Saturday, September 5, 2009

பிளாக்கர் தளத்திற்கு வயது 10


கடந்த வாரம் பத்து வயதைக் கடந்திருக்கும் "பிளாக்கர் தளத்தை" வாழ்த்துவோம்.

உங்களுக்கு ஏதாவதொரு கருத்தைத் தெரிவிப்பதில் பயமிருந்ததுண்டா? அந்த பயத்தைப் போக்க வேண்டுமா? நீங்கள் செய்ய வேண்டியது வலைப்பதிவர் ஆவது தான்.

என்ன பதிவரானால் "கருத்தைத் தெரிவிப்பதில் பயம் போய்விடுமா?" என்றால் ஆம் என்று தான் சொல்லவேண்டும்.

நம்மில் பெரும்பாலானோர்க்கு இருட்டு, உயரமான இடத்திற்குச் செல்வது, பாம்பு, மருத்துவர் போடும் ஊசி போன்றவற்றிற்கு பயம் இருந்தாலும் நம் கருத்தைத் தெரிவிப்பதிலும் பயம் இருக்கத்தான் செய்கிறது.

அது நமது பள்ளி நாட்களாகட்டும், நாம் பணிபுரியும் அலுவலகமாகட்டும், நண்பர்களுடன் நடத்தும் உரையாடலாகட்டும் நம் கருத்தைத் தெரிவிப்பதில் பயம் அல்லது தயக்கம் இருக்கத்தான் செய்கிறது. அதுவே நம் கருத்தை எழுதவேண்டுமென்றால், அந்தத் தயக்கம் இரண்டு மடங்காகி விடும்.

இங்கே தான் நமக்கு பதிவுலகம் நமக்குக் கை கொடுக்கிறது.

திரைப்படத்துறையோ, அரசியலோ, தொழில்துறையோ, நகைச்சுவையோ எதுவாக இருந்தாலும் நம் கருத்தைத் தெரிவிப்பதற்கும், அதே விடயத்தில் பிறர் கருத்தைத் தெரிந்து கொள்ளவும், நம் திறமைகளை வளர்த்திக் கொள்ளவும் பதிவுலகம் உதவுகிறது என்றால் மிகையல்ல.

சில வருடங்களுக்கு முன்பு வரை, ஒரு விடயத்தில் என்னென்ன கருத்துகள் உள்ளன என்று தெரிய வேண்டுமென்றால் ஒன்று பிரபல நாளிதழிலையோ வாரஇதழையோ தான் படிக்க வேண்டும். ஆனால் இன்றோ ஏராளமான கருத்துகளைப் படிக்க முடிகிறது. அதற்குக் காரணம் பதிவுலகம் தான்!! வெவ்வேறு நாடுகளில் பணிபுரியும் தமிழர்களுக்கு அந்தந்த நாட்டின் கருத்தென்ன என்பது தெரியவருவது தான் இதற்குக் காரணம்.

இதை விட, பதிவுலகத்தில் கிடைக்கும் நட்பும் அரவணைப்பும் எத்தகையது என்பதற்கு நண்பர் செந்தில்நாதன் உடல்நலமடைய நடந்த வேண்டுதல்களும் உதவிகளுமே சான்று.

இப்படி ஒரு பதிவுலகம் அமைய யார் காரணம்?


பிளாக்கர் இணையதளம் தான் அது என்று நான் சொல்லத் தேவையில்லை. அத்தகைய
பிளாக்கர் நிறுவனம் தனது பத்தாவது வயதை ஆகஸ்ட் 23ம் தேதியன்று முடித்திருக்கிறது. பிளாக்கர் தளத்திற்கு நமது நன்றியையும் வாழ்த்துகளையும் கூறுங்கள்!!

**********************************************************************************

பிளாக்கர் தளம் எந்தளவு பிரபலம் என்று அலெக்ஸாவின் பார்த்தால் எட்டாவது இடத்தில் உள்ளது.

தமிழ்ப் பதிவுகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு தமிழ்மணம் மற்றும் தமிழிஷ் போன்ற தளங்களின் அலெக்ஸா வரிசை எண், பிரபல வார இதழ்கள், நாளிதழ்களின் தளத்துடன் ஒப்பிடும் அளவிற்கு உள்ளதே சான்று. பிரபல தமிழ் நாட்டுத் தளங்களின் இன்றைய ( 05.09.09) வரிசை எண் கீழ்வருமாறு:

தினமலர் - 1295
தி ஹிந்து - 1762
தமிழ் மாட்ரிமணி - 2989
தினகரன் - 5793

தினத்தந்தி - 6519
தினமணி - 10866
விகடன் - 14629

தமிழிஷ் - 17004
தமிழ் சினிமா - 20406
தமிழ்மணம் - 28538

குமுதம் - 33624

தமிழிஷ், தமிழ்மணம் போன்ற தளங்களின் தரவரிசையைப் பார்க்கும் வேளையில் ஆங்கிலப் பதிவுத் தொகுப்புத் தளமான டிக்கின் (www.digg.com) தரவரிசை எண்ணான 120ஐப் பார்க்கும் பொழுது தமிழ் பதிவுலகம் எங்கே உள்ளது என்பது புரிகிறது.

இணையத்தின் பயன்பாடு சேவைத் துறைகளுக்கு ஓரளவு வந்துள்ளது என்பது இந்திய ரயில்வேயின் தளத்தைப் பார்க்கும் பொழுது தெரியவருகிறது.

