Sunday, November 22, 2009

கூகுளை நினைக்கையிலே..


கூகுளை நினைக்காமலோ, கூகுளின் சேவைகளைப் பயன்படுத்தாமலோ ஒரு நாளேனும் நம்மால் இருக்க முடியுமா? நாம் அன்றாடம் கண்டிப்பாக நினைக்கும் நபர்கள் / நினைக்கும் விசயங்களைப் பட்டியலிட்டால் பெற்றோர், மனைவி, குழந்தைகள், நெருங்கிய நண்பர்களுக்கு அடுத்த இடத்தில் கூகுள் கண்டிப்பாக இருக்கும். சமகால நிறுவனங்களில், கூகுள் நிறுவனம் அளவிற்கு நம் வாழ்வில் எந்த ஒரு நிறுவனமும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்க முடியுமா?

காலையில் எழுந்தவுடன் முதல் வேளையாக அலாரத்தை நிறுத்தியவுடன் நான் செய்யும் விசயம் என் செல்பேசியில் ஜி-மெயில் மின்னஞ்சல் ஏதாவது வந்துள்ளதா என்று பார்ப்பதே!! பிறகு நேரம் கிடைக்கும் பொழுது நண்பர்களுடன் பேச்சாடுவது, குழுமங்களில் கும்மியடிப்பது, நண்பர்களுடன் புகைப்படங்களைப் பகிர்வது, வலைப்பதிவுகளைப் படிப்பது என்று எந்த செய்கையாக இருந்தாலும் நமக்கு உதவுவது கூகுளே!!

அலுவலக வேளையின் பொழுது ஏதாவது ஐயம் ஏற்பட்டாலும் உதவுவது கூகுளே!!

இன்றைய மாணவர்களைப் பார்க்கும் பொழுது பொறாமையாக இருக்கிறது. நொடிப்பொழுதில் நினைத்த விசயத்தை எல்லாம் பெறும் அளவிற்கு வசதிகள் என் மாணவப் பருவத்தில் இல்லையே என்று!! கல்லூரி நாட்களில் எந்தத் தலைப்பில் திட்டங்களைத் தேர்ந்தெடுப்பது என்று நூலங்களில் தேடிய நாட்களை நினைக்கும் பொழுது கூகுள் ஏற்படுத்தியிருக்கும் மாற்றம் மேலும் புரிகிறது.

பத்து வருடத்திற்கு முன்பும் கூட வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கும் உறவினர்களின் புகைப்படங்களை அனுப்ப வேண்டுமென்றால் அஞ்சலில் தான் அனுப்ப வேண்டும். 10 படங்களுக்கு மேல் அப்போதைய மின்னஞ்சலில் அனுப்பினால் மின்னஞ்சல் பெறுநர்க்குச் சென்றடையாது. ஆனால் இன்றோ, பிக்காசாவில் ஏற்றக்கூடிய படங்களுக்கு அளவே கிடையாது..

சில வருடங்களுக்கு முன்பும் கூட ஏதாவது கட்டுரைகளையோ, குறிப்புகளையோ படிக்க வேண்டுமென்றால் அந்த தளத்தில் சென்று தான் படிக்க வேண்டும். ஆனால் இன்று கூகுள் ரீடரில் இணைப்பை ஏற்படுத்திவிட்டால் போதும். பெரும்பாலான தகவல்கள் நம் முகப்புப் பக்கத்தில்!!

இடத்தைத் தேட காகித வரைபடங்களைத் தேடிய நமக்கு இணைய வரைபடங்களை வழங்யதுடன், அந்த இடத்திற்கு அருகில் என்னென்ன கடைகள், உணவகங்கள், சிறப்புமிக்க தலங்கள் உள்ளன என்றெல்லாம் தகவல்களைத் தருவதை நினைக்கும் பொழுது வியப்பே மிஞ்சுகிறது.

இது போதாதென்று இப்பொழுது கூகுள் அலை ( google wave) சேவையையும் துவக்கி மின்னஞ்சல், பேச்சாடல், புகைப்படங்கள் பகிர்தல், சிட்டாடல் என அனைத்தையும் ஒருங்கிணைத்து புரட்சியைத் துவங்கியுள்ளனர் கூகுள் நிறுவனத்தார்.

