Monday, October 5, 2009

அமீரகக் குறிப்புகள் வ-09-வா-40 (துபாய் மெட்ரோவும் வீரப்பனும்)


09.09.2009 அன்று திறக்கப்பட்ட துபாய் மெட்ரோவில் கடந்த வெள்ளியன்று தான் செல்ல முடிந்தது. துபாய் நகரின் போக்குவரத்து நெரிசலையும், மகிழுந்துகளின் பயன்பாட்டையும் குறைக்கும் பொருட்டு துவக்கப்பட்டிருக்கும் திட்டமே துபாய் மெட்ரோ!!

வெள்ளிக்கிழமை விடுமுறை தினமென்பதால் மாலை எட்டு மணி வரை கூட்டத்திற்குப் பஞ்சமில்லை. நம் ஊர் போல அடித்துப்பிடித்து வண்டியில் ஏறி ஜன்னல் ஓர இடம்பிடித்துக் கொண்டால் துபாய் நகரின் விமான நிலையம், முக்கியமான வணிக மையங்கள் அமைந்த ஷேக் ஜையத் சாலை, என துபாய் நகரைப் பார்த்தபடி செல்லலாம்.

துபாய் நகரின் ஆடம்பரமான ஷாப்பிங் மால்கள் அனைத்தும் மெட்ரோ செல்லும் பாதையிலேயே உள்ளதால் துபாய் நகரைச் சுற்றிப் பார்க்க வரும் சுற்றுலாப்பயணிகள் அனைவரும் மெட்ரோவில் ஏறிக்கொண்டால் போதும்.

தற்பொழுது துபாய் ரஷீதியா என்ற இடத்தில் இருந்து நக்கீல் ஹார்பர் என்ற இடம் வரை சேவையைத் துவங்கியுள்ளார்கள். துபாய் மெட்ரோவின் சிறப்புகளில் குறிப்பிடத்தக்கது, ரயில்களின் தன்னியக்கம் தான். இரண்டு திசைகளிலும் ஐந்து நிமிடங்களுக்கு ஒரு ரயில் என்ற வகையில் மொத்தம் நாற்பது ரயில்கள் இயங்க ஆரம்பித்துள்ளன. இதன் இயக்கங்கள் அனைத்தும் கட்டுப்பாட்டு அறையில் இருந்து நிர்மாணிக்கப்படுகிறது.

இந்த ரயில்களில் செல்ல வேண்டுமென்றால் நால் அட்டையை (NOL CARD) வாங்க வேண்டும். பாரஸிக மொழியில் "நால்" என்றால் "கட்டணம்" என்று பொருள். இந்த அட்டையில் பணம் உள்ள அளவிற்கு பயணம் செய்யலாம். "கையில காசு வாயில தோசை"ங்கற மாதிரி நம் அட்டையில் பணம் இருந்தால் தான் பிளாட்பாரத்திற்கே செல்ல முடியும்.


நால் அட்டை, தன்னியக்கப் படிகள் (எஸ்கலேட்டர்), தன்னியக்க நடைபாதைகள் ( டிராவல்லேட்டர்), தன்னியக்கக் கதவுகள் என ஏதோ விமான நிலையத்திற்குள் வந்துவிட்ட உணர்வு தான் ஏற்படுகிறது. அடுத்த நிறுத்தம் எதுவென்ற அறிவிப்புகள், ரயிலிலேயே வைர்லஸ் மூலம் இணைய வசதிகள் என ரயில்களின் உள்ளேயும் கலக்கல் தான். கார்களை இலவசமாக நிறுத்துவதற்கு பல அடுக்கு நிறுத்தங்கள், மெட்ரோ ரயில் நிறுத்தங்களுக்கு செல்ல இலவசமாக பேருந்து (FEEDER) வசதிகள் என அசத்தியிருக்கிறார்கள்.


இந்த அட்டையை மட்டும் வைத்துக்கொண்டு துபாய் நகரப் பேருந்துகள், படகுச் சவாரி மற்றும் மெட்ரோ ரயில்கள் என மூன்று மார்க்கங்களிலும் பயணிக்கலாம்.

இதை சென்னை நகரை வைத்து விளக்க வேண்டுமென்றால், படப்பையில் இருந்து மாநகரப் பேருந்தில் தாம்பரம் வரை வந்து, தாம்பரத்தில் இருந்து நுங்கம்பாக்கம் வரை மாநகர ரயிலில் பயணித்து, நுங்கம்பாக்கத்தில் இருந்து சென்னைப் பல்கலைக்கழகம் வரை கூவம் ஆற்றில் (??) படகுச்சவாரி செய்வதாகக் கற்பனை செய்து கொள்ளலாம்.

