Monday, September 28, 2009

தொழில் நேர்மை.

நேர்மையாக தொழில் செய்வது நம் கையில் உள்ளதா? இந்தக் கேள்விக்கான விடையை என் பள்ளிக்கால நண்பன், அன்பரசனைச் சந்தித்தபோது கிடைத்தது.

நானும் அவனும் பள்ளியில் நெருங்கிய நண்பர்கள். அவன் ஆந்திராவைச் சேர்ந்தவன். அவனது தந்தைக்கு ஆந்திராவில் பல லாரிகள் ஓடிக்கொண்டிருந்தன. என் ஊரான உடுமலையில், அவனது உறவினரின் வீட்டில் தங்கிப் படித்து வந்தான். பள்ளிக்கல்வியை முடித்த பின்னர் அவன் ஆந்திராவில் உள்ள சித்தூரிற்குச் சென்று விட்டான். நான் கல்லூரிப் படிப்பு, வேலை என்று சென்னை வந்துவிட்டேன்.

இருவரும் வெவ்வேறு இடங்களில் இருந்தாலும் தொடர்பிலேயே இருந்து வந்தோம். பள்ளி நாட்களைப் போல அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு சில வருடங்களுக்கு முன்பு கிடைத்தது. அப்பொழுது நான் ராணிப்பேட்டையில் வேலை பார்த்து வந்தேன். சித்தூர் ராணிப்பேட்டையிலிருந்து ஒரு மணி தொலைவில் உள்ள நகரம்.

அன்பரசனுக்கு அப்பொழுது ஏழெட்டு லாரிகள் இருந்தன. அவன் அலுவலகத்தில் சந்தித்தால் எப்பொழுதும் பரபரப்பாகவே காணப்படுவான். அதுவும் மாதக்கடைசியாகிவிட்டால் சொல்லவே வேண்டாம். எனக்கு அவன் தொழிலைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆர்வம்.

ஒரு நாள் மெதுவாக அவனிடம்..

"உன் தொழில் எப்படி போகிறது" என்றேன்.

"நன்றாகத் தான் போகிறது" என்றான்

"அதென்ன 950ன்னு ஏதோ சொல்லீட்டு இருந்த?"

"ஒரு டன்னுக்கு 950 ரூபாய்னு லாரியை புக் பண்ணீட்டு இருந்தேன்" என்றான்.


"ஏண்டா உன் கிட்ட இருக்கறது 16 டன் லாரிக தான? ஒரு டன்னுக்கு 950 ரூபாய்ங்கறது கட்டுமா?" என்றேன்.


"கண்டிப்பா கட்டாது" என்றான்


"அப்போ?"


"இங்க வா.. இந்த லாரியப் பாரு. இது 16 டன் டபுள் ஆக்சில் லாரி. இதுல 16 டன் ஏத்தி ஓட்டனும்னா 1200 ரூபாய் இல்லாம கட்டாது. அதுக்கு நாங்க குறைஞ்சது 25 டன்னுக்கு மேல ஏத்துவோம்" என்றான்.


"டேய்.. செக் போஸ்ட் எல்லாம் இருக்குமே டா" என்றேன். நமக்கு இதெல்லாம் தெரிஞ்சாத்தானே..


"அட மாப்ள.. இதெல்லாம் அட்ஜஸ்மண்ட் தாண்டா.. நம்ம லாரி ரெகுலரா சித்தூர்ல இருந்து விசாகப்பட்டணம் வரைக்கும் போகுதுன்னா, மாசத்துக்கு ஒரு லாரிக்கு 15000 ரூபா கட்டீருவோம். இது செக்-போஸ்ட் கிளர்க்ல ஆரம்பிச்சு சின்ன மந்திரி பெரிய மந்திரி வரைக்கு பங்கு போயிடும். அதுக்கு ஈடு செய்யத்தான் நாமலும் ஓவர்லோட் பண்ணீருவோம்" என்று சிரித்தான்.


"சிஸ்டமேட்டிக்கா நடக்குதுனு சொல்லு"


"ஆமா.. ஒரு இடத்துல கட்டீட்டாப் போதும்"


"நீயி.. கட்டமாட்டேன்னு சொன்னீன்னா என்னாகும்" என்றேன்.


