சில வருடங்களுக்கு முன் வந்த "என்ன அழகு, எத்தனை அழகு.." என்ற (நடிகர் விஜய் நடித்த) பாடல் அனைவருக்கும் நினைவிருக்கும் என்று நினைக்கிறேன்.
இதில் "எத்தனை" அழகு என்று வரி சரியானதா? பல (எத்தனை) விதமான அழகை வர்ணிக்கிறார் என்றால் பரவாயில்லை. அதுவே, அழகை ("எத்தனை" என்று) அளக்கிறார் என்றால் தவறு தானே!!
நம் மளிகைக்கடைக்கு, தேங்காய் கேட்டு ஒரு வாடிக்கையாளர் வருகிறார். அவரிடம், எத்தனை தேங்காய் வேண்டும் என்று கேட்போமா? அல்லது எவ்வளவு தேங்காய் வேண்டும் என்று கேட்போமா?
எனக்கும் இது போன்ற சந்தேகங்கள் அடிக்கடி வரத்தான் செய்கிறது. இதனை பள்ளிப் பருவத்திலேயே படித்திருந்தாலும், மற்றுமொரு முறை தெரிந்து கொள்வது நல்லது தானே! நான் படித்ததை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
*************
எத்தனை - எண்ணிக்கை
எவ்வளவு - அளவுகோல்
சோறு தின்னறதா? உண்பதா?
அருந்துதல் - மிகச் சிறிய அளவில் உட்கொள்ளுதல் (மருந்து அருந்துதல்)
உண்ணல் - பசி தீர உட்கொள்ளல்
உறிஞ்சுதல் - வாயை குவித்து நீரியற் பண்டங்களை இழுத்துக் கொள்ளுதல்
குடித்தல் - சிறிது சிறிதாக பசி தீர உட்கொள்ளல். ஆக மது அருந்தினான் என்பதே சரியானது!
தின்னல் - சுவைக்காக ஓரளவு தின்னுதல் ( முறுக்கு)
வான் நோக்கி
தூவானம் - காற்றினால் சிதறப்படும் மழைத் திவலை
தூரல், சாரல் - சிறுதுளி மழை
மழை - பெருந்துளியாகப் பெய்வது
எப்படீங்க சொல்றீங்க?
சொல்லுதல் - சுருக்கமாகச் சொல்லுதல்
பேசுதல் - நெடுநேரம் உரையாடுதல்
கூறுதல் - கூறுபடுத்திச் சொல்லுதல்
சாற்றுதல் - பலரறியச் சொல்லுதல்
கொஞ்சுதல் - செல்லமாகச் சொல்லுதல்
பிதற்றுதல் - பித்தனைப் போல சொல்லுதல்
ஓதுதல் - காதில் மெல்லச் சொல்லுதல்
செப்புதல் - விடை சொல்லுதல்
மொழிதல் - திருத்தமாகச் சொல்லுதல்
இயம்புதல் - இனிமையாகச் சொல்லுதல்
வற்புறுத்தல் - அழுத்தமாகச் சொல்லுதல்
எங்கே கொண்டாடறீங்க?
பண்டிகை - வீட்டில் கொண்டாடப்படுவது
விழா - வெளியிடத்தில் கொண்டாடப்படுவது
***********
குழு - சிறு கூட்டம்
கூட்டம் - பலர் முறையாகக் கூடியிருப்பது
கும்பல் - முறையின்றைக் கூடுவது
கூட்டம் - பலர் முறையாகக் கூடியிருப்பது
கும்பல் - முறையின்றைக் கூடுவது
**********
பசுப் பால் - பசுவினது பால்
பசும் பால் - பசுமையான பால்
பசும் பால் - பசுமையான பால்
***********
இதற்கு முந்தய பதிவுகளில் நமது புழக்கத்தில் உள்ள வடசொற்களைப் பார்த்தோம். இதில் பிற நாட்டு சொற்களையும் பார்ப்போம்.
