Tuesday, November 17, 2009

பிளாக்கர், ஃபேஸ்புக், டிவிட்டர் - பகிர்தலில் கவனம் தேவையா?



நீங்கள் ஒரு ஆராய்ச்சி நிறுவனத்தில் முக்கிய பதவியில் வேலை பார்த்து வருகிறீர்கள். உங்கள் கீழ் பல அரிய ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. திடீரென்று, ஒரு நாள் காலையில் இணையதளத்தைப் பார்க்கும் பொழுது உங்கள் நிறுவனத்தின் புதிய ஆய்வைப் பற்றிய செய்தி ஒன்று வெளியாகியிருக்கிறது.


பல செய்திகள் உண்மையானதாகவும், சில கருத்துகள் உண்மைக்குப் புறம்பானவையாகவும் இருக்கிறது. ஆய்வில் உள்ள பல விடயங்கள் வெளியாகியிருப்பதால் போட்டி நிறுவனங்களும் இந்த ஆய்வில் ஈடுபடலாம். இதனால் பாதிக்கப் போவது யார்?


யார் இது போல செய்திகளை வெளியிட்டிருப்பார்கள் என ஆராய்ந்து பார்த்ததில், உங்கள் கீழ் வேலை பார்க்கும் ஒரு ஊழியர் தனது வலைத்தளத்தில் இந்த ஆய்வின் முக்கியத்துவத்தைப் பற்றி ஒரு கட்டுரையை வெளியிட்டிருப்பது தெரிகிறது. சில நூறு வாசகர்கள் தனது தளத்திற்கு வருவதற்காகவே இதைச் செய்துள்ளதாகவும் தெரிகிறது.


இந்தச் சூழலில் என்ன செய்வீர்கள்?

******

உங்கள் நண்பர் ஒருவர் பொருளாதாரத் துறையில் பணியாற்றி வருகிறார். தான் பணியாற்றி வரும் துறை சார்ந்த விடயங்களைப் பற்றி சில சிட்டாடல்களை டிவிட்டர் தளத்திலும், ஃபேஸ்புக் தளத்திலும் வெளியிட்டு வருகிறார். அதனைப் பற்றி அவரிடம் விசாரித்தால் தான் செய்த பொருளாதார ஆய்வைப் பற்றியே கருத்தைத் தெரிவித்துள்ளதாகவும் கூறுகிறார்!


அவர் செய்த ஆய்வைப் பற்றி வெளியிட்டாலும், பொருளாதார ஆய்வைப் பற்றிய சின்னச் செய்தியானாலும், அது அந்த நிறுவனத்தின் பங்குச் சந்தச் செயல்பாடுகளைப் பாதிக்க வல்லது.


******

உங்கள் நிறுவனத்தில் நன்றாக வேலை பார்க்கும் ஒருவர் பதிவுகளையும், கட்டுரைகளையும் எழுதி வருவது தெரிய வருகிறது. என்ன எழுதுகிறார் என்று பார்த்தால், தொழிலிற்கு அப்பாட்பட்ட விடயங்களை எழுதி வருவது தெரிகிறது. ஆனால், இவர் பல கருத்துகளை அலுவலக நேரத்தில் வெளியிட்டிருப்பது தெரிய வருகிறது.

தனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பணியை முடிப்பதில் எந்தக் குறையும் வைக்காதவரிடம் எப்படி இதை எடுத்துக் கூறுவது?

******

மேலே கொடுக்கப்பட்டிருக்கும் உதாரணங்கள் யாவும் இன்றைய சூழலில் பார்க்கக் கூடயவையே.

ஆர்குட், ஃபேஸ்புக், டிவிட்டர், பிளாக்கர், லிங்க்ட்-இன் என சமூக வலையமைப்பு நிறுவனங்கள் பெருகிக்கொண்டே வருவதும், இதில் பயணர் கணக்கை வைப்போர் எண்ணிக்கை பெருகிக் கொண்டு வருவதும் கவனிக்கத்தக்கது.