"என்னாகும்.. சரியா லோடு கொண்டு வந்தாலும் அந்த இன்வாய்ஸ்ல சொத்தை, பேப்பர்ல சொத்தை, ரோட் பெர்மிட்ல சொத்தைனு சொல்லி காக்க வைப்பானுக. மாசத்துக்கு 5 லோடு அடிக்கற எடத்துல நான் மூனு லோடு தான் அடிக்க முடியும்" என்றான்.


"சரி..16 டன் லாரில எப்படி 25 டன்னுக்கு மேல எத்த முடியுது?" என்றேன்.


"லாரி தயாரிக்கற கம்பெனிகளுக்கு என்ன வேணும்? அவங்க லாரிக நல்லா விற்பனை ஆகணும். அவங்க நல்லா லோடு தாங்கற மாதிரி லாரிகளத் தயார் பண்ணிடறாங்க. லாரிகளும் நல்லா விற்பனை ஆகுது. லாரிகள ஓவர்லோடு பண்றதுல நம்மள விட யாருக்கு லாபம்னு உனக்கே தெரியும்.." என்று கண்ணடித்தவன்


"இதோட நிக்கறது இல்ல.. நம்ம அரசாங்கம் தான ரோடு போடுது. நம்மள மாதிரி ஓவர்லோடு பண்ணினா ரோடெல்லாம் குண்டும் குழியும் ஆகிடும். அப்புறம்.. ஒட்டுப்போடறதுக்கு காண்டராக்ட் விடுவாங்க. அந்த காண்டாக்ட யார் எடுப்பாங்கனு உனக்கே தெரியும்.. ரோடு ரிப்பேர் பண்றது மாதிரி லாபமான பிசினஸ் எதுவுமே கிடையாது!!"என்றான்.


"இதோட முடிஞ்சுதா இல்ல..." என்று இழுத்ததற்கு


"நான் கடந்த பத்து வருசமா இதுல தான் இருக்கேன். எனக்குத் தெரிஞ்சு கண்டெயினர் பிசினஸ், டையர் கம்பெனிகனு எல்லாப் பக்கமும் இதே அட்ஜஸ்மண்ட் தான். நான் பிசினஸ் ஓட்டனுமனா இதை செஞ்சே தான் ஆகனும்" என்றான்.


அதற்குள்ளே அவனுக்கு ஒரு அலைபேசி அழைப்பு வந்துவிட்டது.

பள்ளி நாட்களில் அன்பரசன் நன்றாக படிப்பான். தமிழில் நன்றாகப் பேசுவும் செய்வான். பேச்சுப்போட்டிகளில் பரிசுகளெல்லாம் வாங்குவான். அவன் ஒருமுறை நேர்மையைப் பற்றி பேசியதற்கு முதல்பரிசு வாங்கியது என் நினைவிற்கு வந்தது.
அலைபேசி அழைப்பை முடித்து விட்டு வந்தவன்..


"சில வருசத்துக்கு முன்னாடி புதுசா ஒருத்தர் MP ஆனார். அவர் கட்சிக்கு நிறைய நிதியுதவி செஞ்சதால இந்த சீட் கிடைச்சுதாம். ஓரளவு நல்ல ஆள். அவர் வந்ததும் ஒவ்வொரு இடத்துக்கும் ஆளப் போட்டாங்க கட்சில. அவரு எந்த திட்டத்துக்கு எவ்வளவு வாங்கணும், எந்தக் கையெழுத்துக்கு எவ்வளவு பங்கு வரணும்னு எல்லா சொல்லிக் கொடுத்தாங்க. இப்ப பாரு.. அந்த ஆளும் நல்லா (?) தொழில் பண்ண ஆரம்பிச்சுட்டாரு" என்றான்.


"நேர்மையாத் தொழில் பண்றது நம்ம கையில இல்ல போல.. நீ சொல்றத பார்த்தா"என்றேன்.


"ஆமா.. மேல இருக்கவன் என்ன நினைக்கிறானோ அதப் பொறுத்துத் தான்.." என்றான்.


*******************

இது அன்பரசனுக்கு மட்டுமல்ல.. நம் அனைவருக்கும் தான். 50 ரூபாயில் முடிக்க வேண்டிய திருமணப்பதிவை 1000 ரூபாய் கொடுத்து முடிக்கிறோம். எதற்காக? நேர விரயத்தைத் தவிர்ப்பதற்காக!!