ஒரே வித்தயாசம்..

சென்னையின் கூவம் இயற்கையாக அமைந்தது. துபாயின் நீர்வழியோ செயற்கையாக உருவாக்கப்படுகிறது.

"ஏப்பா செந்திலு.. அவங்ககிட்ட நிறைய காசு இருக்குது எல்லாம் பண்றாங்க"ன்னு நீங்க சொல்வது கேட்கிறது!!

நம் நாட்டிலும் பணம் உள்ளது!! ஆனால்.... :((

*******

ஓரிரு நாட்களுக்கு முன் இங்குள்ள கடையொன்றில், உலக வரைபடத்தை வாங்கினேன். இந்தியாவைப் பார்த்த எனக்கு வியப்பு!!

இந்தியாவின் வடக்கு எல்லை இமாச்சலப்பிரதேசத்தோடு முடிந்து விட்டது. காஷ்மீர் மாநிலமிருக்கும் இடத்தில் ஜம்மு மற்றும் சர்ச்சைக்குட்பட்ட பகுதிகள் என்று குறிப்பிடபட்டுள்ளது.

நேரமிருந்தால் ஒவ்வொரு நாட்டு நாளிதழ்களின் இணையதளங்களைப் பாருங்கள். அந்தந்த நாடுகளின் நிலை என்னவென்று புரியும்.

*******


நேற்று, வாடகை மகிழுந்து ஒன்றில் ஏறி, போக வேண்டிய இடத்தை ஓட்டுனரிடம் கூறினேன். என்ன நினைத்தாரோ தெரியவில்லை..

"நீங்கள் மலபாரியா?" என்றார்.
"நான் மதராஸி" என்றேன். உடனே..அவர் முகத்தில் ஒரு புன்னகை..
"ஓ.. வீரப்பன் ஊரைச் சேர்ந்தவர்.." என்று சிரித்தார்.
"ஆம்.. உங்களுக்கு எப்படி வீரப்பனைத் தெரியும்" என்றேன்.
"என் முன்னாள் முதலாளி ஒரு மதராஸி. அவர் வீரப்பனைப் பற்றியெல்லாம் கூறியுள்ளார்" என்றார்.
"நீங்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்"
"பெஸாவர்" என்றார்.

ம்ம்.. தமிழகத்திற்கு வீரப்பன் கூட விளம்பரத் தூதராக (பிராண்ட் அம்பாஸடராக) இருந்திருக்கிறார் ( இன்னமும் இருக்கிறார்).

..

32 comments:

இராகவன் நைஜிரியா said...

துபாய் மெட்ரோ இப்போதுதான் அனுபவித்தீர்கள் போலிருக்கு. நல்லா சொல்லியிருக்கீங்க.

வீரப்பன்... ம்... ஒன்னும் சொல்வதற்கில்லை

பிரபாகர் said...

சிங்கப்பூர் போல் தான் துபாயிலும் இருக்கும் போலிருக்கிறது.

நம்மூரில் வரும் என அழகாய் கனவு காணலாம்.

வீரப்பன் தகவல் அருமை. இங்கு கூட ஒரு சீனர் ஜெயலலிதா பிரேவ் லேடி ன்னு சொன்னது எனக்கு வியப்பாயிருந்தது.

நல்ல பதிவு.

பிரபாகர்.

வானம்பாடிகள் said...

பிரமிப்பான தகவல். கொஞ்ச வருசத்துக்கு முந்தி வரைக்கும் திருப்பதில வெங்கடாசலபதி படம் வாங்குறாங்களோ இல்லையோ வீரப்பன் படம் லைட்லாம் வெச்சதுக்கு அவ்வளவு டிமாண்ட்.

கதிர் - ஈரோடு said...

// ஆனால்.... :(//

சரி சரி புரியுது.... விடுங்க செந்தில்

வீரப்பன் உங்களுக்கு கொஞ்சம் பக்கத்து ஊர்தானு சொல்லி இருக்கலாமுல்லங்க

கலையரசன் said...

வழக்கம்போல் அருமையான இடுகை!

அதுமாதிரி நார்த் சைடில் உள்ளவர்களும் நான் தமிழன்னு சொன்னா.. வீரப்பான்னு கத்துவாங்க! இல்லன்னா பிரபாகரன் கோஷ்டியான்னு கேட்பாங்க!! ஆமா உங்களுக்கு பரிஸாவர்ன்னு என்ன ஞாபகம் வருது செந்தில்?

ராஜ நடராஜன் said...

