நேற்று தூர்தர்ஷன் தனது 50வது பிறந்த நாளைக் கொண்டாடியது. 1959ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி மத்திய அரசால் ஆரம்பிக்கப்பட்டது தூர்தர்ஷன் நிறுவனம். தூர்தர்ஷனை ஆரம்பிக்க ஐநாவின் யுனெஸ்கோ அமைப்பு மானியமாக வழங்கியது 20000 அமெரிக்க டாலர்கள். ஆரம்பத்தில் ஆல் இந்தியா ரேடியோ இடத்தையும் செய்திகளையும் கொடுத்தது.
ஆரம்பத்தில் தில்லியில் மட்டும் சேவையை வழங்கிய தூர்தர்ஷன் பிறகு 1972ல் மும்பை, அம்ரிட்சர் பிறகு மெதுவாக பெருநகரங்களுக்கு வர ஆரம்பித்தது. தூர்தர்ஷன் நாடெங்கும் சேவையை விரிவாக்கியது 1982ல் தான். அதாவது 23 ஆண்டுகள் சிறிய அளவிலேயே இருந்தது என்றால் நம்பவா முடிகிறது?
தூர்தர்ஷன் என்றவுடன் நமக்கு நினைவிற்கு வருவது ஆரம்பிக்கும் பொழுது வரும் இசை தான்.
என்னதான் இன்று நூற்றுக்கணக்காக சேனல்கள் வந்துவிட்டாலும் ஆயிரக்கணக்காலும் நிகழ்ச்சிகள் பார்த்துவிட்டாலும் நம் இளவயதில் தூர்தர்ஷனில் பார்த்த நிகழ்ச்சிகளுக்கு மனதில் நீங்கா இடமிருக்கத்தான் செய்கிறது.
ஞாயிற்றுக்கிழமை போடப்படும் ரங்கோலி பாடல்கள், பிறகு ஹீமான், ஜங்கிள் புக்ஸ், ராமாயணம், விண்வெளி ஆராய்ச்சி நிகழ்ச்சி, மதியம் ஒரு மணிக்கு வரும் காது கேளாதோர் நிகழ்ச்சி, மாலையில் ஸ்பைடர் மேன் பிறகு ஏதாவதொரு படம். சில வருடங்கள் மதியம் 12 மணியளவில் வந்த சார்லி சாப்ளின், லாரெல் ஹார்டி... எல்லாம் அழகான நினைவுகள்!!
சனிக்கிழமை இரவுகள் என்றால் ஸ்றீட் ஹாக் (STREET HAWK), நைட் ரெடர் (KNIGHT RIDER ), சில வருடங்கள் கழித்து வொர்ல்ட் திஸ் வீக்!! புதன் கிழமைகளில் சித்ரஹார், வெள்ளிக்கிழமைகளில் ஒலியும் ஒளியும் என இப்பொழுது நினைத்தாலும் இனிமையாக இருக்கிறது.
நான் ரசித்த பல நல்ல கிரிக்கெட் தொடர்கள் தூர்தர்ஷனில் பார்த்தவை தான். 1992 உலகக்கோப்பைப் கிரிக்கட், பல ஷார்ஜா போட்டிகள், 1993ல் நடைபெற்ற ஹீரோ கோப்பை என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
எனக்கு மிகவும் பிடித்த பாடல் என்றால் மிலே சுர் மேரா தும்ஹாரா தான், அதன் அர்த்தம் புரியாவிட்டாலும்!! பல கலைஞர்களும், பல மா நில கலாச்சாரச் சின்னங்களையும் இடங்களையும், பல நடிகர்களையும் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியானது. அதுவும் பாலமுரளிகிருஷ்ணா தமிழில் பாடும்பொழுது ஒரு மகிழ்ச்சி வரும் பாருங்கள்!!
என்னதான் அங்கங்கே தடங்கலுக்கு வருந்துகிறோம் என்று முக்கிய நிகழ்ச்சிகளின் ஒளிபரப்பில் சொதப்பினாலும், முக்கிய கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பாமல் கடுப்பேற்றினாலும் நம் சிறு வயது நினைவில் தூர்தர்ஷனுக்கு ஒரு இடம் இருக்கத்தான் செய்கிறது.
தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் வர ஆரம்பித்த கடந்த 15 ஆண்டுகளில் காணாமல் போன நிறுவனங்கள் எத்தனை?
தற்போது தூர்தர்ஷனைப் பார்ப்பவர்கள் எண்ணிக்கை குறைய பொருளாதாரச் சிக்கல்கள், அரசியல் தலையீடு, தொழில்நுட்ப வளர்ச்சியில் தனியாருடன் போட்டியிட முடியாதது என்று பல காரணங்களைக் கூறினாலும் தூர்தர்ஷனுக்கு நன்றி கூற நாம் கடமைப்பட்டுள்ளோம்.
