Thursday, June 17, 2010

செல்லமே - 1



ன்,
உடல்நலம் வேண்டித் தடுப்பூசியிட
வலியில் நீ கதற
என் உள்ளமும் கதற
உணரத் துவங்கினேனடா
தந்தையானதை..


மேலும் உணர்கிறேனடா
உன்
தாத்தாவின் உணர்வுகளை!!

*

ன்னை,
என் தொடையில் நிற்க வைக்க
முதல் அடி வயிற்றில் வைத்து
அடுத்த அடியை நெஞ்சில் வைத்து
மறு அடியைத் தோளில் வைத்துச்
சிரிக்கும் சிரிப்பில்
என்னை மறந்தேனடா!!

*

ன்னைப் பார்த்த,

தாய்மாமன் சொன்னார்
உனக்கு
மாப்பிள்ளை போல தாடையென்று

அத்தை சொன்னார்
உனக்கு
அண்ணன் போல முகமென்று

அம்மையா சொன்னார்
உனக்கு
மருமகன் போல நெற்றியென்று

தாத்தா சொன்னார்
உனக்கு
மகனைப் போல கைகால்களென்று

உன்னைப் போல ஏதுமில்லையா
என்று கேட்ட தோழியிடம்..

அம்மா சொன்னார்
அவரையே நினைத்திருந்த எனக்கு
அவரைப் போலவே வந்திருக்கிறானென்று!!

*

14 comments:

VELU.G said...

நல்லாயிருக்குங்க வாழ்த்துக்கள்

மாதேவி said...

இறுதியில் கலக்கிட்டீங்க :)

க.பாலாசி said...

கவினுக்காக எழுதப்பட்டவை.. பாச உணர்வுகளை வெளிப்படுத்திய விதம் அழகு. நெஞ்சின்மேல் பிஞ்சிக்கால் விரல்கள் படும்பொழுது ஒரு சிலிர்ப்பு உடலிலும் மனதிலும் உண்டாகும் அங்கேயும் உணரலாம்...தாங்கள் தந்தையானதை... மீண்டும் வாழ்த்துக்கள்...

vasu balaji said...

'கொஞ்சும்’ கவிதை:)

வினோத் கெளதம் said...

ஒவ்வொரு வார்த்தையும் அழகு செந்தில்..

அப்துல்மாலிக் said...

எனக்கு எழுதப்பட்டதாகவே தோன்றுகிறது. அப்படியே உண்மை

குழந்தை மென்மேலும் உடல்நலத்தோட வாழ வாழ்த்துக்கள்

geethappriyan said...

அடடா,அருமைங்க,இப்புடி அடிக்கடி,அன்பை வெளிப்படுத்துங்க

அன்புடன் அருணா said...

நல்லாயிருக்குங்க வாழ்த்துக்கள்!

க ரா said...

அருமைங்க.

ஹேமா said...

பாசம் கொட்டிக் கிடக்கு.திரும்பவும் குழந்தையாக ஆசை வருது.

Chitra said...

உன்னைப் போல ஏதுமில்லையா
என்று கேட்ட தோழியிடம்..

அம்மா சொன்னார்
அவரையே நினைத்திருந்த எனக்கு
அவரைப் போலவே வந்திருக்கிறானென்று!!

..... so sweet! :-)

நிலாமதி said...

கவிதை அருமை ...மழலைக்கு ஈடு இணையேது. அனுபவிப்பவர்களுக்கு தான் புரியும். வாழ்த்துக்கள்.

ஈரோடு கதிர் said...

அடடா...
அடடா...

சுகமாய், அழகாய், உணர்வாய்

மிகவும் ரசித்தேன் செந்தில்

அன்புடன் நான் said...

உணர்வு மிக யதார்த்தம். சொற்கள் சலங்கை கட்டி நடக்கிறது.
மிக ரசித்தேன்.
பாராட்டுக்கள்.

Related Posts with Thumbnails