அமீரகம் வந்தவுடன் "அலுவலக நண்பர்கள் எப்பொழுது ஓட்டுனர் உரிமம் எடுக்கப் போகிறீர்கள்?" என்ற கேள்வியை எழுப்புவார்கள்.
"இப்பொழுது வாகனம் வாங்கும் எண்ணம் இல்லை. அதனால் ஓரிரு வருடங்கள் கழித்து எடுக்கவேண்டும்" என்று பதிலளிப்பேன்.
"இப்பொழுதே ஆரம்பித்துவிடுங்கள்.. அப்பொழுது தான் சரியாக இருக்கும்" என்று நமட்டுச் சிரிப்புடன் கூறுவார்கள்.
*
அமீரகத்திற்கு வந்த பொழுது நாளிதழ்களின் வேலைவாய்ப்புச் செய்திகளைப் பார்க்கும் பொழுது, "விற்பனை தொடர்பான வேலைகளுக்கு ஓட்டுனர் உரிமம் இருப்பவர்கள் மட்டும் விண்ணப்பியுங்கள்" என்று குறிப்பிட்டிருப்பார்கள்.
"நம் ஊரில் இரு சக்கர வாகனம் உள்ளதா என்று தான் கேட்பார்கள். இங்கே என்ன ஓட்டுனர் உரிமம் இருக்கிறதா என்று கேட்கிறார்கள். அதென்ன அவ்வளவு கடினமான விசயமா?" என்று நினைத்துக் கொள்வேன்.
ஆனால் இந்த எண்ணம் எல்லாம் ஓட்டுனர் உரிமத்திற்கு விண்ணப்பிக்கும் வரை தான்
*
ஓட்டுனர் உரிமத்திற்கு விண்ணப்பிக்கும் முன்பு நம்மை ஏதோ பாரபட்சமாக நடத்துவது போன்ற எண்ணம் எழும். மேற்கு ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் "அந்நாட்டு ஓட்டுனர் உரிமத்தைக்" காட்டி அமீரக ஓட்டுனர் உரிமம் பெற்றுக்கொள்வார்கள். ஆனால் நம் நாட்டு ஓட்டு உரிமத்திற்கு (சர்வதேச உரிமமாக இருந்தாலும்) எள்ளளவும் மரியாதை கிடையாது. ஓரே ஒரு சலுகை மட்டும் உண்டு. நம் நாட்டு ஓட்டுனர் உரிமம் வைத்திருந்தால், அமலில் உள்ள ஆண்டுகளைப் பொருத்து பயிற்சி வகுப்புகள் குறையலாம். அவ்வளவு தான்.
அப்படி பயிற்சி வகுப்புகளைக் குறைத்துக் கொள்ள விரும்புபவர்கள், "தொடர்ந்து வாகனம் ஓட்டுபவராக" இருந்தால் தேவலாம். ஆடிக்கொருக்கா.. அம்மாவாசைக்கு ஒருக்கா வண்டிய எடுத்தவங்க எல்லாம் எனக்கு ஓட்டுனர் உரிமம் இருக்கு.. பயிற்சி வகுப்புகளைக் குறையுங்கள் என்று கேட்டால்.. "வினை காத்திருக்கிறது" என்று அர்த்தம்.
*
ஓட்டுனர் உரிமத்திற்கான பயிற்சி வகுப்புகளுக்கு விண்ணப்பித்து வகுப்புகள் ஆரம்பித்த பிறகு, பயிற்சியாளர் நம்மை வாகனம் ஓட்டுங்கள் என்பார். நாம் தான் நம்மூரில் வண்டியை ஓட்டியிருக்கிறோமே என்று ஸ்டீரிங்கைப் பிடித்தால்..பயிற்சியாளர் நம்மிடம்
"காசு கொடுத்து லைசன்ஸ் வாங்குனியா?" என்று நக்கலடிப்பார்.
நம்ம ஏதோ ஸ்டைலா ஸ்டீரிங் பிடிக்கறதா நினைச்சு வாங்கிக் கட்டிக்கொண்ட பிறகு.. ஸ்டீரிங்கை எப்படிப் பிடிக்கிறது என்பதில் இருந்து ஆரம்பிப்பார்.
