Tuesday, September 15, 2009

சீனப்பெருஞ்சுவரில்..


உலக அதிசயங்கள் என்றால் முதலில் நம் நினைவிற்கு வருவது சீனப்பெருஞ்சுவரும் ஈகிப்திய பிரமிடுகளும் தான். என்ன தான் ரோமானியக் கலோசியம், தாஜ்மகால், ஜோர்டானின் பெட்ரா நகரம், பெருவின் மச்சு பிச்சு, மெக்சிகோவின் செச்சென் இட்சா என்று உலக அதிசயங்களை பட்டியலிட்டாலும் சீனப்பெருஞ்சுவர்க்கும், பிரமிடுகளுக்கும் ஒரு தனி இடம் தான்.

பள்ளி நாட்களில் சீனப் பெருஞ்சுவரைப் பற்றிப் பாடப்புத்தகத்தில் படித்தவுடன் அது எப்படி இருக்கும் என்று வரைபடத்தில் பார்த்துக் கொள்வேன். சீனாவின் பெரும்பகுதியில் ஏதோ பாம்பை வரைவது போல் வரைந்திருப்பார்கள். ஆனால் அப்பொழுது அது எவ்வளவு பெரியது என்றெல்லாம் தெரியாது. ஆனால் தகவல் களஞ்சியங்களில் சீனப்பெருஞ்சுவரின் நீளம் 5000 கிலோ மீட்டருக்கும் அதிகம் என்று படிக்கும் பொழுது அதன் பிரம்மாண்டம் மலைக்க வைத்தது.

இந்தியாவில் கன்னியாகுமரி முதல் காஷ்மீரின் வரையிலான தூரம் 3700 கிலோ மீட்டரென்றால் 5000 கிலோ மீட்டர் எவ்வளவு தூரம். 5000 கிலோ மீட்டரென்றால் எத்தனை ஆண்டுகள் கட்டியிருப்பார்கள், எத்தனை பேர் சேர்ந்து கட்டியிருப்பார்கள் என்று வியப்பு அதிகரித்துக் கொண்டேயிருக்கும். ஜீன்ஸ் திரைப்படத்தில் உலக அதிசயங்களில் எடுக்கப்பட்ட பாடல் காட்சிகளில் என்னை மிகவும் கவர்ந்தது சீனப் பெருஞ்சுவர் காட்சி தான்.

அந்தப் பாடலைப் பார்க்கும் பொழுதெல்லாம் இந்த இடத்திற்குப் போக வேண்டும் என்ற ஆசை வரும். எனக்கு அலுவலக வேலை நிமித்தமாக சீனத் தலைநகரம் பீஜிங் செல்லும் வாய்ப்பு 2006ல் கிடைத்தது.
நான் பீஜிங்கில் தங்கியிருந்த விடுதியில் சீனப்பெருஞ்சுவர் செல்ல ஏதாவது வசதியிருக்கிறதா என்று கேட்ட பொழுது, தினமும் விருந்தினர்களை அழைத்துச் செல்ல பேருந்து வசதியிருப்பதாகக் கூறினார்கள். அந்த வார ஞாயிற்றுக்கிழமைக்கு முன்பதிவு செய்துகொண்டேன். அடுத்த நாள் காலையில் பேருந்து கிளம்பியது. தாய்லாந்து, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, கொலம்பியா, பிரான்ஸ் என்று பல நாட்டுக்காரர்களும் பேருந்தில் வந்தனர். எனக்கு தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் ஒருவர் பேச்சுத்துணைக்கிருந்தார். பீஜிங் விடுதியில் இருந்து கிளம்பிய பேருந்து முதலில் மிங்க் டாம்ப் என்னும் இடத்திற்குச் சென்று பிறகு பாடாலிங் என்னும் இடத்திலுள்ள சீனப்பெருஞ்சுவர் பகுதிக்குச் சென்றது. பீஜிங் நகரில் இருந்து இரண்டு மணி நேரப்பயணம்.

பாடாலிங் என்னுமிடத்தில் ஒரு மலைத்தொடர் உள்ளது. அதில் சீனப்பெருசுவரைக் கட்டியுள்ளனர். மலை அடிவாரத்தில் இருந்து மேலே செல்ல ஒருவர் அமரும் அளவிற்கு ஒரு (குழந்தைகள்) ரயில் உள்ளது. அதில் ஏறிக்கொண்டால் பத்து நிமிடத்தில் பெருஞ்சுவரின் ஒரு பகுதியில் விடுகிறார்கள்.சீனப்பெருஞ்சுவரில் ஏறிய பொழுது தான் தெரிந்தது சீனர்களின் திட்டமிடுதலும் சாமர்த்தியமும்!!

பெருஞ்சுவரானது ஐந்து முதல் எட்டு அடி வரை அகலம் உடையதாக உள்ளது. சுவரின் உயரம் சில இடங்களில் 4 அடி முதல் 8 அடி வரையிலும் இருந்தது.


