடையும் என்றால் அன்பே சிவம் ஏன் பொருளாதார ரீதியாக வெற்றியடைவில்லை? கமலஹாசன் இயக்கிய விருமாண்டியைக் கொச்சியில் (தமிழில்) பார்த்த போது திரையரங்கில் இருந்த கூட்டம், ஓரிரு தினங்களுக்குப் பின் சென்னை சத்யம் திரையரங்கில் பார்த்த போது இல்லை!

பிறகு தமிழில் உலகத்தரத்திற்கு படங்கள் வரவில்லை என்று கூறுவதை என்ன சொல்ல?

ஒரு படத்தை என்ன மனநிலையில் பார்க்கிறோம், தன்னுடன் படத்தை யார் பார்க்கிறார்கள், படத்தை எந்த மாதிரியான திரையரங்கில் பார்க்கிறோம், நம் ரசனை எவ்வாறு உள்ளது போன்றவையும் நம் கருத்தைத் தீர்மானிக்கிறது. அதனால் விமர்சனம் செய்யும் முன்பு படத்தில் உள்ள நல்ல கெட்ட விடயங்கள் அனைத்தையும் சீர்தூக்கி விமர்சனம் செய்வது நல்லது.

குறைந்தது பல கோடிகள் செலவழிக்கும் தயாரிப்பாளரையாவது மனதில் கொள்ள வேண்டும்.

வலையுலகில் விமர்சிப்பதால் படங்கள் தோல்வியடையுமா? என்றால் அதற்கும் வாய்ப்பிருக்கத்தான் செய்கிறது.

ஒரு பிரபல பதிவரின் விமர்சனத்தைத் தோராயமாக ஆயிரம் பேராவது பார்க்கிறார்கள். அந்த விமர்சனத்தைப் படிப்பவர்கள் குறைந்தது 10 பேருக்காவது மின்னஞ்சல் மூலம் அனுப்பினால் என்னாகும். இதுவே அந்த பத்தாயிரம் பேரும் மேலும் 10 பேருக்கு "மோசமான விமர்சனத்தை" மின்னஞ்சல் மூலம் அனுப்பினால் என்னாவாகும்?

இது மிகையாகத் தோன்றினாலும் இது தான் இன்று நடக்கிறது.


இப்படி பொறுப்பில்லாமல் விமர்சனம் செய்பவர்களுக்கும் திருட்டு விசிடி விற்பனை செய்பவர்களுக்கும் என்ன வித்தியாசம்? ஒரு படைப்பாளியின் குழந்தையை வரவேற்க முயலுங்கள்! இல்லையென்றால் அந்தக் குழந்தையை விமர்சனம் என்னும் ஆயுதத்தால் கொல்லாதீர்கள்!


இதுவே ஒவ்வொரு படைப்பாளியின் வேண்டுகோளாக இருக்கும்!
...

46 comments:

(ஆம்லெட்) BASHEER said...

நீங்கள் சினிமாவின் எந்த துறையோடு தொடர்புடையவர்? ஆற்றாமை அதிமாகவே தெரிகிறது.உருப்படாத சினிமா எடுத்தால் இப்படித்தான் நடக்கும்.பத்து பைசா செலவில்லாமல் வீட்டு வரவேற்பறை தேடி வருகிறது டீவீ மூலம் கிரிக்கெட்.அதில் சொதப்பினால் வீரர்களின் கதி என்னாகிறது என்பது உங்களுக்கு தெரியும்தானே? இவ்வளவுக்கும் இன்றைய ஆட்டத்தில் கோட்டை விட்டால் நாளை மறுநாள் நடக்கும் ஆட்டத்தில் அதே வீரர் நன்றாக ஆடி தன் பெயரை மீட்டெடுத்து கொள்ளலாம்.ஆனால் இரண்டு வருடம்,மூன்று வருடம் என்று பெரிய பில்ட் அப் கொடுத்து இவர்கள் மட்டமான படம் கொடுப்பார்கள்.100 150 கொடுத்து பார்த்தவர்கள் யாம்பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்று வாளாதிருக்க வேண்டுமோ? என்ன நியாயம் ஐயா இது? திருட்டு வீடியோவை இதனுடன் ஒப்பிட வேண்டாம்.மேலும் வலைப்பதிவர்கள்,வார இதழ்களின் விமர்சகர்கள் அல்ல லாப நஷ்டங்களை கணக்கில் கொண்டு எழுத?

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. said...

அருமை நண்பர் செந்தில்வேலன்
ரொம்ப அவசியமான பதிவு.மடிக் கணினியை முன்னுதாரணம் காட்டியது
வரவேற்கத்தக்கது.நான் இருதலைகொள்ளி எறும்பாய் யார்பக்கம் பேசுவது என குழம்பி நிற்கிறேன்
நீங்க இன்னும் இரண்டு நாளுக்கு பதில் பின்னூட்டமிட தயாராய் இருங்க.
ஓட்டுக்கள்
போட்டாச்சு.

