Friday, September 18, 2009

உன்னைப் போல் ஒருவன் - ஒரு கமல் ரசிகனின் பார்வை!

மக்களின் அமைதியைக் குலைத்திடும் தீவிரவாதிகளையும் தீவிரவாதத்தையும் விட்டுவைக்கக் கூடாது. அவர்களின் நோக்கம் என்னவாக இருந்தாலும்!! இந்தக் கருத்தைத் தான் நம்மில் ஒருவராக வந்து கூறுகிறார் கமல்ஹாசன்.

சென்னை சென்ரலில் இருந்து கிளம்பவிருக்கும் ரயில், கோயம்பேடு காய்கறி அங்காடி, மாநகரப் பேருந்து, ஷாப்பிங் மால், ஒரு காவல் நிலையம் என்று பல இடங்களிலும் வெடிகுண்டுப்பைகளை கமல் வைக்க ஆரம்பிக்கும் பொழுதே (என்னைப் போல வெட்னஸ்டேவைப் பார்க்காதவர்களுக்கு) கதையில் ஒரு சஸ்பன்ஸ் வந்துவிடுகிறது.


பிறகு கட்டிமுடிக்கப்படாத ஒரு கட்டிடத்தில் அமர்ந்து நெட்புக், அலைபேசி, சிம்கார்டுகளை வைத்து மாநகர தலைமைக் காவல் அதிகாரியான ராகவன் மாராரிற்குப் போன் செய்து பல இடங்களில் வெடிகுண்டுகளை வைத்துள்ளதாகக் கூறும் பொழுது படம் வேகமெடுக்கிறது.

கமல் கூறுவதை நம்பத் தயாராக இல்லை என்று மோகன்லால் கூற காவல் நிலையத்தில் வைத்துள்ள வெடிகுண்டு இன்னும் 20 நிமிடங்களில் வெடிக்கும் என்று கூற மாராரிற்குத் தீவிரம் புரிகிறது. இதே செய்தியைத் தொலைக்காட்சிச் செய்தி நிருபரிடமும் (அனுஜா) கூற விசயம் தொலைக்காட்சியில் வர ஆரம்பிக்கிறது.


வெடுகுண்டுகள் வைத்திருக்கும் இடங்களைக் கூற வேண்டுமென்றால் நான்கு தீவிரவாதிகளை மாலை ஐந்து மணிக்குள் விடுவிக்க வேண்டும், தவறினால் ஆறு மணிக்கு குண்டுகள் வெடிக்கும் என்று கூற, மாரார் விசயத்தை தலைமைச் செயலரிடம் (லஷ்மி) கூற, அரை மணி நேரத்தில் காவல் அதிகாரிகள் அவசரகால அறையில் (War Room) கூடுகிறார்கள்.


கமலிடம் அழைப்புகள் வர, அழைப்புகள் எங்கிருந்து வருகின்றன என்று கண்டுபிடிக்க முடியாமல் மாராரின் உதவியாளர்கள் குழம்ப, நேரம் நெருங்க, என்ன முடிவெடுப்பதென்று தலைமைச் செயலரும், மாராரும் காரசாரமாக விவாதிக்க என்று படத்தின் கதை வேகமெடுக்கிறது. என்ன முடிவெடுத்தார்கள்? தீவிரவாதிகளை விடுவித்தார்களா? கமலிற்கும் தீவிரவாதிகளுக்கும் என்ன சம்பந்தம்? கமல் காவல்துறையிடம் சிக்கினாரா? போன்ற கேள்விகளுக்கு விடைகளைத் திரையரங்கில் பாருங்கள்!!

இயக்குனராக சக்ரி டொலெட்டிக்கு இது முதல் படம். இதற்கு முன்பாக இவர் கமலின் இரண்டு படங்களில் நடித்துள்ளார். சலங்கை ஒலியில் கமலைப் புகைப்படம் பிடிக்கும் சிறுவனாகவும், தசாவதாரத்தில் கமலின் நண்பராகவும் நடித்திருப்பார். நல்ல படத்தை ரீமேக் செய்ததற்கு முதல் வாழ்த்துகள்!

