பொழுதுபோக்கிற்கு ஆர்குட், பேஸ்புக். வேலைக்கென்று ஏதாவது இருக்கா?
"என்னடா மச்சான்! அந்த நிறுவனத்தோட கம்பனி வேலைக்கு முயற்சி பண்ணினியே என்னடா ஆச்சு?"
"எல்லாம் நேரக் கொடுமைடா.."
"ஏன்டா? என்னடா ஆச்சு?"
"எல்லா வேலையையும் தெரிஞ்சவங்களுக்கே கொடுத்துட்டாங்க போல!"
"எல்லாம் நேரக் கொடுமைடா.."
"ஏன்டா? என்னடா ஆச்சு?"
"எல்லா வேலையையும் தெரிஞ்சவங்களுக்கே கொடுத்துட்டாங்க போல!"
இந்தப் பேச்சு நம்ம நண்பர்கள் மத்தியில எப்பவுமே கேட்கற ஒன்னு தாங்க!
இது ஏதோ நிறுவனங்கள் நமக்கு துரோகம் செய்வதைப் போலத் தெரிந்தாலும், அந்த நிறுவனங்கள மேலயும் தப்பு இருக்கறதாத் தெரியலங்க.
ஏம்பா நீ என்ன HRகாரனா?ன்னு நீங்க கேக்கறது புரியுது. இல்லீங்க! நான் அந்தத் துறையில வேலை பார்க்கலீங்க.
ஓரிரு காலியிடங்கள நிரப்பறதுக்கு விளம்பரத்த வெளியிட்டு, தேர்வுகள நடத்தி, ஆட்கள நேர்முகத்துக்கு அழைப்பதுன்னு செலவு செய்யறதுக்கு பதிலா, அந்த நிறுவன ஊழியர்களின் சிபாரிசுல நேர்முகத் தேர்விற்கு வருகிற ஆட்கள் என்றால் செலவு குறைவு தானே!
அது மட்டுமா? என்ன தான் வெளி ஆட்களத் தேர்வு செய்யலாம்னு முடிவெடுத்தாலும், வேலை தேடுபவர்கள் போலிச் சான்றதழ்களைக் காட்டுவது, போலியாக வேலை அனுபவத்தைக் கூறுவது என்று ஏமாற்று வேலை நடப்பதால், வேலை தேடுபவரின் பின்புலத்தைச் சரிபார்ப்பதற்கு அதிக நேரம் செலவாகலாம்.
இது போன்ற விடயங்களுக்காகத் தான் பரிந்துரையை நாட ஆரம்பித்துள்ளன தனியார் நிறுவனங்கள்.
சரி, இப்படி தனியார் நிறுவனங்களில் காலியிடம் இருக்கிறதா? யார் யார் ஆட்களைத் தேடுகிறார்கள் என்று எப்படித் தெரிந்துகொள்வது?
இதற்கு ஓரளவு உதவும் தளம் தான் லிங்க்ட்இன்
பொழுதுபோக்கிற்கு எப்படி ஆர்குட், ஃபேஸ்புக் போன்ற சமூக வலையமைப்புத் தளங்கள் உள்ளதோ; அது போல தொழில்துறை, வேலை சார்ந்த விடயங்களுக்கு உருவாக்கப்பட்ட வலைத்தளம் தான் லிங்க்ட்இன். LINKEDIN
இந்தத் தளத்தில், நாம் நமது சுயவிவரங்களை உருவாக்க வேண்டும். உங்கள் பெயர், முகவரி, வேலை அனுபவம், படிப்பு, ஆர்வம், தனித்திறன் போன்றவற்றைக் கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.
பிறகு உங்கள் நண்பர்கள், பள்ளியில் உங்களுடன் பணிபுரிந்தவர்கள், முன்னாள் வேலை செய்த நிறுவனத்தில் உடன் வேலை பார்த்தவர்கள் என அனைவருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்.
இதில் முக்கியமானது பரிந்துரை!
உங்களுடன் முன்னாள் மற்றும் இன்னாள் மேலாளர், சில திட்டங்களில் உங்களுடன் பணிபுரிந்தவர்கள், ஆசிரியர்கள் போன்றோரின் பரிந்துரையை வாங்கிக்கொள்வது உங்கள் சுயவிவரத்திற்கு மெருகூட்டும்.
