Wednesday, June 9, 2010
தீதும் நன்றும் - 10-06-02*
Friday, May 28, 2010
ஃபேஸ்புக் - நம் பாதுகாப்பிற்கு செய்ய வேண்டியவை என்ன?
![]() |
![]() |
![]() |
![]() |
Wednesday, January 6, 2010
புத்தாண்டில் ஓர் உறுதிமொழி..
****
****
Friday, April 24, 2009
பள்ளிக்கூடங்களை மூடுவதால் வேலைவாய்ப்பா?
"ஜப்பானில், பல ஊர்களில் கல்வி கற்போர் எண்ணிக்கை குறைந்து வருவதால் பள்ளிக்கூடங்கள் மூடப்படுகின்றன" என்ற செய்தியைப் படித்தேன். ஒரு உதாரணம்...
இந்தியாவின் மக்கள் தொகையின் சராசரி வயது 25 தான் என்பதும் 30வயதுக்கு குறைவானோர் 60 கோடி பேர் இருக்கிறோம் என்பதும் தான் நமக்கு நல்ல வாய்ப்பாக அமைவது.
இப்போதிருக்கும் சூழ்நிலையில் நம் இளைஞர்களால் அரசியல் மூலம் நாட்டையும் பொருளாதாரத்தையும் முன்னேற்ற முடியவில்லையென்றாலும், இது போன்ற வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மூலம் வீட்டின் பொருளாதாரத்தையும், அந்நிய செலாவனியின் மூலம் நாட்டின் பொருளாதாரத்தையும் முன்னேற்ற முடியுமே!!
ஆக, ஜப்பானில் பள்ளிக்கூடங்கள் மூடுவதாக வந்த செய்தி நமக்கு வாய்ப்பாகத் தானே தெரிகிறது?
Friday, April 17, 2009
தேர்தலும் பொருளாதாரமும்...
கடந்த ஆறேழு மாதங்களாக நாம் கேட்க, பார்க்க நேரிடும் செய்திகளில் "பொருளாதாரப் பின்னடைவு" பிரதானமாக இடம் பிடித்து வருகிறது. பின்னடைவை சரி செய்து பணப்புழக்கத்தை ஏற்படுத்த அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான் என ஒவ்வொரு நாடும் திட்டங்களை வகுத்துவருகிறதுபெரும்பாலான நாடுகளில் பொருளாதாரம் மந்தமடைந்துள்ள நிலையில், நம் நாட்டில் எப்படி உள்ளது?
திட்டங்கள் அறிவிக்கப்படாததற்கு தேர்தல் ஒரு காரணமே!! தேர்தலின் போதும் சிறிதளவு வேலைவாய்ப்பும், தேர்தலிக்கு பிறகு நல்ல திட்டங்கள் வரும்பட்சத்தில் பொருளாதாரமும், வேலைவாய்ப்பும் மேம்பட வாய்ப்புள்ளது!!
தேர்தலால் சிறிதளவு பணப்புழக்கமும், வேலைவாய்ப்பும் அதிகரிக்கிறதா? அது எப்படி?
ஊடகங்களில் வரும் செய்திகளைப் பார்த்தால், ஒவ்வொரு கட்சியும் தொகுதி தோ
றும் 4 அல்லது 5 கோடிகள் வரை செலவிடுவார்கள் என்றும் அப்படியே அனைத்து கட்சிகளையும் கணக்கில் கொண்டால் தொகை 20 கோடியை தாண்டும் எனவும் தெரிகிறது. அதுவே, நாடு முழுவதும் கணக்கில் கொண்டால் 10,000 கோடியைத் தாண்டிவிடும்....சுவர் விளம்பரங்கள், கட் அவுட்கள் வைப்பவர்கள், ஒலிப்பெருக்கிகள்- விளக்குகள் வாடகைக்கு விடுவோர், மேடை அலங்காரம் செய்வோர், வாகன் வோட்டிகள், மதுபானக் கடைகளில் பணிபுரிவோர், மாமிசக்கடை உரிமையாளர்கள், உணவகங்கள் வைத்திருப்போர் போன்றோரை தேர்தலால் வேலை வாய்ப்படைபவர்கள் என்று சொல்லலாம்.
