Saturday, May 30, 2009

பாட்டு பஸ்

இந்த தலைப்ப பார்த்தவுடனே உங்களுக்கு என்ன ஞாபகமுங்க வருது?
எனக்கு என்னோட சின்ன வயசு ஞாபகம் தாங்க வருது...

ஆல் இந்தியா ரேடியோ, சீலோன் ரேடியோல மட்டும் தான் பாட்டு கேட்க முடியும்ங்கற காலத்துல தாங்க இந்த "பாட்டு பஸ்" பிரபலம் ஆக ஆரம்பிச்சுது.

வீட்டுல "டபுள் ஸ்பீக்கர் டேப் ரெக்காடர்" இருந்தாலும் "கம்பனி கேசட்டு" வாங்கறதுக்கு காசு கிடைக்காது.நம்ம மாதிரி ஆட்களுக்கு புது பாட்டு கேட்கனும்னா ஊர்ல ஏதாவது கோவில் விஷேசம் வரனும். அப்போ தான் "மைக் செட்" போட்டு பாட்டு போடுவாங்க, நம்ம "மைக்செட்" அண்ணனுங்க!!

இந்த சீஸன்ல, தனியார் பஸ்காரங்க பாட்டு போடறது (Unique Selling Proposition) செம ஹிட் ஆக ஆரம்பிச்சுது. எங்கப்பாவுக்கு "சேரன் ட்ரான்ஸ்போர்ட்"ல போறது தான் பிடிக்கும். ஏன்னா, பாட்டு போடாம இருந்தா தான தூங்க முடியும் :) நமக்கு அப்படியே நேரெதிர்!!

பாட்டு பஸ்ல ஏறி ஜன்னல் சீட்டுல உட்கார்ந்துட்டு பாட்டு கேக்கற சுகம் இருக்கே!! ஒரு பக்கம் பாட்டு, ஜன்னல் வழியா மேற்கு மலைத்தொடர் அழகு, சிலு சிலு காத்துனு பஸ்ல போற அனுபவம் இருக்கே, அதுக்கு ஈடு வேற எதுவுமே கிடையாதுங்க!! நமக்கு "இளையராஜா" அறிமுகம் ஆனதே அப்படித்தாங்க!!

பாட்டு பஸ் இன்னோரு விஷயத்துக்கும் ரொம்ப பிரபலம். காதலர்களும், இளம்பெண்களும் அதிகமா சந்திக்கற இடமே பாட்டு பஸ்ஸா தாங்க இருக்கும். அங்கங்க சீட்ல காதலர்களோட பேர பதிக்கறதும், தன்னோட ஆளுக்கு சீட் பிடிச்சு வைக்கறதும் சாதாரணமாப் பார்க்க முடியுமுங்க!!

கொஞ்சம் குறும்பான ஆளுக "புகை பிடிக்காதீர்"ல "பு"வ சொரண்டி, "கை பிடிக்காதீர்" ஆக்கி இருப்பாங்க!! "சிரம் கரம் புறம் நீட்டாதே"யும் "ரம் ரம் புறம் நீட்டாதே" ஆகியிருக்கும்!! "பூவையர்"ங்கற போர்டு "பூவையார்?" ஆனதும் உண்டு!!

நம்ம பாட்டு பஸ்ல ஹீரோ யாருன்னு சொல்லுங்க?

டிரைவர் தாங்க ஹீரோ!! எங்க ஊருப்பக்கம்( கோவை) "பூவையர்"கள் சீட்னா டிரைவர் பக்கம் தான்!! நம்ம டிரைவர்க ஒரு கர்சீப்ப காலர்ல கட்டீட்டு, கையில HMT வாட்ச் கட்டீட்டு, கீர் மாத்தற ஸ்டைல் இருக்கே!! அதுவும் ஒரு ஸ்டைலா ஆரன் அடிச்சுட்டே NHல ஒரு கட் அடிப்பார் பாருங்க, பஸ்ல இருக்கற பசங்களுக்கு "நம்ம பிகர இவுரு தள்ளீட்டு போயிடுவாரோன்னு பயமே இருக்குமுங்க".