படத்தின் வசனகர்த்தா பிரபல எழுத்தாளர் இரா. முருகன்! படத்திற்கு இவரது வசனம் ஒரு பலம். கிரிக்கெட் பந்து பட்டு வீட்டுக்கண்ணாடி உடைந்ததற்கு ஒரு பிரபல நடிகர் (ஸ்ரீமன்) தனக்கு பாதுகாப்பு வேண்டுமென்று கேட்குமிடமாகட்டும், காவல் நிலையத்தில் வரும் ஆரம்பக் காட்சிகளாட்டும் நகைச்சுவையைத் தூவியுள்ளார். கமலிற்கும் மோகன்லாலிற்கும் நடக்கும் பேச்சுவாத்தை காரசாரமானவை! கண்டகரில் ஆரம்பித்து குஜராத் கலவரம், கோவை குண்டுவெடிப்பு, மும்பை குண்டுவெடிப்பு பற்றி வரும் வசனங்களில் வரலாறும் மனித நேயமும் சரிவர வருகின்றன. வசனங்களுக்குப் பல இடங்களில் கைத்தட்டல் கேட்டது.


படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் சோனியும் எடிட்டர் ரமேஸ்வர் பகத்தும் ஆரம்பம் முதல் கடைசி வரை படத்தின் வேகத்தை கூட்டுகிறார்கள். அவசர கால அறையாகட்டும், கோயம்பேடு சந்தையாகட்டும் தோட்டாதரணி தெரிகிறார்.


படத்தில் பாடல்கள் இல்லாதது படத்திற்கு பலம். படம் முழுக்க நம் இதயத்தை தடதடக்க வைக்கிறது ஸ்ருதிஹாசனின் பின்னனி இசை! பாடல்கள் சுமார் ரகமென்றாலும் இனி வரும் நாட்களில் நன்றாக வரும் என்று நினைக்கிறேன்.

காவல் அதிகாரிகளாக வரும் பரத் ரெட்டியாகட்டும், கணேஷ் வெங்கட்ராமனாகட்டும், மோகன்லாலிடம் "இங்கே சிகரட் குடிக்கலாமா?" என்று குறும்புத்தனமாகக் கேட்கும் அனுஜாவாகட்டும் கொடுத்த வேடத்தில் நன்றாக நடித்துள்ளார்கள். நல்ல கதாபாத்திரத்தைத் தேர்வு செய்து நடித்தால் கணேஷ் வெங்கட்ராமனுக்கு நல்ல எதிர்காலமுண்டு! (ஆக்சன் ஹீரோக்கள் ஜாக்கிரதை!!)


படத்தின் நாயகன் மோகன்லாலைப் பற்றி (நான்கு முறை தேசிய விருது வாங்கியவர்) நான் சொல்ல வேண்டியதில்லை. கமல்ஹாசன் மோகன்லால் இருவருக்கும் பெரும்பாலான காட்சிகள் க்ளோஸ-அப் காட்சிகள் தான். (இப்பல்லாம் யாருடா க்ளோஸ்-அப்ல நடிக்கறாங்கனு எங்கப்பா கேட்டது நினைவிற்கு வருகிறது)

தீவிரவாதிகள் தொடர்பான முடிவுகளை அவ்வளவு இயல்பாக மாராரே எடுப்பது கொஞ்சம் லாஜிக் இடிக்கிறது. லஷ்மியின் கதாபாத்திரமும் ஒப்பனையும் "என்னடா இது"ன்னு கேட்கவைக்கிறது.

தொலைபேசியில் தக்காளி வாங்கிவரச்சொல்லும் கமலின் (முகம் காட்டாத) மனைவியாகட்டும், அவ்வப்பொழுது தொலைபேசியில் உரையாடும் முதல்வராகட்டும் நினைவில் நெஞ்சில் நிற்கிறார்கள்.


அங்கங்கே சில லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் படம் ரசிக்கும்படியாகவே உள்ளது. ஒரு நல்ல படம் பார்த்த நிறைவு கமல் ரசிகனான எனக்கு!!

"பார்முலா சினிமா"க்களின் மத்தியில் உன்னைப்போல் ஒருவன் கம்பீரமாக நிற்கிறான்.
**
விமர்சனம் சரியாக இருந்ததா என்று (படம் பார்த்துவிட்டுக்) கூறுங்கள் :-)

**

சில துளிகள்:
* ராஜ்கமல் இண்டர்நேஷனலின் லோகோ புதிகாக உள்ளது.
* நான் பார்த்த ஷார்ஜா கன்கார்ட் திரையரங்கில் இடைவேளை விடாதது கவனிக்கத்தக்கது.
* உலகநாயகன், லாலேட்டன் போன்ற பட்டங்கள் இல்லாமல் பெயர்கள் வந்தது மகிழ்ச்சியாக இருந்தது.

* படத்தின் வசனகர்த்தா இரா.முருகன் எழுத்தாளர் சுஜாதாவின் இரங்கல் கூட்டத்தில் தான் கமலை சந்தித்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

**

41 comments:

shabi said...

OK அப்ப பாக்கலாம்

வினோத் கெளதம் said...