நம் நாட்டில் ஏற்படும் இந்தப் பழக்கம் வெளிநாடுகளுக்குச் சென்ற பொழுதும் வருவதுதான் வேடிக்கையானது.

துபாயில், நம் நாட்டைச் சேர்ந்தவர் ஒருவர் ஓட்டுனர் உரிமம் கொடுக்கும் ஆய்வாளருக்கு லஞ்சம் கொடுத்ததாக அண்மையில் இங்குள்ள நாளிதழில் வெளிவந்தது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அந்த நாட்டு ஓட்டுனர் உரிமம் செல்லும். ஆனால் நம் நாட்டில் எடுத்த ஓட்டுனர் உரிமத்திற்கு சிறிதளவும் மதிப்பு கிடையாது.

தொழில் நன்றாக நடக்க வேண்டும் என்பதற்காக நாம் "ஆயுத பூஜை"யைச் செய்கிறோம். ஆனால் நேர்மையாக நடக்க வேண்டும் என்று என்றாவது தோன்றியிருக்கிறதா?

...

உங்களுக்கு இந்தப் பதிவு பிடிச்சிருந்தா மறக்காம தமிழிஷ்லயும் தமிழ்மணத்திலயும் ஓட்டுப்போடுங்கள். உங்கள் கருத்துகளை கீழே பதிவு செய்யுங்கள்.
...

19 comments:

கிளியனூர் இஸ்மத் said...

//நேர்மையாக நடக்க வேண்டும் என்று என்றாவது தோன்றியிருக்கிறதா?//

என்றைக்குமே தோனுனது இல்ல....இப்ப என்ன புதுசா தோனுவதற்கு.....நல்ல கேள்வி....

ஈரோடு கதிர் said...

//நேர்மையாத் தொழில் பண்றது நம்ம கையில இல்ல போல.. //

ஆமாங்க செந்தில்

shahul said...

உங்களின் நல்ல சிந்தனை மற்றும் ஏக்கத்திற்கும் வாழ்த்துக்கள். இந்தியாவின் அளவுகோல் என்னவென்றால்

ஏமாற்றுபவன் = திறமைசாலி
நல்லவன் = ஏமாளி.

நாகா said...

என்ன செந்தில், எவ்வளவு ஷங்கர் படம் பாத்தாச்சு? யாராவது ஒரு அன்னியனோ, இந்தியனோ, ஜென்டில்மேனோ வந்து நேரு ஸ்டேடியத்துல வசனம் பேசி நம்மள திருத்திருவாங்க. அது வரைக்கும் வெயிட் பண்ணுங்க.. இல்லைன்னா நம்ம கமலஹாசன் மொட்ட மாடியில இருந்துகிட்டு நேர்மையா இல்லாத ஒரு நாலு பேரப் போட்டு தள்ளிடுவாரு, அதுக்கப்புறம் எல்லாரும் தப்பு பண்றதுக்கு முன்னாடி யோசிப்பாங்க. At least இதப் படிச்ச உடனேயாவது பத்து பேரு ஹமாம் சோப்புக்கு மாறிடுவாங்க..

☀நான் ஆதவன்☀ said...

இதெல்லாம் பழகி போச்சு செந்தில்

Unknown said...

செந்தில் ஆதங்கத்தோட நிறுத்திக்க வேண்டியது தான் போல........

நாகா உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாங்க இஸ்மத் அண்ணாச்சி. சரியான கருத்து :)

வாங்க கதிர். நன்றி

வாங்க ஷாகுல். உங்கள் விளக்கம் கலக்கல்.

vasu balaji said...

இவ்வளவு இருந்தும் தப்புன்னு ஒரு உறுத்தல் இருக்கே செந்தில். அதோட திருப்திப் பட்டுக்க வேண்டியதுதான். நல்ல இடுகை.

Ashok D said...

நான் ஆயுத பூஜையெல்லாம் செய்வதில்லை. நேர்மையாக தான் என் ‘சிறு’ தொழிலை நடத்துகிறேன் :)

ஆனால் சில ‘நிஜ’ நேர்மையாளர்களை கடக்கநேரும்போது மிகுந்த மன உளச்சலுக்கு தள்ளப்படுகிறேன்.

