சரி என்ன தான் சொல்கிறார்கள் என்று பார்த்தால், டேட்டிங் செல்ல ஆர்வமுள்ளோரின் பெயர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். பிறகு, முன்பின் அறிமுகமாகாத இளம்பெண்ணை ஒரு ஆணுடனோ அல்லது இரு ஆண்களுடனோ சந்திக்க வைக்கிறார்கள்.
நான் பார்த்த நிகழ்ச்சி இப்படி ஆரம்பிக்கிறது..
தன் டேட்டிங் துணையை எதிர்பார்த்தபடி நீச்சல் குளத்தில் ஒரு இளைஞன் அமர்ந்திருக்ககிறார். பிறகு ஒரு இளம்பெண் நீச்சல் உடையின் மீது ஒரு துண்டைக் கட்டிக்கொண்டு வருகிறார். பிறகு இருவரும் பெயர்களைப் பரிமாறிக்கொண்ட பின், அந்தப் பெண் கேட்கிறார்..
"நான் தேர்ந்தெடுத்த இடம் உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?"
"ம்ம்ம்.. பிடித்திருக்கிறது" என்கிறார் வழிந்தவாரே..
"என்ன நீச்சல் குளத்தில் சட்டை பேண்டெல்லாம் போட்டிருக்கிறீர்கள்" என்கிறார் அந்தப் பெண்.
"வெட்கமாக இருக்கிறது" என்று கூறி சட்டைக் கழட்டுகிறார்.
"பேண்டை யார் கழட்டுவார்கள்"
"நீங்க துண்டைக் கழட்டுனாத்தான் நான் ..." என்கிறார் அந்த இளைஞர்.
"அதுக்கென்ன..." என்று டூ-பீஸிற்கு மாறுகிறார் அந்தப் பெண்.
பிறகு இருவரும் குளத்தில் இறங்கி நீந்துகிறார்கள். பிறகு வேறொரு இளைஞரும் வருகிறார். இவர்கள் மூவரும் தங்கள் விருப்பு வெறுப்புகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். பிறகு வேறொரு இடம் என்று ஒரு நாள் முழுவதும் ஒன்றாக நேரத்தைச் செலவிடுகிறார்கள். இடையிடையே தாங்கள் தங்கள் துணையைப் பற்றி என்ன நினைத்தார்கள், எப்படி இருந்தது இந்த நிகழ்வு என்று கூறுவதாகச் செல்கிறது இந்த ரியாலிட்டி நிகழ்ச்சி.
மற்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளைப் போல இந்த நிகழ்ச்சியிலும் தொலைக்காட்சி நிறுவனத்தாரின் நிகழ்ச்சியமைப்பும், நாடகத்தன்மையும் இருக்குமென்பதில் சந்தேகமில்லை. ஆனால் இதையும் இன்னொரு ரியாலிட்டி நிகழ்ச்சி தான் என்று ஒதுக்கிவிட முடியவில்லை.
காரணம், நிகழ்ச்சியில் மையக்கரு டேட்டிங் என்பது மட்டும் அல்ல, இது தெரியாதவருடன் டேட்டிங் என்பது தான்.
காரணம், நிகழ்ச்சியில் மையக்கரு டேட்டிங் என்பது மட்டும் அல்ல, இது தெரியாதவருடன் டேட்டிங் என்பது தான்.
"அதென்னைபா டேட்டிங்கே எங்களுக்குப் புதுசா இருக்கு!! இதுல வகைகளை வேற சொல்ற" என்று நீங்கள் நினைப்பது புரிகிறது.
டேட்டிங் போலாம் வர்றீயா? என்று சர்வசாதாரணமாக திரைப்படப் பாடல்களில் வர ஆரம்பித்துள்ள இன்றைய சூழலில் டேட்டிங்கைப் பற்றித் தெரியாதவர்களுக்கு ஒரு சின்ன விளக்கம்.
டேட்டிங்(Dating) என்பது ஒரு நபர் ஒரு குறிப்பிட்ட தேதியில், குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடத்தில் இன்னொரு நபருடன் இருவரின் முழு ஒப்புதலுடனும் ஒருவரை பற்றி இன்னொருவர் தெரிந்துக்கொள்ளவும் நெருக்கமான உறவை ஏற்படுத்திக்கொள்ளவும் சந்தித்து அளவளாவிக்கொள்ளுதலைக் குறிக்கும்.
