Thursday, August 6, 2009

ஜி-மெயில் விளம்பரங்களைத் தடுக்க என்ன செய்ய?

நீங்கள் ஜி-மெயில் மின்னஞ்சலைப் பயன்படுத்துகிறீர்களா?

நீங்கள் மின்னஞ்சல் அனுப்பும் போதோ அல்லது பெறும் போதோ ஜி-மெயில் விளம்பரங்கள் வருகிறதா?

பெரும்பாலானோர்க்கு வரத்தான் செய்கிறது. இதை நம்மில் பலர் கண்டுகொள்ளாமல் விட்டு விடும் வேளையில், இந்த விளம்பரங்களைத் தடுக்க ஒரு வழி இருக்கிறது என்று தெரிந்தால் நமக்கு பயனளிக்கும் தானே!

இந்த விளம்பரங்களைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

நாம் செய்ய வேண்டியது மின்னஞ்சலின் பதிப்பானில் ( எடிட்டர் ) தட்டச்சும் போது ஏதாவது துன்பகரமான சொற்களைச் சேர்த்து எழுத வேண்டும்.

எடுத்துக்காட்டாக கீழே உள்ள தொடரை இணைக்க வேண்டும்.

I enjoy the massacre of ads. This sentence will slaughter ads without a messy bloodbath.
அல்லது ஏதாவது ஒரு துர் நிகழ்வைப் பற்றிய தொடரை இணைக்கவும். இப்படி இணைக்கும் போது எந்த விதமான விளம்பரங்களும் வருவதில்லையாம்.

நான் இந்தத் தொடரை ஜி-மெயிலில் இணைக்கையில் என்ன ஆனால் என்பது கீழே..

முன்பு
பின்பு

இது மாதிரி விளம்பரங்கள நான் கண்டுக்கறதே இல்லைன்னு நினைச்சீங்கன்னா, உங்க நண்பருக்கு இதைப் பகிருங்கள்.


13 comments:

ஈரோடு கதிர் said...

ஆஹா சூப்பரா இருக்கே....

நானும் செய்துவிட்டேன்

Anonymous said...

கூகுள் தரும் அற்புதமான சேவைகளோடு ஒப்பிடுகையில் இம்மாதிரி விளம்பரங்களை - அவை பெரும்பாலும் நம்மைத் தொந்தரவு செய்வதில்லை -
கண்டுகொள்வதில்லை. இந்த விளம்பரங்களை அனுமதிப்பது கூகுளுக்கு செய்யும் சிறிய உதவியென்று கருதுகிறேன் நான். 'நன்றி மறப்பது நன்றன்று' :-)

இராகவன் நைஜிரியா said...

நன்றி நண்பரே. me என்று போட்டே Spam நிறைய வருகின்றது. இதை தடுக்க வழி எதாவது இருக்கா?

கலையரசன்.. said...

'நன்றி மறப்பது நன்றன்று' :-)

repetttu...

நட்புடன் ஜமால் said...

எனக்கு இதெல்லாம் வாறதில்லையே ???

Jazeela said...

விளம்பரங்கள் பலரை வாழ வைக்கிறது செந்தில் அதனால் விளம்பரங்களை தவிர்க்காதீர்கள். யாரு கண்டா நம்ம சொந்த விளம்பரங்களே சமயங்களில் வரலாம் :-)

கோபிநாத் said...

ஆகா...நல்ல விஷயம் தல..பகிர்வுக்கு நன்றி ;)

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாங்க கதிர்

//
ஆசிப் மீரான் said...
கூகுள் தரும் அற்புதமான சேவைகளோடு ஒப்பிடுகையில் இம்மாதிரி விளம்பரங்களை - அவை பெரும்பாலும் நம்மைத் தொந்தரவு செய்வதில்லை -
கண்டுகொள்வதில்லை. இந்த விளம்பரங்களை அனுமதிப்பது கூகுளுக்கு செய்யும் சிறிய உதவியென்று கருதுகிறேன் நான். 'நன்றி மறப்பது நன்றன்று' :-)
//
வாங்க அண்ணாச்சி.. நீங்க சொல்றது சரி தான். இந்த விளம்பரங்கள் சில பொழுது வேண்டாம்னு நினைத்தீங்கன்னா இந்த முறையைப் பயன்படுத்தலாம்!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாங்க ராகவன் அண்ணே. வருகைக்கு நன்றி.

வாங்க கலை

வாங்க ஜசீலா, நீங்க சொல்றது சரி தாங்க.. கொஞ்சம் யோசிக்க வைக்கிறது உங்க கருத்து :)

வாங்க ஜமால்

வாங்க கோபி

Unknown said...

thanks sendil

அது ஒரு கனாக் காலம் said...

நான் அண்ணாச்சி வழி, நன்றி மறப்பது ........

சிதம்பரம் said...

நல்ல பதிவு செந்தில். அதிலும் இந்த spamமை தடுக்க ஏதாவது வழி இருந்தால் அதையும் சொல்லுங்க நல்லா இருக்கும்

geethappriyan said...

very good post
info is very useful.
these are my least worries.
i need to control the spam mails.
how these mails keep on coming,even tho i marked those id as spam?
btw i google is good to use
i want to add indic translit as my gadget.
if time permits do that in the same post.
so everyone know

Related Posts with Thumbnails