Monday, October 4, 2010

அமீரக நகைச்சுவை மன்றம் + சேட்டை அரங்கம்.

நகைச்சுவையை விரும்பாதவர் யாராவது இருக்க முடியுமா?

அசத்தப் போவது யாரு, கலக்கப் போவது யாரு போன்ற நிகழ்ச்சிகள் அதிக பார்வையாளர்களைக் கவர்ந்திருப்பதற்கான காரணம் நகைச்சுவை மீதிருக்கும் ஆர்வமே!! 'மதுரை முத்து அசத்தறாரப்பா, சிவ கார்த்திகேயன் கலக்கறாரப்பா' என்றெல்லாம் சொல்லும் பொழுது 'அவர்களைப் போலெல்லாம் மேடையேறிப் பார்வையாளர்களைச் சிரிக்க வைக்க முடியுமா என்ற பிரமிப்பும் இருக்கத்தான் செய்கிறது. நம்மில் பலரிற்கு மேடை ஏறுவதென்றால் ஏதோ பாகற்காயைச் சாப்பிடுவது போல..

இந்தப் பாகற்காயை எளிதாக 'சிரிக்கச் சிரிக்க' சாப்பிட வைப்பதே அமீரக நகைச்சுவை மன்றத்தின் வேலை.




"நாம் சிரிக்கும் பொழுது உலகமே நம்முடன் சிரிக்கும். நாம் அழும் பொழுது, தனியாகவே கண்ணிர் சிந்த வேண்டியதிருக்கும்" என்பதை நம்பும் அமீரக நகைச்சுவை மன்றத்தினர் (Emirates Humour Club), அனைவருக்கும் சிரிப்பு மருந்தைத் தருவதையும், சிரிப்பு மருத்தைத் தரக் கற்றுத் தருவதையும் நோக்கமாகக் கொண்டு இயங்கி வருகின்றனர். அமீரக நகைச்சுவை மன்றம் துபாயில் அமைந்துள்ளது. மாதத்தின் முதல் வார வெள்ளிக்கிழமைகளில் தமிழ் பேசும் அன்பர்களுக்காகவும், மூன்றாவது வார வெள்ளிக்கிழமைகளில் ஆங்கிலம் பேசும் அன்பர்களுக்காகவும் நகைச்சுவைக் கூட்டம் கூடுகிறது. 


நகைச்சுவை மன்றக் கூட்டங்களில் குழந்தைகள் முதல் முதியோர் வரை பலரும் நகைச்சுவைத் துணுக்குகள் மட்டும் கருத்துகளை மேடையேறிக் கூறிவதைப் பார்க்க முடியும். சிரிப்பதற்காகவே கூடும் கூட்டமென்பதால் பாலியல், மதம் மற்றும் அரசியல் கருத்துகளுக்கு மட்டும் தடை. நகைச்சுவை மன்றக் கூட்டத்திற்கு வருவோர் செய்ய வேண்டியது, நல்ல நகைச்சுவைத் துணுக்குகளை எடுத்து வருவது தான். மேடையேற பயமிருந்தால் மேடையேறுபவரை உற்சாகப்படுத்த கரவொலிகளை எழுப்பினால் போதும். இக்கூட்டங்களுக்கு வருபவர்கள் நாளடைவில் பயமின்றி மேடையேறுவதையும் பார்க்க முடியும்.

அமீரகம் போன்ற அயல்நாடுகளில் வாழ்பவர்களுக்குத் தம்மக்களை ஒரு சேரப் பார்க்க நேர்வதே அளவில்லா மகிழ்ச்சியைத் தரும் விசயம். அதுவும் நகைச்சுவைக் கூட்டமென்றால் சொல்லவா வேண்டும்?

உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அமீரகத்தில் வாழ நேர்ந்தால் அவர்களுக்கு இம்மன்றத்தினை அறிமுகப்படுத்தத் தவறாதீர்கள்!! மாதத்திற்கொரு முறை பழக்கப்பட்ட முகங்களுடன் சிரித்து மாலைப் பொழுதைக் கழிப்பது அலாதியானது தானே!!




சேட்டை அரங்கம்..


அக்டோபர் 1ம் தேதி, சென்ற வெள்ளிக்கிழமையன்று நகைச்சுவை மன்றம், 'சேட்டை அரங்கம்' என்ற நகைச்சுவைப் பேச்சு மன்ற நிகழ்ச்சியை துபாய் அல்-கிசைஸில் உள்ள ஆப்பிள் இண்டர்நேசனல் பள்ளி அரங்கத்தில் நடத்தினர்.


