Thursday, October 29, 2009

இந்தியாவின் எதிர்காலம்.

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனர் நந்தன் நிலகனி எழுதிய இமேஜினிங் இந்தியா என்ற நூலைப் படித்து வருகிறேன்.



நம் நாடு கடந்து வந்த பாதையை வரலாறு, பொருளாதாரம், உலகலாவிய சூழல், இந்திய சமூகம் என்ற பல கோணங்களிலும் ஆராய்ந்து எழுதியுள்ளார். இந்தியாவில் இதுவரை நடந்தேறிய மாற்றங்கள் என்னென்ன, நடந்து வரும் மாற்றங்கள், நடக்கவிருக்கும் மற்றும் நடக்க வேண்டிய மாற்றங்களைப் பற்றி அருமையாக விவரித்துள்ளார்.

நம் நாட்டைப் பற்றிப் புரிந்து கொள்ள இந்த நூல் ஒரு நல்ல கையேடாக இருக்கும். நூலை முழுதும் படித்து முடித்த பிறகு அதன் கருத்துகளைப் பகிர்கிறேன்.

இந்தியாவின் எதிர்காலத்திற்கான சிந்தனைகள் என்ற தலைப்பில் ஒரு காணொளியைப் பார்த்தேன். மிக அழகாக இந்தியாவை வளர்க்க என்ன செய்ய வேண்டிமென்பதை விவரித்துள்ளார். 15 நிமிடம் ஓடும் இந்தக் காணொளி கண்டிப்பாக பயனுள்ளதாக இருக்கும்.





நந்தன் நிலகனி இந்திய அடையாள அட்டை திட்டத்தின் இயக்குனராக பொறுப்பேற்றிருப்பது அனைவருக்கும் நினைவிருக்கும். இந்தக் காணொளியைப் பார்த்த பிறகு அவர் எந்த அளவிற்கு அந்தப் பொறுப்பை ஏற்கத் தயாராகியுள்ளார் என்பது புரிகிறது.
..

16 comments:

☀நான் ஆதவன்☀ said...

காணொளியை அறையில் சென்று காண்கிறேன் செந்தில். உங்களின் புத்தக விமர்சனமும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

ஈரோடு கதிர் said...

முழுதும் படித்தபின் பகிர்ந்து கொள்ளுங்கள் செந்தில்

நன்றி

vasu balaji said...

அருமையான பகிர்வு செந்தில். நன்றி.

க.பாலாசி said...

தேவையான புத்தகப்பகிர்வு. அதற்கு முததாய்ப்பாக காணோளி. பகிர்வுக்கு நன்றி அன்பரே...மேலும் இந்நூலில் உள்ள பிற கருத்துக்களையும் எதிர்பார்க்கிறேன்.

Ashok D said...

waiting

எம்.எம்.அப்துல்லா said...

நான் முன்பே படித்துவிட்டேன்.இருப்பினும் உங்களின் விமர்சனத்தைப் படிக்க ஆவலோடு உள்ளேன்.விரைவில் எழுதுங்கள்

:)

geethappriyan said...

அருமை நண்பர் செந்தில்வேலன்,
நல்ல நூல் அறிமுகம் செய்தீர்கள்.
காணொளியை அறையில் சென்று காண்கிறேன் . உங்களின் புத்தக விமர்சனமும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
ஒட்டுக்கள் போட்டாச்சு.

ஜோதிஜி said...

வாழ்த்துக்கள் செந்தில். இன்றைய எத்தனையோ உடல் நல குறைபாடுகளுடன் வேறு வழியே இல்லாமல் ஒரு வகையாக நிர்ப்பந்தம் போல பிரதமர் பதவியில் வகிக்கும் மன்மோகன் சிங்கின் தனிப்பிட்ட விருப்பமும் ஆர்வத்தினால் தேர்ந்தெடுத்த மிகச் சிறந்த புத்திசாலி அறிவாளி இவர். ஓட்டுப்பொறுக்கிகளுக்கு மத்தியில் தன்னுடைய அத்தனை வருமானத்தையும் தியாகம் செய்து விட்டு டெல்லியில் குடியேறி இருப்பவர். தேவையான சமயத்தில் அற்புத புத்தகத்தை படித்துக்கொண்டு இருக்கிறீர்கள். மின் அஞ்சல் ரீடர் தாமதாகத்தான் வருகிறது செந்தில்.

ஜோதிஜி said...

இந்தியா சந்தித்த பிரதமர்களில் தன்னுடைய பயணப்படிகளைக்கூட வாங்க விரும்பாத எந்த பற்றும் இல்லாத துறவி போல் வாழ்பவர் மன்மோகன் சிங். இந்தியாவை ஆள நல்லவராக இருந்தால் மட்டும் போதுமா செந்தில்? ஆனால் இந்தியாவில் அவரால் செய்ய முடியாத, சில செயல்களை இவரை போன்ற சிலரை மேலே கொண்டு வந்து ஆத்ம திருப்தி கொண்டுருக்கிறார் என்று நினைக்கின்றேன்.

வினோத் கெளதம் said...

நல்லதொரு புத்தக அறிமுகத்திற்கு நன்றி செந்தில்..
சீக்கிரம் புத்தகத்தை பற்றிய பதிவை எதிர்ப்பார்கிறேன்..

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாங்க ஆதவன் நன்றி

வாங்க கதிர். நன்றி.

வாங்க பாலாண்ணே. நன்றி.

வாங்க பாலாசி. நன்றி.

வாங்க அசோக். நன்றி.

வாங்க அப்துல்லா. நன்றி. கண்டிப்பாக எழுதுகிறேன்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாங்க கார்த்திகேயன். நன்றி. காணொளி நன்றாக இருக்கும். பாருங்கள்!!

வாங்க ஜோதிஜி.

நீங்க சொல்றது மிகவும் சரியானதே. இது போன்ற திறமையானவர்களைக் கையில் வைத்தால் தான் நாடு முன்னேறும். இந்த விசயத்தில் மன்மோகனும் அதையே செய்துவருகிறார்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாங்க வினோத். நன்றி

கோபிநாத் said...

பகிர்வுக்கு நன்றி தல..;)

புலவன் புலிகேசி said...

நல்ல பகிர்வு. நன்றி தல..........

Anonymous said...

very good start

Related Posts with Thumbnails