Monday, November 16, 2009

முப்பாட்டன் சொத்து..


நம் வீட்டுத் தோட்டத்தைத் தோண்டிக் கொண்டிருக்கும் பொழுது ஒரு புதையல் கிடைக்கிறது. ஒரு பெரிய மண்பானை. அதைத் தோண்டி எடுத்து உடைத்தால் "என் பேராண்டிகளுக்கு" என்று பொறிக்கப்பட்ட பாத்திரங்களும், அழகிய வேலைப்பாடுகள் கொண்ட சின்ன சிலைகளும், வாழ்வியல் குறித்த பனையோலைகளும் கிடைக்கின்றன. நம் முப்பாட்டன் பேராண்டிகளுக்காக புதைத்து வைத்துள்ளார். அதைப்பார்க்கும் பொழுதே சில நூறாண்டுகள் பழமையானது என்று புரிகிறது.நாம் என்ன செய்வோம்?


பழைய பாத்திரங்களையும், பனையோலைகளையும் வைத்து என்ன செய்வது என்று நினைப்போமா? அல்லது நம் பேராண்டிகளுக்காகவும் பேத்திகளுக்காகவும் அதை பாதுகாத்து வைப்போமா?
***********
ஷார்ஜா நகரின் மிகவும் பரபரப்பான ரோலா பகுதியைச் சுற்றி வரும் பொழுது, சிறிய கோட்டை ஒன்று கண்ணில் தென்படும். அந்தக் கோட்டையின் அருகில் சென்று பார்த்தால் "பாரம்பரியச் சின்னம் - அரசால் பாதுகாக்கப்படும் இடம்" என்று அறிவிப்புப் பலகையை வைக்கப்பட்டுள்ளது.
ஓமன் நாட்டில் முசுந்தம் என்றொரு சுற்றுலா நகரம் உள்ளது. அந்த ஊரிற்குச் செல்லும் வழி கரடு முரடான மலைகளையும், ஆள் நடமாட்டமில்லாத பொட்டல் காடுகளாகவும் இருக்கும். அந்தப் பொட்டல் காட்டில் ஒரு மண்ணால் கட்டப்பட்ட கோட்டை ஒன்று உள்ளது. அந்தக் கோட்டையை நோக்கிச் சென்றால் ஒரு அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது. "பூகா கோட்டை - ஓமன் நாட்டின் பாரம்பரியச் சின்னம்"


இதுவே, நம் நாட்டில் மக்கள் நெருக்கடி மிகுந்த இடத்தில் ஒரு பழமையான கட்டிடமோ, கோட்டையோ இருந்தால் என்னாகும்?
அண்மையில் கும்பகோணம் நகரில் உள்ள 800 ஆண்டுகள் பழமையான சக்கரபாணி கோயிலிற்குச் சென்றிருந்தேன். கோயில் சுவரெங்கும் 6 இலக்க எண்கள் எழுதப்பட்டிருந்தன. அங்கே இருப்பவர்களிடம் இதைப்பற்றிக் கேட்ட பொழுது இவை யாவும் தேர்வு எண்கள் என்றும் தேர்விற்குச் செல்லும் முன்பு இவ்வாறு சுவரில் எழுதுவது வழக்கம் என்றும் கூறினர். என்ன கொடுமை பெருமாளே!!
இது தான் கோயில்களுக்குப் பெயர் போன ஊரில் ஒரு பழமையான கோயிலைப் பாதுகாக்கும் முறை!! பொன்னும் பொருளும் மட்டுமே நம் முப்பாட்டன் சொத்து அல்லவே!!


மொழி, கலாச்சாரம், பண்பாடு, பழக்கவழக்கங்கள், புராதன சின்னங்கள், கோட்டைகள், மத வழிபாட்டுத் தளங்கள் போன்றவையும் நம் சொத்து தானே? இவை தானே நம் முகவரி? ஆனால் பொன்னிற்கும் பொருளிற்கும் தரும் மதிப்பை மொழிக்குத் தருகிறோமா?ஆஸ்கார் விருதைப் பெற்ற பொழுது ஏ.ஆர்.ரகுமான், "எல்லாப் புகழும் இறைவனுக்கே" என்று தமிழில் கூறிய பொழுது நம் கண்ணில் ஆனந்தக் கண்ணீர் பெருகியது எதனால்?