சென்ற ஆண்டு 2 மில்லியன் பயணர் எண்ணிக்கை கொண்ட டிவிட்டர் தளத்தில் இன்றைய பயணர்கள் எண்ணிக்கை 30 மில்லியன். சமூக வலையமைப்புச் சேவைகளில் கிடைக்கும் தொடர்புகளும், நட்புகளும், தகவல்களும் இந்த சேவைகளின் வளர்ச்சிக் காரணம் எனலாம்.

ஒரு கட்டுரையை தன் தளத்தில் வெளியிடும் பொழுது கிடைக்கும் வாசகர் பார்வையும், நன்றாக இருக்கும் பொழுது கிடைக்கும் புகழும் பலரையும் இது போல சமூக வலைத்தளங்களுக்கு இழுக்கின்றன. அதுவே யாரும் வெளியிடாத கருத்தாகவோ, ஆய்வைப் பற்றிய தகவல்களாகவோ இருந்தால் என்னாகும்?


மேலே குறிப்பிட்ட இரண்டு உதாரணங்கள் இந்த வகையையே சாரும். சமூக வலையமைப்புச் சேவைகளை பயன்படுத்துவதற்கு முன்பு நமக்கிருக்கும் பொறுப்பைப் பற்றித் தெரிந்து வைத்திருக்கிறோமா?



சமூக வலையமைப்புச் சேவைகளைப் பயன்படுத்துவதில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் சிலவற்றைக் கீழே கொடுத்துள்ளேன்:


* நாம் யார்? என்ன செய்கிறோம்? சமூக வலையமைப்புகளில் நம் பங்கு என்ன என்பதைப் பற்றிப் புரிந்துகொள்ள வேண்டும். எந்தத் துறையில் பணியாற்றுகிறோம், எந்தத் துறையைப் பற்றி எழுதப் போகிறோம் என்று முடிவெடுப்பது முக்கியம். நம் நிறுவனத்தின் பொருளைப் பற்றி நல்ல விடயங்களைப் பற்றி எழுத நினைத்தாலும், அந்த நிறுவன வெளித்தொடர்புத் துறையினர் (Public Relations ) வெளியிடுவது போல இருக்காது.



* காப்புரிமையைப் (IPR - Intellectual Property Rights) பற்றிப் புரிந்து கொள்வது மிகவும் தேவையான ஒன்று. ஒரு நிறுவனத்தைப் பற்றியோ, பொருளைப் பற்றியோ எழுதும் முன்பு அந்தத் தகவல்கள் எப்படிக் கிடைத்தது, எப்படி பயன்படுத்தப் போகிறோம் என்பது முக்கியமான ஒன்று. வெளிவராத ஒரு பொருளைப் பற்றிய தகவல்களை வெளியிட நேர்ந்தால் அந்த நிறுவனம் நம்மை நீதிமன்றம் வரையிலும் கூட்டிச்செல்லலாம்.

* சர்ச்சையான, பரபரப்பான கருத்துகள் என்றுமே பிரபலமாகக் கூடியவை!! ஆனால் அந்தக் கருத்து நாம் வகிக்கும் பதவிக்கும் வேலைக்கும் பாதிப்பு ஏற்படுத்தாததாக இருக்க வேண்டும். மத்திய அமைச்சர் சசி தரூர் "கால்நடைகள் வகுப்பை"ப் பற்றி டிவிட்டரில் சிட்டாடியதால் ஏற்பட்ட பரபரப்பு அனைவருக்கும் நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். சில நாடுகளில் சமூக வலையமைப்புகள் தனிக்கைகளுக்கு உள்ளானவை என்பதும் எந்தந்த நாடுகள் அவை என்பதைத் தெரிந்து கொள்வதும் நல்லது.