நல்ல விமர்சனம்..
ஆனால் நீங்கள் Wednesday பார்காதததே பெரிய குறை..பார்த்து இருந்தால் இதே போல் எழுதி இருக்க மாட்டிர்கள்..நசுருதீன் ஷா இடத்தில் கமலை வைத்து பார்கவே முடியவில்லை..என்று சொல்ல ஒரு கூட்டமே தயராக இருக்கு..

நானும் பலமுறை Wednesday பார்த்து விட்டேன்..இருந்தாலும் இப்படத்தை பார்க்க மிக ஆவலாய் உள்ளேன்..

ஈரோடு கதிர் said...

அட அதுக்குள்ள பார்த்திட்டீங்களா

நல்ல விமர்சனம் செந்தில்

geethappriyan said...

அருமை நண்பர் செந்தில் வேலன்,
உங்கள் அருகில் தான் அமர்ந்து படம் பார்த்தேன்.
என்னமாய் கிரகித்திருக்கிறீர்கள்.
ய வெட்னெஸ்டே பார்க்காதது உங்களுக்கு ஒரு ப்ளஸ் பாயிண்ட்.கடைசி வரை சஸ்பென்ஸை தக்க வைத்திருக்கும்.
குஜராத் கலவரத்தில் கருசிதைவு செய்யப்பட்ட இசுலாமியப் பெண்ணை நினைத்து உணர்ச்சிவச்ப்பட்டு
கமல் துப்பாக்கியால் கண்களை துடைப்பார் அருமையான நடிப்பு.
மனிதம் தான் முக்கியம் மதம் அல்ல என்பதை நறுக்கென்று கொட்டி சொன்ன படம்.
தீவிரவாதிக்கு ஆயுத சப்ளை செய்யும் சந்தானபாரதியை ஒரு இந்துவாக சித்தரித்ததும் சமயோஜிதம்.நம் நாட்டில் சிருபான்மையினரை தொடர்ந்து குற்றம் சாட்டும் போக்கை இது மாற்றும்.

நல்ல வேளை இந்த படத்திற்கு ஒரு கேசு தான் போட்டனர்,
தசாவதாரம் போல 40 கேசுகள் போட்டால் என்ன ஆயிருக்கும்?படம் ஒரு வருடம் இழுத்திருக்கும்.

படத்தில் லாலு அட்டன் பங்கு அற்புதம்.
ஒரு தராசில் இருவர் நடிப்பையும் வைத்தால் இரண்டும் சமம் என்று காட்டும்.
அதிரடி போலிஸு ஆசிப்பும் கலக்கியிருந்தார்.

இது போல தரமான இரண்டுமணி நேர படங்கள் நிறைய வரனும்.

Anonymous said...

excellent vimarsanam

Ashok D said...

நல்ல விமர்சனம். நன்றி.

சென்ஷி said...

good review senthil :)

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாங்க ஷாபி. கண்டிப்பா பார்க்கலாம்.

வாங்க வினோத். wednesdayவைப் பார்க்காதது குறையில்லை. கதை தெரியாததால் ரசிக்க முடிந்தது :) நன்றி

vasu balaji said...

நல்ல விமரிசனம்.

ஒப்பாரி said...

//வினோத்கெளதம் said...

நல்ல விமர்சனம்..
ஆனால் நீங்கள் Wednesday பார்காதததே பெரிய குறை..பார்த்து இருந்தால் இதே போல் எழுதி இருக்க மாட்டிர்கள்..நசுருதீன் ஷா இடத்தில் கமலை வைத்து பார்கவே முடியவில்லை..என்று சொல்ல ஒரு கூட்டமே தயராக இருக்கு..//

இனி அந்த கூட்டம் கமலை தவிர வேறு யாரும் இந்த பாத்திரத்தை ஷா அளவிற்க்கு செய்யமுடியாது என்று சொல்லும்.

நானும் பலமுறை Wednesday பார்த்து விட்டேன்..இருந்தாலும் இப்படத்தை பார்க்க மிக ஆவலாய் உள்ளேன்..//
நிச்சயம் பாருங்கள், வசனங்கள் படு ஷார்ப், மோகன்லாலும் அட்டகாசம்.என்னை பொருத்தவரை ஒரிஜனலை சிதைக்காமல் கொடுத்திருக்கின்றனர்.அதற்காகவே நீங்கள் மறுமுறை பார்க்கலாம்.

Prathap Kumar S. said...

good review senthil.
I did not see this film yet, but WEDNESDAY was outstanding.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாங்க கதிர். நன்றி

வாங்க கார்த்திகேயன். நன்றி. மோகன்லாலேப் பற்றி சொல்லவேண்டியதில்லை. கலக்கியிருக்கிறார்.

