Sunday, October 11, 2009

அமீரகக் குறிப்புகள் வ-09 வா-41: அமீரக விசா, யஸ்மரினா மற்றும் தீபாவளி


அமீரகத்தைச் சுற்றிப் பார்க்கத் தகுந்த மாதங்கள் நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை எனலாம். மே மாதம் முதல் 40 டிகிரிக்கும் அதிகமாகச் சென்ற தட்பவெப்ப அளவு இப்பொழுது 35 டிகிரி அளவில் உள்ளது. இது மேலும் குறைந்து, மெதுவாக குளிர்காலமும் சுற்றுலாக் காலமும் ஆரம்பித்து விடும்.


அமெரிக்கா, ஐரோப்பா, அப்பிரிக்கா நாடுகளில் பணிபுரியும் அன்பர்கள் இந்தியா செல்லும் வழியில் அமீரகத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டுச் செல்லலாம்..

விசா இல்லாமல் எப்படி நாட்டிற்குள் நுழைவது?

இருக்கவே இருக்கிறது 96 மணி நேர விசா!! எமிரேட்ஸ் விமானத்தில் பயணச்சீட்டை முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு செய்யும் பொழுது துபாயில் 8 மணி நேரத்திற்கு அதிகமாக இடைவேளை இருக்கும்படி பார்த்துக்கொண்டால் போதும்.

எமிரேட்ஸ் நிறுவனத்தினரை அணுகி உங்கள் முன்பதிவு எண்ணுடன் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) நகல், புகைப்படம் மற்றும் விசாக் கட்டணம் தோராயமாக 4000 ரூபாயைக் கொடுத்து விட்டால் போதும், விசாவைத் தயார் செய்துவிடுவார்கள். 96 மணி நேர விசாவை முன்பதிவு எண்ணுடன் இணைத்துவிடுவார்கள்.

பிறகு துபாய் நகரில் இறங்கிய பிறகு இந்த எண்ணைக் சுங்க அதிகாரிகளிடம் காட்டினால் போதும்!!

சுங்க அதிகாரிகள் எங்கே தங்குவீர்கள் என்று கேட்டால் என்ன செய்வது? துபாயில் தங்குமிடத்தை எமிரேட்ஸ் நிறுவனத்தினரிடம் பதிவு செய்ய வேண்டுமா?

தேவையில்லை. உங்களுக்குத் தெரிந்தவர் அல்லது உறவினர்களது தொடர்பு எண்ணையும், முகவரியையும் காட்டினாலே போதுமானது. அமீரகத்தைச் சுற்றிப்பார்க்க வரும் அனைத்து அன்பர்களுக்கும் வாழ்த்துகள்!!

குறிப்பு: விசா பெற்றிருந்தாலும் நாட்டினுள்ளே அனுமதிப்பது சுங்க அதிகாரையைப் பொருத்ததே!! இதை முன்பே இந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளேன்.
************

அபுதாபி - யஸ்மரினாவில் பார்முலா ஒன் போட்டி நவம்பர் 1ம் தேதியன்று துவங்குகிறது. வளைகுடா நாடான பஹ்ரைனில் ஏற்கனவே இப்போட்டி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. சில வருடங்களுக்கு முன் ஹைதராபத்தில் இந்தப் போட்டியைக் கொண்டு வருவதற்கு அன்றைய முதல்வர் முயற்சி செய்தது நினைவிருக்கலாம்.

இந்த மைதானத்தை 162 ஹெக்டர் பரப்பளவில் உருவாக்கியிருக்கிறார்கள். 500 அறைகள் கொண்ட ஐந்து நட்சத்திர விடுதி, செயற்கையான தீவு என அசத்தியிருக்கிறார்கள்.


இந்தப் போட்டிக்கான நுழைவுச்சீட்டு விற்பனை ஆரம்பித்துள்ளது. நுழைவுச்சீட்டின் விலை தோராயமாக 15000 ரூபாயில் இருந்து ஆரம்பிக்கிறது. பணமும் விருப்பமும் உள்ளவர்களுக்கு நல்ல அனுபவமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.


**********

ஏம்பா, தீபாவளிக்கு லீவு எல்லாம் கிடைக்குமா?