அலமாரி, ஜன்னல் ( காற்று வழி ), சாவி ( திறவுகோல்) போன்றவை போர்த்துகீசிய சொற்கள்..
அரபிய, பாரசீக, பிற சொற்களும் அதற்கு நிகரான் தமிழ்ச்சொற்களும்
அந்தஸ்து - நிலைமை
அலாதி - தனி
ஆஜர் - வருகை
இஸ்திரிப் பெட்டி - துணி மடிப்புக் கருவி
இனாம் - நன் கொடை
கறார்விலை - ஒரே விலை
கஜானா - கருவூலம்
கம்மி - குறைவு
காலி - நிரப்பப்படாமல் உள்ள நிலை
காலிப்பயல் - போக்கிரி
கிஸ்தி - வரி
கைதி - சிறையாளி
சரகம் - எல்லை ( சரகம் என்ற வார்த்தை வனச்'சரகம்' என்பதில் வருவதுண்டு)
சர்க்கார் - அரசாங்கம்
சந்தா - கட்டணம்
சவால் - அறைகூவல்
சாமான் - பண்டம்
சிபாரிசு - பரிந்துரை
சிப்பந்தி - வேலையாள்
சுமார் - ஏறக்குறைய
ஜமீன் - நிலம்
ஜமீன்தார் - நிலக்கிழார்
ஜாஸ்தி - மிகுதி
ஜோடி - இணை
அலாதி - தனி
ஆஜர் - வருகை
இஸ்திரிப் பெட்டி - துணி மடிப்புக் கருவி
இனாம் - நன் கொடை
கறார்விலை - ஒரே விலை
கஜானா - கருவூலம்
கம்மி - குறைவு
காலி - நிரப்பப்படாமல் உள்ள நிலை
காலிப்பயல் - போக்கிரி
கிஸ்தி - வரி
கைதி - சிறையாளி
சரகம் - எல்லை ( சரகம் என்ற வார்த்தை வனச்'சரகம்' என்பதில் வருவதுண்டு)
சர்க்கார் - அரசாங்கம்
சந்தா - கட்டணம்
சவால் - அறைகூவல்
சாமான் - பண்டம்
சிபாரிசு - பரிந்துரை
சிப்பந்தி - வேலையாள்
சுமார் - ஏறக்குறைய
ஜமீன் - நிலம்
ஜமீன்தார் - நிலக்கிழார்
ஜாஸ்தி - மிகுதி
ஜோடி - இணை
தயார், அசல், பாக்கி போன்றவற்றுள் நல்ல தமிழ்ச்சொல் எது?
300 ரூபாயை எப்படி குறிப்பிடுவீர்கள்? முன்னூறு என்றா? முந்நூறு என்றா?
அடுத்த பதிவில்...
உங்களுக்கு இந்தப் பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களியுங்கள்!!
17 comments:
அருமை.செந்தில்,.. பள்ளியில் தமிழ் வகுப்பு கேட்க சுவாரஸ்யமாக (மன்னிக்கவும் மிக பொறுத்தமான தமிழ் வார்த்தை தெரியவில்லை, அடுத்த பதிவில் முடிந்தால் சொல்லுங்கள்) இருக்கும். உங்களின் இந்த தொடர் பதிவுகளும் அப்படியே,..
//
jothi said...
அருமை.செந்தில்,.. பள்ளியில் தமிழ் வகுப்பு கேட்க சுவாரஸ்யமாக (மன்னிக்கவும் மிக பொறுத்தமான தமிழ் வார்த்தை தெரியவில்லை, அடுத்த பதிவில் முடிந்தால் சொல்லுங்கள்) இருக்கும். உங்களின் இந்த தொடர் பதிவுகளும் அப்படியே,..
//
நன்றி நண்பரே!! உங்களுடைய ஊக்குவிப்பிற்கு நன்றி!!
தமிழை பற்றிய அருமையான பதிவு.
