Saturday, May 22, 2010

பயமுறுத்தும் விமானப் பயணங்கள்..நம் ஊர் செய்தித் தாள்களில் பார்க்கும் சாலை விபத்துகளைப் போலாகிவிட்டது விமான விபத்துகள்!! சென்ற வாரம் லிப்யாவில் நடந்த விமான விபத்தில் 100 பேருக்கு மேற்பட்டோர் இறந்துள்ளனர். சென்ற மாதம் போலாந்து நாட்டு விமான விபத்தில் போலாந்து அதிபர் உட்பட 100க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.

எங்கோ நடக்கும் பொழுது சிறு அதிர்ச்சியுடன் கடந்து செல்லும் நமக்கு, நம் நாட்டில், நாம் தொடர்புள்ள நகரங்களில் விபத்து நடைபெற்றால் அதிர்ச்சியில் இருந்து மீள்வது கடினமாகிவிடுகிறது. இன்று மெங்களூரில் நடந்துள்ள விபத்தை அவ்வளவு எளிதாகக் கடந்து செல்ல முடியவில்லை.

காலையில் செய்தித் தொலைக்காட்சியைப் பார்த்ததில் இருந்து செய்தியைப் பார்ப்பதையே தவிர்த்து வருகிறேன். செய்தித் தொலைக்காட்சிகள் காட்டி வரும் காட்சிகள் விமானப் பயணத்தின் மீதே பயத்தை உண்டாக்குகின்றன. மீண்டும் மீண்டும் வெடித்துச் சிதறும் காட்சிகளும், எப்படி நடந்தது என்ற ஆய்வுகளும் என்று தொலைக்காட்சிகளுக்கு, சில நாட்களுக்குத் தீணி (??) தான். 

விமானத்தில் ஏறியவுடன் ஆபத்தான சூழலில் எப்படி நடந்துகொள்ள வேண்டும், மூச்சுத் திணறல் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும், அவசர கால தரையிறக்கம் (லேண்டிங்) செய்ய வேண்டியிருந்தால் என்ன செய்ய வேண்டும் என்றெல்லாம் சொல்லிக் கொடுப்பார்கள். சிலர் மட்டும் கவனமாகக் கவனிக்க, பலர் தூங்கிக் கொண்டும், வேடிக்கை பார்த்துக் கொண்டும் இருப்பார்கள். அவர்கள் சொல்லிக் கொடுக்கும் வழிமுறைகள் யாவும் விமானியின் கட்டுப்பாட்டில் நேரும் சூழலிற்காகவே கூறப்படுகிறது.

ஆனால் கட்டுப்பாட்டில் இருந்து தவறும் விபத்துகளுக்கு என்ன செய்ய?

கால நிலை, ஓடு பாதையின் குறைவான நீளம், ஓடு பாதை அமைந்துள்ள இடம், விமானத்தைத் தரையிறக்கிய விதம், காற்றழுத்தம் என்று பலவற்றை விபத்திற்கான காரணங்களாகக் கூறுகிறார்கள். தாய்நாட்டில் உள்ள குடும்பத்தைப் பார்க்க வந்தவர்கள், சுற்றுலாவை முடித்து வந்தவர்கள் மற்றும் குழந்தைகள் என பயணிகளுக்கு இதைப் பற்றியெல்லாம் தெரியுமா?

விமானப் பயணங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் வேளையில், அதற்கு ஈடுகட்டுமளவிற்கு வசதிகளையும் ஏற்படுத்துவது தேவையான ஒன்று. நம் நாட்டில், சில விமான நிலையங்கள் தவிர்த்து பெரும்பாலானவற்றுள் ஓடுதளம் சிறியதாகவோ, ஒரே ஒரு ஓடுதளத்தைக் கொண்டும் தான் இயங்கிவருகின்றன. சென்னை விமான நிலையத்தில் கூட, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், லுஃப்தான்ஸா போன்ற பெரிய ரக விமானங்கள் ஓடுதளங்களில் ஓடும் பொழுது விமானத்தின் இறெக்கைகள் அருகில் உள்ள சுவற்றில் முட்டிவிடுமோ என்ற பயமேற்படும். 

