Saturday, February 13, 2010

எங்கே செல்கிறது கூகுள் பஸ்?

கடந்த இரண்டு நாட்களாகப் பரவலாக மக்கள் மத்தியில் பேசப்பட்டு வரும் விசயம் தான் கூகுள் பஸ் (Buzz)! ஜிமெயில் முகப்புப் பக்கத்திற்கு வரும்பொழுதே புதிதாக ஒரு சுட்டி வந்துள்ளது "கூகுள் பஸ்ஸைப் பிடியுங்கள்" என்று.

ஜி-மெயில் பயனர் கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும் கிடைத்திருக்கும் இந்த வசதியை, "ஆஹா!! அருமையான ஒரு சேவை" என்று சிலரும், "எதற்காக வலிந்து நம் மீது ஒரு புது சேவையைப் புகுத்துகிறது கூகுள்!" என்று சிலரும் கேள்வியை எழுப்பியுள்ளனர்.

சரி எதற்காக இந்த கூகுள் பஸ்?

இணைய உலகில் தேடுதல், மின்னஞ்சல், பேச்சாடல், செய்திகள், புகைப்படம் பகிர்தல் என்று பரவலாக அனைத்து சேவைகளையும் வைத்திருக்கும் கூகுள், ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற  உடனுக்குடன் தன் நிலையைப் புதுப்பிக்கும் "நிலை புதுப்பிப்பான்" (Status Updater ) சேவையை மட்டும் கோட்டை விட்டுவிட்டது. இந்த ஓட்டையை நிரப்புவதற்காக வந்திருக்கும் சேவை தான் பஸ்!!

இந்த நிலை புதுப்பிப்பான் மூலம் ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற நிறுவனங்களுக்கு என்ன பயன்? லேட்டானாலும் லேட்டஸ்டாக எதற்காக கூகுளும் இந்த சேவையில் குதித்துள்ளது?

எல்லாம் பாய்ஸ் படத்தில் நம்ம நடிகர் செந்தில் சொல்வது போல "இன்பர்மேசன் இஸ் வெல்த்" என்பதற்கே!! ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சேவையைப் பயன்படுத்தும் பயனர்கள் என்ன மாதிரியான விசயங்களை விவாதிக்கிறார்கள், எந்த ஊரில் எந்த விசயம் மிகவும் அதிகமாக விவாதிக்கப்பட்டது, எந்த வயதினர் எதை விரும்புகிறார்கள் போன்ற தகவல்கள் தான் இன்று "தங்க முட்டையிடம் வாத்துகள்" எனலாம்.

வர்த்தக ஆய்வு (Market Research ) நிறுவனங்கள் முதல் செய்தித் தகவல், தொழிற்துறை என அனைத்து துறையினர் இது போன்ற தகவல்களை மிகவும் பின்பற்ற ஆரம்பித்துள்ளார்கள். உதாரணத்திற்கு, ஆப்பிள் நிறுவனம் ஐ-பேட்    (i-pad) என்ற பொருளை சந்தையில் அறிமுகப்படுத்திய பொழுது அதைப் பற்றி எத்தனை சதவிதத்தினர் விவாதித்தனர்? எந்த வயதினரை அதிகம் ஈர்த்துள்ளது. "ஐ-பேட்"ன் போட்டி நிறுவனமான "கிண்டில்"(Kindle) வெளியான பொழுது எந்த அளவு விவாதம் நடந்தது போன்ற தகவல்களை வைத்து, நிறுவனங்கள் அடுத்த கட்ட நகர்வுகளைத் தீர்மானிக்கின்றன.


கடந்த 24 மணி நேரத்தில் அதிகமாக டிவிட்டரில் விவாதம் செய்த  விசயங்களில் கூகுள் பஸ், காதலர் தினம், ஷாருக்கானின் MNIK போன்ற விசயங்கள் முன்னனி உள்ளன. இது போன்ற தகவல்கள் வருங்காலத்தில் மதிப்பு மிக்கவை. இந்த வருமானத்தை இழக்க விரும்பாத கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கும் சேவை தான் பஸ்!!