இவர்களைத் தவிர்த்துப் பார்த்தால், கோடிகள் செலவாவது கட்சிகாரர்களுக்கும், கட்சிக்காரர்கள் என்ற பெயரில் உலாவரும் ரவுடிகளுக்கும் அடிமட்டத் தொண்டர்களுக்கும் தான்.. இதற்கிடையே, தொகுதி மக்கள் தங்களுக்காக வாக்களிக்க(??) செலவிடும் தொகையையும் மறந்து விடக்கூடாது.
இப்படி தேர்தலின்போது சிறிதளவு அதிகரிக்கும் பணப்புழக்கமும் வேலைவாய்ப்பும், "நுனி நாக்கில் அமுதமும் அடி நாக்கிலே நஞ்சும்" வைத்திருப்பதைப் போன்றதே!!
இந்தமுறை தேர்தலுக்காக செலவிடும் 10000 கோடியை, சில திட்டங்களுக்காக 2008-09 பட்ஜட் ஒதுக்கீடுடன் ஒப்பிடுகையில் நாட்டுக்கு என்னவெல்லாம் செய்ய முடியும் என்பது புரியும். 2008-09 பட்ஜட்டில்
*தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்படி, 100 நாட்கள் கட்டாய வேலைவாய்ப்பு தருவதற்காக ஒதுக்கீடு செய்தது 16000 கோடி..
* தேசிய குடிநீர் வாரியத்திற்கு ஒதுக்கியது 7300 கோடி..
* சென்னையில் கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டத்திற்கு பட்ஜட் ஒதுக்கீடு 300 கோடி..
5 வருடங்களுக்கு பாராளமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டிற்காக ஒதுக்கும் நிதியே 10 கோடியைத்தான் தொடும் என்கிற போது ஒவ்வொரு தொகுதிக்கும் 4-5 கோடியை எப்படி செலவு செய்ய முனைகிறார்கள்? இந்தப் பணம் எங்கிருந்து வருகிறது?
வரும் பணமெல்லாம், ஓட்டுப்போடாதோர் கட்டும் வரிபணத்திலிருந்தும், ஓட்டுப்போடும் ஏழைகளுக்காக வகுக்கும் திட்டங்களிலிருந்தும் தான்!!
தேர்தல் தான் ஒரே வழி!!
அனைவரும், குறிப்பாக இதுவரை வாக்களிக்காதோரும் "நேர்மையானவர்களுக்கு" வாக்களிப்பதே ஒரே வழி!! அப்படி வாக்களிக்காமல், நாட்டின் பொருளாதாரத்தைப் பற்றி அங்கலாய்த்துக்கொள்வது "மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவதற்கு சமமாகும்"!!
இந்தப்பதிவை யூத்ஃபுல் விகனில் படிக்க கீழே சொடுக்கவும்.
http://youthful.vikatan.com/youth/senthilstory17042009.asp
.
Friday, April 10, 2009
நானோவை நினைக்கையிலே!!
மத்திய வர்க்கத்தினர்களிடம், "உங்கள் வாழ் நாள் கனவுகளாக நீங்கள் கூற விரும்பும் 5 விஷயங்கள் என்ன?" என்று கேள்வியை வைத்தால் வரும் பதில்களில், "சொந்தமாக வீடு கட்டுவது, கார் வாங்குவது" போன்றவை கட்டாயமாக இடம் பெறும்.அந்த கனவுகளில் ஒன்றான "கார் வாங்குவதை" நனவாக்கும் வகையாக அமைந்ததே "டாடாவின் ஒரு லட்ச ரூபாய் காரான நேனோவின் அறிவிப்பு"
கிராமங்களை எடுத்துக்கொண்டால், சொந்தமாகக் கார் வைத்திருந்தால் "மணிக்கொரு முறை" வரும் பேருந்திற்கோ, ஆட்டோவிற்கோ காத்திருக்க வேண்டியதில்லை. மேலும், வீட்டில் கார் இருப்பது வசதிக்காக என்பதுடன் அது ஒரு கௌவரமான விஷயமும் கூட..