//குஜராத் கலவரத்தில் கருசிதைவு செய்யப்பட்ட இசுலாமியப் பெண்ணை நினைத்து உணர்ச்சிவச்ப்பட்டு
கமல் துப்பாக்கியால் கண்களை துடைப்பார் அருமையான நடிப்பு//

அந்தக் காட்சியில் கண்கலங்காதவர் இருக்க முடியாது.

குசும்பன் said...

//உரையாடும் முதல்வராகட்டும் நினைவில் நெஞ்சில் நிற்கிறார்கள். //

ய்ப்பா திமுக வெறியர்களே கொஞ்சம் இவரை கவனியுங்க:)))

சூப்பரா எழுதி இருக்கீங்க!

வினோத் கெளதம் said...

//வாங்க வினோத். wednesdayவைப் பார்க்காதது குறையில்லை. கதை தெரியாததால் ரசிக்க முடிந்தது //
செந்தில் நான் உங்களை சொல்லவில்லை ஒருசில பேர் அதே மாதிரி சொல்லுவார்கள் என்று சொன்னேன்..
புரிந்து கொள்விர்கள் என்று நம்புகிறேன்..:))

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

விமர்சனம் அருமை

தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்

Cable சங்கர் said...

நல்ல விமர்சனம்.. ஏன் ஒரு கமல் ரசிகனின் பார்வையில் என்று தலைப்பு..? கமல் ரசிகர்களையும் மீறி இது ஒரு சிறந்த படமல்லவா..?

☀நான் ஆதவன்☀ said...

இன்னைக்கு போறேன் செந்தில் :)

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அனானி அன்பரே வாங்க. நன்றி

வாங்க அசோக். நன்றி

வாங்க சென்ஷி. நன்றி

வாங்க பாலாண்ணா. நன்றி

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாங்க ஒப்பாரி. கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். இது போல வசனங்கள் உள்ள படங்கள் அண்மையில் வந்ததில்லை. நன்றி

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாங்க பிரதாப் நன்றி

வாங்க குசும்பன். முதல்வர் பேசினாலே தியேட்டரில் சிரிப்பொலி தான். அதனால அவருக்கு நம் மனதில் இடமிருக்கத்தானே செய்யும்? ;-)

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வினோத். உங்கள் கருத்து புரிகிறது :-)

வாங்க உலவு.காம்

வாங்க சங்கர். கமல் ரசிகனனாலும் நடுநிலையான விமர்சனங்கள் எழுத முடியும் என்பதற்கே அந்தத் தலைப்பு! கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய படம் தான். நன்றி :)

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாங்க ஆதவன். பாருங்கள் :)

கலையரசன் said...

டிக்கெட் எடுத்து கொடுத்தா நானும் பார்ப்பேன் செந்தில்!
:-))

கோபிநாத் said...

\\நான் பார்த்த ஷார்ஜா கன்கார்ட் திரையரங்கில் இடைவேளை விடாதது கவனிக்கத்தக்கது.\\

அட தல நான் போன போது விட்டாங்க.

\\தொலைபேசியில் தக்காளி வாங்கிவரச்சொல்லும் கமலின் (முகம் காட்டாத) மனைவியாகட்டும்\\\

அந்த குரல் நடிகை கவுதமி... அந்த மிரட்டும் போலீஸ் யாரு தெரியுதா...பையன் அபியும் நானும் படத்தில் வரும் பஞ்சாபி ;)

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாங்க கலை. அட.. டிக்கட் கிடைக்காத அளவிற்குக் கூட்டமா துபாய்ல?

வாங்க கோபி. கணேஷ் கலக்கியிருக்கிறார். நல்ல உடல்வாகு!

Anonymous said...

The Wednesday full copy, any way enjoy

All tamil movie copied from hindi and engligh....

பிரபாகர் said...

செந்தில் நல்லதொரு விமர்சனம் உங்களிடமிருந்து... நன்றி செந்தில். கேபிள்ண்ணா, நீங்களெல்லாம் சொல்லும்போது மனதிற்கு இதமாய் உணர்கிறேன்...

thiyaa said...

நல்ல விமர்சனம் நானும் பார்த்துவிட்டு சொல்லுறன்

ஜோ/Joe said...

நல்ல விமர்சனம் .நாளை பார்த்து விட்டு வருகிறேன்.

வந்தியத்தேவன் said...