துபாய்ல தீபாவளி எல்லாம் எப்படி இருக்கும்? பட்டாசு கிட்டாசெல்லம் வெடிக்க முடியுமா?

தீபாவளிப் பண்டிகை நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில் அமீரகத்தில் இருப்பவர்கள் எதிர்கொள்ளும் கேள்விகள் இவை!!

தீபாவளி அன்று விடுமுறை எல்லாம் கிடைக்காது. இந்த வருடம் சனிக்கிழமையன்று பண்டிகை வருவதால் வீட்டில் கொண்டாடலாம். இங்கே பட்டாசுகள் கிடைக்காது. எங்காவது கிடைத்தாலும் பாதுகாப்பு காரணத்தால் வெடிக்க அனுமதி கிடையாது.

இந்தியர்கள் வாழும் பகுதிகளிலுள்ள கடைகளில் விளக்குகளும், வண்ணத் தோரணங்களும் விற்பனைக்குக் கிடைக்கின்றன. நகைக்கடைகளில் "தீபாவளி ஆஃபர்" என்ற வாசகங்களையும் பார்க்க முடிகிறது. சில கடைகளில் தீபாவளிக்குத் தேவையான பொருட்களை விற்பதற்கென்றே தனிப்பகுதியையும் துவக்கியிருக்கிறார்கள்.
சில அலுவலகங்களில் தீபாவளியை முன்னிட்டு மதிய வேளையில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது, வெளிநாட்டில் இருந்தாலும் மகிழ்ச்சியான விசயம்!!

அன்பர்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்!
**

13 comments:

vasu balaji said...

நல்ல தகவல் செந்தில்.

ப்ரியமுடன் வசந்த் said...

அண்ணே துபாய் காசுக்கு 4000 ஆயிரமா?

பாக்கலாமுன்னு ஆசைதான்...

பிரபாகர் said...

அமீரகத்தில் (ராஸ்.அல்.கைமாவில்) ரம்ஜான் மற்றும் தீபாவளி சமயத்தில் இருந்து பார்த்திருக்கிறேன். வெளிநாட்டு தீபாவளி கொண்டாட்டங்களில் சிங்கப்பூர் பெஸ்ட் என்பேன். இந்தியாவை விடவும் அற்புதமாய் இருக்கும்.

விசா பற்றிய விஷயங்கள் அருமை செந்தில்.

தகவல்களுடன் கூடிய பதிவு.

பிரபாகர்.

ஆ.ஞானசேகரன் said...

பகிர்வுக்கு நன்றி

அது ஒரு கனாக் காலம் said...

உபயோகமான பதிவு ... தீபாவளி வாழ்த்துக்கள்

கலையரசன் said...

அபுதாபி பார்முலா ஒன் போட்டி கண்டிப்பா பார்க்கனும் செந்தில்! என்னா.. நாகா பஹ்ரைன் F1 பார்த்துட்டு கதை எழுதினாரு இல்ல? அதுபோல நாங்களும் போடுவோமுல்ல..

அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள் "விக்கி" செந்தில்!
நான் தீபாவளிக்கு ஊருக்கு போறேனே....

ஈரோடு கதிர் said...

//இங்கே பட்டாசுகள் கிடைக்காது//

பரவாயில்லையே

மின்னுது மின்னல் said...

நல்ல பதிவு

தீபாவளி வாழ்த்துக்கள்

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாங்க பாலாண்ணே, நன்றி

வாங்க வசந்த். இல்ல வசந்த் இந்திய ரூபாய் 4000 செலவாகும் :)

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாங்க பிரபாகர். ஆமாம் நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்.. சிங்கையில் தீபாவளி நன்றாக இருக்குமென்று. நன்றி

வாங்க ஆ.ஞானசேகரன். நன்றி

வாங்க சுந்தர் சார். நன்றி.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாங்க கலை. ஆமாம் கண்டிப்பா பார்க்க வேண்டும் ஃபார்முலா ஒன்னை..தீபாவளி அருமையானதாக அமைய வாழ்த்துகள்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாங்க கதிர். நன்றி

வாங்க மின்னல். நன்றி

வினோத் கெளதம் said...

எப்பொழுதும்ப்போல் கலக்கல் மற்றும் உபயோகமான தகவல்கள்..

Related Posts with Thumbnails