டேட்டிங் என்பது, ஒன்றாக வெளியே சென்று, உணவு உண்பதையோ, ஊர் சுற்றுவதையோ,திரையரங்கு அல்லது பூங்காக்களுக்கு செல்வதையோ குறிக்கும். இதனுள் இணையத்தின் மூலம் அரட்டை செய்தல், பேசிக்கொள்ளுதல் ஆகியவையும் இந்த டேட்டிங் செயல்முறையில் அடங்கும்.
என்ன தான் ஒருவரைப் பற்றிப் புரிந்து கொள்வதற்காக என்று சொல்லிக் கொண்டாலும், அவரவர் மனப் பக்குவத்தையும், தேவைகளையும் பொருத்தே டேட்டிங்கின் வடிவம் அமைகிறது. சிலர் இதனுள் பாலியல் ரீதியான செயலபாடுகளையும் சேர்த்துக்கொண்டாலும், அது அவரவரின் தனிப்பட்ட விசயமே!!
"டேட்டிங் / அல்லது ஒரு பெண்ணும் பையனும் ஒன்னா சுத்தறாங்க" போன்ற வார்த்தைகளைக் கேட்டால் இன்றளவும் நம் வீடுகளில் முகம் சுளிக்கத்தான் செய்கிறார்கள்.
அப்படி, ஒரு ஆணோ பெண்ணோ தெரிந்தவருடன் சுற்றும் பொழுதே முகம் சுளிக்கும் நம்மவர்கள் தெரியாதவர்களுடன் செல்வதை எப்படி எதிர்கொள்வார்கள்?
வியாபார நோக்கில் மேற்கத்தியக் கலாச்சாரத்தை வரவேற்பறைக்கு கொண்டு வருவது சரியானதா?
இன்று இந்தச் சேனலில் வரும் நிகழ்ச்சி நாளைக்கு தமிழிலும் வரலாம். சென்னையைச் சேர்ந்த இளைஞரையும் கோவையைச் சேர்ந்த இளைஞியையும் ஏதாவது ஒரு ஓட்டலிலோ பூங்காவிலோ சந்திக்க வைப்பார்கள். பிறகு அவர்களது டேட்டிங் எப்படி இருந்தது என்று சிலாகிப்பார்கள்.
"டேட்டிங் போகலியா, எப்ப வளரப்போற?" என்று விளம்பரங்களும் வரலாம்.பிறகு இணையதளங்களும், கேளிக்கை நிறுவனங்களும் இது போன்ற அறிமுகமில்லாதவர்களுடன் டேட்டிங்கிற்கு ஏற்பாடு செய்வார்கள்.
"இதெல்லாம் ஏற்கனவே இருக்கிறது. இந்த நிகழ்ச்சியைப் பார்த்துத் தான் டேட்டிங் செல்வார்கள் என்பதெல்லாம் தவறு" என்று ஒரு சாரார் கூறலாம்.
ஆனால், மேல்தட்டு மக்களிடம் மட்டும் இருக்கும் இந்தப் பழக்கம் சாதாரண மக்களையும் சென்றடையும் பொழுது ஏற்படவிருக்கும் மாற்றங்கள் ஆபத்தானவை.
மேற்கத்திய நாடுகளில் ஒரு ஆண் பல பெண்களுடனோ, ஒரு பெண் பல ஆண்களுடனோ பழக்கம் கொள்வது பெரிய விசயமில்லை. ஆனால் அது நம் ஊரில்?
திரைப்படங்களிலும், சின்னத்திரையிலும் புகைப்பிடிப்பதையோ, மது அருந்துவதையோ தடை செய்ய வேண்டும் என்று முன்னாள் மத்திய அரசு கூறியது எதற்காக?
திரையில் காட்டப்படும் பழக்கம் சமூகத்தைப் பாதிக்கக்கூடாது. குறிப்பாக இளைஞர்களுக்கும், சிறுவர்களுக்கும் சென்றடையக் கூடாது என்பதற்குத் தானே!! ஆனால் "டேட்டிங்" போன்ற பழக்கங்கள் சென்றடையலாமா?
என்ன செய்கிறது செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம்? கவனிப்பார்களா?
..