சாலையில் போறவர்களை "ஹாரன் அடித்து பயமுறுத்திப் பழகிய" நமக்கு "தேவையில்லாமல் ஹாரன் அடிக்காதே" என்பதே புதிதாக இருக்கும். அப்படியே இடப்பக்கம் எப்படித் திருப்புவது, வலப்பக்கம் எப்படித் திருப்புவது, லேன் மாற்றுவது, ரவுண்ட் டானாவில் திரும்புவது என்றெல்லாம் வகுப்புகளை எடுத்த பிறகு வாகனத்தைப் பார்க்கிங் செய்வது, சிக்னல் தேர்வு என்று சில தேர்வுகளில் தேறினால் கடைநிலைத் தேர்விற்கு தயாராகிவிட்டோம் என்று அர்த்தம்.
*
காலையில் எட்டு மணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சாலைகளில் தேர்வு நடக்கும். இங்கே தேர்ந்தெடுக்கப்பட்ட சாலைகள் என்றால்.. "தேர்வில் சோதிக்க வேண்டிய விசயங்களான இடப்பக்கம், வலப்பக்கம், 90 டிகிரி பார்க்கிங், லேன் மாற்றம், ரவுண்டானா என்று எல்லாவற்றையும் சோதிக்கும் வகையில் சாலைகள்" இருக்கும். நான் உடுமலையில் நான்கு சக்கர ஓட்டுனர் உரிமம் எடுக்க, வண்டிய ஓட்டியது (நிஜமா.. நம்புங்கப்பா..) வாகனங்கள் ஓட்டம் அதிகம் இல்லாத உடுமலை - மூணாறு சாலையில்.. அதுவும் ஒரு 100 மீட்டர் அவ்வளவு தான். இங்கே??
எட்டு மணித் தேர்விற்கு காலை ஏழரை ( மணியே சொல்லிடுச்சு) மணிக்குப் தேர்வு மையத்திற்குச் சென்றால்.. பேய் அறைந்தது போல் ஒரு கூட்டம் அமர்ந்திருக்கும். அவர்களிடம் மெதுவாக "எத்தனாவது தேர்வு என்றால்?" "எட்டு முடிஞ்சிடுச்சு" என்று பெருமூச்சு விடுவார்கள். நாங்க எல்லாம் (சிங்கம்டா ) முதன் முறையே பாஸாகிவிடுவோம் என்று நினைத்துக் கொண்டு உட்கார்ந்தால் "செந்தி லவெலன்" என்று கூப்பிடுவார்கள். நம் பெயரைத் தான் அழைக்கிறார்கள் என்று எழுந்தால் நம்முடன் இன்னும் மூன்று பேரை தேர்விற்கு அழைத்துக் கொண்டு செல்வார்கள்.
நம் முறை வந்த பிறகு வாகனத்தை ஓட்ட ஆரம்பித்து லெஃப்ட், ரைட்டு என்று ஓட்டும் பொழுது "நமக்கு ஏழறையாக" சில பிக் அப் லாரிகள் வந்து பயமுறுத்தி விடுவார்கள். நாம் வண்டியைத் திருப்பும் முன்பு கண்ணாடியைப் பார்க்கமலோ, சிக்னல் காட்டமலோ (நம் ஊர் பழக்கத்தில்) எடுத்துவிட்டால் தேர்வாளர் வாகனத்தை நிறுத்தி இறக்கிவிடுவார். பிறகு கஜினி முகம்மது மாதிரி படையெடுக்க வேண்டியது தான்.
"ஏம்பா.. என்னய அடிக்கிறேன்னு சொன்னீங்க.. இதோ வந்திட்டேன்" என்று அடுத்தடுத்து தேர்விற்குச் செல்ல ஆரம்பித்துவிடுவோம். இந்த முறை நன்றாக ஓட்டியுள்ளோம் என்ற நம்பிக்கையில் இருந்தாலும், நாம் கவனிக்காத தவறுகளால் தேர்வில் தோல்வியடைந்து, தவறுகளைச் சரி செய்யும் பொழுது நான்கைந்து தேர்வுகளையும் இந்திய மதிப்பில் ஒரு இலட்ச ரூபாயையும் செலவளித்திருப்போம். ( இந்தக் காசுக்கு நம்மூருல ஒரு பழைய மாருதி வாங்கியிருக்கலாம்னு சொல்றது கேக்குது.)
