Saturday, October 17, 2009

எல்லாம் பாஸ்வர்ட் மயம்.

நீங்கள் கடவுச்சொற்களை எப்படி தேர்தெடுக்கிறீர்கள்? எத்தனை கடவுச் சொற்களைப் (பாஸ்வர்ட்) பயன்படுத்துகிறீர்கள்? பத்து ? இருபது? ஐம்பது?

சில மாதங்களுக்கு முன் என் நெருங்கிய நண்பனின் மின்னஞ்சல் முகவரியில் ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் அவருக்கு விமானப் பயணச்சீட்டைப் பதிவு செய்யப் பணம் தேவைப்படுவதாகவும், என் கடனட்டை எண்ணையும் கடவுச்சொல்லையும் தருமாறும் கேட்டிருந்தார். அலைபேசியில் கேட்காமல் அவர் எதற்கு எனக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார் என்று எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. என் நண்பரை அழைத்து விசாரித்தால் தன் மின்னஞ்சல் கணக்கு திருடப்பட்டள்ளது என்றார்.

அவரது கடவுச்சொல்லைப் பற்றிக்கேட்டால் பொதுவான ஒன்றைத்
தேர்ந்தெடுத்ததாகக் கூறி வருத்தப்பட்டார். பிறகு நான் எங்கள் நண்பர்கள் அனைவருக்கும் மின்னஞ்சல் அனுப்பி எனக்கு வந்ததைப் போல மின்னஞ்சல் வந்தால் கவனமாக இருக்க வேண்டுமென்று எச்சரிக்கை செய்தேன்.

**

1998ல் ஹாட்மெயில் கணக்கைத் துவங்கியது தான், நான் இணையத்தில் பதித்த முதல் கடவுச்சொல். அதன் பிறகு மட்டும் எத்தனை கணக்குகள்? எத்தனை கடவுச்சொற்கள்?

* யாஹூ, லைக்கோஸ்மெயில், ரீடிஃப்மெயில், இந்தியாடைம்ஸ் மெயில் என்று ஜிமெயில் வரையில் மட்டும் ஆறேழு கடவுச்சொற்கள்.

* கடனட்டைகள், காசளிப்பு அட்டைகள் என நான்கைந்து கடவுச்சொற்கள். வங்கிகளின் இணைய சேவைக்கென நான்கைந்து பயணர் முகவரிகள் மற்றும் கடவுச்சொற்கள்.
* விகடன்.காம், எகனாமிக் டைம்ஸ் என்று இலவசமாகவும் கட்டணமுறையிலும் படிக்கும் இணைய பத்திரிக்கைகளின் கடவுச்சொற்கள்.
* அலுவலகத்தில் ஒவ்வொரு மென்பொருள் அமைப்பிற்கும் தனித்தனியாக கடவுச்சொற்கள். அதிலும் ஒவ்வொன்றையும் மூன்று மாதத்திற்கொரு மாற்றவும் வேண்டும், முன்பு வைத்ததாகவும் இருக்கக் கூடாது.

* இது போதாதென்று புதிதாக ஆர்குட், ஃபேஸ்புக், லிங்க்ட்-இன் என சமூக வலையமைப்புச் சேவைகள், நௌக்ரி, டைம்ஸ்-ஜாப்ஸ் போன்ற வேலைவாய்ப்புத் தளங்கள், திருமணத்தகவல் தளங்கள் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

காலை முதல் மாலை முதல் நாம் அதிகமாக நினைவுகொள்வது என்னவென்று பார்த்தால் அது கடவுச்சொற்களாகத் தான் இருக்கும். ஆனால், அந்த கடவுச்சொற்களை எவ்வாறு தேர்ந்தெடுக்கிறோம்? போதுமான அளவு பாதுகாப்பான, எளிதில் கண்டுபிடிக்க முடியாத கடவுச்சொற்களைத் தேர்ந்தெடுக்கிறோமா?