சென்னை மாதிரி பீச் எல்லாம் இல்லாத ஊருன்னா மத்த ஸ்கூல், காலேஜ் பொண்ணுகள பாக்கற வாய்ப்பே இந்த பாட்டு பஸ்ல மட்டும் தாங்க!! தன்னோட ஆளுக்கு பிடிச்ச கேஸட்ட கொண்டு வந்து போடறதும், "இந்தப்பாட்டு உனக்கு தான்"னு கண்ணுலயே ஜாடை பண்றதும் அடடா!! பாட்டு பஸ்ங்கற பேருக்கு ஏத்த மாதிரி சவுண்ட் சிஸ்டம் எல்லாம் லேடஸ்டா இருக்கும். பஸ்ல "DTS Surround"னு எழுதி இருக்கறதையும் பார்க்க முடியும்.

"காலங்காத்தாலயே பஸ் ஸ்டாண்டுக்கு போயிடறான்.. எத்தன பஸ் வந்தாலும் ஏற மாட்டேங்கறான்.. எட்டரை மணி "கமலம்" வந்தா மட்டும் தான் போறான்"னு வீட்ல பேசறது கேட்க முடியும். "கமலம்" எங்க ஊரு பிரபலமான பாட்டு பஸ் பேரு. அந்த பஸ்ல போய் ஸ்கூல்ல இறங்கும் போது ஒரு பெருமை வரும் பாருங்க!! நம்ம "ஓனிடா" விளம்பரத்துல சொல்ற மாதிரி "அண்டை வீட்டாரின் பொறாமை, நமக்கோ பெருமை"!!

பாட்டு பஸ்களோட இன்னோரு அன்றாட விஷயம் பஸ் ஸ்டாண்டுல அரசுப்பேருந்து டிரைவர்களோட நடக்கற சண்டை!! பின்னே, அவங்க பஸ்ல கூட்டமே வரலைன்னா?

அப்படியே மெதுவா சேரன் பஸ்கள்லயும் பாட்டு போட ஆரம்பிச்சாங்க பாருங்க போட்டிய சமாளிக்க!! ( இதுக்கு தான் தனியார்கள உள்ள விடனும்னு சொல்றாங்களோ?)
நம்ம இப்போ செல்போன்ல பார்க்கற Convergence, (அதாங்க வெவ்வெற சேவைய ஒருங்கிணைக்கறது) அப்பவே நம்ம பஸ்கள்ல வந்திருச்சு.

இப்ப நம்ம ஊருக்குப் போய் பார்த்தா, பாட்டு பஸ் எல்லாம் "வீடியோ பஸ்"ஸா ஆயிடுச்சுங்க!! பின்ன காலத்துக்க ஏத்த மாதிரி மாற வேண்டாமா? அது தான் திரும்பற பக்கம் எல்லாம் FM சேனல் வந்திருச்சே!!

சும்மா சொல்ல கூடாதுங்க "வீடியோ பஸ்"ல பாத்தம்னா, நாலு டிவி, DTS சவுண்ட்னு ஒரே அதகளப்படுத்தறாங்க!! முன்னாடியாவது வீடியோ, சிடி போடுவாங்க. இப்பல்லாம் USB தான். செல்போன் சார்ஜ் பண்ற சாக்கட்னு அசத்தறாங்க!! நம்ம கண்டக்டர் "டிக்கட்" வாங்க சொல்ற சத்தத்தோட நமக்குக் கேட்கற இன்னோரு சத்தம் "டிவிய மறைக்காதப்பா"ங்கறது தான்!!

உங்களுக்கும் "பாட்டு பஸ்" அனுபவங்கள் இருந்தா கீழே பதிவு செய்யுங்க!!
..

23 comments:

கலையரசன் said...