கூகுள் மொழிபெயர்ப்பு சேவையைத் தற்பொழுது பல மொழிகளில் ஆரம்பித்துள்ளர். இன்னும் சில வருடங்களில் தமிழிலும் வந்துவிட்டால் நம் இணையப் பயன்பாட்டில் பெருமளவு மாறுதல்கள் ஏற்படும் என்பதில் சந்தேமில்லை.வருங்காலங்களில் பேச்சு மாற்று ( Voice Recognition cum Translation ) சேவையும் வந்துவிட்டால் தாய்மொழியைப் பயில்வது மட்டுமே போதுமானது என்ற நிலை வந்துவிடும். நடந்து வரும் மாற்றங்களைப் பார்க்கையில் அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை என்றே தோன்றுகிறது.

தொழிற்சாலைப் புரட்சி, பசுமைப்புரட்சி, சமுதாயப் புரட்சி என்றெல்லாம் கேள்விப்படும் பொழுது "புரட்சி" என்ற வார்த்தையில் வலிமை புரியாமல் இருந்தது. ஆனால் இன்று கூகுள் செய்து வரும் தகவல் புரட்சியைக் கண்கூடாகப் பார்க்கும் பொழுது புரட்சியின் அர்த்தம் புரிகிறது. பட்டங்களைக் கொடுப்பதில் வல்லவர்களான நாம் கூகுளிற்கும் ஏதாவதொரு பட்டம் கொடுத்தால் என்ன?

கூகுளைப் பற்றிய என் எண்ணங்களை பதிவேற்ற நினைக்கு இந்த வேளையிலும் உதவுவது கூகுளே!!

கூகுளிற்கு நன்றிகள்!!

*************************************************************************************

கடந்த ஒரு வாரமாக தமிழ்மண நட்சத்திரமாக நான் எழுதிய பதிவுகளைப் படித்தும் வாழ்த்தியும் ஊக்குவித்த அன்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!! என்னை ஒரு வாரகாலத்திற்கு நட்சத்திரமாக இருக்க அழைத்த தமிழ்மண நிர்வாகத்தினர்க்கும் என் நன்றிகள்!! அவர்கள் அளித்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திய நிறையு எனக்கு ஏற்பட்டுள்ளது!!

மீண்டுமொரு முறை அனைவருக்கும் என் நன்றிகள்!!
..

13 comments:

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

கூகிள் வாழ்க

TamilNenjam said...

வாழ்த்துகள் தலைவா

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

எல்லா வசதியும் தந்த கூகிள்....குடும்ப உறவுகளுக்குள் மிகப் பெரிய விரிசலை ஏற்படுத்திவிட்டதாக என் பிரன்சு நண்பர் பெருமூச்சு
விடுகிறார்.அவர் கூறியதை எழுதுவதானல் சுருக்கமாக 4 பக்கம் எழுதலாம்.
அவை புறந்தள்ளக் கூடியதாக இல்லை.

ஜோதிஜி. தேவியர் இல்லம். said...

உங்களின் கருத்துக்கள் என்னைப் போன்றவர்களுக்கு கற்பனைக்கு எட்டாதது. சங்கக்கூட்டமாக இருந்தாலும் சரி, கூகுள் கூட்டமாக இருந்தாலும் சரி என்று எல்லா பக்கத்திலும் சிக்ஸர் அடிக்கிறீர்கள் செந்தில். மிக மிக ரசித்த விரும்பும், தெரிந்து கொள்ளக்கூடிய ஆசைப்படும் அத்தனை விசயங்களும் உங்கள் எழுத்தில் உள்ளது. தமிழ்மணம் உங்களைப் போன்றவர்களை தேர்ந்தெடுத்து மொத்த பெருமையை அவர்களும் சிறிது எடுத்துக்கொண்டார்கள் அவ்வளவு தான்.

வாழ்த்துக்கள் செந்தில்.

