நட்சத்திரங்கள் சிரிக்கும்
நடுநிசி நேரம்
அமைதியை நாடும் மனம்
ஆழ்ந்த உறக்கத்தில்
முகத்தை வருடின
பிஞ்சு விரல்கள்.
இது கனவா?
இல்லை நினைவா?
விழித்துப் பார்த்தான்.
அழகாய் சிரித்தன
இரு நட்சத்திரங்கள்!!
*
குறும்பாய் சிரிக்கும் டொனால்டு டக்கும்
குறுகுறுவெனப் பார்க்கும் மிக்கி மவுசும்
தரையில் ஊரும் ரயில் வண்டியும்
காற்றில் அசையும் திரைச் சீலையும்
உயிரற்ற பூனையும் குரங்கும்
உயிருள்ள தாகிறதே
கண்ணே,
நீ அவற்றுடன் பேசும் பொழுது!!
*
நீரிலிருந்து மேலெழும் மீன்கள்
காற்றில் குதிக்கும் மான்கள்
இலையில் வடியும் பனித்துளி
நிலத்தில் பட்டுத் தெறிக்கும் நீர்த்துளியென
இயற்கை அதிசயங்களை
நிழற்பட மெடுக்க முடியும்.
படமாக்க முடியாதது
கண்ணே, உன்
சிணுங்கலாய் மாறும் சிரிப்பும்
சிரிப்பாய் மாறும் சிணுங்கலும் தான்!!
*
13 comments:
ஆகா.... அனுபவிக்கும் தருணம் இது... தவறாமல் அனுபவியுங்கள்!!!
மென்மையான அழகியல் கவிதை பாராட்டுக்கள்.
அற்புதமான வரிகள் செந்தில் குழந்தைகளின் மென்மையை விவரித்திருப்பதில்!!!
உள்ளம் தொட்ட கவிதை. விலை கொடுத்து பெறமுடியாத இன்பம் மழலையின் சிரிப்பு. கிடைக்கும்போது
அனுபவித்துக் கொள்ளுங்கள். நன்றி . கொடுத்துவைத்தவர் நீங்கள். .
செல்லமாய் கொஞ்சும் கவிதை வரிகள்...... :-)
அடடா.. அனுபவிச்சு எழுதியிருக்கீங்க செந்தில்
||அழகாய் சிரித்தன
இரு நட்சத்திரங்கள்!!||
வாவ்.. வெகு அழகு
பிஞ்சு முகம் போலவே பிஞ்சுக் கையும் அழகோ அழகு. அழகுப் படங்கள். அருமை உணர்வுகள் கவிதையாய்.
//கண்ணே, உன்
சிணுங்கலாய் மாறும் சிரிப்பும்
சிரிப்பாய் மாறும் சிணுங்கலும் தான்!!
நிதர்சன வரிகள்.....செந்தில்
ரசனையான குழந்தையாய் உங்கள் கவிதை..
உணர்வை பெருமையாய் கவிதையில் . அருமை
உணர்வுப்பூர்வமான கவிதை செந்தில்... கவிஞர் செந்திலுக்கு வாழ்த்துக்கள்...
பிரபாகர்...
செந்தீ.. அண்ணா
அந்த பிஞ்சுக் கையினால் வருடப் பட்டது போல இருக்கிறது.
அருமையான கவிதை வரிகள் !...
என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள்
உரவினர்களுக்கும் உரித்தாகட்டும் .மிக்க நன்றி பகிர்வுக்கு ....
Post a Comment