அது மட்டுமல்ல?

இதனுடைய மற்றுமொரு பரிமாணம் சமூக இடங்கள் (SOCIAL LOCATION) சார்ந்த சேவைகள்!!

இன்று சென்னைக் கீழப்பாக்கம் ஈகா திரையரங்கள் அருகில் இருந்து ஒரு விசயத்தைப் பற்றி விவாதிக்கிறீர்கள் என்றால், அந்த இடம் சார்ந்த விளம்பரங்கள் செய்யும் வாய்ப்பு போன்ற சேவைகளில் கிடைக்கவிருக்கும் வருமானத்திற்கு எல்லையே இல்லை. 

Social Location சேவைகளால் பயனர்களுக்கு என்ன பயன்?

கூகுள் பஸ்ஸில் என்னைத் தொடரும் நண்பர்களுள் யார் மிக அருகில் இருக்கிறார்கள்? புதிதாக நான் சென்றிருக்கும் ஊரில் என் நண்பரின் நண்பர்கள் யார் யார் இருக்கிறார்கள்? அவர்கள் விருப்பம் தெரிவித்திருக்கும் இடங்கள் எவை போன்ற விசயங்களைச் சொல்லலாம்!!

இதுவரை கூகுள் பஸ் பற்றியும் சமூக வலையமைப்புத் தளங்கள் பற்றியும் சிறிய அறிமுகத்தைப் பார்த்தோம்.

எனக்கு இந்த பஸ்ஸில் பயனிக்க விருப்பமில்லை. நான் எத்தனை பேரைத் தொடர்கிறேன் என்ற விசயத்தை யாரிடமும் பகிர விருப்பமில்லை என்று நினைத்தால்... ஜிமெயில் பக்கத்தின் கீழே சென்றால் "Turn off buzz" என்று ஒரு சுட்டி உள்ளது. அதை அழுத்தினால் உங்களை யாரும் பஸ் செய்யமாட்டார்கள். 


ஜிமெயில் ப்ரபைல் (Profile) பக்கத்திற்கு சென்றால் உங்களைப் பற்றிய எந்த செய்தியைப் பகிர்வது என்று தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
என்ன? உங்களுக்கு கூகுள் பஸ்ஸில் ஏற விருப்பமிருக்கிறதா? இல்லையா?

21 comments:

சந்தனமுல்லை said...

Useful info. thanx!

நாஞ்சில் பிரதாப் said...

அப்ப இதான் மேட்டரா... நானும் மண்டையை பிச்சுகிட்டு இருந்தேன்...
சரி வர்ட்டா செந்தில் பஸ் மிஸ்ஸாகிடப்போவுது...

முனைவர்.இரா.குணசீலன் said...

அருமையான விளக்கம் நண்பரே

பழமைபேசி said...

தானாப் புடிச்சு உள்ள போட்டுட்டாங்க சாமியோவ்.....

ஹுஸைனம்மா said...

//இந்த வருமானத்தை இழக்க விரும்பாத கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கும் சேவை தான் பஸ்!!//

அப்போ கூகுளும் பஸ்ஸில (ஜீப்புல) ஏறிட்டாங்கன்னு சொல்லுங்க!!

cheena (சீனா) said...

பகிர்வினிற்கு நன்றி நண்பரே

க.பாலாசி said...

மொத நாளு ஆர்வமா நோண்டி நொங்கெடுத்துக்கிட்டிருந்தனுங்க.... அடுத்தநாளுல்லாம் சலிப்புத்தட்டிடுச்சு...

//மெயில் பக்கத்தின் கீழே சென்றால் "Turn off buzz" என்று ஒரு சுட்டி உள்ளது//

மூணாவது நாள் முக்கியமா பண்ணது இததானுங்க...

நல்ல தகவல் பகிர்வு...மொத்தத்தில் என்னவென்று தெரிந்துகொண்டேன்...நன்றி...