ஆங்கில திரைப்படம் என்றால் கார்த்திகேயன் அறிவுத்தேடல்
வித்யாசமான பார்வை என்றால் நாகா
தெரிந்து கொள்ளும் பார்வை என்றால் செந்தில்
வாழ்க்கை சோர்ந்து போகும் சமயத்தில் சின்னச் சின்ன சுவாராசியங்களை கொடுத்து கொஞ்சம் அழகு போல் மாற்றுபவர் அது ஒரு கனா காலம்.

இருவர் கதாநாயகன் ஆகி விட்டீர்கள்
மற்ற இருவர்களும் விரைவில் ஆக வாழ்த்துக்கள்.

கோபிநாத் said...

மீண்டும் வாழ்த்துக்கள் தல ;)

பிரபாகர் said...

அன்பு நண்பருக்கு,

ஸ்டார் வாரத்தில் தினமும் ஒரு பதிவாய் படித்து இன்புற்றிருந்தேன். உங்கள் எழுக்களில் உள்ள நேர்மை, சமுதாயத்திற்கு தேவையான விஷயங்களை எளிமையையும், புதுமையையும் தரும் பாங்கு, நல்ல விஷயங்களை படித்து பாராட்டும் மனம் என ஒவ்வொரு விஷயத்திலும் கவர்ந்து வருகிறீர்கள். உங்களை பதிப்பதை பெருமையாய் எண்ணுகிறேன். உங்களின் பரிட்சயம் என்றும் தேவை செந்தில். கலக்குங்கள்.

http://www.google.com/transliterate/indic/TAMIL ல் Dictionary என்பதை தேர்வு செய்து ஆங்கிலத்தில் எழுதினால் தமிழில் அழகாய் பொருள் வருகிறது, பெரும்பாலான வார்த்தைகளுக்கு. நீங்கள் சொல்வதுபோல் வாய்ஸ் ரெகக்னேஷன் வந்துவிட்டால், நினைக்கவே இனிமையாய் இருக்கிறது.

பிரபாகர் .

சிதம்பரம் said...

நல்ல பதிவு செந்தில்

செந்தில் நாதன் said...

கூகிள்-க்கு ஒரு பெரிய ஒ!!! கூகிள்-இன் அலை உண்மையாகவே டிஜிட்டல் உலகில் ஒரு முக்கிய படி!!

பட்டம்: டிஜிட்டல் சூரியன்?

Dr.எம்.கே.முருகானந்தன் said...

உண்மைதான் கூகிள் தந்துள்ள வசதிகளும் மாற்றங்களும் எங்களுக்கு ஒரு புது உலகையே திறந்து விட்டிருக்கி்ன்றன. அதுவும் என் போன்ற 60 வயது தாண்டியவர்கள் கனவிலும் கண்டிருக்க முடியாத மாற்றங்கள். அபாரம்.
சென்ற வாரம் தமிழ் மணத்தில் வித்தியாசமான அனுபவங்களைத் தந்தீர்கள்.
அதற்கு நன்றி.

க.பாலாசி said...

சரிதான். கூகிளின் சேவை மகத்தானதுதான். எத்தனை முறை வியந்திருக்கிறேன் இத்தகு சேவைகளையெண்ணி.

நல்ல பகிர்வு....

குப்பன்.யாஹூ said...

GOOGLE VAAZGA, ONE OF THE BEST INVENTION OF CURRENT CENTURY IS GOOGLE

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

அருமை நண்பர் செந்தில்வேலன்
வீட்டில் ஓய்வில் இருந்தாலும் படிக்கச் செய்கிறது உங்கள் எழுத்து, மிக நல்ல பயனளிக்கும் கட்டுரை.
ஓட்டுக்கள் போட்டாச்சு.

நாஞ்சில் பிரதாப் said...

கூகுளாண்டவர் வாழ்க... நமக்கு எதுவுமே ஞாபகம் வச்சுக்னும்னு கட்டாயம் இல்ல... எதிர்காலத்துல நமக்கு மூளையே தேவை இல்ல...

Related Posts with Thumbnails