நௌக்ரி - 411
இந்திய ரயில்வே - 496
சென்னை ஆன்லைன் - 7225
தமிழக அரசு - 7983
கே.பி.என். டிராவல்ஸ் - 39651
ஏ.பி.டி.எக்ஸ். டிராவல்ஸ் - 93620

நம் தமிழ்ப் பதிவுலகில் பொறியியல், மருத்துவம், சுற்றுச்சூழல், வரலாறு என்று இன்னும் தொடவேண்டிய துறைகள் ஏராளம் உள்ளன. இது போன்ற துறைகளை நாம் தொடாமல் இருப்பதற்கு நமக்குக் கலைச்சொற்கள் தெரியாததே காரணம்.

அதற்கு உதவும் வகையில் உள்ள
தமிழ் இணையப் பலகலைக்கழகம் இன்னும் பிரபலமாகாதது வருத்தமளிக்கிறது. இந்தத் தளத்தின் நூலகத்தில் ஏராளமான தமிழ் நூல்களும், கலைச் சொற்கள் அகராதியும் உள்ளன என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

அண்ணா பல்கலைக்கழகம் - 3291
தமிழ் இணையப் பல்கலைக்கழகம் - 154705

நாம் பிளாக்கருக்கு நன்றி சொல்லும் வேளையில் வெவ்வேறு துறை சார்ந்த பதிவுகளையும் எழுத ஆரம்பித்தால், இன்னும் பலரை பதிவுலகிற்கு வரவழைக்க முடியும்!!

***********************************************************************************************************
எனது 50வது பதிவு பிளாக்கருக்கு நன்றி /வாழ்த்து கூறுதாக அமைந்ததில் மகிழ்ச்சி!! எனக்கு ஊக்கமளித்துவரும் அனைவருக்கும் நன்றி!


உங்களுக்கு இந்தப் பதிவு பிடித்திருந்தால் தமிழிஷ் மற்றும் தமிழ்மணத்தில் வாக்களிக்க மறக்காதீர்கள்.
..

19 comments:

நாகா said...

வாழ்த்துக்கள் நண்பரே.. உங்களுக்கும் ப்ளாக்கருக்கும்..

கோபிநாத் said...

வாழ்த்துவோம் தல ;))

ப்ளாகர், முன்பு யானை..ஆகா..ஆகா கலக்குறிங்க தல ;))

Mahesh said...

உங்களுக்கும் ப்ளாக்கருக்கும் சக ப்ளாகர்ஸுக்கும் வாழ்த்துகள் !!

vasu balaji said...

ஐம்பதாவது பதிவுக்கும் அற்புதமான தகவலுக்கும் வாழ்த்துகள். ப்ளாக்கருக்கும் தான்.

☀நான் ஆதவன்☀ said...

அட! :)

வாழ்த்துகள் செந்தில். ப்ளாக்கருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். தமிழ் இணைய பல்கலைக்கழக அறிமுகத்திற்கு நன்றி.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாங்க நாகா. நன்றி!
வாங்க கோபி. நன்றி!
வாங்க மகேஷ். நன்றி!
வாங்க வானம்பாடிகள் ஐயா. நன்றி!
வாங்க ஆதவன். நன்றி!

ஈரோடு கதிர் said...

என்னையும் உங்களையும் இணைத்த பிளாக்கர்-க்கு வாழ்த்துகள்

50 இடுகைக்கு ஆயிரமாயிரம் வாழ்த்துகள் செந்தில்..

geethappriyan said...

அருமை நண்பர் செந்தில்வேலன்,
ஐம்பதாவது தரமான இடுகைக்கு வாழ்த்துக்கள்.
தலைமுறை கண்ட ப்ளாக்கருக்கும் வாழ்த்துக்கள்

கலையரசன் said...

என்னது? 50 இடுகைகள் எழுதிட்டீங்களா?
நம்பமுடியவில்லை.. வில்லை... வில்லை..
வாழ்த்துக்கள் செந்தில்! மேலும் இதுபோல் இடுகைகள் 200 எழுத...

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாங்க கதிர். நன்றி. ஆமாங்க உங்களைப் போல பல நல்ல நண்பர்கள் கிடைத்துள்ளனர், பிளாக்கர் மூலம் :)

வாங்க கார்த்திகேயன், நன்றி.

வாங்க கலையரசன். நன்றி. என்னது 200க்கு மட்டும் வாழ்த்து சொல்றீங்க? :)

சென்ஷி said...

வாழ்த்துக்கள் செந்தில்!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

நன்றி சென்ஷி.

Deepa said...

நல்ல பதிவு. பாஸிட்டிவான விஷயங்களை அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள். நன்றி.

ப்ரியமுடன் வசந்த் said...

50வது பதிவுக்கு வாழ்த்துக்கள் செந்தில்

துபாய் ராஜா said...

வாழ்த்துக்கள் தங்களது 50வது பதிவிற்கும் பிளாக்கரின் 10வது ஆண்டு நிறைவிற்கும்....

கிரி said...

செந்தில் உங்கள் பல பதிவுகள் சிறப்பாக எழுதி உள்ளீர்கள்..இன்று தான் படித்தேன்.

வாழ்த்துக்கள்..

இது நம்ம ஆளு said...

இன்று தான் படித்தேன்.
அருமை
வாங்க நம்ம பதிவுக்கு
:)

pudugaithendral said...

ப்ளாக்கருக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாங்க தீபா. நன்றி

வாங்க வசந்த். நன்றி

வாங்க ராஜா. நன்றி

வாங்க கிரி. வருகைக்கு நன்றி

வாங்க இது நம்ம ஆளு. நன்றி

வாங்க புதுகைத்தென்றல். நன்றி

Related Posts with Thumbnails