//இப்பல்லாம் USB தான்//

அடேங்கப்பா.. அவ்வளவு முன்னேறிடுச்சா?
பாருடா.. 3 வருசம் ஊருல இல்ல..
என்ன அழிச்சாட்டியம்!

செந்தில்.. சூப்பர் பதிவு
நான் காலேஜ் போனத ஞாயபகப் படுத்துச்சி
நிறைய எழுதுங்க..

அப்புறம்.. நான் உங்க போன் நம்பர் கேட்டேன்..
7 தேதி சந்திப்பு நடத்துலாமுன்னு இருக்கோம்..
என் நம்பர் / 050-7174360

கண்ணா.. said...

//பாட்டு பஸ் இன்னோரு விஷயத்துக்கும் ரொம்ப பிரபலம். காதலர்களும், இளம்பெண்களும் அதிகமா சந்திக்கற இடமே பாட்டு பஸ்ஸா தாங்க இருக்கும். அங்கங்க சீட்ல காதலர்களோட பேர பதிக்கறதும், தன்னோட ஆளுக்கு சீட் பிடிச்சு வைக்கறதும் சாதாரணமாப் பார்க்க முடியுமுங்க!!//

ஆனாலும் நீங்க என்னை பத்தி இப்பிடி பப்ளிக்கா சொல்ல கூடாது

வினோத் கெளதம் said...

செந்தில் அழகா எதர்தாமான நடையில் எழுதி கலக்கி இருக்கீங்க..
எனக்கு எங்க ஊர் பஸ் நியாபகம் வந்து விட்டது..

தொடர்ந்து கலக்குங்க..
பதிவர் சந்திப்பில் சந்திப்போம்..
நானும் ஆர்வமாய் உள்ளேன்..

Suresh Kumar said...

இப்பவெல்லாம் பஸ்சிலேயே பாட்டு போட்டு இளைஞர்களை படவிடாமல் பண்ணுறாங்க பாஸ் . அப்புறம் நீங்க துபாய்ல இருக்கீங்களா ?

ஈரோடு கதிர் said...

// "புகை பிடிக்காதீர்"ல "பு"வ சொரண்டி, "கை பிடிக்காதீர்" ஆக்கி இருப்பாங்க!! //

அடிக்கடி ரசித்த ஒன்று.....

ஆமா.... பதிவர் சந்திப்பு எங்கப்பா?

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

@ கலையரசன்
வருகைக்கு நன்றி!! எல்லோருக்குமே இந்த மாதிரி ஞாபகம் கண்டிப்பா இருக்கும்னு நினைக்கறேன்.

@ Kanna
வருகைக்கு நன்றி!! உங்க கதை இதுல இருக்கா? ;)


@ vinoth gowtham
வருகைக்கு நன்றி!!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

@ Suresh Kumar,

வருகைக்கு நன்றி!! ஆமாங்க நான் துபைல தான் இருக்கேன்.

@ கதிர்

நம்ம ஆளுக அடிச்ச கூத்து.. மலரும் நினைவுகள்

Suresh said...

உங்க எழுத்து நடை நல்லா கவனிச்சு சின்ன சின்னதை கூட அழகாய் எழுதும் அழகு ...
துபாய் ல பதிவர் சந்திப்பா வாழ்த்துகள் நண்பா கலை, மற்றும் வினோத்

//பாட்டு பஸ் இன்னோரு விஷயத்துக்கும் ரொம்ப பிரபலம். காதலர்களும், இளம்பெண்களும் அதிகமா சந்திக்கற இடமே பாட்டு பஸ்ஸா தாங்க இருக்கும். அங்கங்க சீட்ல காதலர்களோட பேர பதிக்கறதும், தன்னோட ஆளுக்கு சீட் பிடிச்சு வைக்கறதும் சாதாரணமாப் பார்க்க முடியுமுங்க!!//

இந்த பாட்டு பஸ்க்கு தான் பச்ங்க வெயிட் பண்ணி ஏறுவாங்க நான் வண்டியில் போனதுனால் இது கொஞ்சம் மிஸ் ;) அதுல கண்ணாடி வேற டிரைவர் பாஸ்ட் வேற டைமிங் பாட்டுனு ,நிறையா இருக்கு சூப்பர்

Suresh said...