Madurai Saravanan said...

nalla thakavalkalai thanthatharkku nanri. buzz onile irukkattum.

Tech Shankar said...

பகிர்வுக்கு நன்றி நண்பரே

அபுல் பசர் said...

கூகிள் பஸ் பற்றிய விளக்கம் அருமை
சந்தேகங்கள் தீர்ந்தது.
நானும் பஸ்ஸில் பயணம் செய்ய கிளம்பிவிட்டேன்.
ரைட். போகலாம்.

செ.சரவணக்குமார் said...

நல்ல தகவல் பகிர்வு செந்தில்.

அக்பர் said...

பகிர்வுக்கு நன்றி செந்தில்.

jothi said...

பகிர்வுக்கு நன்றி செந்தில்

காரணம் ஆயிரம்™ said...

எதிர்காலத்தில், தேடுபொறிகளை யாரும் அவ்வளவாக பாவிக்கமாட்டார்கள் என்று இடத்தில் படித்திருந்தேன்.. அதைப்பற்றிய என்னுடைய குறிப்புக்களையும் இங்கே காணவும்..

தேடுபொறிகளிலும் கிடைக்க வாய்ப்பில்லாத சில முக்கியத்தகவல்களை பகிர என்னுடைய சிறு முயற்சி இது -

http://e3kelvi.blogspot.com

அன்புடன்
கார்த்திகேயன்

Chitra said...

Thank you for the info about BUZZ

இய‌ற்கை said...

ohh..ivlo than buzz ah... nice..informative

ஜிஎஸ்ஆர் said...

கூகுள் பஸ் பற்றி நண்பர் அருமையான விளக்கம் கொடுத்துள்ளார் எல்லோரும் ஆர்வத்துடன் பஸ்ஸில் ஏறும் முன்பு ஒரு முறை இதையும் வாசித்து விடுங்களேன் http://ethirneechal.blogspot.com/2010/02/buzz.html

வாழ்க வளமுடன்


என்றும் அன்புடன்
ஞானசேகர்

malar said...

நல்ல விளக்கம் ....

தகவலுக்கு நன்றி....

சகாதேவன் said...

ஏற்கனவே அரசு பஸ்களுடன் போட்டி போட்டு என் பஸ்கள் ஓடுகின்றன. இப்போ கூகுளும் பஸ் விடப் போகிறதா என்று பயந்து விட்டேன்.

ச.செந்தில்வேலன் said...

@ சந்தனமுல்லை

நன்றி.

@ நாஞ்சில் பிரதாப்,

அது தாங்க மேட்டரு. நன்றி.

@ முனைவரி.இரா.குணசீலன்,

நன்றி முனைவரே.

@ பழமைபேசி,

ஆமாங்க. பொசுக்குனு பிடிச்சு உள்ள போட்டுட்டாங்க.

@ ஹூசைனம்மா,

ஆமாங்க. நன்றி.

@ சீனா,

நன்றிங்க ஐயா.

@ க.பாலாசி,

பஸ்ஸுல இருந்து இறங்கீட்டீங்க அப்போ :)

ச.செந்தில்வேலன் said...

@ மதுரை சரவணன்,

நன்றி.

@ Tech Sankar,

நன்றி.

@ அபுல் பசர்,

நன்றி.

@ செ.சரவணகுமார்,

நன்றி.

@ அக்பர், ஜோதி

நன்றி.

@ காரணம் ஆயிரம்,

நல்ல தகவல்கள் அன்பரே, தொடருங்கள்.

@ சித்ரா,

நன்றி.

@ இயற்கை,

நன்றி.

@ ஜிஎஸ்ஆர்

நன்றி.

@ மலர்,

நன்றி.

@ சகாதேவன்,

ஹாஹா.. அந்த பஸ்ஸா? கவலைப்படாதீங்க. உங்களுக்கு இன்னும் போட்டி வரல :)

Related Posts with Thumbnails