ராம்ஜி.யாஹூ said...

if the film is good , bloggers appreciate that with open heart

I have seen so many posts appreciating about Paruthiveeran, Sivaaji, subramnayapuram, appreciation of songs, lyrics of aayiram vaaram aayiram.

Here you should accept the fact that Kandasamy and Pokkisham are not at all good. so there should be no excuses, no ifs and buts.

என்.கே.அஷோக்பரன் said...

ஆம்லெட்டின் கருத்தை ஆமோதிக்கிறேன். வலைப்பதிவர்கள் வாராந்தச் சஞ்சிகை எழுத்தார்கள் அல்ல - தங்கள் எண்ணத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள். முதலில் மடிக்கணணியின் ஒரு பதிவு வந்தவுடன் அதனை ஏற்றுக்காளகிறோம் அடுத்ததாக வரும் மடிக்கணணியும் அதே போன்று இருந்தால் அதையும் வாங்குவோமா? மடிக்கணணியிலேயே அடுத்து வருவனவற்றில் மாற்றத்தை எதிர்பார்க்கின்றோம் அடுத்தடுத்து ஒரே மாதிரித் தயாரித்துவிட்டு விற்க முயன்றால் விமர்சனங்கள் எழத்தான் செய்யும். மற்றது கள்ள டி.வி.டி விற்கின்றவர்களோடு பதிவர்களை ஒப்பிடாதீர்கள் ஏனென்றால் எத்தனையோ பட்ஜட்டில் எடுக்கப்பட்ட நல்ல படங்களை நல்ல வகையில் விமர்சித்து அதனைப் பற்றிய நல்லதையும் இந்தப் பதிவுலகம் எடுத்துச் சொல்லியிருக்கிறது. படம் சரியில்லையென்றால் உண்மையைச் சொல்வதில் தவறில்லையே. பத்திரிகையில் எழுதக் கட்டுப்பாடுகள் உண்டு, சுதந்திரமாக எழுத முடியாது என்று தான் பதிவில் எழுதுகிறார்கள் அதையும் கட்டுப்படுத்தினால் கருத்துச் சுதந்திரம் எங்கே போய்விடும்.... மற்றது ஒருவர் மட்டும் முரண்பட்ட கருத்தைச் சொன்னால் பரவாயில்லை எல்லோருமே ஒருமித்த கருத்தைச் சொல்லும் போது ஏன் அதைத் தவறு என்று நினைக்க வேண்டும்?

மு.மயூரன் said...

பதிவர்களின் விமர்சனங்களை தொகுப்பாக எடுத்துப்பார்த்தால் எனக்கு அவர்கள் மீது கோபம் கொள்ள எதுவும் இருப்பதாகப்படவில்லை. பூ என்ற படம் அநேகமாக எல்லாப்பதிவர்களாலும் நல்ல பாராட்டைப்பெற்றது. அப்படித்தான் பசங்க நாடோடிகள் எல்லாமே.. நல்லபடங்கள் உண்மையாகவே பதிவர்களின் பாரட்டை பெறுகின்றன.

சிவாஜி, கந்தசாமி போன்ற படங்களை ஓட விடுவதுதான் தவறு. இவ்வாறான படங்களுக்கு செய்யப்படும் பிரமாண்ட விளம்பரங்களையும் மக்களை ஏமாற்றும் பொய்ப்பிரசாரங்களையும் பதிவுலகம் ஓரிருநாட்களில் முறியடித்துவிடுவது வரவேற்கத்தக்கதே.

அன்பே சிவம் வந்த காலத்தில் இவ்வாறு பதிவுகள் இருந்திருந்தால் நிச்சயம் அது நல்ல பாராட்டைப்பெற்றிருக்கும்.

☀நான் ஆதவன்☀ said...

செந்தில் தயாரிப்பாளர் நஷ்டப்படக்கூடாது ஆனால் பணம் கொடுத்த பார்த்த ரசிகனின் நிலை? யாரு இவங்க இம்புட்டு பணம் போட்டு பில்டப் கொடுத்து எடுக்க சொன்னா?

எஸ் முத்துராமன் மாதிரி ஆட்கள் எடுத்த படங்களை 80களில் ஆதரிச்சதனால தான் பாலுமகேந்திரா,மகேந்திரன் ஆட்களை யாரும் கண்டுக்க்கல

அந்த தப்ப மறுபடி செய்ய வேணாம் செந்தில்

ச.செந்தில்வேலன் said...

வாங்க பஷீர், வருகைக்கும் கருத்திற்கும் நன்றி! நான் திருட்டு வீடியோவோடு ஒப்பிட்டது, விமர்சனங்களின் தாக்கத்தைப் பற்றிக் கூறத்தான். விமர்சனம் எழுதியவர்களின் உள்ளக் குமுறல்களை என்னால் புரிய முடிகிறது. ஆனால் விமர்சனம் செய்யும் போது நல்லவைகளையும் கூறலாமே!