இனி உங்களுடன் பதிவுலக்த்தில் தொடர்ந்து பயணிப்பேன் ;) பாலோவராய்

jothi said...

சூப்பர். எனக்கு இந்த அனுபவமெல்லாம் முழுசாய் கிடைக்கல (+2 முடிந்ததும் மெட்ராசுக்கு துரத்திவிட்டுடாங்க),.. ஆனால் என் நண்பர்கள் இதே கதையை சொல்லுவங்க. பெரும்பாலன காதலர்கள் சந்திக்கும் இடம் இந்த தனியார் பஸ்தான். இவர்களின் ரவுசு தாங்காமலேயே பெரும்பாலானவர்கள் அரசு பேருந்தில் சென்றுவிடுவர். ஒன்னை விட்டுடிங்களே,. அரசு பேருந்திற்கு பின்னால் கிளம்பி, அது போவதற்கு 10 நிமிடம் முன்னால் போய்விடும். இந்த காதலர் கூட்டம் தவிர்த்து டிரைவர், கண்டெக்டர்க்கும் தனித்தனியாக ஒவ்வொரு வருடமும் ஒரு காதலி கிடைப்பாள்,..

நிகழ்காலத்தில்... said...

//காலங்காத்தாலயே பஸ் ஸ்டாண்டுக்கு போயிடறான்.. எத்தன பஸ் வந்தாலும் ஏற மாட்டேங்கறான்.. எட்டரை மணி "கமலம்" வந்தா மட்டும் தான் போறான்"னு வீட்ல பேசறது கேட்க முடியும். "கமலம்" எங்க ஊரு பிரபலமான பாட்டு பஸ் பேரு. அந்த பஸ்ல போய் ஸ்கூல்ல இறங்கும் போது ஒரு பெருமை வரும் பாருங்க!! நம்ம "ஓனிடா" விளம்பரத்துல சொல்ற மாதிரி "அண்டை வீட்டாரின் பொறாமை, நமக்கோ பெருமை"!!//

உலகத்திலேயே நாம்தான் உயர்வானவர்கள் என்ற மிதப்பை தரும் அனுபவம். நாம் அந்த பஸ்ஸில் பயணம் செய்யாதவர்களைப் பார்க்கும் பார்வை இருக்கிறதே.....!!!!!

கலகலப்ரியா said...

உங்களைச் சுற்றி நடந்த அனுபவத்தில... ஒரு பாரதிராஜா படம் பார்த்த உணர்வு.. ரொம்ப உயிரோட்டமா இருக்குங்க உங்க பாட்டு பஸ்..

நம்ம பஸ் அனுபவம் எல்லாம் ரொம்ப கம்மி.. விரல் விட்டு எண்ணிடலாம்.. ஒரு நாள் அம்மா கூட பஸ்ல போயிருந்தேன்.. ஒரு நடுத்தர வயசு ஐயா பக்கத்தில ரெண்டு சீட் காலியா இருந்திச்சி.. நான் அந்த ஐயா பக்கத்தில உக்கார போக.. அம்மா.. அதுக்கு அடுத்த சீட்ல உக்காருன்னு ரொம்ப மெதுவாதான் சொன்னாங்க.. அந்தய்யாவுக்கு கேட்டுடிச்சு.. ஆரம்பிச்சாங்க பாருங்க.. "எனக்கும் உன் பொண்ணு வயசில பொண்ணுங்க இருக்கும்மா.. என்ன நினைச்சிண்டிருக்கா.. xyz.. " எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல.. பாவம் அம்மா வேர்த்து ஒழுக.. நடுங்கிண்டே அவங்கள சமாதானப் படுத்த ட்ரை பண்ணது இப்பவும் கண் முன்னாடி நிக்குது..

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

@ Suresh,

வருகைக்கும் தொடர்தலுக்கும் நன்றி!!