சுவரைக் கட்ட பயன்படுத்தப்பட்டுள்ள கற்கள் அனைத்தும் சதுரம் வடிவில் ஒரு அடி முதல் ஒன்றரை அடி வரை உள்ளதாக இருந்தது.

இதனைக் கட்ட முட்டை கருப்புச்சக்கை சுண்ணாம்பு போன்ற பொருட்களை பூச்சாக பயன்படுத்தியுள்ளார்கள் என்று அறிந்தது ஆச்சர்யமாக இருந்தது. இது போல நம் மன்னர்களின் கோட்டைகளும் கட்டப்பட்டுள்ளது.


இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் சுவரை மலைத்தொடரின் உச்சியிலேயே கட்டியிருப்பது தான். பெருஞ்சுவர் எதிரி நாட்டுப் படையெடுப்பகளில் இருந்து காக்கவே கட்டியுள்ளார்களாம். நாட்டினுள்ளே வரவேண்டுமென்றால் மலையைக் கடந்து இந்தச் சுவரைக் கடந்து தான் வரவேண்டும். ஒரு போர் வீரர் போதுமாம் தோராயமாக 20 எதிரிகளைச் சமாளிக்க.

இவ்வாறு சீனர்கள் 2000 ஆண்டுகளாக 5000 கிலோமீட்டகளுக்கு இதைக் கட்டியுள்ளார்கள். சில இடங்களில் செங்குத்தான மலைமுகடுகளில் ஊர்ந்தும், சில இடங்களில் பாலைவனத்திலும் சில இடங்களிலும் ஆறுகளைக் கடந்தும் காலத்தால் அழியாத சின்னமாக விளங்குகிறது.


இப்படி ஒரு அதிசயத்தைக் கட்ட வேண்டுமென்றால் எவ்வளவு கற்களைக் கொண்டு வரவேண்டும். அதுவும் மலை உச்சிக்கு!! யானைகளை அமர்த்தினார்களா இல்லை மனிதர்களே சுமந்து வந்தார்களா? எத்தனை பேர் இறந்தார்கள் இந்தப் பணியில்? இத்தனை பேரை ஈடுபடுத்த வேண்டுமென்றால் எவ்வளவு பெரிய எதிரிகள் இருந்திருக்கவேண்டும் சீனர்களுக்கு?
இதை எல்லாம் படிக்க வேண்டும் என்ற ஆவல் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது.


இந்த சாதனையைப் பார்த்த பொழுது சமகால மனிதர்களின் சாதனையெல்லாம் தூசுக்கு சமம் என்றே தோன்றியது.

..

23 comments:

குடுகுடுப்பை said...

நானும் பாடலிங் கிரேட் வால் உச்சி வரை போய் சர்ட்டிபிகேட்டாலாம் வாங்கிட்டேன். மகிழ்ச்சியா இருக்கு

துபாய் ராஜா said...

//இந்த சாதனையைப் பார்த்த பொழுது சமகால மனிதர்களின் சாதனையெல்லாம் தூசுக்கு சமம்//

உண்மையான உண்மை.

//இப்படி ஒரு அதிசயத்தைக் கட்ட வேண்டுமென்றால் எவ்வளவு கற்களைக் கொண்டு வரவேண்டும். அதுவும் மலை உச்சிக்கு!! யானைகளை அமர்த்தினார்களா இல்லை மனிதர்களே சுமந்து வந்தார்களா? எத்தனை பேர் இறந்தார்கள் இந்தப் பணியில்...//

எல்லோர் மனதிலுமே எழும் இந்த கேள்விகள்....

//இதை எல்லாம் படிக்க வேண்டும் என்ற ஆவல் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது//

படித்து அறிந்தவுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

பிரபாகர் said...

நண்பா,

எனது வாழ்நாள் இலட்சியமான சீனப்பெருஞ்சுவரை பார்க்கவேண்டும் என்பது தேவையில்ல என நினக்கிறேன், உங்களின் பதிவை படித்து பார்த்ததாய் ஏற்படும் நிறைவில்...

அழகான நடை, அளவான தேவையான தகவல்கள்.

ஃபோட்டோவில் மிக அழகாயிருக்கிறீர்கள்...

பிரபாகர்.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

அருமை நண்பர் செந்தில்வேலன்,ரொம்ப அழகான பயணக்கட்டுரை, நல்ல வழிகாட்டியாக இருந்தது.
என்ன ப்ரம்மாண்ட்டம்.
இது பற்றிய டாகுமெண்டரி பார்த்துள்ளேன்.
மனிதனால் விளங்கிக்கொள்ள முடியாத அதிசயம் இது.
சூப்பர்.

Ram said...

Add-தமிழ் விட்ஜெட் பட்டன்
உங்கள் பதிவுகள்
அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும்
வெளியிடுவதை மிகவும் எளிமையாக்குகிறது.

உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதே Add-தமிழ் பட்டன் இணையுங்கள் !

விட்ஜெட் தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக்
செய்யுங்கள்

கிளியனூர் இஸ்மத் said...

சீனப் பெருஞ்சுவர்...சுவாரஸ்யமானத் தகவல்....செந்தில் நீங்க என்ன உலகம் சுற்றும் வாலிபனா? வாழ்த்துக்கள்........

நாகா said...

அருமையான புகைப்படங்கள் செந்தில்..

கதிர் - ஈரோடு said...

படிக்கவே பிரமிப்பாக இருக்குங்க செந்தில்.

படங்கள் பார்த்ததில் மகிழ்ச்சி

நிகழ்காலத்தில்... said...

\\சீனப்பெருஞ்சுவரில் ஏறிய பொழுது தான் தெரிந்தது சீனர்களின் திட்டமிடுதலும் சாமர்த்தியமும்!!\\

இன்றைய இந்தியாவை நினைத்தால் சற்று மனதுக்கு ஒரு மாதிரியாகத்தான் இருக்கிறது.,

படங்கள் அட்டகாசமாக வந்துள்ளது நண்பரே

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

வாங்க குடுகுடுப்பையாரே! நீங்களும் ஹீரோ சான்றிதழைப் பெற்றுள்ளீர்களா? வாழ்த்துகள்!

வாங்க துபாய் ராஜா! கண்டிப்பாக பகிர்கிறேன். நன்றி!

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

வாங்க பிரபாகர்! வாய்ப்பு கிடைத்தால் தவறாமல் சென்று வாருங்கள். நன்றி

வாங்க கார்த்திகேயன். உண்மை தான். நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாது.

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

வாங்க ராம்.

வாங்க இஸ்மத் அண்ணே! நன்றி! உலகம் சுற்றுவதில் நீங்கள் தான் எங்களுக்கு முன்னோடி ;)

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

வாங்க நாகா. நன்றி

வாங்க கதிர். உண்மை தாங்க பிரமிப்பு என்றால் அது இது தான்.

வாங்க நிகழ்காலத்தில்! உண்மையிலேயே சீனர்களின் சாமர்த்தியத்தைப் புரிந்துகொள்ளாமல் நாம் சீனர்களுக்குப் போட்டி என்கிறோம் :)

Sudharsan said...

More than building the Great Wall, imagine how all throught 2000 years of construction, all kings or those who ruled the country carried forward the vision started 2000 years ago. Thats what a big thing ! Carry forward the vision of 2000 years.

Fantastic post

Sudharsan

ஜெஸிலா said...

//இந்த சாதனையைப் பார்த்த பொழுது சமகால மனிதர்களின் சாதனையெல்லாம் தூசுக்கு சமம் என்றே தோன்றியது.// நீங்க இப்படி துபாய் மெட்ரோவை மட்டம் தட்டுவது கொஞ்சம் கூட நல்லா இல்ல :-) //இதை எல்லாம் படிக்க வேண்டும் என்ற ஆவல் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது.// படித்து பகிருங்கள்.

அது ஒரு கனாக் காலம் said...

ஆமா அவளளவு பெரிய / நீளமான சுவரினால் என்ன பிரயோஜனம் !!!!!. என்னை கும்மிடாதீங்க !!!!??? சீனா நிறைய நாட்கள் அந்நிய ஆட்சியில் ( ஜப்பான் ) ... இருந்தது என நினைக்கிறேன்

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

நண்பரே என்னிடம் இது பற்றிய டாகுமெண்டரி உள்ளது வாங்கிக்கொள்ளுங்கள்.

Mahesh said...

அருமை செந்தில்.... இன்னும் போக வாய்ப்பு கிடைக்கவில்லை. படங்கள் அருமை.

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

வாங்க சுதர்ஷன். 2000 வருஷத்துக்கு எப்படி கட்டினாங்க? அது உண்மைலயே பிரமிப்பு ஏற்படுத்தும் விசயம்.

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

வாங்க ஜெஸிலா. நன்றி. நான் துபாய் மெட்ரோவையெல்லாம் சொல்லலீங்க :)

வாங்க சுந்தர் சார். ஜப்பான் சீனா மீது படையெடுத்தது 19, 20ம் நூற்றாண்டில் தான். சீனர்களுக்கு மங்கோலியர்கள் மீதே அதிக பயமிருந்திருக்கிறது. நன்றி

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

கார்த்திகேயன். நன்றி

வாங்க மகேஷ். நன்றி

Vignarajan said...

மிகவும் நன்றாக இருக்கிறது தங்களின் சீனப் பெருஞ்சுவர் தொகுப்பு.

நன்றி செந்தில்வேலன் :-)

மாதேவி said...

மிகவும் அருமையான படங்களுடன் தகவல்கள்.

There was an error in this gadget
Related Posts with Thumbnails