Friday, April 10, 2009

நானோவை நினைக்கையிலே!!

மத்திய வர்க்கத்தினர்களிடம், "உங்கள் வாழ் நாள் கனவுகளாக நீங்கள் கூற விரும்பும் 5 விஷயங்கள் என்ன?" என்று கேள்வியை வைத்தால் வரும் பதில்களில், "சொந்தமாக வீடு கட்டுவது, கார் வாங்குவது" போன்றவை கட்டாயமாக இடம் பெறும்.

அந்த கனவுகளில் ஒன்றான "கார் வாங்குவதை" நனவாக்கும் வகையாக அமைந்ததே "டாடாவின் ஒரு லட்ச ரூபாய் காரான நேனோவின் அறிவிப்பு"

இன்று ஒருவர், இருசக்கர வாகனத்தை 50ஆயிரத்திற்கு வாங்குகிறார் என்றால், மேலும் 50 ஆயிரம் செலவு செய்தாலோ அல்லது தவனைக்கடன் வாங்கினாலோ இந்தக் காரை வாங்கிவிடலாம்!!

கிராமங்களை எடுத்துக்கொண்டால், சொந்தமாகக் கார் வைத்திருந்தால் "மணிக்கொரு முறை" வரும் பேருந்திற்கோ, ஆட்டோவிற்கோ காத்திருக்க வேண்டியதில்லை. மேலும், வீட்டில் கார் இருப்பது வசதிக்காக என்பதுடன் அது ஒரு கௌவரமான விஷயமும் கூட..

கிராமங்களுக்குப் பொருந்தும் இந்தக் கருத்து நகரங்களுக்கும் பொருந்துமா?

ஏனென்றால், நானோ சம்பந்தமான பேச்சு வரும் போது கூடவே வருவது, "கார் வாங்குவதெல்லாம் சரி.. அதை எங்கே ஓட்டுவது.. எங்கே நிறுத்துவது".. என்பதும் தான்.
சொந்த வீடு வைத்திருப்போர் என்றால் ஒரு கார் நிறுத்தும் அளவிற்கு இடம் இருக்கும் என்று நினைத்துக் கொள்ளலாம். அதுவே வாடகை வீட்டில் இருப்போர் என்றால் அவர்களது கையில் எதுவும் இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.

சமீபத்தில், வாடகைக்கு வீடு தேடியவர்களுக்கு இந்த விஷயம் மேலும் புரியும். வீடு தேட ஆரம்பித்தால், நமக்கு வரும் கேள்வி, "வீட்டில் எத்தனை பேர் என்பதுடன் சேர்த்து, என்ன வாகனம் வைத்துள்ளீர்கள்" என்பது தான்."இரு சக்கர வாகனம் என்றால் உள்ளே நிறுத்தலாம், கார் என்றால் நிறுத்த இடமில்லை" என்பதே நமக்குக் கிடைக்கும் பதிலாக இருக்கும். அப்படியே, 4000 ரூபாய் என்ற அளவில் வாடகைக்குத் தேட ஆரம்பித்தால், கார் நிறுத்த இடத்துடன் வீடு கிடைப்பது இடத்திற்கேற்ப 9000 ரூபாயில் தான்.

மாசம் 4000 ரூபாய் தவனை தானே பரவாயில்லை என்று நினைத்து காரை வாங்கினால், அதை நிறுத்துவதற்கே மேலும் 4000 ரூபாய் செலவாகும் என்பதை என்னவென்று சொல்ல.. இத்துடன் பராமரிப்பு செலவு வேறு உள்ளது...

"சுண்டைக்காய் காற்பணம் சுமை கூலி முக்காற்பணம்" என்னும் பழமொழி தான் இங்கே ஞாபகத்திற்கு வருகிறது...

நம்ம ஊர் போக்குவரத்து நெரிசலை நினைக்கும் போது, இருசக்கர வாகனத்தில் செல்வதற்குப் பதிலாக காரில் செல்வது கொஞ்சம் பரவாயில்லை எனலாம். ஆனால், ரெண்டு கார் இருக்கும் இடத்தில், நாலு கார் வரும் போது சாலை நெரிசலின் நிலைமை என்னவாகும்? இதற்கிடையில், பஸ்ஸில் தொங்கிக் கொண்டே செல்வோரின் நிலைமை பற்றியோ அல்லது காற்று மாசடைவதைப் பற்றியோ எவரும் கவலைப்பட போவதில்லை!!

