Friday, September 11, 2009

கமல் ரசிகன் என்பதில்..

டேய், உன் ஆளு யாருடா? கமலா ரஜினியா?

இந்தக் கேள்வி நம் அனைவருக்குமே பழக்கமானது தான்.
இப்படித்தாங்க விடுமுறை முடிந்து பள்ளிக்கு போன உடனே ஆரம்பித்தது அரட்டை.

"டேய் லீவுல என்னடா பண்ணுன"னு சதீஸ் கேட்க
"நான் கோயமுத்தூர் போனன்டா"
"நான் இங்க லதாங்கில ராஜாதிராஜா பாத்தேன்.. சூப்பரா இருந்துச்சு தெரியுமா?"
"டேய், நான் கோயமுத்தூர்ல அர்ச்சனா தேட்டர்ல அனுபவ சகோதரர் படம் பாத்தேன்டா. பக்கத்துத் தர்ச்சனா தேட்டர்ல ராஜாதிராஜாக்கு கூட்டமே இல்லை தெரியுமா"ன்னு நான் சிரிக்க.
"உங்க ஆளு படத்துல எத்தன ஃபைட் டா? எங்க ஆளோட "சிவா" படத்துல 8 ஃபைட்டு தெரியுமா"ன்னு சுரேஷ் சொல்ல..
"போடா டேய்.. அனுபவ (அபூர்வ) சகோதரர்ல எங்காளு குட்டையா நடிச்சிருக்கார் தெரியுமா"ன்னு நான் சொல்ல
"அய்யே! உங்க ஆளு மோசமாம், அதனால உங்காளு படத்தப் பாக்கக் கூடாதுன்னு எங்கம்மா சொல்லீருச்சு"ன்னு சுரேஷ் சொல்ல
"போடா.. உங்க ஆளப் பத்தி எனக்குத் தெரியாதா"னு நான் சொல்ல ஆரம்பிச்சுது பாருங்க சண்டை!!
இந்தப் பக்கம் நாலஞ்சு பேரு அந்தப் பக்கம் நாலஞ்சு பேரு. வகுப்பே களேபரம் ஆயிடுச்சு. அப்புறம் என்ன ஆசிரியை வந்து வகுப்புக்கு வெளியே முட்டி போட வெச்சாங்க.

அந்த வயசுல நான் எப்படி கமல் ரசிகன் ஆனேன்னு நினைச்சுப் பார்த்தா சிரிப்பாத்தாங்க வருது.

எங்க அத்தை பசங்க ரெண்டு பேர்ல ஒருத்தர் ரஜினி ரசிகர் இன்னொருத்தர் கமல் ரசிகர். ரெண்டாவது அத்தை பையன் நம்ம கூட்டாளிங்கறதால அவரு சொல்றதக் கேட்டு எனக்கும் பிடிக்க ஆரம்பிச்சிருக்கனும்.
பத்து வயசுல நமக்கு நல்ல படம் கெட்ட படம் எல்லாம் தெரியுமா என்ன?

"அபூர்வ சகோதரர்கள்"ல ஆரம்பிச்சது அப்படியே வெற்றி விழா, மைக்கேல் மதன காம ராஜன், குணானு ஒரு படம் விடாமல் பார்ப்பது என்று கமலின் ரசிகனானேன். [ எதனாலனே புரியாமா ;) ]
தளபதியுடன் வெளியான குணா சரியாக ஓடவில்லை!! "படத்துல சண்டை இல்லாததால தான் படம் ஓடல"னு நினைத்திருந்த எனக்கு பக்கத்து வீட்டு குட்டியண்ணன் குணா நல்ல படம்னு சொன்னது வியப்பாக இருந்தது.