வாருங்கள்!! ஐம்பது ஆண்டுகளைக் கடந்திருக்கும் தூர்தர்ஷனை வாழ்த்துவோம்.
..
15 comments:
Very good posting, Senthil...
அருமையான நினைவு கூறல். எம்.ஜி.ஆர், சிவாஜி படம் போட்டா டி.வி இருக்கிறவங்க வீடு தியேட்டர் ஆயிடும். துண்டு கடுதாசில டிக்கட்டு. ஒசிபிசா வந்தப்ப பக்கத்தூட்டுல கெஞ்சி கெஞ்சி ரெண்டு பாட்டு போட்டாங்க.
அடேங்கப்பா ஐம்பது ஆச்சா
செந்தில்,
உண்மையில் தூர்தர்ஷனை மட்டுமே பார்த்து வந்த காலம் தான் சொர்க்கம் என்பேன்...
ஒளியும் ஒலியும் பார்ப்பதற்காக ஏங்கியது, மாநில மொழி திரைப்படத்தில் எல்லா மொழி திரைப்படங்களையும் பார்த்தது, சித்ரகார், ஜுனூன் என சொல்லிக்கொண்டே போகலாம்...
அசத்தலாய் நினைவுகூர்ந்திருக்கிறீர்கள் செந்தில், வழக்கம்போல்...
பிரபாகர்.
தூர்தர்சன் பற்றிய நல்ல பதிவு
//மிலே சுர் மேரா தும்ஹாரா // எனக்கும் எனக்கும். அப்புறம் ‘ஆணா பொண்ணா பொறந்ததுன்னு’ அந்த பாடலும் பிடிக்கும். ஒளியும் ஒலியும், சித்ரஹார் இதெல்லாம் கூட பிடிக்கும். தூர்தர்ஷனுக்கு வாழ்த்துகள்
என் பின்னூட்டத்தில் ஏதோ தவறு போல் இருக்கு...
இதுதான் நான் போட்ட பின்னூட்டம்
//எங்கள் ஊரில் அப்போது ஒரு டிவிதான் இருந்தது. ஞாயிற்றுக்கிழமை படம் பார்க்க, இடம் பிடிப்பதே பெரிய சாதனையாக இருக்கும்..
காலப்போக்கில் தூர்தர்சனும் ஒரு பொக்கிசம் போல் வெறும் நினைவாகவே போய்விடும் போலிருக்கு
நல்ல இடுகை செந்தில்//
பழைய நினைவுகளை தூண்டும் அருமையான இடுகை மச்சி... நான் ஹீமேன் ரசிகன், அந்தகாலத்தில்!!
வாங்க விஜய் ஆனந்த். நன்றி.
வாங்க பாலாண்ணே. எனக்கும் பக்கத்து வீட்டில் தூர்தர்ஷன் பார்த்த அனுபவமுள்ளது :)
வாங்க தியாவின் பேனா. நன்றி
வாங்க பிரபாகர். உண்மை தாங்க. ஒரு தொலைக்காட்சி மட்டும் இருந்தப்ப நிம்மதியா மற்ற வேலைகளைச் செய்ய நேரமிருந்தது. இப்ப?
வாங்க கிரி. நன்றி
வாங்க ஜெஸிலாக்கா. நான் துபாய் மெட்ரோவைப் பற்றியெல்லாம் எதுவும் சொல்லலியே :) நன்றி
வாங்க கதிர். உண்மை தாங்க. இன்னும் கொஞ்ச நாள்ல தூர்தர்ஷன்னு ஒன்னு இருந்ததுனு தான் சொல்லனும் போல! நன்றி
வாங்க கலை. நானும் ஹீமேன் ரசிகன் தான். நன்றி
அருமை நண்பர் செந்தில்வேலன்,
அப்பா என்ன ஒரு மலரும் நினைவுகள்?
அம்லு,விக்ரம் தொடர்,சனிக்கிழமை ஹிந்தி படங்கள்,திங்கள் கிழமை போடும் சித்ரமாலா,இன்விசிபிள் மேன்,ஹீமேன்,ரஜினி,ஞாயிறு தமிழ் படம்,ராமாயணம்,மஹாபாரதம்,8-40 செய்தி,7-30 செய்தி சுருக்கம்,
மென் அண்டு மெட்டர்ஸ்,கண்மணிப் பூங்கா,எதிரொலி,மலரும் நினைவுகள்,வொண்டர் பலூன், உலா வரும் ஒலிக்கதிர்,வயலும் வாழ்வும், மனை மாட்ச்செவ்வாய் அன்று போடப்படும் இண்டோர் நாடகம் என எதையும் நான் விட்டதில்லை.
நல்ல பதிவு
வாங்க கார்த்திகேயன். நீங்க குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் எல்லாமே நினைவில் உள்ளது. அருமை :)
Post a Comment