@jothi

வருகைக்கு நன்றி!! நீங்க சொல்றதும் நடந்து இருக்குங்க.

Tech Shankar said...

Classic Post

//கொஞ்சம் குறும்பான ஆளுக "புகை பிடிக்காதீர்"ல "பு"வ சொரண்டி, "கை பிடிக்காதீர்" ஆக்கி இருப்பாங்க!! "சிரம் கரம் புறம் நீட்டாதே"யும் "ரம் ரம் புறம் நீட்டாதே" ஆகியிருக்கும்!! "பூவையர்"ங்கற போர்டு "பூவையார்?" ஆனதும் உண்டு!!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

நிகழ்காலத்தில்... said...

உலகத்திலேயே நாம்தான் உயர்வானவர்கள் என்ற மிதப்பை தரும் அனுபவம். நாம் அந்த பஸ்ஸில் பயணம் செய்யாதவர்களைப் பார்க்கும் பார்வை இருக்கிறதே.....!!!!!

இன்னிக்கு என்ன நடக்குதுனு சூப்பரா படம் போட்டுக் காட்டீட்டீங்க..

ரொம்ப கரக்டா சொன்னீங்க..

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

@கலகலப்ரியா

வருகைக்கு நன்றி!!

@ தமிழ்நெஞ்சம்

வருகைக்கு நன்றி!!

கட்டபொம்மன் said...

//அதுவும் ஒரு ஸ்டைலா ஆரன் அடிச்சுட்டே NHல ஒரு கட் அடிப்பார் பாருங்க, பஸ்ல இருக்கற பசங்களுக்கு "நம்ம பிகர இவுரு தள்ளீட்டு போயிடுவாரோன்னு பயமே இருக்குமுங்க".//

அனுபவமோ?

கட்டபொம்மன் http://kattapomman.blogspot.com

மணிஜி said...

செந்தில்..நம்ம ஆளுக்கு பிடிச்ச பாட்டு கேசட்டை டிரைவரிடம் கொடுத்து(டீயும்,தம்மும் வாங்ங்கி கொடுத்து)போட சொல்லுவோம்.பாட்டை அவள் ரசிக்கும்போது.நான் அவளை ரசிப்பேன்..(தஞ்சையில்)

சந்தனமுல்லை said...

சுவாரசியமான பதிவு! நாங்கள் எங்கள் கேசட்டுகளை கொடுத்துப் போட சொல்லுவோம்! கல்லூரிநாட்களை நினைவூட்டினீர்கள்..நன்றி! :)

Anonymous said...

Naanum sila dhadavai, driver horn adikira stylayum, kai asaichi pinnadi varra bussa munnadi poga solra stylayum rasichirukaen

Good writing Senthil

Uma Senthil

THIRUMALAI said...

செந்தில்,
எனது பதிவுக்கு வந்தமைக்கும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கும் நன்றி!

இன்று தான் உங்கள் பக்கங்களை சரியாக கவனிக்கும் வாய்ப்பு பெற்றேன். இனி வரும் நாட்களில் உங்கள் பக்கங்களை காண ஆவல் கொண்டுள்ளேன்.. உள்ளூர் நண்பரை( கோவை பகுதி ) சந்திப்பதில் அளவட்ட்ற மகிழ்ச்சி..

சூரியன் இறங்கும் மேற்கு தொடர்ச்சி மலையை ரசித்தபடி பயணிப்பது எனக்கும் தித்திப்பான அனுபவம் thaan

jai said...

ஆருமையான பதிவு, நானும் கமலம் பஸ் ரசிகன் தானுங்கோ.

என்ன நான் உடுமலை இருந்து பொள்ளாச்சி போவேன்.

அது அந்த காலம் போங்க...

Vikis Kitchen said...

This post reminds me of the bus named 'Basil' which runs from Tirunelveli to Tuticorin. Those are memorable days . People used to fight to get seated in that bus:)

Related Posts with Thumbnails