அப்போ தான் வீடு, பசி போன்ற படங்களை எல்லாம் தூர்தர்ஷனில் திரையிடுவார்கள். "என்னடா இப்படி போரா இருக்குதே, இதுக்கு எப்படி நேஷனல் அவார்டு கொடுத்தாங்க"ன்னு தோணும். அப்போ அவார்டு வாங்கற படங்க ஓடாதோனு தோணும் :) [ இப்ப வரைக்கும் இது ஓரளவு உண்மை தான் ]

அடுத்த வருஷம் வந்த "தேவர் மகன்" எங்கூரு உடுமலை லதாங்கில சக்கைப்போடு போட்டுச்சு. அந்த வருட மாநில விருது ஒரு சில தேசிய விருதெல்லாம் அந்தப்படம் வாங்க நல்ல படமும் ஓடலாம் விருதுகளும் வாங்கலாம்ங்கற எண்ணம் வளர ஆரம்பிச்சுது.

கமல் படங்களின் வருகை குறைய ஆரம்பித்திருந்தாலும் வெளியாகும் படங்களை உடனுக்குடன் பார்த்துவிடவேண்டுமென்ற ஆவல் மட்டும் குறைந்தேயில்லை. உடுமலையில் படம் வெளியாகவில்லை என்றால் பொள்ளாச்சியிலோ பழநியிலோ படங்களைப் பார்த்தாக வேண்டும்.

படம் பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்தால்,
"என்னடா உங்காளு படம் எப்படி இருக்குது"ம்பார் எங்கப்பா.
"சூப்பரா இருக்குப்பா"ம்பேன்.
"நீ படம் சூப்பருனு சொல்லுவ. ஆனா ஓடத்தான் மாட்டேங்குது"னு என்னைக் கிண்டல் செய்வார்.
"உங்க சிவாஜி படமெல்லாம் ஓடாமா இருந்ததில்லையா"னு திரும்பக் கேட்டத்தான் நமக்குத் திருப்தி.

எனக்கு விவரம் தெரிந்து உடுமலையில் ஐம்பது நாட்களைக் கடந்த கமலஹாசன் படங்களென்றால் தேவர்மகன், சதிலீலாவதி, இந்தியன், அவ்வை சண்முகி, தெனாலி, வசூல்ராஜா, வேட்டையாடு விளையாடு மட்டும் தான்.

கமல் படங்களின் ரசிகன் என்ற முத்திரை நண்பர்கள் வட்டம் மட்டுமல்லாது என் உறவினர்கள் மத்தியிலும் தெரிய ஆரம்பித்ததற்கு கமலின் நகைச்சுவைப் படங்களின் மீது எனக்கிருந்த விருப்பம் தான் காரணம். எந்த இடத்தில் என்ன காமெடி வரும் என்று மனதில் பதிந்துள்ளது எனக்கே வியப்பு தான்!
[இந்த அளவுக்கு பாடம் கூட மண்டையில ஏறியிருக்காது ;) ]
பேசும்படம், மைக்கேல் மதன காம ராஜன், சிங்காரவேலன், சதிலீலாவதி, அவ்வை சண்முகி, காதலா காதலா, தெனாலி, பஞ்சதந்திரம், பம்மல் கே சம்பந்தம், வசூல் ராஜா என நகைச்சுவைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களானாலும் மகாநதி, தேவர்மகன், குணா, குருதிப்புனல், அன்பே சிவம், விருமாண்டி, தசாவதாரம் போன்ற முயற்சிகளானாலும் கமலின் படங்களின் மீதிருக்கும் ஈடுபாடு மட்டும் குறையவதே இல்லை.

நான் தரமான படங்கள் என்று நினைத்திருந்த பலதையும் ஆங்கிலப் பிரதி என்றோ தவறான கருத்துகளைக் கொண்டவை என்று கூறினாலும் கமலஹாசனின் முயற்சிகளுக்காகப் அவர் படங்களைப் பாராட்டியே தீர வேண்டும் என்ற கருத்து எனக்கு இருக்கத்தான் செய்கிறது.

இதோ இன்னொரு படம் வெளியாகத் தயாராகி வருகிறது. ஹிந்தியில் வெட்னஸ்டே என்ற பெயரில் வெளியாகிய படத்தின் ரீமேக் தான் விரைவில் வெளியாகவிருக்கும் "உன்னைப் போல் ஒருவன்".