அப்படி போகும் இடத்தில் காரை எங்கே நிறுத்துவது?

சென்னையின் தி.நகர், கோவையின் பெரியகடைவீதி போன்ற பகுதிகளில், இருசக்கர வாகனங்களை நிறுத்தவே இடமில்லை என்னும் போது கார்களை எங்கே நிறுத்துவது?
"தி.நகர் போன்ற இடங்களில் பல அடுக்குமாடி கார் நிறுத்துமிடம் (Multi level parking system) அமைக்கப்படும்" என்ற அரசின் அறிவிப்பு இன்னும் அறிவிப்பாகவே உள்ளது!!

ஒவ்வொரு புறமும் 6ல் இருந்து 8 லேன் வரை உள்ள அகல சாலைகளைக் கொண்ட துபாய், சிங்கப்பூர் போன்ற நகரங்களிலேயே அனைவரையும் பஸ், மெட்ரோ ரயில் போன்றவைகளை தான் உபயோகிக்கத் தூண்டுகிறார்கள். கார்கள் பெருகுவதைத் தடுக்க சிங்கப்பூரில் அதிக வரி விதிப்பதும், துபாயில் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கே ஓரிரு வருடங்கள் செலவாகிறதென்பதும் தெரியவருகிறது.

நம் ஊரிலோ, எல்லாம் அப்படியே நேரெதிர்!!

இப்படி பல கேள்விகளுடன் நமக்கு வரும் இன்னோரு கேள்வி, மற்ற கார் நிறுவனங்கள் எல்லாம் 2- 3 லட்சத்திற்கு அதிகமாக கார்களின் விலையை நிர்ணயிக்கும் போது டாடா நிறுவனத்திற்கு மட்டும் இந்த விலை எப்படி சாத்தியமாகிறது என்பது தான். அதற்கு அரசு கொடுக்கும் வரிச்சலுகைகள், குறைந்த வாடகையில் நிலம், புதிய தொழில்நுட்பம் எல்லாம் இருந்தாலும், குறைந்த விலையில் கார்களை விற்பதில் கிடைக்கும் வாடிக்கையாளர்களின் நீண்டகால நம்பகத்தன்மையே பெரிய லாபமாகும்.

அது எப்படி?
சைக்கிள் வாங்கியவர் அடுத்து குறி வைப்பது மொபட் வாங்கவே, மொபட் வைத்திருப்பவர் ஆசைவைப்பதோ அதிக திறன் கொண்ட இருசக்கர வாகனத்தின் மீது தான். அது போல, இப்போது அறிமுகமாகும் ஒரு லட்ச ரூபாய் காரோ நுழைவோருக்கான கார் ( entry model ). இதனை வாங்கியவர் யாரும் அதோடு நிறுத்தப் போவதில்லை.. ஏசி பொருத்திய கார், சென்ரல் லாக்கிங் வசதி கொண்ட கார், அதிக திறன் கொண்ட கார் என்று செல்லும் போது, யாருக்கு லாபம்?

இந்தியாவில் அறிமுகப்படுத்தி இந்த நானோ திட்டம் வெற்றி அடைந்தால், அதை ஆப்பிரிக்கா, கிழக்கு ஐரோப்பா, கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா, லத்தின் அமெரிக்கா போன்ற பகுதிகளில் உள்ள வளரும் நாடுகளிலும் செயல்படுத்த முடியும். அதுவே டாடா நிறுவனத்தை கார் உலகில் ஒரு அசைக்க முடியாத சக்தியாகவும் உருவெடுக்க வைக்கும்.
இப்படி ஒரு திட்டம் தான் டாடா நிறுவனத்தின் நானோ கனவு!!

இந்தக் கனவுடன் சேர்த்து "அதிகமானோர் உட்கார்ந்து பயனிக்கும் படியாக அதிக பேருந்துகளை தயாரிப்பது" என்று ஒரு திட்டத்தையும் அறிமுகப்படுத்தினால், "பேருந்தில் கூட்டமில்லாமல் உட்கார்ந்து செல்வது எப்போது" என்று ஏங்கும் மக்களுடைய கனவும் நினைவாகும்..