அமீரகத்தில் ஒரு இந்திய மாணவர் புதிதாக 5ம் வகுப்பில் சேருகிறார் என்றாலும் அரபி மொழியை ஆரம்பத்திலிருந்து படித்தே தீர வேண்டும். ஆனால், நாமோ தமிழ் மொழியைப் பள்ளிப்பாடங்களில் எடுப்பதில் சுணக்கம் காட்டுவது எதனால்? 20 அல்லது 30 மதிப்பெண்களுக்காக பிரெஞ்சு மொழியை எடுப்பது எவ்வளவு இழிவானது!!


நம் மொழியின், நம் முன்னோரின் பாரம்பரியத்தை விடவா ஆங்கிலமும், பிரென்சும் பாரம்பரியம் மிக்கவை?


இன்று, மேலாண்மைத்துறையில் நாம் படிக்கும் பல கருத்துகளை நம் முப்பாட்டன் திருவள்ளுவர் 2000 ஆண்டுகளுக்கு முன்பே எழுதிவிட்டாரே!! நாம் படிக்கும் SWOT ( Strength Weakness Opportunity Threat ) Analysis தான் திருக்குறளில்


வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிசெயல்என்று வரும் குறளால் கூறப்பட்டுள்ளது. நம் முன்னோரின் வளமைக்கு இதைவிட எடுத்துக்காட்டு வேண்டுமா?

நம் முப்பாட்டன் கரிகால சோழன் கல்லணையைக் கட்டியது 2200 ஆண்டுகளுக்கு முன்பு. அண்மையில் என் தந்தை துபாய் வந்திருந்த பொழுது உலகின் உயரமான கட்டிமான புர்ஜைக் காட்டி, "எப்படிப்பா இருக்குது?" என்றேன். அதற்கு அவர்.. "போடா.. உங்க பாட்டன் கட்டின தஞ்சை பெரிய கோயில விடவாடா இதெல்லாம்.." என்றார். உண்மைதானே?
இன்று பணம் இருக்கும் எந்த நாட்டினரும் உயரங்களைக் கட்டிடங்களால் தொடலாம். ஆனால் நம் முன்னோர்களின் சாதனைக்கு முன்பு இன்றைய சாதனைகள் யாவும் பெரியதல்லவே!!
***********
நம் முன்னோர்கள் நமக்களித்த சொத்துக்களை நாம் என்ன செய்வது?


புதிதாக சொத்துகளை உருவாக்க நம்மை ஆள்வோரிடம் மனமோ பணமோ இல்லாவிட்டாலும், நம்மிடமிருக்கும் சொத்துக்களையாவது பாதுகாத்து நம் பேராண்டிகளுக்குக் கொண்டு செல்லலாம். சொத்துக்களைப் பாதுகாக்கும் வேலையில் முதல் படி, நம் மொழியைப் படிப்பதும், படித்ததைப் பகிர்வதும், புதிதாகப் படைப்புகளை உருவாக்குவதும் தான்!!
நம் ஊரிற்கு அருகில் உள்ள புராதனச் சின்னங்கள் என்னென்ன, அதன் சிறப்புகள் என்னென்ன என்பதை அறிவதும் அதை அனைவருக்கும் பயன்படும் வகையில் பகிர்வதும் தேவையான ஒன்று!! இது போன்ற சிற்சில விசயங்களைச் செய்வதன் மூலம் நம் முன்னோர்களின் சொத்துக்களை நம் பேரன் பேத்திகளுக்கும் கொண்டு செல்ல முடியும்.
நம் பேராண்டிகளும் பேத்திகளும் நம்மைப் பார்த்து பெருமை கொள்ளட்டும்!!
***********
உலகெங்கும் உள்ள சிறப்புமிக்க கலாச்சாரச் சின்னங்களைப் பாதுகாத்து வரும் யுனெஸ்கோ (UNESCO) அமைப்பு தொடங்கப்பட்டது நவம்பர் 16ம் தேதியில் தான். இன்றைய நாளில் நம் கலாச்சாரச் சின்னங்களைப் பற்றியும், முன்னோர்களின் சாதனைகளையும் நினைவு கூறுவது ஏற்புடையது தானே!!