இன்று என் வீட்டில் அதிகமாக ஒலித்திருக்கும் பாடல் "நிலை வருமா".
நல்ல சினிமா பற்றிய தெளிவு ஓரளவு வந்திருந்தாலும், உலக சினிமா பற்றிய அறிமுகங்கள் கிடைத்திருந்தாலும் கமலஹாசனின் ரசிகன் என்று அறியப்படுவதில் எனக்கு மகிழ்ச்சியே!!

..

36 comments:

பட்டிக்காட்டான்.. said...

நான் உங்கள் அளவிற்கு ரசிகன் இல்லையென்றாலும், எனக்கும் கமல் படங்கள் மிகவும் பிடிக்கும்..

:-)

Anonymous said...

Super

வந்தியத்தேவன் said...

என்னைப் போல் ஒருவன், கமலின் ரசிகனான இருப்பதற்க்கு ரசனை இருந்தால் போதும், எத்தனை ஸ்டார்கள் வந்தாலும் உலகத்திலை நடிகன் அவர் மட்டும் தான்.

Cable Sankar said...

செந்தில் கமல் படஙக்ளை ரசிக்க ஆரம்பித்ததனால்தான் உலக படங்களை ரசிக்க ஆரம்பித்திருக்கிறீர்கள். தமிழ் நாட்டில் உலக தரத்தில் நடிப்பு, மற்றும் மற்ற டெக்னாலஜிகளை அறிமுகபடுத்திய பெருமை கமலையே சாரும்.

தியாவின் பேனா said...

நானும் ஓர் கமல் ரசிகன் என்பதில் மகிழ்வடைகிறேன்
படம் பார்த்த திருப்தியுடன் தியேட்டருக்கு வெளியில் வரலாம்
ஏன்? அன்பேசிவம் சொல்லவில்லை எனக்கு பிடிக்கும்
குணா அருமையான படம்

கதிர் - ஈரோடு said...

தெளிவான இடுகை செந்தில்

மும்பை எக்ஸ்பிரஸ் பட நகைச்சுவை அலாதியான ஒன்று

vivek said...

VIVEK:
he introduced alternative,realistic vision instead of ordinary masala,sntiment,love cinemas.
A common immatured comment on him is about his
inspirations of some english movies.They are not ee-adichan-copy-like some other actors remake films.I dont want to mention them.In them they imitate the dress,hairstyle everything.
see his courage in selecting stories like kurudhipunal,nayagan,anbesivam,guna...etc.Even a newborn child may know these are not welcomed by most of the people.He may know the way of making films like savaal,sattam,sagalakalavallavan,thoongathe...etc.
SO,DONT BECOME SHY,TELL WITH PROUD "IM A KAMAL FAN"...

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

வாங்க பட்டிக்காட்டான், நன்றி!

அனானி அன்பருக்கு நன்றி

வாங்க வந்தியத்தேவன். சரியா சொன்னீங்க.

பிரியமுடன்...வசந்த் said...

ஆஹா..இன்னும் நான் பாடல் கேக்கலையே இதோ இப்போ கேக்குறேன்

பிரியமுடன்...வசந்த் said...

voted 4/4

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

வாங்க கேபிள் சங்கர். நீங்க சொல்றது உண்மை தாங்க.

வாங்க தியாவின் பேனா. என்னைப் போலவே உங்கள் எண்ணமும். அன்பே சிவம் படத்தைக் குறிப்பிட்டுள்ளேனே.

ஜோ/Joe said...

ரசிகனாக இருப்பதென்றால் உடனே ரசிகர் மன்றத்தில் சேர்ந்து போஸ்டர் ஒட்ட வேண்டுமென்று அவசியம் இல்லை.

ரசிகன் என்று சொல்லிக்கொள்வதில் ஒன்றும் அவமானம் இல்லை.

நானும் ஒரு கமல் ரசிகன்.

வால்பையன் said...

தான் ஒருவருக்கு ரசிகர் என்று முத்திரை குத்தி கொள்வதில் உள்ள உளவியல் பிரச்சனைகளை அலசுவோமா!?