மற்றுமொரு நல்ல பதிவு செந்தில்.

உங்கள் ராட் மாதவ் said...

வழக்கம் போல நல்ல பதிவு செந்தில்... வாழ்த்துக்கள்.

ஒரு சிறு உறுத்தல்...

நண்பரின் அந்தரங்கங்களை இப்படி வலையில் பப்ளிக்காக போட்டு உடைத்து விட்டீர்களே... ஒரு வேலை உங்கள் நண்பர் இந்தப் பதிவைப் படிக்க நேர்ந்தால்.... :-)

வினோத் கெளதம் said...

வழக்கம்ப்போல நல்லதொரு பதிவு தல..

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாங்க நாகா. உங்க நேர்மை எனக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு நாகா :) நன்றி.

வாங்க ஆதவன். நன்றி.

வாங்க பிரதீப். நன்றி.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாங்க பாலாண்ணே. நீங்க சொல்ற மாதிரி "தப்புங்கற உறுத்தல்" மட்டும் தான் நம்மள மாதிரி ஆட்களுக்கு. நன்றி.

வாங்க அசோக். நேர்மையாக தொழில் செய்துவரும் உங்களுக்கு வாழ்த்துகள். நன்றி.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாங்க மாதவ். நன்றி. இந்தப் பதிவில் இடம்பெற்றுள்ள நண்பர், இடம் எல்லாமே புனைவு தான் :)

வாங்க வினோத்கௌதம். நன்றி.

venkat said...

நேர்மையாத் தொழில் பண்றது நம்ம கையில இல்ல

ப்ரியமுடன் வசந்த் said...

வழக்கம்போல் ஆராய்ந்து எழுதப்பட்ட இடுகை அண்ணா

பாராட்டுக்கள்

ஆனா இதுதான் நம்ம மக்களுக்கு இரத்துத்துலயே ஊறிப்போன விஷயமாச்சே...

கலையரசன் said...

//இதப் படிச்ச உடனேயாவது பத்து பேரு ஹமாம் சோப்புக்கு மாறிடுவாங்க//

ஆமாம்! அதுல நானு, நாகா, கார்த்திகேயன் எல்லாம் அடக்கம்!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாங்க வெங்கட். நன்றி

வாங்க வசந்த். வாழ்த்துகளுக்கு நன்றி

வாங்க கலை. நீங்க நம்ம நண்பர்கள் எல்லாம் ஹமாமுக்கு மாறிடறதுல மகிழ்ச்சி :)

geethappriyan said...

அருமை நண்பர் செந்தில்வேலன் நேற்று இந்த நல்ல பதிவுக்கு கருத்து இட்டேன்,பப்லிஷ் ஆகவில்லியே?
அலுவலக்த்திலிருந்து இட்டேன், நெட் ரொம்ப ஸ்லோ.

ரொம்ப யோசிக்க வேண்டிய பதிவுங்க,என்னை பொருத்த வரை நேர்மை என்பது கடைபிடிக்க வேண்டியது மிக அவசியம்.

இதில் ஒன்று கவனித்தீர்களா?ஒரு சிலர் அரசை ஏய்ப்பார். வேறு சிலர் வாடிக்கையாளரை ஏய்ப்பார்.
இது இல்லாமல் உலகம் இயங்காதோ?

ஒன்றும் இல்லை கேஸ் சிலின்டர் இணைப்பு நிறைய வாங்கி வைத்துக்கொண்டு அதை 100 ரூபாய் அதிகம் வைத்து விற்ப்பவர்களை எனக்கு தெரியும்ங்க,
இதில் உங்க நண்பரை போலவே எல்லா தொழிலிலும் உண்டுங்க,
எங்கள் சென்னை ஆர்கிடெக்ட் அலுவலகத்தில் சிஎம்டிஏ அப்ரூவல் வாங்க ஒரு திட்ட அனுமதிக்கு க்ளியண்டிடம் 2கோடி ரூபாய்கள் கூட அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்ததுண்டு. இந்த பணம் கொடுக்காமல் அப்ரூவல் கிடைக்காது,ப்ரொமோட்டருக்கு அது ஒன்றும் பெரிய காசும் இல்லை.
சோ நேர்மை எட்டாக் கனி

Related Posts with Thumbnails