ஏனென்றால், நானோ சம்பந்தமான பேச்சு வரும் போது கூடவே வருவது, "கார் வாங்குவதெல்லாம் சரி.. அதை எங்கே ஓட்டுவது.. எங்கே நிறுத்துவது".. என்பதும் தான்.
சொந்த வீடு வைத்திருப்போர் என்றால் ஒரு கார் நிறுத்தும் அளவிற்கு இடம் இருக்கும் என்று நினைத்துக் கொள்ளலாம். அதுவே வாடகை வீட்டில் இருப்போர் என்றால் அவர்களது கையில் எதுவும் இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.
"சுண்டைக்காய் காற்பணம் சுமை கூலி முக்காற்பணம்" என்னும் பழமொழி தான் இங்கே ஞாபகத்திற்கு வருகிறது...
சென்னையின் தி.நகர், கோவையின் பெரியகடைவீதி போன்ற பகுதிகளில், இருசக்கர வாகனங்களை நிறுத்தவே இடமில்லை என்னும் போது கார்களை எங்கே நிறுத்துவது?
ஒவ்வொரு புறமும் 6ல் இருந்து 8 லேன் வரை உள்ள அகல சாலைகளைக் கொண்ட துபாய், சிங்கப்பூர் போன்ற நகரங்களிலேயே அனைவரையும் பஸ், மெட்ரோ ரயில் போன்றவைகளை தான் உபயோகிக்கத் தூண்டுகிறார்கள். கார்கள் பெருகுவதைத் தடுக்க சிங்கப்பூரில் அதிக வரி விதிப்பதும், துபாயில் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கே ஓரிரு வருடங்கள் செலவாகிறதென்பதும் தெரியவருகிறது.
நம் ஊரிலோ, எல்லாம் அப்படியே நேரெதிர்!!
இப்படி பல கேள்விகளுடன் நமக்கு வரும் இன்னோரு கேள்வி, மற்ற கார் நிறுவனங்கள் எல்லாம் 2- 3 லட்சத்திற்கு அதிகமாக கார்களின் விலையை நிர்ணயிக்கும் போது டாடா நிறுவனத்திற்கு மட்டும் இந்த விலை எப்படி சாத்தியமாகிறது என்பது தான். அதற்கு அரசு கொடுக்கும் வரிச்சலுகைகள், குறைந்த வாடகையில் நிலம், புதிய தொழில்நுட்பம் எல்லாம் இருந்தாலும், குறைந்த விலையில் கார்களை விற்பதில் கிடைக்கும் வாடிக்கையாளர்களின் நீண்டகால நம்பகத்தன்மையே பெரிய லாபமாகும்.
இப்படி ஒரு திட்டம் தான் டாடா நிறுவனத்தின் நானோ கனவு!!
Tuesday, March 24, 2009
ஐபிஎல் - இந்திய பிரைம்டைம் லீக்!!
கடந்த சில வாரங்களாக, இந்திய உள்துறை அமைச்சகமும் ஐபிஎல் நிர்வாகமும் நடத்திய நீயா? நானா? ஆட்டத்தின் முடிவு, இந்திய ப்ரீமியர் லீக் தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் என்பது தான்!! இந்திய ப்ரீமியர் லீக் தென் ஆப்பிரிக்காவில் நடைபெறுவதா? அது எப்படி?
ஐபிஎல் போட்டியானது ஐரோப்பாவில் நடைபெறும் கால்பந்து லீக் போட்டிகளின் அடிப்படையில் அமைக்கப்பட்டு உள்ளது. இதில், பல்வேறு நாடுகளின் வீரர்களும் ஒருசேர இனைந்து விளையாடும் வாய்ப்பு மற்றும் உள் நாட்டு வீரர்களும் வெவ்வேறு அணிகளில் பங்கேற்று மோதுவதால் மிகவும் சுவாரசியமானதாக அமைகிறது. அது மட்டுமில்லாமல், இதில் கொடுக்கப்படும் பணம் அனைவரையும் ஈர்க்கும் விஷயமாக உள்ளது!!