இப்போது, ஒரு பிரபல நிறுவனம் ஆட்களைத் தேடுகையில் உங்களுக்கு கிடைத்திருக்கும் பரிந்துரையை வைத்தே உங்களுக்கு நல்ல அறிமுகம் கிடைத்து விடும். பின்புலத்தைச் சோதிப்பது கூட எளிதில் முடிந்துவிடும். உங்கள் முன்னாள் மேலாளர் நற்சான்றளித்திருப்பதை விட வேறென்ன வேண்டும்?
இது மட்டுமா? உயர்பதவியில், உங்கள் நண்பரின் நண்பர் இருக்கிறார் என்றால் அது உங்களுக்கும் நன்மை தானே!
ஏப்பா செந்திலு, வலைத்தளத்துல எல்லோருக்கும் தெரிய நம்ம சுயவிவரத்தை வெளியிடுவது சரியா?ன்னு நீங்கள் கேட்பது புரிகிறது! எந்த விவரத்தை வெளியிட நினைக்கிறீர்களோ அதை வெளியிடுங்கள். தற்போது வேலை தேடவில்லை என்றால் அதைக் கூட சுயவிவரத்திலேயே தெரியப்படுத்தவும்!
அமெரிக்க அதிபர் ஒபாமாவே இந்த லிங்க்ட்இன்னில் தனது சுயவிவரத்தைச் சேர்த்துள்ளார் என்பது உங்களுக்கு வியப்பாக இருக்கலாம்! காரணம் இதில் கிடைக்கும் தொடர்புகளே!
எனக்கும் ஓபாமாவுக்கும் என்ன தொடர்பென்று தெரியவேண்டுமா? கீழே உள்ள படத்தைப் பார்க்கவும் :)
பொழுதை ஆர்குட், ஃபேஸ்புக், பிளாக்கர் என்று போக்கும்பொழுது, நம் எதிர்காலத்திற்கும் கொஞ்சம் நேரத்தைச் செலவிடலாம் தானே?
எத்தனையோ செஞ்சிட்டோம் இத செய்ய மாட்டோமா?
இந்த பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணத்திலும் தமிழிஷ்லும் வாக்களியுங்கள்! இதுவும் பரிந்துரை தானே :))
18 comments:
நல்ல தளம் தான் லின்க்டு இன்
நானும் இதில் பதிந்து உள்ளேன்.
என் பழைய நண்பர்கள் நிரைய பேரை எனக்கு மீட்டு தந்தது
நன்றி செந்தில். அருமையான தளம். இனிமேல்தான் பதிய வேண்டும்.
அருமையான தளம் பற்றிய பகிர்வு செந்தில். மிக்க நன்றி!
அருமையான தளத்தைப் பற்றி நல்ல அறிமுகம்...
உபயோகமான பதிவு! பூங்கொத்து!!
ஒபாமா - நாடோடிகள் வசனம் சூப்பர்.
what about siliconindia.com ?
வாங்க கார்த்திக்.. பாராட்டிற்கு நன்றி!
வாங்க இராகவன். பயனுள்ள தளம் இது. பதியுங்கள்.
வாங்க சென்ஷி.. பாராட்டிற்கு நன்றி!
வாங்க மகேஷ். பாராட்டிற்கு நன்றி!
வாங்க அருணா! பூங்கொத்திற்கு நன்றி
வாங்க யூர்கன்! வருகைக்கு நன்றி
எங்கள் நிறுவனத்திலும் யாரை பற்றியும் விவரம் தேவையிருப்பின் இந்த தளத்தின் உதவியைதான் நாடுகிறோம். நல்ல முறையில் ஒரு அறிமுகம்.
உண்மையில் இது ஒரு பயனுள்ள சேவைதான்.
நல்ல பதிவு நண்பரே....வாழ்த்துக்கள்.
நன்றி ஜெஸிலா! வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
நன்றி ராட் மாதவ்! வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி
அப்போ ஒபாமா எனக்கும் ஃபிரண்டா...
தேங்ஸ் செந்தில்
ஹி...ஹி
பயனுள்ள பதிவு செந்தில்
நன்றி
ஆமாம் கதிர்.. ஒபாமா உங்களோட நண்பரோட நண்பரின் நண்பரின் நண்பர் :))
பதிவு சிறப்பு
பொழுதுபோக்காகவே இணையத்தில் இருக்கும் எங்களுக்கு தந்த தரமான பதிவு செந்தில்வேலா
தொடரட்டும் உங்கள் பணி
நல்ல பகிர்வுங்க..
தகவல் அருமை..
தற்போதைய சூழலில் மிகவும் அவசியமான பதிவு...
நல்ல தகவல். பரிமாற்றத்துக்கு நன்றி.
Post a Comment