ஓடுதளத்தின் நீளத்தை அதிகரிக்கவோ, கூடுதல் ஓடுதளங்களை உருவாக்கவோ வேண்டுமென்றால் நிலங்களைக் கையகப்படுத்த வேண்டியதிருக்கும். நிலங்களைக் கையகப்படுத்த வேண்டுமென்றால் அரசியல் தலையீடுகள் வந்துவிடுகின்றன. மெங்களூரில் கூட சிறிய ஓடுதளத்தை அமைத்திருப்பது இந்த விபத்திற்கு ஒரு காரணமாகக் கூறுகின்றனர். அரசாங்கத்தின் திட்டமிடலில் உள்ள கோளாறால் இன்னும் எத்தனை விபத்துகள், எத்தனை உயிரிழப்புகள் நடக்க வேண்டும்?

விமானத்தில் பயணிப்பவர்கள் செய்ய வேண்டியது என்ன?

பயணத்திற்கு முன்பு பயணக் காப்பீடு எடுப்பது தான் பயணிகள் அனைவரும் செய்ய வேண்டியது. பயணிகளால் ஏதும் செய்ய முடியாத நிலையில் குறைந்தது குடும்பத்திற்குக் காப்பீட்டுப் பணமாவது கிடைக்கும். விமானப் பயணச்சீட்டில் ஒரு 2% - 5% பணத்தை காப்பீட்டில் செலவிடுவதால் ஒன்றும் குறைந்துவிடப்போவதில்லையே!!


மெங்களூர் விமான விபத்தில் உயிரிழந்த அன்பர்களுக்கு அஞ்சலிகளும், அவர்களின் குடும்பங்களுக்கும் அனுதாபங்களும்!!

*

இந்த நேரத்தில் எனக்கு ஒரு கேள்வி எழுகின்றது. எந்த அளவிற்குச் செய்திகள் நமக்குத் தேவை? எப்படி விபத்து ஏற்பட்டது என்பதையே மீண்டும் மீண்டும் ஒளிபரப்புவதால் விவாதிப்பதால் யாருக்கு லாபம்? நாளை விமானப் பயணம் மேற்கொள்பவரின் குடும்பத்தினர் என்ன மாதிரியான மன உளைச்சலுக்கு உண்டாக வேண்டியதிருக்கும்? 

நண்பர்களே, தயவு செய்து இது போன்ற விபத்துகளைக் குடும்பத்தினருடன், குழந்தைகளுடன் தொலைக்காட்சிகளில் மீண்டும் மீண்டும் பார்க்காதீர்கள். 

*

17 comments:

Chitra said...

மெங்களூர் விமான விபத்தில் உயிரிழந்த அன்பர்களுக்கு அஞ்சலிகளும், அவர்களின் குடும்பங்களுக்கும் அனுதாபங்களும்!!

Chitra said...

Again, yet another time to insist on the ethics for the TV channels.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.......ஏர் இந்தியா,இந்தியன் ஏர்லைன்ஸ் விமானசேவையில் மெத்தனமான போக்கு நிதரசனம்,ஆகவே நான் எப்போதும் அவைகளை நம்புவதில்லை.ரன்வேயில் நிற்கும் விமானத்தில் ஆயில் கூட வழிவதை பார்க்க முடியும்.காசு கூட போனாலும் எமிரேட்ஸ் போன்ற விமான சேவையில் போவது நல்லது, விமான நிலைய ஓடுப்பாதையை விரிவாக்கம் செய்யாமல் அந்த வகை விமானத்தை தரையிறங்க அனுமதி அளித்திருப்பது அரசின் மெத்தனபோக்கை பறைசாற்றுகிறது.மக்கள் உயிருக்கு இந்தியாவில் மதிப்பில்லை

ஹுஸைனம்மா said...