* நாம் பார்க்கும் பணியைப் பற்றிய கருத்துகளை ஃபேஸ்புக், டிவிட்டர், பிளாக்கர் போன்ற தளங்களில் வெளியிடுவதைத் தவிர்ப்பது நல்லது. இணையத்தில் நாம் வெளியிட்ட கருத்துகளை மறந்து விட்டாலும், எங்காவது ஒரு மூலையில் இருக்கவே செய்கிறது. "Job is boring" என்று வெளியிட்ட கருத்திற்காக ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டதும் நடந்தேறியுள்ளது.


* தனிப்பட்ட விசயங்களைப் பற்றியோ, புகைப்படங்களையோ சமூக வலைத்தளங்களில் வெளியிடவது பாதுகாப்பிற்கு நல்லதல்ல. ஒருவரை, நண்பராக இணைப்பதற்கு முன்பு அவர் நன்றாகத் தெரிந்தவரா என்பதைச் சிந்திப்பதும் நல்லது.


* தொழில் நிறுவனங்களுக்கு, ஊழியர்கள் பணி நேரத்தில் சமூக வலையமைப்புகளில் பங்கு கொள்வது தலைவலியாகி வருகிறது. நம் நண்பர் வெளியிடும் கருத்திற்கோ கட்டுரைகளுக்கோ உடனடியாக மறுகருத்து அல்லது பின்னூட்டமளிக்க வேண்டுமென்ற கட்டாயம் உள்ளதா? அலுவலகத்தில் இது போன்ற சிட்டாடல்களையும், கருத்துகளையும் வெளியிடுவதைத் தவிர்ப்பது மிகவும் முக்கியமான ஒன்று.

* எல்லா வற்றிற்கும் மேலாக, நமக்கு எது முக்கியம் என்ற புரிதலை ஏற்படுத்திக் கொள்வதும் நல்லது.


நான் படித்தவற்றையும், கேட்டவற்றையும் கட்டுரையாக பதிந்துள்ளேன். உங்கள் கருத்துகளைக் கீழே பதிவு செய்யுங்கள்.

29 comments:

ஹாய் அரும்பாவூர் said...

சென்ற ஆண்டு 2 மில்லியன் பயணர் எண்ணிக்கை கொண்ட டிவிட்டர் தளத்தில் இன்றைய பயணர்கள் எண்ணிக்கை 30 மில்லியன். சமூக வலையமைப்புச் சேவைகளில் கிடைக்கும் தொடர்புகளும், நட்புகளும், தகவல்களும் இந்த சேவைகளின் வளர்ச்சிக் காரணம் எனலாம்.

very good news thank u

geethappriyan said...

அருமை நண்பர் செந்தில்வேலன் மிக அருமையான விழிப்புணர்வு கட்டுரை. நானும் முடிந்த வரை இதை செயலில் கடைபிடித்து வருகிறேன்.ஓட்டுக்கள் போட்டாச்சு

சென்ஷி said...

மற்றுமொரு விழிப்புணர்வு பதிவு செந்தில். பெரும்பாலும் அலுவலகத்திலிருந்தபடியே இணைய பயன்பாட்டில் இருந்தாலும் பணிகள் சாராத மற்ற பொழுதுபோக்கு அம்சங்கள் காண, அதற்கான முன் அனுமதி பெறுதல் அலுவலகத்தில் அத்தனை சாத்தியமில்லை. (என் அலுவலகத்தில் அனுமதியுடனான எனக்கே எனக்கான தனி இணைப்பாய்த்தான் இணையத்தை பயன்படுத்தி வருகிறேன்!)

நான் சென்னையில் பணிபுரிந்த பொழுது என்னுடன் பணிபுரிந்தவர் யாஹு மெசேஞ்சர் உபயோகப்படுத்தியதற்காக அவரை வேலையை விட்டு நீக்கிய மேற்பார்வையாளர், பின் அவரை நீக்கியதற்காக வருந்தினார்.

ஆனால் தற்காலத்தில் நிகழ்வுகளை அறிதலிலும், பங்கு வர்த்தகத் தொடர்பிலும் இணையப்பயன்பாட்டின் பயன் சொல்லுதலில் தீராது.