படித்ததில் நல்ல மகிழ்வு நண்பா...
மறுபடியும் சில வார்தைகளை தெரிந்துகொன்டேன், நன்றி!!
தினமும் ஒரு பதிவா?
எப்படிதான் முடியுதோ...
ஹூம்.. அடிச்சு ஆடுங்க!!
//
ஆ.ஞானசேகரன் said...
தமிழை பற்றிய அருமையான பதிவு.
படித்ததில் நல்ல மகிழ்வு நண்பா...
//
உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டத்தில் எனக்கும் மகிழ்ச்சியே
//
கலையரசன் said...
மறுபடியும் சில வார்தைகளை தெரிந்துகொன்டேன், நன்றி!!
தினமும் ஒரு பதிவா?
எப்படிதான் முடியுதோ...
ஹூம்.. அடிச்சு ஆடுங்க!!
//
வாங்க கலை.. நேரம் கிடைக்கற போது எழுதறது தான்..
ரொம்ப அருமையான பதிவு!
thank you so much dear
கலக்குங்க..
சில வார்த்தைகளை தெரிந்துக்கொள்ள முடிகிறது உங்களின் இடுகையால்..
அருமையான பதிவு, நிறைவான விளக்கங்கள்.. மிக்க நன்றி நண்பரே..
project, deadline, defect போன்ற ஐடி பதங்களுக்கு தமிழ் கலைச் சொற்களை கூறுங்களேன்
//
ஆகாய நதி said...
ரொம்ப அருமையான பதிவு!
//
வருகைக்கும் ஊக்குவிப்பிற்கும் நன்றி
//
தமிழ்நெஞ்சம் said...
thank you so much dear
//
//
வினோத்கெளதம் said...
கலக்குங்க..
சில வார்த்தைகளை தெரிந்துக்கொள்ள முடிகிறது உங்களின் இடுகையால்..
//
உங்கள் ஆதரவிற்கு நன்றி
//
பழூர் கார்த்தி said...
அருமையான பதிவு, நிறைவான விளக்கங்கள்.. மிக்க நன்றி நண்பரே..
//
வருகைக்கு நன்றி கார்த்தி!
//
project, deadline, defect போன்ற ஐடி பதங்களுக்கு தமிழ் கலைச் சொற்களை கூறுங்களேன்
//
முறையே திட்டம், திட்டக்கெடு, பழுது என்று தமிழில் எழுதலாமே!!
பொறுமையாக வாசித்து விட்டு கருத்திடலாமென்றிருந்தேன். அருமையாய் அருஞ்சொற்பொருள் அளிக்கிறீர்கள், தொடருங்கள்.. இயன்றவரை உமக்குத் தமிழிலேயே கருத்திட முயல்கிறேன்
//காலி - நிரப்பப்படாமல் உள்ள நிலை//
வெற்றிடம்
//இதில் "எத்தனை" அழகு என்று வரி சரியானதா? பல (எத்தனை) விதமான அழகை வர்ணிக்கிறார் என்றால் பரவாயில்லை. அதுவே, அழகை ("எத்தனை" என்று) அளக்கிறார் என்றால் தவறு தானே!!//
விதம் என்பதற்குப் பதில் வகை என்று எழுதுவதே தமிழ்ச் சொல் என்று நினைக்கிறேன்
//
கோவி.கண்ணன் said...
//இதில் "எத்தனை" அழகு என்று வரி சரியானதா? பல (எத்தனை) விதமான அழகை வர்ணிக்கிறார் என்றால் பரவாயில்லை. அதுவே, அழகை ("எத்தனை" என்று) அளக்கிறார் என்றால் தவறு தானே!!//
விதம் என்பதற்குப் பதில் வகை என்று எழுதுவதே தமிழ்ச் சொல் என்று நினைக்கிறேன்
//
கோவி.கண்ணன் அவர்களே.. தங்கள் விளக்கம் மிக அருமை..நன்றி!
Post a Comment