ஐபிஎல் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெறுவதால் யார் பார்ப்பார்கள்? தென் ஆப்பிரிக்காவில் இந்திய வம்சாவழியினர் (PIO )மற்றும் வெளி நாடு வாழ் இந்தியர்கள் (NRI) மொத்தமாக 15 லட்சம் பேர் உள்ளனர். இவர்கள் மற்றும் தென் ஆப்பிரிக்க கிரிக்கட் ரசிகர்கள் மைதானத்தில் 40 சதவிதம் பேர் பார்த்தாலே இந்தியாவில் மைதான அரங்கம் நிரம்பியதிற்கு ஈடாகிவிடும். மேலும் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வீரர்கள் சிறப்பாக விளையாடியதால் அங்கு மிகவும் எதிர்பார்ப்பு இருக்கும்.
இதில் ஐபிஎல் நிர்வாகத்திற்கும் தென் ஆப்பிரிக்கா கிரிக்கட் வாரியத்திற்கும் வருமானத்தில் எவ்வளவு பங்கு (Revenue sharing) என்பது நமக்கு தெரியாத விஷயம்!! அது எவ்வளவாக இருந்தாலும், தொலைகாட்சி ஒளிபரப்பு உரிம விற்பனை வருமானத்தை ஒப்பிடும் போது மிகவும் சொற்பமாகத்தான் இருக்கும்!! 10 வருடத்திற்கு இந்தியாவில் ஒளிபரப்பும் உரிமம் பெற சோனி நிறுவனம் செலுத்தியது 4000 கோடி!! மற்ற நாடுகளில் ஒளிபரப்பு உரிம விற்பனை வேறு உள்ளது!! இந்த தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிம விற்பனை வருமானத்தை ஒப்பிடுகையில், இந்திய பொது தேர்தல் பட்ஜட் ஒதுக்கீடான 1100 கோடியே சிறியதாகத்தான் தெரிகிறது!!
இதனால் தான், இந்திய பொதுத் தேர்தல் நடக்கும் நேரத்தில் கூட, ஐபிஎல் கிரிக்கட் போட்டியை நடத்த அதிக ஆர்வம் காட்டுகிறது இந்திய கிரிக்கட் வாரியம்!! இதற்குக் கூறப்படும் காரணம், இந்திய கிரிக்கட் ரசிகர்களின் நலத்திற்காக என்பது தான்!! இந்திய ரசிகளுக்காக ப்ரைம்டைம் எனப்படும் 8மணியில் இருந்து 10 மணி வரை நடைபெறும் என்பது முக்கியமான விஷயம்!! அதிகமான மக்கள் தொலைக்காட்சி பார்ப்பது இந்த நேரத்தில் தான்!! இந்த ப்ரைம்டைமில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியின் நடுவே ஒளிபரப்பப்படும் விளம்பரங்களூக்குத் தான் அதிக கட்டணம் வசூலிக்கப்படும்!! "தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலிருக்க மாட்டான்" என்பது தான் இங்கே ஞாபகத்துக்கு வருகிறது!!
இப்படி நடக்கவிருக்கும் இந்திய பிரைம்டைம் லீக்கால் யாருக்கு சாதகம், யாருக்கு பாதகம்!!
இந்திய கிரிக்கட் வாரியம், கிரிக்கட் உலகில் மிகப்பெரிய சக்தி என்பது மீண்டும் நிரூபிக்கப்படும். இந்திய இளம் கிரிக்கட் வீரர்களூக்கு சீனியர் கிரிக்கட் வீரர்களுடன் விளையாட இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். பொருளாதார மந்த நிலையை சரி செய்து, தங்களது சேவை மற்றும் பொருட்களின் விற்பனையை பெருக்க அனைத்து பன்னாட்டு மற்றும் உள் நாட்டு நிறுவனங்களும் முயலும். விளம்பர தயாரிப்பு நிறுவனங்களூக்கு இது ஒரு பணம் கொட்டூம் காலமாக இருக்கும். அழுகை சீரியல்களில் இருந்து ஒரு மாத காலம் விடுபடலாம் என்பது பெரும்பாலானோர் நினைப்பாக இருக்கலாம்!!