சமூகப் பக்கங்களில் பங்கெடுத்துக் கொள்ளுதலில் மறைந்திருக்கும் விவரங்களை தெளிவாக தொகுத்தமைக்கு நன்றி செந்தில்.

☀நான் ஆதவன்☀ said...

தற்காலத்தில் அலுவலகத்தில் இணையத்தின் பயன்பாடு கட்டாயமாகிவிட்டது. அலுவலகமே பல வசதிகளையும் செய்து தருகிறது. ஆனால் துறை சார்ந்த சில விசயங்களை பகிரும் போது கவனம் தேவை தான். நல்ல விழிப்புணர்வு கட்டுரை செந்தில்.

கலையரசன் said...

//"Job is boring" என்று வெளியிட்ட கருத்திற்காக ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டதும் நடந்தேறியுள்ளது.//

அவ்வ்்வ்வ்வ்வ்வ்்வ்.. இதுக்கே இப்படின்னா, என்னைய கொலையா இல்ல கொல்லுவாங்க!!
நட்சத்திர பதிவருக்கு மற்றுமொறு மைல்கல் இடுகை!!

கலையரசன் said...

அப்புறம் தமிழ்மணம் புட்டுக்கிச்சு... நாளைக்கு வாக்களிக்கப்படும்...

ramalingam said...

internetன் instant gratification தரும் addictionதான் இதற்கெல்லாம் காரணம்.

U F O said...

What about the comments from 'anonys' which are being published without any basics and proofs. Who will take responsibility, if the issue goes to court, the blogger/site owner or the 'unknown anony'? How to catch him/her?

அகல்விளக்கு said...

சமூக வலைபக்கங்கள் பிரபலமடைந்து வரும் நேரத்தில் சரியான தகவல்களை பகிர்ந்துள்ளீர்கள்...

இதற்கு நான் என்ன comment சொல்ல முடியும்.

இதைத்தவிர,

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..........

டேமேஜருக்கு தெரிஞ்சா அம்புட்டுத்தேன்.

கிளியனூர் இஸ்மத் said...

அப்பல்லாம் குழுதம் ஆனந்தவிகடன் போன்ற இதழ்களை டேபிலுக்கு அடியில் வைத்து அலுவலகத்தில் படித்தார்கள்....
இப்போ இணையத்தை தங்கள் பணிகளுக்கிடையில் மறைத்து மறைத்து பார்க்கிறார்கள் படிக்கிறார்கள் எழுதுகிறார்கள்...

எழுதுவதில் கவனம் தேவை என்பது வரவேற்கத்தக்கது........நானும் எனது துறையைச் சார்ந்துதான் சில பதிவுகளை இட்டுள்ளேன்....பொதுவான தகவல்களை மட்டும் எழுதுகிறேன்....

விழிப்புணர்வுக்கு நன்றி.........வாழ்த்துக்கள்....

கலகலப்ரியா said...

நமக்கு இதெல்லாம் சுட்டுப் போட்டாலும் புரியாதே...! ரொம்ப டெக்குநிக்கலா இருக்கே... பாலிடிக்ஸ் வேற... அவ்வ்வ்வ்...! oh... earkanave oru aal avv solli irukkaraa... paravaalla.. paravaalla.. click enter...

vasu balaji said...

நல்ல இடுகை.

ஈரோடு கதிர் said...

முதல் மின்னிதழில் வந்த பயனுள்ள கட்டுரைக்கு வாழ்த்துகள் செந்தில்...

சந்தனமுல்லை said...

அருமையான கருத்துகள்! ஆனா, மனசாட்சி கொஞ்சமல்ல..நிறையவே உதைக்குது!! இதை படிச்சு கமெண்ட் போடற இடம் அப்படி!! :)

குசும்பன் said...

நல்ல கருத்து ”குத்து” உள்ள பதிவு:)

Tech Shankar said...