ச.செந்தில்வேலன் said...

கார்த்திகேயன்.. வாங்க.. வருகைக்கும் ஆதரவிற்கும் நன்றி

வாங்க ராம்ஜி.. வருகைக்கு நன்றி!

கலையரசன் said...

நீங்க இன்னம் பாக்கியராஜ் காலத்திலேயா இருந்தா எப்டி செந்தில்...?

நல்ல படங்களை மட்டும் வரவேற்ப்போம்! நீங்கள் மத்த நாட்டுகாரர்களுக்கோ.. பக்கத்து மாநிலக்காரர்களுக்கோ எந்த மாதிரி படங்களை வழிமொழிவீர்கள்? இதுபோல மொக்கை படங்களை கிழித்தால்தான், நல்ல கதை அம்சம் கொண்ட படங்கள் வரும்.. வரனும்!

அவர்கள் என்னதான் கோடிக்கணக்கில் பணம் செலவு செய்தாலும், பண்டம் இருந்தால்தான் விற்பனையாகும். பணம் அவர்களுக்கு திரும்பகிடைக்க வேண்டும் என்று, தவறான படங்களுக்கு ஊக்கம் கொடுக்காதீர்கள்...

ச.செந்தில்வேலன் said...

வாங்க அசோக், வாங்க மயூரன். வருகைக்கும் கருத்திற்கும் நன்றி! நாடோடிகள், பசங்க போன்ற படங்களும் சரியில்லை என்று வந்த விமர்சனங்களை நீங்கள் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

நல்ல படங்கள் வரவேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும். படங்கள் மோசமாக இருந்தாலும் நல்ல விடயங்களை பாராட்டலாமே!

ராஜாதி ராஜ் said...

செந்தில்,
சில கேள்விகள் உங்களுக்கு:
மேல சொன்ன படங்களை பற்றிய உங்கள் கருத்து என்ன ??

அப்போ நல்லா இல்லாத படத்த 'ரொம்ப நல்லா இருக்குன்னு விமர்சனம்' எழுதணும்னு சொல்றீங்களா??

"அந்த விமர்சனத்தைப் படிப்பவர்கள் குறைந்தது 10 பேருக்காவது மின்னஞ்சல் மூலம் அனுப்பினால்"
குப்பை படங்களை மக்கள் நிராகரிக்க வேண்டும் என்று நினைப்பதில் என்ன தவறு?

அர்த்தமே இல்லாமல் கோடிக்கணக்காய் செலவு பண்ணுவதை 'encourage' செய்ய சொல்வீர்களா?

"இப்படி பொறுப்பில்லாமல் விமர்சனம் செய்பவர்களுக்கும்"
சமூக பொறுப்பில்லாமல் படம் எடுப்பவர்களின் மீதான உங்கள் கேள்வி என்ன?

உங்கள் பதிவின் அடிப்படை தொனி 'தனி மனித விருப்பு/ வெறுப்புகளை பதிவு செய்தல்' தவறென்று சொல்வது போல் உள்ளது.
அதாவது , 'பதிவர்களின் சினிமா விமர்சனங்களை குறை சொல்லாதீர்கள்' அப்படி நான் ஒரு பதிவு போடறது மாதிரி! (ச்சும்மா :) தமாசு)

நட்புடன்,
ராஜ்.

ச.செந்தில்வேலன் said...

//☀நான் ஆதவன்☀ said...
எஸ் முத்துராமன் மாதிரி ஆட்கள் எடுத்த படங்களை 80களில் ஆதரிச்சதனால தான் பாலுமகேந்திரா,மகேந்திரன் ஆட்களை யாரும் கண்டுக்க்கல//

வாங்க ஆதவன்.. மசாலா படங்களில் நடிக்கும் நடிகர்களுக்குத் தான் தமிழகத்தில் ஆதரவு அதிகம் என்பதை மறந்துவிட்டீர்களா?

ஆதவன்.. ஒன்னு கவனிச்சீங்கன்னா.. பொக்கிஷம், கந்தசாமி அடி வாங்கன அளவிற்கு மாஸ் ஹீரோவின் படங்கள் விமர்சிக்கப்படுவதில்லை.

ச.செந்தில்வேலன் said...

//
கலையரசன் said...
நல்ல படங்களை மட்டும் வரவேற்ப்போம்! நீங்கள் மத்த நாட்டுகாரர்களுக்கோ.. பக்கத்து மாநிலக்காரர்களுக்கோ எந்த மாதிரி படங்களை வழிமொழிவீர்கள்? இதுபோல மொக்கை படங்களை கிழித்தால்தான், நல்ல கதை அம்சம் கொண்ட படங்கள் வரும்.. வரனும்!
//

வாங்க கலை!


நீங்கள் கூறுவதைப் போல மற்ற நாட்டுக்காரர்களுக்கு காட்டுவதற்கு இருக்கும் படங்கள் தான் இங்கே தோற்கின்றனவே. கொச்சியில் கூட்டம் அலைமோதிய விருமாண்டிக்கு சென்னையில் ஆதரவில்லை.