1.ஏன் அவருக்கு ரசிகர்?

2.என்ன செய்தாலுமா?

3.அவரது தொழிலுக்கு மட்டுமா?

4.அவருக்காக எதையெல்லாம் இழக்க தயார்?

5.எதிரணி என்பது ஒருவர் மட்டுமா?
அல்லது மற்ற அனைத்து தீவட்டிகளுமா?

6.உங்கள் ஆதர்ஷ்புருஷருக்கு வாரிசுகள் வந்தால் அவரும் உங்களுக்கு அப்படியே தானா!?

7.அல்லது வேறு யாருக்கு கிளை புருஷர் பதவி குடுப்பீர்களா?

8.நீங்கள் கடவுளுக்கு சமமாக நினைக்கும் உங்கள் ஆதர்ஷபுருஷர் உங்களுக்கு சரியான மரியாதை தருகிறார் என்று நம்புகிறீர்களா?

9.உங்களது தீவிர ரசிகன் என்ற ஸ்டேட்மெண்டை வாபஸ் வாங்குவீர்களா?


உங்கள் விருப்பம் பத்தாவது பதிலாக!


உங்க பதிலை சொல்லுங்க!
என் ப்ளாக்குகளையும் போட்டு எல்லார் கிட்டயும் பதில் வாங்குறேன்

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

வாங்க கதிர். மும்பை எக்ஸ்பிரஸ் நகைச்சுவை மிகவும் ரசித்த ஒன்று.

வாங்க விவேக். உங்கள் கருத்து எனக்கும் உண்டு. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

D.R.Ashok said...

:)

அமுதா கிருஷ்ணா said...

கமல் கமல் தான்.....

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

நண்பர் வால்பையனின் கேள்விக்கு என் பதில் கீழே..

//1.ஏன் அவருக்கு ரசிகர்?//

சிறு வயதில் எதனால் என்றே தெரியாமலே தான் ரசிகன் என்று சொல்லிக் கொண்டேன். பிறகு
நல்ல படங்கள் பற்றிய சிறிதளவு புரிதல்கள் வர ஆரம்பித்த பிறகு அந்த ரசிப்பு மேலும் அதிகரித்தது.

//2.என்ன செய்தாலுமா? //

நடிப்பு, இயக்கம், திரைக்கதை என்று திரைத்துறையில் அவர் காட்டும் ஈடுபாடு ரசிக்கத்தக்கது தான்.

//3.அவரது தொழிலுக்கு மட்டுமா? //

கண்டிப்பாக தொழிக்கு மட்டும் தான்.

//4.அவருக்காக எதையெல்லாம் இழக்க தயார்?//

எதையும் இழக்கத் தயாரில்லை.

//5.எதிரணி என்பது ஒருவர் மட்டுமா? அல்லது மற்ற அனைத்து தீவட்டிகளுமா?//

எதிரணி என்பது சிறுவயதில் விவரமில்லாமல் பேசியது :-) அவை அர்த்தமற்றவை என்ற புரிதல் வந்து பல வருடங்களாயின.

//6.உங்கள் ஆதர்ஷ்புருஷருக்கு வாரிசுகள் வந்தால் அவரும் உங்களுக்கு அப்படியே தானா!?//

இல்லை. அவர் திறமையைப் பொருத்து ரசிப்புத்தன்மை வரும். ஆனால் வாரிசுகளின் திறமை மீது ஆர்வம் வருவது உண்மை தான்.

//7.அல்லது வேறு யாருக்கு கிளை புருஷர் பதவி குடுப்பீர்களா?//

பலர் அந்த இடத்திற்கு போட்டியிட்டாலும், நான் தர விரும்புவது சூர்யாவிற்கு, அவரது உழைப்பிற்காக.

//8.நீங்கள் கடவுளுக்கு சமமாக நினைக்கும் உங்கள் ஆதர்ஷபுருஷர் உங்களுக்கு சரியான மரியாதை தருகிறார் என்று நம்புகிறீர்களா?//

நான் யாரையும் கடவுளுக்கு சமமாக நினைத்ததில்லை. படங்கள் நிறைவாக இருப்பதே ரசினுக்குத் தரும் மரியாதை. அவரது பெரும்பாலான படங்கள் நிறைவாகவே இருந்திருக்கின்றன.