13 comments:
அருமையான இடுகை செந்தில்.
//மேற்கத்திய நாடுகளில் ஒரு ஆண் பல பெண்களுடனோ, ஒரு பெண் பல ஆண்களுடனோ பழக்கம் கொள்வது பெரிய விசயமில்லை. ஆனால் அது நம் ஊரில்?//
நம் ஊரிலும் மாறிகொண்டிருகிறது - சரியா தவறா தெரியவில்லை அனால் கண்டிப்பாக ஆண்கள் (நம்ம ஊர் ஆண்)ஏற்று கொள்ள மாட்டார்கள்
//"டேட்டிங் போகலியா, எப்ப வளரப்போற?" என்று விளம்பரங்களும் வரலாம்.பிறகு இணையதளங்களும், கேளிக்கை நிறுவனங்களும் இது போன்ற அறிமுகமில்லாதவர்களுடன் டேட்டிங்கிற்கு ஏற்பாடு செய்வார்கள்.//
கண்டிப்பாக நடக்கும் என்றே தொன்றுகிறது.
அருமையான பதிவு வாழ்த்துகள்.
//"டேட்டிங் போகலியா, எப்ப வளரப்போற?" //
அப்ப தம்பி இன்னும் வளரலையா? ச்சும்மாங்க....
செந்தில்,
மேல்தட்டு மக்களைப்போல சாமானியர்களும் பின்பற்ற நினைப்பதால்தான் அத்தனை குற்றங்களும் ஏற்படுகின்றன. ஏற்கனவே கலாச்சாரம் முடிந்த அளவிற்கு சீரழிந்து கிடக்கிறது. எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுகிரார்போல் ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் இன்னும் பாழ்படுத்துகிறார்கள்.
அரசாங்கம் என்ன செய்யும் என எதிர்பார்ப்பது வேஸ்ட். ஒரு நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வேண்டுமானால் மந்திரிகள் கலந்துகொள்ளக்கூடும்.
நாம், நமது குழ்ந்தைகளுடன் அவ்வாறாய் பார்ப்பதை தவிர்ப்போம், நட்பிடமும் சொல்லுவோம்.
பிரபாகர்.
அருமை நண்பரே,
ரொம்ப வேதனையான விஷயமிது.
மேலை நாடுகளில் கோர்டிங் என்னும் விதிப்படித்தான்
ரிலேஷன்ஷிப் மற்றும் திருமணம் எல்லாம்.
அதை நம் ஊரில் கொண்டு வர நினைப்பது வேதனையே!.
ஏற்கனவே பெரு நகரங்களில் லிவிங் டுகெதர் வந்தாகிவிட்டது.அதன் தாக்கமாக நிறைய விமான பணிப்பெண்கள்/ ஐடி துறை பெண்கள் கொலைகளும் அரங்கேறிவிட்டன.
கான்வெண்ட் ஆண்,பெண்களும் நகர கல்லூரி ஆண்,பெண்களும் டேட்டிங்கை எப்போதோ ஆரம்பித்துவிட்டாலும் தொலைக்காட்சி மற்றும் ஊடகத்துறையின் தூண்டுதல்கள் அதை பட்டி தொட்டியெங்கும் பரப்பிவிடத்தான் செய்யும்.
சின்ன திருத்தம்//
மேற்கத்திய நாடுகளில் ஒரு ஆண் பல பெண்களுடனோ, ஒரு பெண் பல ஆண்களுடனோ பழக்கம் கொள்வது பெரிய விசயமில்லை. //
திருமணத்திற்கு முன்னோ அல்லது ரிலேஷன்ஷிப்பிற்கு முன்னோ என்று இருந்தால் சரியாக இருக்கும்.
ரொம்ப அருமையாக எழுதப்பட்ட விழிப்புணர்வு கட்டுரை.
//"இதெல்லாம் ஏற்கனவே இருக்கிறது. இந்த நிகழ்ச்சியைப் பார்த்துத் தான் டேட்டிங் செல்வார்கள் என்பதெல்லாம் தவறு" என்று ஒரு சாரார் கூறலாம்.//
ஏற்கனவே இருந்தாலும் அதை சந்தைப்படுத்தும் ஊடகத்தின் இந்த குரூர மனப்பான்மை வியாபாரத்தின் பொருட்டே
//ஆனால் "டேட்டிங்" போன்ற பழக்கங்கள் சென்றடையலாமா? // கூடாது.