குருதிப்புனல் எத்தனை நாள் ஓடியது? அத்துடன் வெளியான இன்னொரு படம் வசூலில் சாதனை புரிந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

நான் கூற வருவது, எல்லா விசயங்களையும் சீர்தூக்கி விமர்சனம் செய்யுங்கள் என்பதைத்தான்!

இராகவன் நைஜிரியா said...

விமர்சனம் என்பதே, அதைப் பற்றி நல்லதையும் கெட்டதையும் சொல்வதற்குத்தான். இதில் தயாரிப்பாளர் நிறைய பணம் போட்டு இருக்கார், அவர் கஷ்டப்படுவார் என்றெல்லாம் நினைக்க என்ன இருக்கின்றது.

நல்லப் படங்கள், பட்ஜெட் படமா எடுக்க வேண்டியதுதானே. படத்தை சொதப்பிவிட்டு, விமர்சிக்ககூடாது என்றால் எப்படி சரியாக வரும்.

மேலும் கணினி வாங்கும் போது, அதில் குறைபாடு இருந்தால், சரியில்லாவிட்டல் மாற்றிக் கொடுக்க வழியுண்டு. இங்கு படம் சரியில்லை என்றால் மாற்ற என்ன வழி. ஒன்றுமே கிடையாது.

ச.செந்தில்வேலன் said...

//
ராஜாதி ராஜ் said...
செந்தில்,
சில கேள்விகள் உங்களுக்கு:
மேல சொன்ன படங்களை பற்றிய உங்கள் கருத்து என்ன ??

அப்போ நல்லா இல்லாத படத்த 'ரொம்ப நல்லா இருக்குன்னு விமர்சனம்' எழுதணும்னு சொல்றீங்களா??
//


//
"அந்த விமர்சனத்தைப் படிப்பவர்கள் குறைந்தது 10 பேருக்காவது மின்னஞ்சல் மூலம் அனுப்பினால்"
குப்பை படங்களை மக்கள் நிராகரிக்க வேண்டும் என்று நினைப்பதில் என்ன தவறு? //

வாங்க ராஜ், நான் படங்களை நல்லா இருக்கிறது என்ற கூறச்சொல்லவில்லை. படங்களில் உள்ள எல்லா விடயங்களையும் எடுத்துக்கூறுங்கள்.

எந்தெந்த நடிகர்களின் படங்கள் சமூகப் பொறுப்பில்லாமல் வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே!

அந்தப் படங்களும் இது போல விமர்சிக்கப்படுகிறதா?

ச.செந்தில்வேலன் said...

வாங்க இராகவன் அண்ணா.. தயாரிப்பாளர் படம் போட்டுள்ளார் என்பதற்காக விமர்சனம் செய்ய வேண்டாம் என்று சொல்லவில்லை. நீங்கள் கூறியதைப் போல நல்லது கெட்டது எல்லாவற்றையும் விமர்சனம் செய்யுங்கள் என்றே கூறுகிறேன்.

கோபிநாத் said...

எங்கள் தல'கள் கார்த்திக் & கலை அவர்களின் பின்னூட்டத்தை வழிமொழிக்கிறேன்.

\\இதுவே அந்த பத்தாயிரம் பேரும் மேலும் 10 பேருக்கு "மோசமான விமர்சனத்தை" மின்னஞ்சல் மூலம் அனுப்பினால் என்னாவாகும்?
\\\

ஒன்னும் ஆகாது...இன்னும் இவர்கள் அதே மாதிரி மொக்கை படம் கொடுத்துகிட்டு தான் இருக்க போறாங்க. ஒன்னு தெரியுமா தல சென்னை ஏரியாவுல 94 தியோட்டராம் கந்தசாமீ புக்கிங்கிலியே 94 லட்சம் எடுத்துட்டாங்களாம். எப்படியும் பணம் போட்டவரும் வாங்குனாவுங்களும் லாபம் தான் தல.

ஆனா ஆசையாக போயி காசு கொடுத்து கீயூல நின்னு டிக்கெட் எடுத்த பார்க்குற மக்களோட நிலைமை!?

அரைச்ச மாவையே அரைக்குறதுக்கு எதுக்கு படம் எடுக்கனும் போசமால் டிவி சீரியல் எடுக்க போகலாம்ல்ல.

கோபிநாத் said...

தல

நேரம் கிடைக்கும் போது இங்க போயி பாருங்கள். விக்ரம் எப்படி சொல்லியிருக்காருன்னு.

http://www.karkibava.com/2009/08/blog-post_24.html

கலைஞானியோட கதையும் கந்தசாமீ கதையும் ஒன்னா தல...!?? பாவம் தல கலைஞானி ;))

sakthi said...

பட விமர்சன்ங்கள் பற்றி நான் மனதில் நினைத்ததை நீங்கள் கூறி விட்டீர்கள் செந்தில்

அது ஒரு கனாக் காலம் said...