இந்த அறிவிப்பால் அதிக பாதிப்பு, போட்டியை நேரில் கண்டு ரசிக்க முடியாமல் ஏமாந்த ரசிகர்களூக்குத்தான்!! சச்சினும் ஜெயசூர்யாவும் ஒன்றாக களமிறங்கும் காட்சியை நேரில் காண முடியாமல் போனது ஒரு ஏமாற்றமே!! சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை உற்சாகப்படுத்த சிவமணி ட்ரம்ஸை அடித்த அடியை மறக்க முடியுமா? "சூப்பர் கிங்ஸ் வீரரும் லட்சுமிகரமான நடிகையும் கிழக்குக்கடற்கரை சாலையில் பைக்கில் சென்றனர்", என்பது போன்ற கிசுகிசுக்கள் கிடைக்காமல் போனது பத்திரிக்கைகளூக்கு ஒரு இழப்பு. லோக்கல் தொலைக்காட்சிகளூக்கு விளம்பர வருமானம் கொஞ்சம் குறையலாம். இதற்கிடையே, கிரிக்கட் மைதானத்தில் பணிபுரியும் கடை நிலை ஊளியர்களின் பாதிப்பை யாரும் கண்டு கொள்ளப்போவதில்லை!! இதெல்லாம் எதனால்? பிரைம்டைமில் வரும் பணத்தால்!!
வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் ஆடித் தள்ளுபடி போன்ற ஒரு விழாக்கோலத்திற்கு தயாராகலாம். செட் டாப் பாக்ஸ் போன்றவையின் விற்பனை பல மடங்கு பெருகலாம். செல்லுலார் நிறுவனங்கள் ஐபிஎல் போட்டியின் தகவல்களையும் ஸ்கோர்களையும் தெரிவத்தல், செல்போனிலேயே ஐபிஎல் போட்டி கண்டு கழித்தல் போன்ற புதிது புதிதாக திட்டங்களை வகுக்கலாம். ஐபிஎல் டி-ஷர்ட் போன்றவையின் விற்பனை அதிகரிக்கலாம். அனைத்து நட்சத்திர ஹோட்டல்களிலும் ஐபிஎல் போட்டியை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகளூம் காக்டெயில் பார்ட்டிகளூம் நடைபெறலாம். இந்த ஐபிஎல் போட்டிக்கு ஒவ்வொரு 10 நொடிகளூக்கு பல ஆயிரங்களை கொடுத்து அனுசரனை (sponsorship) வழங்கும் அனைத்து நிறுவனங்களூம், லாபம் ஈட்ட அனைத்து சலுகைகளையும், பிரச்சாரங்களையும் செய்யும் என்பது தெரிந்ததே. .
சோழியன் குடுமி சும்மாவா ஆடும்? இவ்வளவு செலவுகளையும் மக்களுக்காகவா இந்த வணிக நிறுவனங்கள் செய்கின்றன? நாம் அன்றாடம் வாங்கும் ஒவ்வொரு பொருள்களின் விலையிலும் 1 ருபாய் அல்லது 2 ருபாய் அதிகரித்தால் நமக்குத் தெரியவா போகிறது? நாட்டில் தேர்தல் நடந்தாலென்ன அல்லது வேறேதாவது நடந்தால் என்ன? நமக்குத்தான் தினமும் கிரிக்கட் வீரகளையும் நடிக நடிகைகளையும் தொலைக்காட்சியில் பார்த்தாலே பசி தீர்ந்து விடுமே!! அதுவும் பிரைம்டைமில்!! வரவேற்போம் இந்திய பிரைம்டைம் லீக்கை!!
http://youthful.vikatan.com/youth/senthilstory250309.asp
.