************29 comments:

ஆயில்யன் said...

மீ த பர்ஸ்ட்ட்டு!!!!
நட்சத்திர வாழ்த்துக்கள்
கலக்குங்க :)))

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

அருமை நண்பர் செந்தில்வேலன்,
நட்சத்திரமானதற்கு மன‌மார்ந்த வாழ்த்துக்கள்.

கோயில், பொது இடம், சுற்றுலா தலங்களில் சுவ‌ற்றில் எண்ணெய்,கரி கொண்டு கிறுக்கும் இது போன்ற கிறுக்குகள்
திருந்துமா? அரசு தீவிரமான நடவடிக்கை எடுத்து இந்த சமூக‌
விரோதிகளை ஒடுக்க வேண்டும்.
தமிழ்மணத்தில் சேர்த்து ஓட்டு போட்டாச்சு.
தமிலிஷில் சேர்க்கவும்

சென்ஷி said...

அசத்தறீங்க செந்தில்....... மீண்டும் ஒரு முறை நட்சத்திர வாழ்த்துக்கள் சொல்லிக்கறேன்...

//"போடா.. உங்க பாட்டன் கட்டின தஞ்சை பெரிய கோயில விடவாடா இதெல்லாம்.." என்றார். உண்மைதானே?//

:))

ஈரோடு கதிர் said...

நான் பல முறை தஞ்சை சென்றிருந்தாலும் இன்னும் பெரிய கோவிலைப் பார்க்காததை என்னெ வென்று சொல்ல?

//நம் மொழியைப் படிப்பதும், படித்ததைப் பகிர்வதும், புதிதாகப் படைப்புகளை உருவாக்குவதும் தான்!!//

நிதர்சனமான உண்மை... செந்தில்

நட்சத்திரமாக நீங்கள் இருப்பதை விட, நட்சத்திரமாக இருப்பதால் தினம் தினம் ஒரு நல்ல இடுகை வரும் என்பது அதிக மகிழ்ச்சியாக இருக்கிறது

முனைவர்.இரா.குணசீலன் said...

நல்ல சிந்தனை நண்பரே...

முனைவர்.இரா.குணசீலன் said...

நட்சத்திர வாழ்த்துக்கள் நண்பரே...
தொடரட்டும் தங்கள் தமிழ்ப்பணி..

கலகலப்ரியா said...

வாழ்த்துகள்...!

என் பக்கம் said...

//உங்க பாட்டன் கட்டின தஞ்சை பெரிய கோயில விடவாடா இதெல்லாம்.." என்றார்.//

http://www.youtube.com/watch?v=SnANjdReAlY&feature=player_embedded

க.பாலாசி said...

//அதற்கு அவர்.. "போடா.. உங்க பாட்டன் கட்டின தஞ்சை பெரிய கோயில விடவாடா இதெல்லாம்.." என்றார். உண்மைதானே?//

உண்மைதான். தஞ்சையின் சிறப்பு அருகாமையில் உள்ளோருக்கே தெரியுமா என்று தெரியவில்லை. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் ஒரு கோடியில் பிறந்தவனாதலின் அதன் சிறப்பினை நான் உணர்ந்திருக்கிறேன்.

தமிழ்மணத்தில் நட்சத்திர பதிவர் ஆனதற்கு எனது வாழ்த்துக்களும்....

கோவி.கண்ணன் said...

வாழ்த்துகள் செந்தில்

சந்தனமுல்லை said...

அருமையான கருத்துகள்...அவசியமான இடுகை!
வாழ்த்துகள்!

குசும்பன் said...

நட்சத்திர வாழ்த்துக்கள்

பின்னோக்கி said...

நீங்கள் சொன்னது முற்றிலும் சரி. பழமையான சின்னங்களை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொருவருடைய கடமை

கிளியனூர் இஸ்மத் said...

