Saturday, August 29, 2009

21ம் நூற்றாண்டின் ஹாலோகாஸ்ட்.

HOLOCAUST என்றோரு வார்த்தையை நீங்கள் கேட்டிருப்பீர்கள்.


இரண்டாம் உலகப்போரின் போது யூதர்களுக்கு எதிராக ஹிட்லர் கட்டவிழ்த்துவிட்ட கோரத்தாண்டவத்தின் பெயர் தான் ஹாலோகாஸ்ட். இதைத் தமிழில் கூறவேண்டும் என்றால் பெரும் இனஅழிப்பு!!. இது ஏதோ அறுபது சொச்ச ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றதென்று நினைக்கவேண்டாம். இன்றும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
எங்கே நடக்கிறது, யார் நடத்துகிறார்கள் என்று சொல்லத் தேவையில்லை.

சிண்ட்லர்ஸ் லிஸ்ட், பியானிஸ்ட் போன்ற படங்களைப் பார்க்கும் பொழுது ஹாலோகாஸ்ட் என்றால் என்னவென்று புரியும்.

ஆனால், அப்பொழுது ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச நீதிமன்றம் எல்லாம் கிடையாது. ஆனால் இன்றோ எல்லாமே உள்ளன.. ஆனால் ஏன் எவருடைய காதுகளுக்கும் எட்டவில்லை?

அவர்கள் சொல்கிறார்கள், "பக்கத்தில் உள்ளவர்களுக்கே காது கேட்காத போது எங்களுக்கு எப்படிக் கேட்கும்?" என்று. யார் பக்கத்தில் உள்ளவர்கள்?

காது கேளாதவர்களுக்காக ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார்கள் மனிதாபிமானமுள்ள பத்திரிக்கையாளர்கள்..

தங்கமணிபிரபுவின் பதிவிலுள்ள காணொளியைப் பாருங்கள்.

காணொளியில் உயிரற்றுக்கிடப்பவர்களும் மனிதர்கள் தான்? உயிரெடுத்தவர்கள்?

"நாம் என்ன செய்ய முடியும்" என்று கூறாமல் உங்கள் நண்பர்களுக்கும் இதை அனுப்புங்கள். தெரிந்துகொள்ளட்டம் நவீன ஹாலோகாஸ்ட் என்றால் என்னவென்று.

பின்னூட்டமிடும் நேரத்தில் இந்தப் பதிவையோ தங்கமணிபிரபுவின் பதிவையோ நீங்கள் உங்கள் நண்பருக்கு அனுப்பிவிடலாம்..

11 comments:

ஈரோடு கதிர் said...

நன்றி செந்தில்....

இந்த இடுகை மௌனமாய் இருக்கும் மக்கள் மனதை தட்டும்

கரவைக்குரல் said...

இவை போல எவ்வளவோ விடயங்கள் நடந்திருந்தாலும் எந்த ஒரு நாடும் கண்டுகொள்ளாமல் இருப்பதுதான் கவலையளிகிறது

ம்ம் பதிவுக்கு நன்றி

Anonymous said...

skletans show the atrocities,aggressive,revange,headwaight

க.பாலாசி said...

ஒவ்வொருவரின் நெஞ்சிலும் அரையும் இந்த படுபாதக செயல்கள்...வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலையில் நாமும்...

நானும் என் நண்பர்கள் மற்றும் தோழர்களுக்காக பதிவிட்டுள்ளேன்...

geethappriyan said...

அருமை நண்பர் செந்தில் வேலன்,
நானும் போய் பார்த்தேன்.
நாம் ஒட்டு போட்டு தேர்ந்தெடுத்த ஆட்சியின் கையாலாகாத்தனம் பற்றி உரைக்க இதை விட உதாரணம் வேண்டுமா?
இன்னும் நடந்து கொண்டு தானே இருக்கிறது.
நாம் எல்லாம் எவ்வளவு பாதுகாப்பாய் இருக்கிறோம்.
அழுவதை தவிர என்ன செய்ய முடியும் கையாலாகாத நம்மால்?
இது குறித்த கானொளி படத்திற்கு என் தளத்தில் இருந்து இனைப்பு தண்ட்துள்ளேன்.

ப்ரியமுடன் வசந்த் said...

:(
:(

கலையரசன் said...

வருந்ததக்க விஷயம்தான் செந்தில்...
வார்த்தைகள் வரவில்லை!

thiyaa said...

வித்தியாசமான பதிவு
தரமான படைப்பு

Ashok D said...

ஓட்டு போட்டாச்சு

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும், நண்பர்களுக்கு இந்த செய்தியைப் பரப்பிய நண்பர்களுக்கும் நன்றி!!

க. தங்கமணி பிரபு said...

தங்கள் பதிவு தமிழினத்தின் குரலாக ஒலித்தமைக்கு நன்றியும் வணக்கங்களும்!
வலியும் ஆற்றாமையும் மிகுந்த இந்த சூழலில் சிலநூறு ஆண்டுகள் நிகழ்ந்த நம் இந்திய சுதந்திர போரையும், நம் பள்ளிக்கூட வரலாற்று பாடங்களில் இடம் பெறாத பெயரறியாத எண்ணற்ற நம் இந்திய விடுதலை வீரர்களையும், அவற்றால் நாம் இன்று பெற்றுள்ள பயனையும் நினைவு படுத்திக் கொள்கிறேன்! இலங்கையில் நாம் கண்ட, காணாத பல கொடும் மரணங்கள் மிகவிரைவில் ஐக்கிய நாடுகள் சபையில் தமிழீழ கொடியினை ஏற்றப்போகும் அஸ்திவார செங்கற்களாகவே கொள்வோம் எனும் என் நம்பிக்கைதனை பகிர்ந்துகொள்கிறேன்! தமிழ் இலக்கியத்தில் புறநானூறுடன் இரண்டாயிரத்தின் ஈழப்போரும் தமிழர் வீரத்துக்கு சாண்றாக பதிவுபெறும் என திட்பமாக நம்புகிறேன்! நன்றி!

Related Posts with Thumbnails