எல்லாம் முடிந்து தேர்வில் தேறிவிட்டோம் என்ற முடிவு தெரியும் பொழுது... " ஆத்தாஆஆஆஆஆ.. நான் பாஸாயிட்டேன்" என்று கத்த வேண்டும் போல் இருக்கும். ஆம்.. இரு தினங்களுக்கு முன்பு தான் நானும் ஓட்டுனர் உரிமம் பெற்றேன். ஐந்து முறை தோல்வியடைந்த பிறகு... பத்தாவது, பதினைந்தாவது முறை என்றெல்லாம் விடாமுயற்சியுடன் தேர்விற்குச் செல்பவர்கள் முன் என் ஆறாவது முறை பெரிய விசயமல்ல!!
*
பெரும்பாலான சாலைகளின் இரண்டு புறமும் நாலு முதல் ஆறு வழிப்பாதைகள். பல சாலைகளில் 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் கார்கள் என்று, சில நொடி கவனம் சிதறினாலும் பெரிய சேதம் ஏற்பட்டுவிடும் என்பதே இவ்வளவு கடினமான தேர்வு முறைகளை வைத்திருக்கிறார்கள்.
"மூன்று வழிப்பாதைகளை நான்கு அல்லது ஐந்து வழிப்பாதைகளாக மாற்றிக் காட்டும் நம்மவர்களுக்கு இது போல கடினமான தேர்வுமுறைகள் வைத்தால் என்ன?" என்று நடைமுறையில் சாத்தியமில்லாத விசயங்களை சிலவமயம் மனம் யோசிக்க ஆரம்பித்துவிடுகிறது.
*
இந்தப் பக்கத்தில் இனி அவ்வப்பொழுது சாலை விதிகள் பற்றிய பதிவுகளை எதிர்பார்க்கலாம்.. (ஹூக்கும்.. இது வேறயா..)
20 comments:
நண்பரே
மனமார்ந்த வாழ்த்துக்கள்
சாதித்துவிட்டீர்கள்,சும்மா சங்கதியா இது?அதும் இப்போது ரிசெஷனில்,எப்படியெல்லாம் காசு பார்க்கலாம் என்று கங்கனம் கட்டிக்கொண்டிருக்கையில்,உரிமம் எடுத்தது மிக பெரிய விஷயம்,பையன் வந்த நல்ல நேரம் என்றும் சொல்லலாம்,நல்ல கார் ஒன்று வாங்குங்கள்,கவனமாக ஓட்டுங்கள்.
Good Post..
ஒண்ணு சொல்றேன் கேட்டுக்குங்க, இனி நீங்க தமிழ்நாட்டுல கார் ஓட்ட லாயக்கில்லை. நெஜமாத்தான் சொல்றேன். நான் சொல்றதைக் கேட்டீங்கன்னா உங்களுக்கும் உங்க ஒடம்புக்கும் நல்லது.
வாழ்த்துகள்.
நான் 1999 ல் ஒருவருடம் அங்கே வேலை செய்தேன்.அப்போது பார்க்கிங் மற்றும் பிரிட்ஜ் தேர்வை முதல் முறையிலே பாஸ் செய்துவிட்டேன். ரோட் டெஸ்ட் இரண்டுமுறை சென்றேன்.பின்னர் இந்தியா வந்தாச்சு :)
இந்த அளவுக்கு வைத்தும் விபத்துக்கள் நடக்கிறதே...அதை கவனித்தீர்களா..?
இந்த முறையை இங்கு பின்பற்றினால் அனேக விபத்துக்கள் தவிர்க்கப்படும் என்பது உறுதி. இங்கு முதலில் யாருக்கும் போக்குவரத்துவிதிகள் தெரியவதேயில்லை .அப்புறம் சாலைவிபத்து ,தலைக்கவசம் என கூப்பாடு போட்டு என்ன பயன் .
இதை தெரிந்துகொள்ளவேண்டியது நாம் மற்றும் அல்ல அரசும் தான் .
மிக அருமையான பதிவு .
பகிர்வுக்கு நன்றி .