//நிலங்களைக் கையகப்படுத்த வேண்டுமென்றால் அரசியல் தலையீடுகள் வந்துவிடுகின்றன. //

திருவனந்தபுரம் விமானநிலையத்திற்கு வழமையாகச் செல்வேன். ஒவ்வொரு முறையும் அந்தச் சிறிய விமான நிலையத்தில், விமானத்தை, ஏதோ பஸ், காரை பிரேக் பிடிப்பதுபோல பிரேக் போட்டுத்தான் நிறுத்தவேண்டியிருக்கும். அவ்வளவு சிறிய ஓடுபாதை!!

விரிவாக்கத்திற்குத் தடையாயிருப்பவர்களுக்கு, விமானத்தில் வருபவர்களின் உயிர்களுக்கும் மதிப்புண்டு என்று தெரியவில்லை போல!!

//பயணத்திற்கு முன்பு பயணக் காப்பீடு எடுப்பது //
விமானக் கட்டணத்திலேயே இதுவும் சேர்ந்ததுதானே? இல்லையா?

எந்த விபத்து, விஷயங்கள் நடந்தாலும், ஊடகங்கள் பெரிதுபடுத்துவதே வழக்கமாகிவிட்டது.

அநன்யா மஹாதேவன் said...

//இந்த நேரத்தில் எனக்கு ஒரு கேள்வி எழுகின்றது. எந்த அளவிற்குச் செய்திகள் நமக்குத் தேவை? எப்படி விபத்து ஏற்பட்டது என்பதையே மீண்டும் மீண்டும் ஒளிபரப்புவதால் விவாதிப்பதால் யாருக்கு லாபம்?// காலங்கார்த்தால ஒரு வாட்டி தான் நியூஸ் பார்த்தேன். ஒரே டென்ஷன்!!! எரிந்து போன நிலையில் பிரயாணிகள் அமர்ந்துள்ளதை காட்ட வேண்டுமா? தொலைக்காட்சிகளுக்கு சிறிது கூட பண்பில்லையா? எதைக்காட்டலாம் என்ற விதிமுறைகள் எதுவும் இல்லையா? மிகவும் மன வருத்தம் ஏற்பட்டது!
உயிரிழந்த அனைவரின் ஆத்மாக்களுக்கு என் அஞ்சலிகள்! அதிர்ச்சியிலிருந்து மீள கொஞ்சம் காலம் கட்டாயம் எடுக்கும்.
வருத்தத்துடன்,
அநன்யா

க.பாலாசி said...

வெளிநாடுகளில் விமான விபத்துகள் நடக்கும் பொழுது அதை எளிதாக கடந்து வந்திருக்கிறேன். இப்போது அருகிலேயே மிகப்பெரிய விபத்து நடந்ததையெண்ணி காலையிலிருந்து மனம் வருந்துகிறது. நம்நாட்டிலிருந்து எத்தனையோ நடுத்தர வர்க்கத்தினர் துபாய் போன்ற நாடுகளில் வேலைசெய்கிறார்கள்...என் நண்பர்களும் நிறையபேர்... நிச்சயம் இந்த விபத்தில் அதுபோன்று ஏதாவது ஒருவர் இறந்திருக்கக்கூடும்..நினைக்கும்பொழுது வருத்தமாகத்தான் இருக்கிறது. வேறென்ன சொல்வது.. எனது ஆழ்ந்த இறங்கல்களும்..

மற்றுமொரு அக்கரையான இடுகை.. பகிர்வு.. உங்களிடமிருந்து... நிச்சயம் விமானப்போக்குவரத்தின் கட்டமைப்பையும் மேம்படுத்தவேண்டிய அவசியம் நம் அரசாங்கத்திற்கு உண்டு... இனிமேலாவது குறைகளை சரிசெய்வார்கள் என்று நம்புவோம்...

இவ்விடயத்தில் ஊடகங்களைப்பற்றி சொல்வதற்கொன்றுமில்லை...

Sabarinathan Arthanari said...