விமிரிசனம் படைப்புக்கு இருக்க வேண்டும், தனி மனித விமிரிசனமாக இருக்க கூடாது ... அங்க தான் இந்த பதிவுகள் எழுதிய விமிரிசனம், கொஞ்சம் கோட்டை தாண்டி, சில இடத்தில் அவசியமில்லா விஷயத்தை கூட விமிரிசனம் செய்கிறார்கள்

ச.செந்தில்வேலன் said...

வாங்க கோபி.. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

//
கோபிநாத் said...
கலைஞானியோட கதையும் கந்தசாமீ கதையும் ஒன்னா தல...!?? பாவம் தல கலைஞானி ;))//

உலக நாயகன் கதையும் கந்தசாமியும் ஒண்ணுனு எங்க சொன்னேன்.. அவரு படத்திற்கு நம்ம கொடுக்கற வரவேற்பு உங்களுக்கு தெரியாததல்ல :))

நான் கூற வருவது நல்லது கெட்டது எல்லா வற்றையும் விமர்சனம் செய்யுங்கள் என்று தான்.

ச.செந்தில்வேலன் said...

//
sakthi said...
பட விமர்சன்ங்கள் பற்றி நான் மனதில் நினைத்ததை நீங்கள் கூறி விட்டீர்கள் செந்தில்
//

வாங்க சக்தி.. உங்கள் கருத்திற்கு நன்றி!

ச.செந்தில்வேலன் said...

//
அது ஒரு கனாக் காலம் said...
விமிரிசனம் படைப்புக்கு இருக்க வேண்டும், தனி மனித விமிரிசனமாக இருக்க கூடாது ... அங்க தான் இந்த பதிவுகள் எழுதிய விமிரிசனம், கொஞ்சம் கோட்டை தாண்டி, சில இடத்தில் அவசியமில்லா விஷயத்தை கூட விமிரிசனம் செய்கிறார்கள்
//

வாங்க சுந்தர் சார். நீங்க சொல்றது சரியானதே!! வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

முகிலன் said...

விமர்சனம் என்பது படைப்புக்கு மட்டுமே இருக்க வேண்டும், தனி மனித விமர்சனமாக இருக்கக்கூடாது என்பதை நான் ஒத்துக்கொள்ளும் அதே வேளையில், நன்றாகா இல்லாத படைப்பை மிகுந்த பொருட் செலவுடன் எடுத்திருக்கிறார்கள் என்ற காரணத்திற்காக, பாராட்ட வேண்டும் என்பதை என்னால் ஒத்துக் கொள்ள முடியாது.
அதே வேளையில் சில பதிவர்கள் நெகடிவ் விமர்சனம் மட்டுமே செய்கிறார்களே ஒழிய, நல்ல ஒரு படைப்பை பாராட்டி விமர்சனம் செய்வது இல்லை.

Anonymous said...

நான் கடைசியா ஒரு கேள்வி கேட்கிறேன். அவனவன் கோடி கோடியா பணத்தை கொட்டி படம் எடுக்கிறார்கள். நமாளுங்க ஒரு பேப்பர்ரும் பேனாவும் அல்லது ப்ளோகும் கையில் கிடைச்சா கண்ட மேனிக்கு விமர்சனம் பண்ணுவது!

Anonymous said...

well said

கதிர் - ஈரோடு said...

செந்தில் உங்கள் கருத்து சரிதான். பொக்கிஷம் போன்ற படங்களை இவ்வளவு வன்மையாக விமர்சனம் செய்யத்தேவையில்லை. சேரன் உண்மையிலேயே நல்ல விசயத்தைக் கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர். ஏதோ இதில் சறுக்கியிருக்கிறது.

ஆனால் மயூரன் சொன்ன

//சிவாஜி, கந்தசாமி போன்ற படங்களை ஓட விடுவதுதான் தவறு. இவ்வாறான படங்களுக்கு செய்யப்படும் பிரமாண்ட விளம்பரங்களையும் மக்களை ஏமாற்றும் பொய்ப் பிரசாரங்களையும்//

இந்த கருத்துக்கு உடன் படுகிறேன்

அதே நேரத்தில் வெறும் பிரமாண்டத்தில் மக்களை ஏய்க்கும் போக்கு புறந்தள்ளப்பட வேண்டும்.

பழமைபேசி said...

எழுத்தாளன் ஆவது எப்படி?

சிறுகதையில் வக்கிரம் வகைப்படுத்த வேண்டும்.
கட்டுரையில் அடுத்தவனை முறிக்க வேண்டும்.
கவிதையில் நெஞ்சை நோண்ட வேண்டும்.
விமர்சனத்தில் படைப்பைக் கிழித்திட வேண்டும்.
செய்தியில் ஓரவஞ்சனை சேர்த்திட வேண்டும்.

இலக்கண்மே தெரியாம பேசினா எப்படிங்க தம்பி?