"மூன்று வழிப்பாதைகளை நான்கு அல்லது ஐந்து வழிப்பாதைகளாக மாற்றிக் காட்டும் நம்மவர்களுக்கு இது போல கடினமான தேர்வுமுறைகள் வைத்தால் என்ன?" என்று நடைமுறையில் சாத்தியமில்லாத விசயங்களை சிலவமயம் மனம் யோசிக்க ஆரம்பித்துவிடுகிறது.
......அப்படியும் ஒத்து வரும்ங்றீங்க? :-)
வாழ்த்துக்கள் செந்தில். இங்க பென்ஸ் காரையே எளிதா வாங்கிடலாம்...எழவெடுத்த
லைசன்சைத்தான் வாங்க கஷ்டம்... இன்னும் நான் விண்ணப்பிக்கவே இல்லை.
துபாய்ல எத்தனை இனி எத்தனை நாளுன்னு தெரில... எதுக்கு காசை கரியாக்கிட்டு :))
Vaazhthukkal!!!
இன்னும் எதிர்பார்கிறேன் ...அருமை ..
அய்யோ... எவ்வளவுதான் கஷ்டத்த எழுதினாலும் படிக்கும்போது உண்டாகிற சுவாரசியத்துல எல்லாம் மறந்துபோயிடுது. நம்ம நாட்டுல இவ்வளவு கெடுபிடிகள் இல்லைன்னு சந்தோஷப்படுறதா? ஏன் வரலன்னு வருத்தப்படுறதா?
எப்டியோ ஒரு வழியா லைசன்ஸ் வாங்கிட்டீங்க... வாழ்த்துக்கள்..
:)). வாழ்த்துகள்
வாழ்த்துக்கள் செந்தில்
செந்தில் ஓட்டுனர் உரிமம் வாங்கியதற்காக,
தலைவருக்கு ஒரு பாராட்டு விழா நடத்தலாம்னா யாரு கேக்குறாங்க?
வாழ்த்துக்கள் .... நான் ஒரு பத்து டெஸ்ட் கொடுத்து தான் பாஸானேன்
நல்லா இருந்துச்சி.. அப்படியே நான் லைசென்ஸ் வாங்குன கதையை இங்க சொல்லியிருக்கேன்..
http://jeyakumar-srinivasan.blogspot.com/2010/09/blog-post.html
உங்களுடைய இந்தப் பதிவுக்கு லிங்க் கொடுத்திருக்கிறேன்
வாழ்த்துகள்..
//.. இனி அவ்வப்பொழுது சாலை விதிகள் பற்றிய பதிவுகளை எதிர்பார்க்கலாம் ..//
இதுக்கு நீங்க ஓட்டுனர் உரிமம் வாங்காமலேயே இருந்துருக்கலாம்..(சும்மா..! சும்மா..!!)
வாழ்த்துகள்..
//.. இனி அவ்வப்பொழுது சாலை விதிகள் பற்றிய பதிவுகளை எதிர்பார்க்கலாம் ..//
இதுக்கு நீங்க ஓட்டுனர் உரிமம் வாங்காமலேயே இருந்துருக்கலாம்..(சும்மா..! சும்மா..!!)
//
எம்.எம்.அப்துல்லா said,.
நான் 1999 ல் ஒருவருடம் அங்கே வேலை செய்தேன்.அப்போது பார்க்கிங் மற்றும் பிரிட்ஜ் தேர்வை முதல் முறையிலே பாஸ் செய்துவிட்டேன். ரோட் டெஸ்ட் இரண்டுமுறை சென்றேன்.பின்னர் இந்தியா வந்தாச்சு :) ///
வருஷம் மட்டும் வேற (ஒரு பத்து வருஷம் பின்னாடி),.மத்ததெல்லாம் அப்படியே,..
ஆனா விதி,.. நான் இங்கேயே குப்பை கொட்டுறேன்,..
வாழ்த்துக்கள் செந்தில்,.. அப்ப துபாய் வந்தா பிரச்சனை இல்லை,..(அவசரப்பட்டு பதிவு போட்டுடோம்னு தோணுதா??)
//
சில நொடி கவனம் சிதறினாலும் பெரிய சேதம் ஏற்பட்டுவிடும் என்பதே இவ்வளவு கடினமான தேர்வு முறைகளை வைத்திருக்கிறார்கள்.
//
சரியாக சொன்னீர்கள்... இங்கேயும் கொஞ்சம் கடுமயான சட்டம் தான்...
Post a Comment