பெரும்பாலானோர் தேர்ந்தெடுக்கும் கடவுச்சொற்கள் 123456, abcd1234, அல்லது பெயரையோ, மனைவியின் பெயரையோ தான் கடவுச்சொற்களாகத் தேர்ந்தெடுக்கிறோம். இப்படித் தேர்ந்தெடுக்கும் கடவுச்சொற்கள் பாதுகாப்பானதா இருக்கிறதா?
நாம் பாதுகாப்பாக சேவைகளைப் பயன்படுத்த என்ன செய்ய வேண்டும்?

* எல்லா சேவைகளுக்கும் ஒரே கடவுச்சொல்லைப் பயன்படுத்தாமல், வெவ்வேறு கடவுச்சொற்களைப் பயன்படுத்தவேண்டும்.
* rajini123, vijay123 போன்ற எளிதில் கண்டுபிடிக்கக் கூடிய கடவுச்சொற்களைப் பயன்படுத்தக்கூடாது. குறைந்தது &#*%@$ போன்ற எழுத்துக்கள் உள்ள கடவுச்சொற்களைப் பயன்படுத்துவது நல்லது.

* சுயதகவல்களைக் கடவுச்சொற்களில் பயன்படுத்தக்கூடாது. எங்காவது நாம் நம் பெயரையோ, குடும்பத்தினரின் பெயர்களையோ கொடுக்க நேர்ந்தால் இது போன்ற கடவுச்சொற்கள் ஆபத்தானவை.
* ஐம்பது அல்லது அறுபது கடவுச்சொற்களை நினைவில் வைத்திருப்பது கடினமே. அப்படியிருக்க அந்த கடவுச்சொற்களை பாதுகாப்பான இடத்தில் வைப்பதும் மிகவும் முக்கியமானது.

எல்லாவற்றையும் விட முக்கியமான ஒன்று நாம் இணையதள சேவையையோ, மின்னஞ்சல் சேவையையோ துவங்கும் பொழுது கடவுச்சொற்களை மறக்க நேர்கையில் வெளிக்கொணர சில கேள்விகளைக் கேட்பார்கள். உங்கள் சொந்த ஊர் எது? உங்களுக்குப் பிடித்த விளையாட்டு எது? போன்ற கேள்விகளுக்கு சென்னை, கிரிக்கெட் என்று உண்மையாக பதிலளிக்காமல் எளிதில் கண்டுபிடிக்க முடியாத கடவுச்சொற்களைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியமானது.

என் அனுபவத்தையும், நான் படித்ததையும் பகிர்ந்துள்ளேன். உங்கள் கருத்துக்களைக் கீழே பதிவு செய்யுங்கள்.

***

15 comments:

vasu balaji said...

மிக முக்கியமான ஒரு இடுகை. தீபாவளி வாழ்த்துகள் செந்தில்.

சென்ஷி said...

கடவுச் சொற்களை அதிகம் ஞாபகத்தில் கொள்ள சிரமப்பட்டே இது போன்று எளிமையான கடவுச்சொற்களைக் கொள்கிறார்கள் என்று நினைக்கிறேன்!

//&#*%@$ //

சிறப்பான விசயம்!

ப்ரியமுடன் வசந்த் said...

நன்றிண்ணா...

geethappriyan said...

இதே தலைவலி தான் எனக்கும்,
இதனாலேயே இணைய தள பேங்கிங் பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டேன்.

கண்டிப்பாக 2மாதத்திற்கு ஒரு முறை கடவுச்சொல் மாற்றிவிடுவேன்.

கூகிளில் அது ஒரு வசதி

ஒரே கடவுச்சொல் ப்லாக்கருக்கும்,ஆர்குட்டுக்கும்,ஜிமெயிலுக்கும்,ஜிடாக்குக்கும் என .