//9.உங்களது தீவிர ரசிகன் என்ற ஸ்டேட்மெண்டை வாபஸ் வாங்குவீர்களா?//

இல்லை. வாங்கமாட்டேன்.

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

வாங்க வசந்த். நன்றி

வாங்க ஜோ. நானும் போஸ்டர் ஒட்டி அதகளப்படுத்தும் ரசிகனல்ல. நன்றி

வாங்க அசோக். நன்றி

வாங்க அமுதா. நன்றி!

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

வாங்க கார்த்திகேயன். தெளிவான பின்னூட்டம். நல்ல சிந்தனை. ரசிகன் என்றால் எல்லாக் கொள்கைகளும் ஒன்றியிருக்க வேண்டுயதில்லை.

க.பாலாஜி said...

சிறுவயதில் எல்லோருக்குமே இருக்கும் ஒருவித கவர்ச்சி மனநிலைதான் இது...எனக்கும் இதுபோல...அந்தந்த காலச்சூழலில் நான் பலரை ரசித்திருக்கிறேன்...இப்போது குறிப்பிட்டு சொல்பவர்களில் கமல் அவர்களும் ஒருவர்...நல்ல இடுகை அன்பரே....

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் has left a new comment on your post "கமல் ரசிகன் என்பதில்..":

பெர்சனலாக கமலின் கடவுள் எதிர்ப்பு,திருமண பந்த தன் ரசிகர்களை,உதவியாளர்களை,இன்ன பிறரை மிக அசிங்கமாக திட்டுவது,போன்ற கெட்ட குணங்களை
ஒதுக்கி விட்டு நான் அவரின் புதிய முயற்சிகளையும், நடிப்பையும் மட்டுமே பார்க்கிறேன்.
அதனால் நானும் அவரின் விசிறியே.
ஒட்டு போட்டாச்சு //

இரசிகை said...

kamal nu paarththathinaal mattume inthap pakkam vantha rasihai naan:)

neththu kooda ktv il 8'0 clok night "guna"padam paarththen...(ithellaam oru padam nu yellaarum tv hall il thaniyaa vittuttup poittaanga)

kamal.... i
oru nadikanaaga,paadakanaaga,kavinganaaga,..etc
yella vithaththilum rasikkaamal irukka mudivathillai!!!

avan "sakalakala vallavan"

thiraikkup pinnaal kamal patriya yosanai suththamaaka enakku illai.....
athu thevai illaatha ontru..!!!

Anonymous said...

Yeempu support panna thaaan commenta poduveegalo.

க. தங்கமணி பிரபு said...

இலங்கை முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள சுமார் 2,80,000 தமிழர்களுக்காக தயவு செய்து ஒரு 20 வினாடிகள் செலவிடுங்கள்.
நாம் செலவழிக்கப்போவது வெறும் 20 வினாடிகள்தான்!! தயவு செய்து

http://www.srilankacampaign.org/form.htmஅல்லது

http://www.srilankacampaign.org/takeaction.htmஎன்கிற இணையப்பக்கத்துக்கு சென்று, அங்குள்ள ஈமெய்ல் படிவத்தில் உங்கள் பெயர் மற்றும் ஈமெய்ல் முகவரியை உள்ளிட்டு அனுப்புங்கள்!
அப்படியே இந்த புணிதச்செயலில் உங்கள் நண்பர்களையும் ஈடுபடுத்துங்கள்!! நன்றி!!

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

வாங்க பாலாஜி.

வாங்க ரசிகை. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

வாங்க அனானி அன்பரே! நீங்கள் கூறுவதைப் போல நான் செய்வதில்லை :-)

கலையரசன் said...

ஒரு சில படங்களை தவிர (பத்துக்குள்)...
மற்ற கமல் படங்கள் எனக்கு பிடிக்காது, அவரையும் எனக்கு பிடிக்காது!

