இசைக்கு மயங்காதவர் யாரேனும் இருக்க முடியுமா? அதுவும் அழகான வரிகளுடன், இதமான இசை அமைந்தால் சொல்லவா வேண்டும். இசை மற்றும் பாடல் வரிகளுடன் நீங்கள் மிகவும் நேசிப்பவரை நினைத்துப் பார்க்கும் பொழுது கிடைக்கும் உணர்வு இருக்கிறதே..
ஓரிரு நாட்களாக நான் அதிகமாகக் கேட்கும் பாடல், ஏன் அண்மையில் ஒரு பாடலைப் பல முறை கேட்டதென்றால் அது இதுவாகத் தான் இருக்கும்!! பொக்கிஷம் படத்தில் வரும் "நிலா நீ வானம் காற்று.." என்ற பாடல்..
சபேஷமுரளியின் இதமான இசை யுகபாரதியின் வரிகளைச் சிதைக்காமல் இருப்பது இந்தப் பாடலிற்கு அழகூட்டியுள்ளது. விஜய் யேசுதாஸும் சின்மயியும் வரிகளுக்கு உயிர் கொடுத்த விதம் பிரமிப்பை ஏற்படுத்துகிறது.
அதில் சின்மயியின் குரலில் கீழே வரும் வரிகள் இருக்கிறதே.. அடடா..
தன் கணவனையோ, காதலனையோ நினைத்து இது விட அழகாகப் பாட முடியுமா?
அன்புள்ள மன்னா அன்புள்ள கணவா
அன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே
அன்புள்ள ஒளியே அன்புள்ள தமிழே
அன்புள்ள செய்யுளே அன்புள்ள இலக்கணமே
அன்புள்ள திருக்குறளே அன்புள்ள நற்றினையே
அன்புள்ள படவா அன்புள்ள திருடா
அன்புள்ள ரசிகா அன்புள்ள கிறுக்கா
அன்புள்ள திமிரே அன்புள்ள தவறே
அன்புள்ள உயிரே அன்புள்ள அன்பே
இதில் யாவுமே இங்கு நீதான் என்றால்
என்ன தான் சொல்ல சொல் நீயே
பேர் அன்பிலே ஒன்று நான் சேர்ந்திட
வீண் வார்த்தைகள் இனி ஏன் தேடிட..
முதலில் மன்னா, கணவா என்று வரும் வரிகள், அன்புள்ள ஒளியே, அன்புள்ள தமிழே அன்புள்ள செய்யுளே அன்புள்ள இலக்கணமே அன்புள்ள திருக்குறளே அன்புள்ள நற்றினையே என்று செல்வது ஒரு புது அனுபவத்தைத் தருகிறது. பிறகு செல்லமாக படவா, திருடா, கிறுக்கா என்று வரும் வார்த்தைகளுக்காகவே யுகபாரதிக்கு ஒரு ராயல் சல்யூட்!!
ஹம்மா.காம் (Hummaa.com) இணையதளத்திற்கு என் நன்றிகள்!! என்னைப் பொங்கல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் களேபரங்களில் இருந்து காப்பாற்றியதற்காக!!
..
