Sweet Home (மிட்டாய் வீடு) என்பது எப்படி இருக்க வேண்டும்?
ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொண்டு, இன்பம் துன்பம் என்று வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் பங்கேற்கும் குடும்ப அங்கத்தினர் இருந்து விட்டால், அக்குடும்பம் இனிய இல்லமாகத் தான் இருக்கும். ஒரே குழந்தை, சிறிய குடும்பம் என்ற முறை உருவாகியுள்ள இன்றைய சூழலில் குடும்ப வாழ்க்கை இனியதாக இல்லாவிட்டால்?
"நாம் இருவர் நமக்கு இருவர்" என்பதெல்லாம் மாறி "நாம் இருவர் நமக்கு ஒருவர்" என்ற நிலை வந்துவிட்ட நகப்புற வாழ்வியலில் அக்குழந்தை தான் பெற்றோரின் உலகம். குழந்தை பிறந்தது முதல் ஒவ்வொரு தருணத்தையும் ரசித்து, அர்ப்பணித்து வளர்க்க ஆரம்பித்துவிடுகிறார்கள் பெற்றோர். குழந்தையின் வாழ்க்கை தான் தன் வாழ்க்கை, குழந்தையின் வெற்றி தான் தன் வெற்றி, குழந்தையின் வளர்ச்சி தங்கள் வளர்ச்சி என்று வாழும் பெற்றோருக்கு சின்னதாக பயம் தட்டுவது தங்கள் மகன்/மகள் திருமணம் செய்யப் போகும் வயதில்!!
தனக்கு வரும் மருமகள் தன்னை மதிப்பாளா? புதிதாக வீட்டிற்கு வருபவர் எப்படி ஒத்துப்போவார்? என்றெல்லாம் எண்ணங்கள் எழ ஆரம்பித்துவிடும்.
இது பெற்றோருக்கு மட்டுமல்ல. வீட்டிற்குப் புதிதாகக் குடிபோகும் பெண்ணிற்கும் வரத்தான் செய்யும். இத்தனை காலம், தன் காதலனைப் பாராட்டி, சீராட்டி வளர்த்தவர்கள் எப்படி தன்னை நடத்துவார்கள்? எங்கள் குணங்கள் ஒத்துப் போகுமா? என்ற எண்ணங்கள் வர ஆரம்பித்துவிடும்.
இந்த எண்ணங்களை மிக அழகாக "மிட்டாய் வீடு" என்ற குறும் படமாக்கியிருக்கிறார்கள் எம்.பாலாஜி மற்றும் குழுவினர். கார்காலத்தில் மழைச் சாரலைக் குடும்பத்தினருடன் ரசித்த உணர்வு ஏற்பட்டது இந்தப் படத்தைப் பார்க்கும் பொழுது!!
குறும்படத்தின் நாயகன் (அதித்) தன் பெற்றோரைப் பற்றிக் கூறும் காட்சிகள், நாயகி (ஜனனி) வருங்கால மாமியாரைச்(ரேணுகா) சந்திக்கும் காட்சி என எல்லாமே அவ்வளவு அழகு. இக்குறும்படத்தை மேலும் நான் விமர்சனம் செய்வதை விட சில நிமிடங்களில் நீங்களே பார்த்துவிடுங்கள்.
குடும்பத்தில் ஒரு மருமகள் வருவதற்குப் பதிலாக ஒரு மருமகன் வருவதை எடுக்க வேண்டும் என்றால் எப்படி எடுப்பது?
வெள்ளித்திரைக்கு எல்லா திசைகளில் இருந்தும் சவால்கள் வர ஆரம்பித்துவிட்டன. சில சுவாரஸ்யமான காட்சிகளுக்காக இரண்டு மணி நேரத்தை திரையரங்கில் செலவிட வேண்டுமா? என்ற எண்ணம் மக்களிடம் வர ஆரம்பித்துவிட்டதே பல படங்கள் தோல்வியைத் தழுவுவதற்குக் காரணம். "அட" போட வைக்கும் காட்சிகள் படம் முழுவதும் வேண்டும் என்பதே சினிமா ரசிகர்களின் வேண்டுகோள்!! அல்லது "மிட்டாய் வீடு" போன்ற குறும்படங்களை ரசித்துவிட்டுச் சென்று விடுவார்கள்!!
"மிட்டாய் வீடு" குறும்படத்தை இது வரை 97ஆயிரம் பேர் பார்த்துள்ளது குறும்படக் குழுவினரின் வெற்றிக்கு அடையாளம்!! வாழ்த்துகள்!!
"மிட்டாய் வீடு" குறும்படத்தை இது வரை 97ஆயிரம் பேர் பார்த்துள்ளது குறும்படக் குழுவினரின் வெற்றிக்கு அடையாளம்!! வாழ்த்துகள்!!
12 comments:
குறும்படம் அருமைங்க! ரசிச்சி ரெண்டு தடவை பார்த்தேன்...
பகிர்ந்தமைக்கு நன்றி...
பிரபாகர்...
arumaiyana feel good padam
பார்க்கும் சில நிமிடம் முழுவதும் சந்தோஷம் நிரம்பி வழிந்தது...
இதே டீம் காதலில் சொதப்புவது எப்படின்ற குறும்படமும் எடுத்திருந்தாங்க அதுவும் சூப்பர்பா இருக்கும் செமஹிட்...
நன்றி செந்தில்
பகிர்வுக்கு மிக்க நன்றி!!!
படத்தை ரொம்ப ரசித்து பார்த்தேன்........
சின்ன வயசு குச்சி மிட்டாய் சாப்பிட்ட மாதிரி இருக்கு...
அப்புறம் அந்த புளு சர்ட்டும்...
நல்ல படம்...நன்றி...பகிர்ந்தமைக்கு..
நல்ல பகிர்வுங்க... அதற்கான தங்களின் முன்னுரையும்...
இங்க என்னால பார்க்க முடியாது.ஓய்வறைக்கு சென்று பார்த்துக்கொள்கிறேன். நன்றி..
ரொம்ப நல்ல படம்..
நல்ல பகிர்வுங்க செந்தில். உங்கள் முன்னுரையும் அருமை. எப்படித்தான் இந்த விஷயம் எல்லாம் உங்க கண்ணில் படுகின்றதோ. வாழ்த்துக்கள்
பகிர்வுக்கு ரொம்ப நன்றி செந்தில். குறும்படம் மனதைக் கவர்ந்தது.
இயக்குனர் பாலாஜி மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகள்.
நல்ல பகிர்வு. ரசித்தேன். நன்றி செந்தில்
Post a Comment