//மெங்களூரில் கூட சிறிய ஓடுதளத்தை அமைத்திருப்பது இந்த விபத்திற்கு ஒரு காரணமாகக் கூறுகின்றனர். அரசாங்கத்தின் திட்டமிடலில் உள்ள கோளாறால் இன்னும் எத்தனை விபத்துகள், எத்தனை உயிரிழப்புகள் நடக்க வேண்டும்?//

ஒத்த கருத்து நன்றி நண்பரே

அரசாங்கங்களின் மெத்தனத்தை கண்டிக்க மக்கள் சக்தி தவிர இப்போது வேறில்லை. இதற்கு விழிப்புணர்வு மிக அவசியம்

சமயங்களில் சில ஊடகங்களில் மிகை படுத்த வேண்டியதும் அவசியமாகிறது. இல்லாவிடில் அடுத்த விபத்து நடக்கும் வரை மக்கள் இதை மறந்து விட்டு நாளையே மானாட மயிலாட தான் பார்ப்பார்கள்.

வானம்பாடிகள் said...

சொன்னாற்போல் வில்லங்க விமரிசனம் வேறு. விமானக் கோளாறில்லை, இறங்கியதிலும் தவறில்லை, மழையினால் வழுக்கியிருக்கலாம் என்று சொல்லி, அடுத்த வரியில் காலை மழை பெய்யவில்லை என வானிலை நிலையம் கூறுகிறதுன்னும் சொன்னா என்ன பண்ண. உயிர் நீத்தவர்களுக்கு அனுதாபங்கள்.

Mahi_Granny said...

ஓடுதளம் நீளம் குறைவுதான் காரணம் என்கிறார்கள். எத்தனை விலைமதிக்கமுடியாத உயிர்கள் . யாராலும் திருப்பி தர முடியுமா.

ஹுஸைனம்மா said...

//அநன்யா மஹாதேவன் said..
எரிந்து போன நிலையில் பிரயாணிகள் அமர்ந்துள்ளதை காட்ட வேண்டுமா? தொலைக்காட்சிகளுக்கு சிறிது கூட பண்பில்லையா?//

அய்யோ!! நல்லவேளை நான் பாக்கலை!! சின்ன பசங்க பாத்தா??

இதுமாதிரி கொடுமைகளுக்குப் பயந்துதான், டிவி கனெக்‌ஷன் எடுக்கறதைத் தள்ளிப்போட்டுட்டிருக்கேன்!!

அது ஒரு கனாக் காலம் said...

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

please check this bit:-
it is a nostalgia for chennaites.

2nd June 1997, a Saudia Boeing-747 landed at Tambaram Air Force base instead of the Chennai International a few miles away. This made for great noise as well as subsequent television on 4763 foot long secondary runway that the PIC chose.

From the FE:-

http://www.financialexpress.com/ie/daily/19970603/15450453.html

""Airport sources said pilot of the aircraft Captain Khayyat sought visual clearance to land at the Chennai airport after sighting the runway. The Air Traffic Control (ATC) gave him permission to land, but the pilot reported that he had overshot the runway. The ATC instructed the pilot to circle and then come back for landing.

The pilot then went on an orbit and landed at the Tambaram Air Force station airstrip, mistaking it for the Chennai Airport. He then contacted the ATC and told them that he had landed, but they wanted to know where he was as they could not see the aircraft at the Chennai Airport. To their shock, the ATC learnt that the pilot had landed at the Tambaram Air Force station.""

The aircraft had to be stripped completely, bunkered with minimal fuel, and then after all sorts of insurance premiums, waited for the best wind conditions to take off under the command of a specialist pilot from Being, if I recall correctly, he was a very brave Turk.

Tambaram Air Base can be seen clearly from a mountain nearby, which has a church, temple and mosque on top of it. The take-off brought attendance to record highs, and the aircraft landed successfully at Chennai.

Just a few weeks later, though.

==========
survivors threw a party for pilot at taj hotel , airport authority penalized pilot for damaging airport.how is it?

செ.சரவணக்குமார் said...

ரொம்ப கரெக்டா சொல்லியிருக்கீங்க செந்தில். இன்னும் கூட வரிசையாக நிறைய காரணங்களை சொல்வார்கள் பாருங்களேன். காப்பீட்டுக் கட்டணம் விமானக் கட்டணத்தோடே சேர்ந்ததுதான் என நினைக்கிறேன். காப்பீடு செய்வதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை.