துபாய் முன்னோட்டம் மட்டுமே.இது வெற்றிகரமாக அமையுதான்னு பார்த்துட்டு அப்புறம் ரயில் விடலாமுன்னு எல்லா வளைகுடா ஷேக்குகளும் காத்துகிட்டு இருக்காங்க.

குசும்பன் said...

//இதை சென்னை நகரை வைத்து விளக்க வேண்டுமென்றால், படப்பையில் இருந்து மாநகரப் பேருந்தில் தாம்பரம் வரை வந்து, தாம்பரத்தில் இருந்து நுங்கம்பாக்கம் வரை மாநகர ரயிலில் பயணித்து, நுங்கம்பாக்கத்தில் இருந்து சென்னைப் பல்கலைக்கழகம் வரை கூவம் ஆற்றில் (??) படகுச்சவாரி செய்வதாகக் கற்பனை செய்து கொள்ளலாம்.//

பலகோடி ரூபாய் செலவு செஞ்சு பிராஜெக்ட் பிளானிங் செய்யும் விசயத்தை இப்படி பொசுக்குன்னு போகிற போக்கில் சொல்லிப்புட்டிங்க:)))

கிளியனூர் இஸ்மத் said...

//பாரஸிக மொழியில் "நால்" என்றால் "கட்டணம்" என்று பொருள்.//

நன்றி....

வெடிகுண்டு முருகேசன் said...

09021262991581433028
//

இது உங்க டெலிபோன் நம்பரா ?

நீங்க எந்த ஊரில் இருக்கிங்க.?

துபாயா?
அபுதாபியா?

இந்த ந்ம்பருக்கு போன் பண்ணினால் நீங்க எடுக்கவே மாட்டங்கிறீங்க

ஏன்?

வினோத்கெளதம் said...

அருமை அருமை அருமையான பதிவு..
மதராசி என்று சொன்னால் "ரஜீனிகாந்த்" என்றும் பெரும்பாலான வட இந்தியர் சொல்லுவர்.

POK தான் கேள்வீப்பட்டு இருக்கிறேன். இது எல்லாம் அந்த அந்த நாட்டின் விருப்பு வெருப்பை பொற்த்து உள்ளது போளூம்.

(Sorry for the Spelling Mistakes..)

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

வாங்க இராகவன் அண்ணா. நன்றி!

வாங்க பிரபாகர். நீங்க சொல்றதப் பார்த்தா அவங்களும் பிராண்ட் அம்பாசடர் போல :) நன்றி.

வாங்க பாலாண்ணே. ம்ம்.. இதை நான் கேள்விப்பட்டதில்லையே. ஆனா சுவரஸ்யமான தகவல். நன்றி.

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

வாங்க கதிர். ஹாஹா.. சரியாப் போச்சு போங்க :)

வாங்க கலை. எனக்கு நினைவிற்கு வந்தது தாலிபான்கள் தான். நன்றி

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

வாங்க ராஜநடராஜன். ஆமாங்க.. துபாய் தான் அவங்களுக்கு பயிற்சித்தளம். பிறகு எல்லா நகரங்களிலும் வந்துவிடும்.

வாங்க குசும்பன். நன்றி

வாங்க இஸ்மத் அண்ணே. நன்றி

அன்பர் முருகேசனுக்கு அது என்ன எண் என்று புரிந்திருக்கும் :)

அது ஒரு கனாக் காலம் said...

செந்தில் சார், வீரப்பன் எங்கிருந்து சார் வந்தார் !!!!!!!????? சென்னை வாசிகள் எல்லாம் பேரு மூச்சு விட்டே ... வெப்பம் ஜாஸ்தி ஆய்டுச்சாம் !!!!.

முரளிகண்ணன் said...

நல்ல தகவல்கள்,கட்டுரை.

பின்னோக்கி said...

metro வில் இருந்து சில போட்டோ எடுத்திருக்கலாம்

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

வாங்க வினோத். நன்றி

வாங்க சுந்தர் சார். வீரப்பனைப் பற்றி டாக்ஸி ஓட்டுனருடன் நடந்த உரையாடல் அது. நன்றி

வாங்க முரளிகண்ணன். முதல் முறை வருகைக்கு நன்றி.

வாங்க பின்னோக்கி. கண்டிப்பாக வேறொரு இடுகையில் இணைக்கிறேன். நன்றி.

D.R.Ashok said...

//நம் நாட்டிலும் பணம் உள்ளது!! ஆனால்.... :((
நீங்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்"
"பெஸாவர்" என்றார்.//
highlites

அவிய்ங்க ராசா said...

பதிவைப் படிச்ச பிறகு ஒருவாட்டி அங்க வரனும்னு ஆசையா இருக்குண்ணே..