ச.செந்தில்வேலன் said...

வாங்க முகிலன். வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

அனானி அன்பர்களே.. வாங்க.

ச.செந்தில்வேலன் said...

வாங்க கதிர். பொக்கிஷம் விடயத்துல நீங்க சொல்றது உண்மை தாங்க.

அதிக செலவில் படங்காட்டும் விடயத்தில் உங்கள் கருத்திற்கு நானும் உடன்படுகிறேன். நன்றி

ச.செந்தில்வேலன் said...

வாங்க பழமைபேசி அண்ணே..

உண்மையிலேயே நீங்க சொல்ற இலக்கணம் தெரியாதுங்க.. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

prabhuraj said...

i have seen ur post.
I'm totally againt urs..

There is only interesting films and bore films.

If shivaji is an interesting film,people will come and see.We should critize that movie too for the decent and sensible entertainment.

U mentioned Kamal's Kuruthippunal,Anbe sivam were not running well.
Both films were dangerous films,politically half boiled mediocre films.

In kuruthippunal,Kamal vomitted his childish view on Naxalites and other rebels.In anbe sivam,the same child on Communism.Kamal Hassan is a mediocre film maker.Nothing more to say.
Its quite sad that you pepole are not using the celebrity names in ur posts.

Kalaignani,Ulaga naaygan ?? what is this ? why like this ? Call him actor Kamalhassan.Thats all..

As for as cheran's concern,he is a fake film maker.why means He use melodrama in his creations to attract innoncent viewers.Melodrama is a cheap entity in any good cinema or litrature area.After mayakkananadi failure i heard that he said "Tamil pepoles need an "Rasanai payirchi ".What is this ?
so thats means what..he has lots of rasanai.bullshit.

We should eleminate this kind of peoples by our criticism.I hate manirnatnam's political idelogies.but i love his way of simplicity.He do his job and goes.

But kamal,cheran are self proclaimed intellectuals,they cannot give good products to our society.Criticism is a must for any outcome.

As many comments said : Blogs gives as great space to writer our own views as just as magazines.

We can start a discussion regarding this.This will lead us a fine decision to approach any cinema or litrature piece...keep writing..u hav a nice flow

prabhuraj said...

//செந்தில் உங்கள் கருத்து சரிதான். பொக்கிஷம் போன்ற படங்களை இவ்வளவு வன்மையாக விமர்சனம் செய்யத்தேவையில்லை. சேரன் உண்மையிலேயே நல்ல விசயத்தைக் கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர். ஏதோ இதில் சறுக்கியிருக்கிறது.//

This is wrong.When we assess a product we should not see the history.

If ford company release a bad car,will u buy only for Mr.Henry ford invented the car ....apply this in cheran case too

ச.செந்தில்வேலன் said...

வாங்க பிரபுராஜ்.

நல்ல, மாறுபட்ட கோணத்தில் பல கருத்துகளை வைத்துள்ளீர்கள்! வருகைக்கும் நன்றி!

ச.செந்தில்வேலன் said...

பிரபுராஜ், நீங்கள் கூறுவதுப் பார்த்தால் பொழுதுபோக்கிற்காக சிவாஜியைப் பாராட்டலாம், கமலஹாசன், சேரன் போன்றோரின் (உங்கள் பாணியில் அரைவேக்காட்டுத்தனமான) முயற்சிகளைக் கண்டிக்கலாம் என்றும் தோன்றுகிறது. ஏன் இந்த வஞ்சனை என்று தான் கேட்கிறேன் :))

சேரனைத் திட்டுவதில் ஒரு பங்காவது மசாலாப் பட நடிகர்களைத் திட்டினார் நமக்கு நல்ல படங்கள் வருமே :))

ஊர்சுற்றி said...

//ஆதவன்.. ஒன்னு கவனிச்சீங்கன்னா.. பொக்கிஷம், கந்தசாமி அடி வாங்கன அளவிற்கு மாஸ் ஹீரோவின் படங்கள் விமர்சிக்கப்படுவதில்லை.//

அது ஆருங்கோ?!!!

//சேரனைத் திட்டுவதில் ஒரு பங்காவது மசாலாப் பட நடிகர்களைத் திட்டினார் நமக்கு நல்ல படங்கள் வருமே// இங்கே எல்லாரையுமே எனக்குத் தெரிஞ்சி கிழிச்சித் தொங்கதான் போட்டிருக்காங்க!

செந்தில்வேலன்,
கடந்த 5-6 மாதங்களில் உங்களுக்குத் தோணும் சிறந்த படங்களின் பட்டியல் ஒன்று தயார் செய்யுங்கள். அவற்றிற்கு வலையுலக விமர்சனங்கள் எப்படி என்று அலசுங்கள். பின்பு குறைபட்டுக்கொள்ளுங்கள் செந்தில்.