டேட்டிங் என்பது வேசித்தனத்திற்குக் கொடுக்கப்படும் இன்னொரு பெயர்தான்.
பதிவுலக டாக்டர்.ராமதாஸோ?.
இதற்குப் பெயர் BLIND DATING...
//என்ன செய்கிறது செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம்? கவனிப்பார்களா?//
யாரலும் தடுக்க முடியாது. முடிந்தால் மாறிக்கொள்ளுங்கள் இல்லையென்றால் மறைந்து கொள்ளுங்கள் கலாச்சார போர்வையில். haha
வாங்க பிரதீப்.
//நம் ஊரிலும் மாறிகொண்டிருகிறது - சரியா தவறா தெரியவில்லை அனால் கண்டிப்பாக ஆண்கள் (நம்ம ஊர் ஆண்)ஏற்று கொள்ள மாட்டார்கள்
//
நீங்கள் சொல்வது சரி தான். அது நம் இரத்தத்தில் ஊறியது. நன்றி
வாங்க பழமையண்ணே. ஆமாங்க நானும் வளரல தான் போலிருக்கு. நன்றி.
வாங்க பிரபாகர். நீங்க சொல்றதப் போல நல்ல விசயங்களை எடுத்துரைப்பது நம் கடமையே!! நன்றி
வாங்க கார்த்திகேயன்.
டேட்டிங்கை பட்டிதொட்டியெல்லாம் சென்றடையச் செய்யும் என்பது தான் வேதனைக்குரியது. நீங்கள் கூறிய திருத்தம் இன்னும் சரியாக இருக்கும் இந்த இடுகைக்கு. நன்றி.
சந்தைப்படுத்தலின் உச்ச கட்டம் தான் இது போன்ற நிகழ்ச்சிகள். நன்றி
வாங்க ராபின். வேசித்தனம் என்கிற வார்த்தை கொஞ்சம் அதிகமாகத் தெரிகிறது. நன்றி.
வாங்க தரன்.
//இதற்குப் பெயர் BLIND DATING...
//என்ன செய்கிறது செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம்? கவனிப்பார்களா?//
யாரலும் தடுக்க முடியாது. முடிந்தால் மாறிக்கொள்ளுங்கள் இல்லையென்றால் மறைந்து கொள்ளுங்கள் கலாச்சார போர்வையில். haha
//
கலாச்சாரப் போர்வையில் யாரும் ஒளிந்து கொள்வதில்லை. நாம் தான் பிற நாட்டுக் கலாச்சாரச் சட்டையை அணிய விரும்புகிறோம். வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
//செந்தில்வேலன்(09021262991581433028) said...கலாச்சாரப் போர்வையில் யாரும் ஒளிந்து கொள்வதில்லை. நாம் தான் பிற நாட்டுக் கலாச்சாரச் சட்டையை அணிய விரும்புகிறோம். வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.//
ஒ அப்படியா!!!..என்னதான் நம் கலாச்சாரம்?
மாட்டுசந்தையில் பெண்னை விற்பது போல் திருமணம். Dating சரியா தவறா என்பதெல்லாம் அவரவர் தனிப்பட்ட விடயம். தொலைக்காட்சி அதை சந்தைப்படுத்துகிறதே என்று கத்துவதினால் ஒரு பயனும் இல்லை.
காமம் இல்லாத காதல் இல்லவே இல்லை. சரி இங்கே காமம் மட்டும்தானே இருக்கிறது காதலே இல்லையே என்று நீங்கள் கேட்டால் அதற்கு பதில், காதலை கட்டாயப்படுத்த முடியாது. ஒரு பெண்னுடன் செக்ஸ் வைத்துக்கொள்வதினாலேயே அவளை ஒருவன் காதலிக்கிறான் என்றும் காதலிக்க வேண்டும் என்று சொல்வது அறியாமையின் உச்சகட்டம்.
இன்னும் ஒரு விடயம்,
அந்தப்புரம் வைத்து இருந்ததுதான் நம் கலாச்சாரம். கலாச்சாரத்தை மறந்து வாழ்வது நாம் தான்.
வாங்க தரன். விரிவான விளக்கத்திற்கு நன்றி.
Post a Comment