படம் கலக்கல். கதை தழுவல் என்றாலும் கமலின் திரைக்கதையும் குறிப்பாக இரா,முருகனின் வசனங்களில் தெரியும் கூர்மையும் புதுசுதான். குலைக்கிற நாய்கள் குலைத்துவிட்டுப்போகட்டும், பொன்விழா நாயகன் கலக்கித்தான் இருக்கின்றார்.

Anonymous said...

கமலின் திறமை வெற்றி பெறட்டும்

-ரஜினி ரசிகன்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாங்க அனானி அன்பரே. கருத்திற்கு நன்றி

வாங்க பிரபாகர் நன்றி. கண்டிப்பாக பாருங்கள்

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாங்க தியாவின் பேனா. நன்றி

வாங்க ஜோ. நன்றி

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாங்க வந்தியதேவன். படம் கலக்கல் தான். இரா. முருகன் கலக்கியிருக்கிறார். பகிர்விற்கு நன்றி

வாங்க ரஜினி ரசிகரே. அருமை எண்ணம். நன்றி

உங்கள் தோழி கிருத்திகா said...

நல்ல விமர்சனம்...
கண்டிப்பா படம் பாக்கணும் ...

Unknown said...

First things first. But for Kamal, we would not have something like UPO in Tamil films. But, nothing much "common man"ly about it. கமல் ஒரு plain clothes commando-வாக தெரிகிறாரே தவிர common man -ஆக தெரியவில்லை. வழக்கம் போல், 'குரு'-வில் வரும் 'ரெட் ரோஸ்' தொடங்கி, கமல் தன் ஆங்கில புலமையை நிலை நாட்டுவது சற்று நெருடலாகவே உள்ளது. (குறிப்பாக இப்போது accent சற்று தூக்கலாகவே உள்ளது - ஸ்ருதிக்கு நன்றி). முக்கியமாக மோகன் லால் சேதுவுக்கு தமிழ் கற்று கொடுக்கும் காட்சிக்கு பின்னும் கமல் peter விடுவது over!! அட ராகவா!!இன்னும் கொஞ்சம் தமிழில் பேசியிருந்தால் இன்னும் பல கருத்துக்கள் தமிழகத்தில் எங்கோ இருக்கும் "உன்னை போல் ஒருவனுக்கும்" சென்றடைய சுலபமாக இருந்திருக்கும்.

படத்தின் தொடக்கத்தில் மோகன் லாலின் மல்லு-தமிழ் குறையாக தெரிந்தாலும் முடிவில் ராகவன் மாரர் மனது முழுதும் நிறைகிறார். மோகன் லாலின் 'மிக' இயல்பான presence -இன் முன், கமல் உள்பட மற்ற பாத்திரங்களின் இறுக்கமான "நடிப்பு" நம்மை இன்னும் அதிகமாய் உறுத்துகிறது. அதிலும், சேது ரொம்ப ஓவர் போலீசா இருக்கார்!


இறுதியாக, திருவிளையாடல் நக்கீரன் style -ல, எங்கள் கமல் நல்ல படம் எடுக்கிறார் என்றால் அதற்காக சந்தோசப்படும் ஒருவன் நான். intha dialogue-ae pothum! ;)

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாங்க கிருத்திகா. நன்றி

SK,

உண்மை! கமல் மட்டுமே இது போல படங்களை எடுக்க முடியும். கமலின் வசனங்களில் ஆங்கிலத்தைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

மோகன்லால். இந்தப் படத்தின் நாயகனே இவர் தானே. இந்த விமர்சனத்தில் கூட குறிப்பிட்டுள்ளேன். அசத்தியிருக்கிறார்.

SKக்கு யாரப்பிடிக்கும்னு எனக்குத் தெரியாதா ;) நன்றி

Jazeela said...

விமர்சனமாகட்டும், கமலாகட்டும், மோகன்லாலாகட்டும் - எத்தனை ’ஆகட்டும்’ செந்தில்? :-)
படம் பார்த்தேன். என் விமர்சனமும் வரும் விரைவில்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாங்க ஜெஸிலா. உங்கள் விமர்சனத்தை எதிர்பார்க்கிறேன். நன்றி!

ஊர்சுற்றி said...

உங்கள் விமர்சனம் படித்தேன்.
நானும் இப்போ 'காமன் பிளாக்கர்' ஆகிட்டேன். :)

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

வெட்னஸ்டையைப் பாருங்கள்..

பின்னர் கமல் ரசிகர் என்ற மனநிலையில் இருந்து வெளிவந்து இந்தப் படத்தைப் பாருங்கள்...

இன்னொரு விமர்சனம் எழுதுவீர்கள்.

Related Posts with Thumbnails