செந்தில்......ஒருவாரத்திற்கு கலக்குங்க......கட்டுரை அருமை

பழமைபேசி said...

விண்மீன் வாழ்த்துகள் நம்மூர்த் தம்பி!

திகழ் said...

வாழ்த்துகள்

செ.சரவணக்குமார் said...

நட்சத்திர வாழ்த்துக்கள்..

வினோத்கெளதம் said...

தல நட்சத்திர வாழ்த்துக்கள்..
தொடர்ந்து கலக்குங.

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

வாங்க ஆயில்யன். நன்றி.

வாங்க கார்த்திகேயன். தங்கள் ஊக்கத்திற்கும் உதவிக்கும் நன்றி.

வாங்க சென்ஷி. நன்றி.

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

வாங்க கதிர். சென்று வாருங்கள் கதிர். பிரமிப்பு நிச்சயம். வாழ்த்துகளுக்கு நன்றி.

வாங்க முனைவர் குணசீலன். நன்றி.

வாங்க கலகலப்ரியா. நன்றி.

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

வாங்க பிரதீப். நல்ல காணொளியைப் பகிர்ந்துள்ளீர்கள். நன்றி.

வாங்க க. பாலாசி. நன்றி.

வாங்க கோவி.கண்ணன். நன்றி.

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

வாங்க சந்தனமுல்லை. நன்றி.

வாங்க குசும்பன். நன்றி.

வாங்க பின்னோக்கி. நன்றி.

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

வாங்க இஸ்மத் அண்ணே. நன்றி.

வாங்க பழமையண்ணே. நன்றி.

வாங்க திகழ். நன்றி.

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

வாங்க சரவணக்குமார். நன்றி.

வாங்க வினோத்கௌதம். நன்றி.

பிரியமுடன்...வசந்த் said...

உருப்படாத பதிவா நான் எழுதிட்டு இருக்கேன்..

நீங்க உபயோகமான பதிவா எழுதி அசத்துறீங்க அண்ணா,,,,,

குறும்பன் said...

நல்ல இடுகை செந்தில். பழச பேசுனா மட்டும் போதுமா? தஞ்சை பெரிய கோயில் இருக்கு, கங்கை கொண்ட சோழபுரம் இருக்கு இன்னும் எத்தனையோ கலைச்சின்னங்கள் இருக்கு. அதை நாம சரியான முறையில் சந்தை படுத்தனும்.. அங்க தான் நாம் சோடை போறோம்.

பிரபாகர் said...

தமிழ்மணம் நட்சத்திரமாய் அன்பு நண்பர் செந்தில் என என்னும்போதே மனம் மகிழ்வுறுகிறது. நிறைய புரதான விஷயங்கள் கிராமங்களிலும் கொட்டிக்கிடக்கிறது. எங்கள் ஊரில் உள்ள சில கோவில்களைப் பற்றி அடுத்தமுறை ஊருக்கு சென்று வந்தபின் எழுதுவதுதான் இந்த இடுகைக்கு நான் செலுத்தும் மரியாதை.

மிக்க சந்தோசம் செந்தில். தமிழ்மணம் இவ்வாரம், தமிழ் தெரிந்தோர் மனமெல்லாம் என்றும் ஸ்டார் ஆக பிரகாசிக்க வாழ்த்துக்கள்.

பிரபாகர்.

சிதம்பரம் said...

நட்சத்திர வாழ்த்துக்கள் செந்தில்

cheena (சீனா) said...

அன்பின் வேலன்

நல்வாழ்த்துகள் நட்சத்திரமாக ஜொலிப்பதற்கு

தஞ்சையில் பிறந்தவன் - 13 ஆண்டுகள் வாழ்ந்தவன் - பெரிய கோவிலில் சுற்றிச் சுற்றி விளையாடியவன் - வருபவர்களை எல்லாம் அழைத்துச் சென்று வழி காட்டியவன் - கொசுவத்தி சுத்த வச்சீட்டிங்களே - வாழ்க

Related Posts with Thumbnails