எம்.எம்.அப்துல்லா said...

//இந்தியாவின் வடக்கு எல்லை இமாச்சலப்பிரதேசத்தோடு முடிந்து விட்டது. காஷ்மீர் மாநிலமிருக்கும் இடத்தில் ஜம்மு மற்றும் சர்ச்சைக்குட்பட்ட பகுதிகள் என்று குறிப்பிடபட்டுள்ளது.

//

ஒதைக்கனும் தல.

எம்.எம்.அப்துல்லா said...

இந்தியாவின் வடக்கு எல்லை இமாச்சலப்பிரதேசத்தோடு முடிந்து விட்டது. காஷ்மீர் மாநிலமிருக்கும் இடத்தில் ஜம்மு மற்றும் சர்ச்சைக்குட்பட்ட பகுதிகள் என்று குறிப்பிடபட்டுள்ளது.

//ஒதைக்கனும் தல

பிரியமுடன்...வசந்த் said...

மெட்ரோ வாசியாயிட்டீங்கன்னு சொல்லுங்கண்ணா...

கோபிநாத் said...

metroவுல போயிட்டிங்களா! சூப்பரு ;)

கூடிய சீக்கிரம் போகானும் ;)

Anonymous said...

//நம் நாட்டிலும் பணம் உள்ளது!! ஆனால்.... :((//

எல்லாம் கருப்பு பணமா இல்ல இருக்கு.

ஆரூரன் விசுவநாதன் said...

//ம்ம்.. தமிழகத்திற்கு வீரப்பன் கூட விளம்பரத் தூதராக (பிராண்ட் அம்பாஸடராக) இருந்திருக்கிறார் ( இன்னமும் இருக்கிறார்). //


தேசிய ஊடகங்களின் பெரும் சாதனை இதுதான். எங்கெங்கோ இருப்பவர்களுக்கும் தன்னால் இயன்றதை கற்பனையும் சேர்த்து தருகின்றன.

அமீரக பதிவுகள் அருமை.

வாழ்த்துக்கள்

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

அருமை நண்பர் செந்தில்வேலன் ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க,மெட்ரோவில் இன்னும் பயணம் செய்யவில்லை.இந்த வாரம் போகிறேன்.
ஓட்டுக்கள் போட்டாச்சு

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

வாங்க அசோக். நன்றி

வாங்க ராசாண்ணே. நீங்க அமெரிக்கால இருந்து ஊருக்குப் போகும்போது துபாய் வழியா வந்தீங்கன்னா, 96 மணி நேர விசா கிடைக்கும். அழகா சுத்திப்பார்க்கலாம்.

வாங்க அப்துல்லா அண்ணாச்சி. என்னங்க பண்றது.

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

வாங்க வசந்த். ஆமாங்க மெட்ரோ வாசியாயாச்சு :)

வாங்க கோபி. போய்ப் பாருங்க. நன்றி

வாங்க சின்ன அம்மிணி. ஆமாங்க.. நம்ம நேரக்கொடுமைங்க..

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

வாங்க ஆரூரன் விசுவநாதன். உண்மைங்க! நம்ம ஊடங்கள் நல்ல விசயங்கள எடுத்து செல்வதே கிடையாது. வெளியுலகிற்குத் தெரிய வருவதெல்லாம் கெட்ட விசயங்களே! நன்றி

வாங்க கார்த்திகேயன். கண்டிப்பா போய் பாருங்க. நன்றி.

நர்சிம் said...

மிக நேர்த்தியான நடை செந்தில்.வாழ்த்துக்கள்.

r.selvakkumar said...

துபாய், சிங்கப்புர் போன்ற சிறிய நகரங்களை(நாடுகளை) இந்தியா போன்ற மிகப்பெரிய நாடுகளுடன் ஒப்பிடாதீர்கள். ஸ்போர்ட்ஸ் சிட்டி, ஐஸ் சிட்டி, மெட்ரோ ரெயில் இவையெல்லாம் வெறும் ஷோ. ஜனநாயகம் என்றொரு மக்களின் மிகச்சிறந்த ஆயுதம் இந்த ஊர்களில் இல்லை. இருக்கப்போதும் இல்லை.

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

வாங்க நர்சிம். வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

வாங்க செல்வகுமார். நீங்கள் கூறுவதைப் போல ஒப்பிடுவது சரியில்லை தான். ஜனநாயகத்தின் அருமை நமக்குத் தெரிந்தாலும், பணநாயகம் அதனை வீழ்த்திவிடுகிறதே. நன்றி.

Related Posts with Thumbnails