கண்டிப்பாக ஸ்பெஷல் கேரக்டர்ஸ் பயன்படுத்த வெண்டும்.
நல்ல இடுகை.
பாஸ்வார்டை மாற்ற ஞாபகப் படுத்தினீர்கள் நன்றி.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாங்க பாலாண்ணே, நன்றி

வாங்க வசந்த், நன்றி

வாங்க சென்ஷி. எளிதான கடவுச்சொல்லைத் தேர்ந்தெடுக்கும் பொழுது தான் எளிதில் மாட்டிக்கொள்கிறோம். நன்றி.

வாங்க கார்த்திகேயன். நல்ல பழக்கத்தைக் கடைப்பிடிக்கிறீர்கள். தொடருங்கள். நன்றி.

கலகலப்ரியா said...

ஏனுங்க பீதிய கெளப்பறீங்க.. என்னோட Password "ç%&/()?=)(/&" இதுதானுங்க.. user name தான் கஷ்டம்.. ஹிஹி..

நல்ல பதிவு.. இப்டி பயமுறுத்துறதாலதான் கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்க முடியுது..

ஈரோடு கதிர் said...

நல்ல இடுகை செந்தில்

நன்றி

Unknown said...

அடிக்கடி மறந்து விடுவதால் 3 அல்லது 4 கடவுச் சொற்கள் மட்டும் உபயோகிக்கிறேன். மறந்து விட்டால் நான்கையும் தட்டிப் பார்த்து நுழைந்து விடுவேன். தேவையான இடுகை.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாங்க கலகலப்ரியா. நடப்பதை எல்லாம் பார்த்தால் பயமாத்தானுங்க இருக்கு. நன்றி

நன்றி கதிர்.

வாங்க சுல்தான். உங்கள் யுத்தியும் நன்றாகவே உள்ளது. நன்றி.

தமிழ் நாடன் said...

இந்த காலத்திற்கு தேவையான இடுகை!

Jazeela said...

தீபாவளி வாழ்த்துகள் செந்தில். யோசிக்க வேண்டிய விஷயம்தான். சமயங்களில் கேள்விக்கான பதில், கடவுச்சொல் எல்லாமே மறந்து போய்விடுகிறாது :-)

க.பாலாசி said...

//* எல்லா சேவைகளுக்கும் ஒரே கடவுச்சொல்லைப் பயன்படுத்தாமல், வெவ்வேறு கடவுச்சொற்களைப் பயன்படுத்தவேண்டும்.//

இதுவரையின் நான் எல்லா அக்கவுண்டிலும் ஒரே கடவுச்சொல்லைதான் பயன்படுத்துகிறேன். இனிமேல்தான் மாற்றவேண்டும். உங்களின் இந்த சிந்தனை இடுகை நன்று...

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாங்க தமிழ்நாடன், நன்றி

வாங்க ஜெஸிலா.. ஆமாம் இத்தனை கடவுச்சொற்களைப் பயன்படுத்தினால் மறக்கத்தானே செய்யும்.

வாங்க ஞானப்பித்தன். நன்றி

வாங்க கா. பாலாசி. நன்றி.

Deepa said...

உங்களுக்காக ஒரு விருது என் பக்கத்தில். ஏற்றுக் கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறேன்.
http://deepaneha.blogspot.com/2009/10/blog-post_24.html

ஜோதிஜி said...

சில வினோதங்கள் நம்மை தாக்கும் செந்தில். 16க்கு பிறகு இன்னமும் உங்கள் படைப்பு நகர மாட்டேன் என்கிறது. பாஸ்வேர்ட் தொலைந்த தொலைத்த கதை இரண்டு பாகங்கள் எடுக்கும் அளவுக்கு இருக்கிறது. சரி கலகப்ரியா அவர்கள் வாழ்வது இலங்கை என்று நினைக்கின்றேன். இவர்கள் கருத்து பாரதி தாக்கம்அதிகம். உள்ளே நுழைந்து உண்மையிலேயே ஆச்சரியப்பட்டு விட்டேன். ஆனால் இங்கு கொடுத்த பின் ஊட்டம் வாய் விட்டு சிரிக்க வைத்து விட்டது.

Related Posts with Thumbnails