1. கலகலப்பான குடும்ப வாழ்க்கைக்கு நகைச்சுவையே பிரதானம்
2. அமர்க்களமான அலுவலக வாழ்க்கைக்கு நகைச்சுவையே அச்சாணி
3. நகைச்சுவை என்பது பொழுதுபோக்கு மட்டுமே
என்ற தலைப்புகளில் மூன்று அணிகளாகப் பிரிந்து தங்கள் தரப்பு வாதங்களை வழங்கினர்.


ஒவ்வொரு அணியினரும் தங்கள் கருத்திற்கு வலு சேர்க்க நகைச்சுவையான நிகழ்வுகளையும், சூழ்நிலைகளையும் விளக்கி வாதத்தை வைத்தது அரங்கத்தைச் சிரிப்பலைகளில் மூழ்கடித்தது. நடுவர் குணா அவர்கள் தனது  அனுபவக் குறிப்புகள் மற்றும் துணுக்குகளுடன் நிகழ்ச்சியை விறுவிறுப்பாக நடத்திச் சென்றார்.

ஷார்ஜா, துபாய் போன்ற நகரங்களில் எந்திரன் படம் வெளியாகியிருந்தாலும் ஏறக்குறைய 150 பேர் நிகழ்ச்சியைப் பார்வையிட்டது சிறப்பு.


சேட்டை அரங்க நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுள் பலரிற்கு இதுவே 'முதல் மேடை' என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. நிகழ்வின் இறுதியில், முதன்முறையாக மேடையேறிய நிறைவைப் பங்கேற்றவர்கள் முகத்திலும், நல்ல நகைச்சுவை நிகழ்ச்சியைப் பார்தத நிறைவைப் பார்வையாளர்கள் முகத்திலும் பார்க்க முடிந்தது. ஒரு நல்ல நகைச்சுவை நிகழ்ச்சியை வழங்கிய அமீரக நகைச்சுவை மன்றத்தினர்க்குப் பாராட்டுகள்!!

**

அமீரக நகைச்சுவை மன்றத்தின் இணையதள முகவரி கீழே..

http://www.emirateshumourclub.net/

**

10 comments:

sakthi said...

உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அமீரகத்தில் வாழ நேர்ந்தால் அவர்களுக்கு இம்மன்றத்தினை அறிமுகப்படுத்தத் தவறாதீர்கள்!! மாதத்திற்கொரு முறை பழக்கப்பட்ட முகங்களுடன் சிரித்து மாலைப் பொழுதைக் கழிப்பது அலாதியானது தானே!!

கண்டிப்பாக செந்தில்

INDIAN said...

Hi senthil,

Please tell me how can I join this Tamil manram. I am from Udumalpet. Now, I am staying in Deira Dubai. My Cont no.050 5684786

பழமைபேசி said...

ஆகா.... செந்தில் எங்களை எல்லாம் எப்ப அழைக்கப் போறீங்க??

vasu balaji said...

பாராட்டப்பட வேண்டிய, அவசியமான முயற்சி.
/ஆகா.... செந்தில் எங்களை எல்லாம் எப்ப அழைக்கப் போறீங்க??/

அதுக்கென்னங்க ஜிடாக்ல ஆன்லைன்ல இருந்தா இன்னைக்கு நிகழ்ச்சிக்கு வந்துடுங்கன்னு சொல்றதுக்கு என்ன கஷ்டம்:))

தேவன் மாயம் said...

செந்தில் நல்ல முயற்சி.

geethappriyan said...

நல்ல அறிமுகத்துக்கு நன்றி நண்பரே,அமீரகம் வாழ் தமிழர்ககளுக்கு நல்ல ஒரு பொழுதுபோக்காக இருக்கும்

ஆரூரன் விசுவநாதன் said...

மனிதன் மறந்து போன சிரிப்பை மீட்டெடுக்கும் முயற்சி.
வாழ்த்துக்கள். செந்தில்

ஈரோடு கதிர் said...

செந்தில்..

காணொளி இருந்தால் வலையேற்றம் செய்யுங்கள்

EVENT MANAGER SHANTHAKUMAR said...

You could have posted a few jokes which received thunderous laughter in the humour club.

Pl. include them and post them in fb.

Thanks...

Ventriloquist Shanthakumar
http://binocularonshanthakumar.webs.com/

jothi said...

செந்தில் நல்ல பகிர்வு. நான் பார்த்தவரை மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் நம் மக்களின் முகத்தில் என்னவோ மகிழ்ச்சியே இல்லை,.. இது போன்ற நிகழ்ச்சிகள் அதை சரிசெய்யும் என்பதில் சந்தேகம் இல்லை

Related Posts with Thumbnails