இப்படி செய்தால், டாடாவும் அனைவருடைய நினைவிலும் நீங்காமல் நிற்கும். இல்லை என்றால், டாடாவையும் மற்றுமோர் வெளி நாட்டு "வியாபார" நிறுவனம் போலவே ஒப்பிட நேரிடும்!!

11 comments:

பழூர் கார்த்தி said...

நல்லா அலசியிருக்கீங்க
:-)

நீங்க புக் பண்ணியாச்சா??

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

மிக்க நன்றி கார்த்தி!!

உடனே பதிவு செய்யும் அளவிற்கு, இன்னமும் தேவை ஏற்படவில்லை :)

வடுவூர் குமார் said...

துபாயில் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கே ஓரிரு வருடங்கள் செலவாகிறதென்பதும்
ஒரு நாள் இங்குள்ள செய்திதாளில் படித்தது: ஆதாவது இங்கு வாகனம் ஓட்டுவதற்கு உரிமம் வாங்குவது பட்டப் படிப்பவை விட கஷ்டமானது என்று.எவ்வளவு நொந்திருப்பார் என்று பாருங்கள்.

Anonymous said...

very nice senthil keep on reviewing
regards
siraj

Anonymous said...

Nice posting! Especially where you insisted the need to develop optimised BUS designs!!!

Manjunathan

Anonymous said...

I recently read in an article that Nano has not undergone Crash Test / Without Crash Test, they cannot export.. A writer had asked does that mean Indians can die of accident / Not a foreigner ?.... My husband also, felt the same... Bcos the front and back design of Nano is too short, it is more prone to harmful accidents... Just sharing my thought..

Good writing Senthil.. Keep it up

Uma Senthil

Anonymous said...

Dear Vela
Good Analysis. As you said untill Government does not develop infrastructure, these cars will be a problem in Indian cities. But in developed countries people are going for small cars for better fuel effeciency & lower emission. There Tata may not position it as entry level car. Tata Nano will be scoring there, it has +20kmpl & hope Nano Europha would meet all EU standards.

விக்னேஷ்வரி said...

Very Good analysis done.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

Hi Siraj, Manjunathan, Uma Senthil, Ravi, Vigneshwari..

Thanks a lot..

ஜோதிஜி said...

செந்தில் அரை மணி நேரம் பெரும்பாலான படைப்புகளை பார்க்கும் போது

சண்முகப்பிரியன் இடுகை நினைவுக்கு வருகிறது. காரணம் விஞ்ஞானம் மெய்ஞானம் இரண்டையும் சரிசமமாக பார்ப்பவன் நான். இன்று காலை அவருடைய இடுகையில் இதே போல் அரை மணி நேரம் இருந்த போது அத்தனை துன்பங்களும் மனதில் இருந்து போய் விட்டது. அமைதியும் கிடைத்தது. இப்போது உங்கள் எழுத்துக்களை படித்தவுடன் என்னுள் தோன்றியது

1. குழந்தைகளின் வாழ்க்கைக்கு உண்டான் விஞ்ஞான முன்னேற்பாடுகளில் என் பங்கு என்ன?

2. எதிர்கால இந்தியாவின் இளைஞர்களின் பங்களிப்பு, எது சரி? எது தவறு? நோக்கம்? இது போன்ற பல விசயங்களை எனக்கு கற்று தந்து உள்ளீர்கள்.

விசய ஞானம், அபார உழைப்பு, அத்தனையும் மகிழ்ச்சிஅளிக்கிறது. ஆன் லைனில் 12 பேர் இருக்கிறார்கள் என்றால்

தேடல் உள்ள உயிர்களுக்கு தானே தினமும் பசியிருக்கும்.

வளர்க பல்லாண்டு.

K.R.அதியமான் said...

///நம்ம ஊர் போக்குவரத்து நெரிசலை நினைக்கும் போது, இருசக்கர வாகனத்தில் செல்வதற்குப் பதிலாக காரில் செல்வது கொஞ்சம் பரவாயில்லை எனலாம்.///

பார்க்கவும் :
http://nellikkani.blogspot.com/2007/07/blog-post_5704.html
போக்குவரத்து நெரிசலும், சோசியலிசமும்

Related Posts with Thumbnails