ஆனால், எதர்கெடுத்தாலும் விதண்டாவாதம் செய்யும் மிகச்சில நபர்களின் விமர்சனங்களை எளிதான இனம் கண்டுவிட முடியும். அதை நீங்கள் கண்டுகொள்ள வேண்டாம்.

என்ன நாஞ்சொல்றது சரிதானே?

ஜெஸிலா said...

//குறைந்தது பல கோடிகள் செலவழிக்கும் தயாரிப்பாளரையாவது மனதில் கொள்ள வேண்டும்.//
அந்த தயாரிப்பாளர் வாசகரை/ பார்வையாளரை மனதில் வைத்து படம் எடுக்க சொல்லுங்க முதலில். நீங்க இதற்கு முன் தயாரிப்பாளராக இருந்தீர்களா செந்தில் :-)

ச.செந்தில்வேலன் said...

//
ஊர்சுற்றி said...

செந்தில்வேலன்,
கடந்த 5-6 மாதங்களில் உங்களுக்குத் தோணும் சிறந்த படங்களின் பட்டியல் ஒன்று தயார் செய்யுங்கள். அவற்றிற்கு வலையுலக விமர்சனங்கள் எப்படி என்று அலசுங்கள். பின்பு குறைபட்டுக்கொள்ளுங்கள் செந்தில்.
//

வாங்க ஊர்சுற்றி... கண்டிப்பாக நீங்க சொல்ற மாதிரி வலையுலக விமர்சனங்களைப் பார்க்கிறேன். நன்றி!

ச.செந்தில்வேலன் said...

//ஜெஸிலா said...
அந்த தயாரிப்பாளர் வாசகரை/ பார்வையாளரை மனதில் வைத்து படம் எடுக்க சொல்லுங்க முதலில். நீங்க இதற்கு முன் தயாரிப்பாளராக இருந்தீர்களா செந்தில் :-)//

வாங்க ஜெஸிலா, நீங்க சொல்றது சரி தான். ஆனா மசாலாப்பட இயக்குனர்களைக் கேட்டால் அதைத் தானே எடுக்கிறேன் என்கிறார்களே :))

நாகா said...

செந்தில், சுத்தி சுத்தி அடிக்கறாங்க போல.. :) நானும் திரு.ப்ரபுராஜ் சொன்னது போல பலமுறை எண்ணியிருக்கிறேன். இதற்கு முன் பல மசாலா படங்கள் பதிவுகளில் கண்டபடி கிழித்துத் தோரணம் கட்டப்பட்டுள்ளன. ஆனால், என்னைப் பொருத்தவரை வெகு சிலரைத் தவிர பெரும்பாலான சினிமாக்காரர்களுக்கு சமூக அக்கறையே கிடையாது. It's nothing but a business and as a consumer, it's obvious to expect a quality product.
திரைக் கலைஞர்களில் கமலஹாசன் மேல் மதிப்பு இருந்தாலும் சில படங்கள் எனக்கு மிகுந்த எரிச்சலையே ஏற்படுத்தும். உ.ம் - குருதிப்புனல் சும்மா செம்ம Performance, அருமையான கதை என்று பாராட்டாதீர்கள் - உரிமைப் போராட்டங்களையே கேலிக்குள்ளாக்கி இருப்பார் அப்படத்தில். நேரில் சந்திக்கும்போது இது பற்றி நிறையப் பேசலாம்

- நாகா

jothi said...

தலைப்பை பார்த்தவுடன் உங்கள் பதிவைத்தான் எல்லாரும் நக்கல் அடிக்கிறார்கள் என வந்தேன். உண்மையில் அதுவல்ல என்றாலும் பின்னுட்டங்கள் அதைத்தான் சொல்லுகின்றன.

நான் உங்கள் கருத்திற்கு உடன்படுகிறேன். பசங்க போல அருமையான படம் என நிறைய விமர்சனங்களை நானும் போனேன். சத்தியமாய் எனக்கு பிடிக்கவில்லை. காரணம் என்ன?? அற்புதமான படம் என விமர்சனங்களால் விளைந்த என் எதிர்பார்ப்பாய் கூட இருக்கலாம்.

வெள்ளிகிழமை அடித்து பிடித்து படம் பார்த்து சுட சுட விமர்சனம் எழுதுவது கூட எப்படி சிலரால் முடிகிறது என தெரியவில்லை. ஒன்று மட்டும் உறுதி, ஆனால் இது போன்ற விமர்சனங்களால் யாருடைய வளர்ச்சியையும் தடுக்க முடியாது உண்மை. முதன் முதலில் எல்லாராலும் நன்றாய் விமர்சனம் என்ற பேரில் நார் நாராய் கிழிக்கப்பட்டவ்ர்கள் இன்று நன்றாய்தான் சினிமா துறையில் இருக்கிறார்கள். ரஜினி,விஜயகாந்த், விஜய், தனுஷ் என இவர்களின் பட்டியல் அதிகம். விமர்சித்தவர்கள் எங்கே என தெரியவில்லை.