அதற்க்கு அவரது தனிப்பட்ட வாழ்ைகயில் மனப்போக்கு கூட காரணமாய் இருக்கலாம்!!!

LOSHAN said...

கை கொடுங்கள்.. நானும் ஒரு கமல் ரசிகன்.. இப்படி சொல்வதில் ஒருவித பெருமை..

கமலின் தோற்றுப் போன நல்ல படங்களை நானே எடுத்தது போல அடிக்கடி கவலைப் படுவேன்..

இன்றும் குணா, மகாநதி, மும்பை எக்ஸ்ப்ரஸ் படங்கள் பார்க்க விருப்பம்..


வாழ் பையனின் கேள்விகளுக்கு பதில் சூப்பர்.அநேகமானவை என் மனப் பதில்களே..

Anonymous said...

Ennadhu appdi pannalya ,"வாங்க அனானி அன்பரே! நீங்கள் கூறுவதைப் போல நான் செய்வதில்லை :-)

11 September, 2009 5:47 AM :
Naan ketttathu ore kelvi atha kaanome sari ippa marupadiyum kekuren
Neenga Kamal rasigana kamaloda recent views about marriage illatha kudumbam, peththa thayikitta pesatha ponnugalai aththi perumai adichikittathaiyum rasikereengala?
Ippadikku
PISASU

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

வாங்க கலை. நல்லது ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு விருப்பம் இருக்கலாம் தானே!

வாங்க லோஷன். கை கொடுத்தாச்சு :)

எனக்கும் உங்கள மாதிரி கவலை வந்ததுண்டு. நன்றி!

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

வாங்க அனானி அன்பரே!

//11 September, 2009 5:47 AM :
Naan ketttathu ore kelvi atha kaanome sari ippa marupadiyum kekuren
Neenga Kamal rasigana kamaloda recent views about marriage illatha kudumbam, peththa thayikitta pesatha ponnugalai aththi perumai adichikittathaiyum rasikereengala?
Ippadikku
PISASU
//

உங்க கேள்விக்கான பதில் வால்பையனின் கேள்விக்கான பதிலிலேயே உள்ளதே ;)

//2.என்ன செய்தாலுமா? //

நடிப்பு, இயக்கம், திரைக்கதை என்று திரைத்துறையில் அவர் காட்டும் ஈடுபாடு ரசிக்கத்தக்கது தான்.

//3.அவரது தொழிலுக்கு மட்டுமா? //

கண்டிப்பாக தொழிக்கு மட்டும் தான்.

கோபிநாத் said...

\\கமல் படங்களின் வருகை குறைய ஆரம்பித்திருந்தாலும் வெளியாகும் படங்களை உடனுக்குடன் பார்த்துவிடவேண்டுமென்ற ஆவல் மட்டும் குறைந்தேயில்லை\\

எங்க இருந்தாலும்...உடனுக்குடன் பார்த்துடனும் எனக்கும் ;))

பிரபாகர் said...

செந்தில், சொன்னால் தப்பாக நினைக்ககூடாது, என் மனதில் இருப்பதை அப்படியே எழுதியிருக்கிறீர்கள். இதுபோல் ரசனை 100% ஒத்துப்போகுமா எனும் வியப்பும் எழுகிறது.

கமலின் ரசிகன் என்ற வகையில் இந்த பதிவிற்கு எனது ஸ்பெஷல் சல்யூட்.

பிரபாகர்.

S.A. நவாஸுதீன் said...

நானும் கமல் ரசிகன் என்பதில்..
எனக்கும் மிக்க மகிழ்ச்சி

ஜெஸிலா said...

எனக்கும் கமல் பிடிக்கும்

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

வாங்க கோபி.

வாங்க பிரபாகர், ஒரே அலைவரிசையில் இன்னொரு நண்பர் என்பதில் மகிழ்ச்சி. நன்றி

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

வாங்க நவாஸ்தீன் நன்றி

வாங்க ஜெஸிலா. நன்றி

Related Posts with Thumbnails