பகிர்வுக்கு நன்றி செந்தில்.

Leo Suresh said...

செந்தில்
''விமானப் பயணச்சீட்டில் ஒரு 2% - 5% பணத்தை காப்பீட்டில் செலவிடுவதால் ஒன்றும் குறைந்துவிடப்போவதில்லையே!!''

குறைந்த பட்சம் 95 திர்ஹம் முழு காப்பீடும் செய்யலாம் axa insurance மூலமாக

https://online.axa-gulf.com/travel/pdf/price_list.pdf

லியோ சுரேஷ்

asiya omar said...

வருத்தமான சூழலிலும் சில அறிவுப்பூர்வமான சிந்தனை.ஆழ்ந்த அனுதாபங்கள்.

நித்தி said...

மிகவும் வேதனையான விஷயம்...இங்கு பிரான்ஸ் தொலைகாட்சியில் தலைப்பு செய்தியாக முதலில் இந்த செய்தியைதான் காட்டினார்கள்.....மிகவும் துயரப்படவேண்டிய விஷயம்....குறுகிய ஓடுதளத்தில் தரையை தொடவேண்டிய இடத்தை விட்டு தள்ளி இறக்கியதால் விமானத்தை கட்டுப்பாடிற்குள் கொண்டுவரஇயலவில்லை என கூறினார்கள்.

இத்தனைக்கும் பைலட் அணுபவம் வாய்ந்தவர் தானாம்..10,000 மணி நேரம் ஓட்டிய அனுபவமும் 26 முறை இதே மங்களூரில் "Take-off,Landing" செய்திருக்கிறாராம்.

மேலும் விபத்தில் ஒரேகுடும்பத்தை சேர்ந்த 16 பேர் உயிரிழந்ததாகவும் கூறினார்கள்...இந்தியாவில் உறவினரின் ஈம காரியத்திற்காக வந்தவர்களை விபத்து பலி வாங்கி விட்டது....

இறந்தவர்களின் குடும்பத்திற்கு அரசும் ஏர் இந்தியா நிறுவனமும் உதவி செய்ய வேண்டும்...

ச.செந்தில்வேலன் said...

உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலியைத் தெரிவித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

@@ சித்ரா,

ஆமாங்க.. ஊடகங்கள் இதைப் பற்றி கொஞ்சம் யோசித்தால் நல்லது.

@@ ஹூசைனம்மா,

டிவியைப் பற்றிக் கூறியதும் யோசிக்க வைக்கிறது. :((

@@ அநன்யா மகாதேவன்,

நன்றிங்க.

@@ க.பாலாசி,

நன்றிங்க.

@@ சபரிநாதன்,

//சமயங்களில் சில ஊடகங்களில் மிகை படுத்த வேண்டியதும் அவசியமாகிறது. இல்லாவிடில் அடுத்த விபத்து நடக்கும் வரை மக்கள் இதை மறந்து விட்டு நாளையே மானாட மயிலாட தான் பார்ப்பார்கள்.//

நீங்க சொல்றது ஒரு வகையில் சரி தான்.

@@ வானம்பாடிகள்,

நன்றிங்க

@@ மகி,

நன்றிங்க

@@ கார்த்திகேயன்,

நன்றிங்க நண்பரே. தாம்பரத்தில் நடந்த விபத்திற்கான சுட்டிக்கும் நன்றி.

@@ சரவணக்குமார்,

எல்லா சமயத்திலும் காப்பீடு விமானப் பயணச்சீட்டுடன் சேர்ப்பதில்லை.

நன்றி.

@@ லியோ சுரேஷ் சார்,

சுட்டிக்கு நன்றிங்க.

@@ சுந்தர் சார்,

நன்றிங்க

@@ அசியா ஒமர்,

நன்றிங்க

@@ நித்தி,

அரசாங்கம் கட்டாயமாக உதவும். காப்பீட்டுப் பணம் ஒழுங்காகச் சென்றடைய வேண்டும். நன்றிங்க.

Related Posts with Thumbnails