ஒவ்வொரின் விருப்பமும் மாறுபடுவது போல் விமர்சனமும் மாறுபடுவது இயற்கை. பல நேரங்களில் நான் பார்த்த படம் நன்றாக இருக்கு என சொல்லி பெரும்பாலான சக நண்பர்களிடம் திட்டு வாங்கியது கூட உண்டு. சிறந்த உதாரணம் "மொழி"

பலரின் மகா மட்டமான மொக்கை பதிவுகளும் ஹிட் ஆவதும் (நானே நல்ல உதாரணம்), சிறப்பான பதிவுகள் ஒரே ஒரு ஓட்டுடன் நிற்பதும் சகஜம். இது திரைப்படத்திற்கும் பொருந்தும். மொக்கை பதிவிற்கு செல்லும் நாம் ஓட்டையும் போட்டுவிட்டு பின்னூட்டத்தையும் இட்டு வருவதில்லை?? அதையே இங்கேயும் பாலோ பண்ண சொல்கிறார் செந்தில் . இங்கு நாம் இழந்தது நம் பணம் என்பதால் நமக்கு கோபம் வருகிறது.

ஒரு படம் வெற்றி அடையும் என விதி இருந்தால் வெற்றி அடையத்தான் செய்யும். "BOYS" குப்பை என ஆனந்த விகடன் விமர்சனம் செய்ததால் அது சுத்தமாய் ஊற்றிக் கொள்ளவும் இல்லை. "பசங்க" சூப்பர் என சொன்னதால் பிச்சுக்கிட்டு ஓடவும் இல்லை. அவை அவைகளின் விலை அவை அவைகளுக்கு.

திரைப்படம் ஒரு பொழுது போக்கு. தினமும் ஆயிரக்கணக்கான பதிவர்கள் இந்த விமர்சனங்களை படிப்பதால் எந்த படமும் தோற்று விடாது என்பதே என் எண்ணம்.

ச.செந்தில்வேலன் said...

வாங்க நாகா.. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. நேரில் இது பற்றி விவாதிப்போம். :))

ச.செந்தில்வேலன் said...

வாங்க ஜோதி, பல நாட்களாக பதிவுலகில் பார்க்க முடியவில்லை.

//jothi said...

பலரின் மகா மட்டமான மொக்கை பதிவுகளும் ஹிட் ஆவதும் (நானே நல்ல உதாரணம்), சிறப்பான பதிவுகள் ஒரே ஒரு ஓட்டுடன் நிற்பதும் சகஜம். இது திரைப்படத்திற்கும் பொருந்தும். மொக்கை பதிவிற்கு செல்லும் நாம் ஓட்டையும் போட்டுவிட்டு பின்னூட்டத்தையும் இட்டு வருவதில்லை?? அதையே இங்கேயும் பாலோ பண்ண சொல்கிறார் செந்தில் .//

நான் கூறவது மொக்கைப் பதிவிற்கு பின்னூட்டம் இட வேண்டும் என்பதல்ல, ஓரளவு சுமாரான பதிவுகளையும் பாராட்டுகள் என்று தான். கை தட்டல் சத்தம் தானே ஒவ்வொருவருக்கும் ஊக்கமாக இருக்கிறது!!

ஜோதி, உங்கள் மொக்கையாகவெல்லாம் இல்லை.. தொடர்ந்து எழுதுங்கள் :))

jothi said...

உங்களுக்குத்தான் தெரியுமே,.நான் லோ லோ என அலைந்து கொண்டிருப்பது,.. ஆனால் முன்ன பின்ன நண்பர்களின் பதிவுகளை படித்து விடுவேன்.

நான் சொல்ல வந்தது, எல்லோரையும் உற்சாகப் படுத்துங்கள் என நீங்கள் சொல்ல வந்ததைதான்

Anonymous said...

//Anonymous said...
நான் கடைசியா ஒரு கேள்வி கேட்கிறேன். அவனவன் கோடி கோடியா பணத்தை கொட்டி படம் எடுக்கிறார்கள். நமாளுங்க ஒரு பேப்பர்ரும் பேனாவும் அல்லது ப்ளோகும் கையில் கிடைச்சா கண்ட மேனிக்கு விமர்சனம் பண்ணுவது!//

உன்ன எவன்யா? கோடிகோடியா போட்டு படம் எடுக்க சொன்னது... கலைசேவை செய்றீங்களா? இல்ல புண்ணாக்கு வியாபாரம் செய்றீங்களா? ...விக்கணும் வியாபாரம் பண்ணனும்னு தான செய்றீங்க... பணம் போட்டு படம் பாக்கறவன் வாயப்பொத்திக்கிட்டு படம் பாக்கணுமா.. இல்ல அதப்பத்தி நண்பர்கள்ட சொல்லவே கூடாதா?

Anonymous said...

இது உங்கள் கருத்து.
அதை நான் மதிக்கிறேன்

ஆனால் உங்கள் கருத்து தான் என் கருத்தாக இருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்

Related Posts with Thumbnails