அடிச்சுத் துவைச்சுக் காயப் போட்டுட்டீங்க பாஸ். பின்னிப் பிரிச்சு மேஞ்சுட்டீங்க. செம்ம பதிவு பாஸ். நல்லா யோசிச்சு இப்படி எழுத நல்ல மனம் வேண்டும். அது உங்க கிட்டே கீது பாஸ்.

வாழ்க வளமுடன்
த.நெ.

Unknown said...

nice post
thanks sendhil

கோபிநாத் said...

\\நான் ஆதவன்☀ said...
தற்காலத்தில் அலுவலகத்தில் இணையத்தின் பயன்பாடு கட்டாயமாகிவிட்டது. அலுவலகமே பல வசதிகளையும் செய்து தருகிறது. ஆனால் துறை சார்ந்த சில விசயங்களை பகிரும் போது கவனம் தேவை தான். நல்ல விழிப்புணர்வு கட்டுரை செந்தில்.
\\

ரீப்பிட்டே தல ;)

பிரபாகர் said...

சமுதாய சிந்தனை, வாழ்வியல் தொடர்பாய் எழுதுபவர்களில் எங்கள் யூத்ஃபுல் விகடன்,தமிழ்மணம் ஸ்டார் போல் யாருமில்லை.

பிரபாகர்.

ஜோதிஜி said...

குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா. ஒவ்வொரு முறையும் ஆச்சரியமாய் உள்ளே வந்து அதிசியத்துடன் வெளியேறுகிறேன்.

வினோத் கெளதம் said...

வழக்கம்ப்போல் பயனுள்ள பதிவு செந்தில்..
நிறையா யோசிக்க வைக்கிறிங

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாங்க அரும்பாவுர், நன்றி.

வாங்க கார்த்திகேயன். தங்கள் செயலைக் கடைப்பிடியுங்கள். நன்றி.

வாங்க சென்ஷி. மிக ஆளமாக விளக்கங்களையும் பார்வைகளையும் பதிவு செய்தமைக்கும் ஊக்குவிப்பிற்கும் நன்றி.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாங்க ஆதவன், கோபிநாத். உங்கள் கருத்தை நானும் ஏற்கிறேன். நாம் பணியிலிருக்கும் துறை சார்ந்த விசயங்களில் கவனம் தேவை.

வாங்க கலை :) நன்றி.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாங்க இராமலிங்கம். உங்கள் கருத்து நூற்றுக்கு நூறு உண்மை. நன்றி.

வாங்க U.F.O. அனானிகள் அனைவரும் தவறானவர்கள் இல்லையே. பிளாக்கர் கணக்கோ, கூகுள் கணக்கோ இல்லாத ஒருவர் அனானியாகத் தானே கருத்திட முடியும். ஆனால் தவறான கருத்தை வெளியிடும் பொழுது முழுப்பொறுப்பு பதிவின் உரிமையாளரையே சாரும். வருகைக்கு நன்றி.

குப்பன்.யாஹூ said...

have positive attitude,

approach social sites with positve mindset, nothing will happen,

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாங்க அகல்விளக்கு. நன்றி.

வாங்க இஸ்மத் அண்ணே. நன்றி.

வாங்க கலகலப்ரியா. வருகைக்கு நன்றி.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாங்க பாலாண்ணே, நன்றி.

வாங்க கதிர். நன்றி.

வாங்க சந்தனமுல்லை. நன்றி.

வாங்க குசும்பன். நன்றி.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாங்க தமிழ் நெஞ்சம். வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி.

வாங்க பிரதீப். நன்றி.

வாங்க பிரபாகர். அன்பிற்கும் ஊக்குவிப்பிற்கும் நன்றி.

வாங்க ஜோதிஜி. நன்றி.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாங்க வினோத்கௌதம். நன்றி.

வாங்க குப்பன் யாஹூ. நீங்க சொல்வதை முழுவதும் ஏற்கிறேன். கருத்திற்கு நன்றி.

Related Posts with Thumbnails