அமீரகத்தில் குளிர்காலம் ஆரம்பித்துவிட்டது. இதை ஊரிலுள்ள நண்பர்களிடம் கூறினால், "என்னது பாலைவன தேசத்தின் குளிரடிக்குமா?" என்று கேட்கிறார்கள். சும்மா இல்லீங்க, நல்லாவே குளிரடிக்கும். நகரப்பகுதிகளில் இரவு நேரங்களில் 15 டிகிரி வரையிருக்கும் குளிரின் அளவு, பாலைவனப்பகுதிகளில் 5 டிகிரி அளவிற்கு கடும் குளிரடிக்கும்!!
அமீரகத்தைச் சுற்றிப் பார்க்க விரும்புவர்களுக்கு ஏற்ற மாதங்கள் நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை எனலாம். துபாய் வருபவர்கள் தவறாமல் பார்க்க வேண்டிய விசயங்களில் அரேபிய இரவும் இடுப்பாட்டம் ஒன்று!!
டிசம்பர் மாதம் வந்து விட்டது என்பதை நினைவு கூறும் மற்றுமொரு விசயம், அலுவலகங்களில் ஏற்பாடு செய்யும் விருந்துகளும், குழுச் சுற்றுலாக்களும் தான்!! சில வாரங்களுக்கு முன் கடலில் ஒரு சிறு பயணம் சென்று விட்டதால், இந்த முறை "பாப் அல் ஷாம்ஸ்" என்ற இடத்தில் அரேபிய இரவு விருந்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். இதற்கு முன்பு சில முறை பாலைவனச் சவாரியையும், பெல்லி டான்ஸையும் (இடுப்பாட்டம்) பார்த்திருந்தாலும், அரேபிய இரவு விருந்திற்கு சென்றதில்லை.
பாப் அல் ஷாம்ஸ் கேளிக்கை விடுதி துபாய் நகர நடமாட்டத்தில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் பாலைவனங்களில் நடுவில் அமைந்துள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு மாறுபட்ட அனுபவத்தைத் தர வேண்டும் என்று புராதன அரேபியப் பொருட்கள், அரேபிய விளக்குகள், விரிப்புகள், மேஜைகள் என்று ஒவ்வொரு விசயத்தையும் கவனமாக அமைத்துள்ளார்கள்!!
பாப் அல் ஷாம்ஸ் விடுதிக்குள் வரும் பொழுதே ஏதோ பழங்கால இடத்திற்கு வந்து விட்ட உணர்வு ஏற்பட ஆரம்பித்தது. கட்டட அமைப்பு ஏதோ பழங்கால கோட்டை போல இருந்தது. நடந்து செல்லும் வழியெங்கும் இரானிய கம்பளங்களை விரிந்திருந்தனர். அரேபிய விருந்து நடக்கும் இடத்தின் நடுப்பகுதியில் ஒரு மேடையும், அதைச் சுற்றி மேஜைகளும் அமைக்கப்பட்டிருந்தது. குளிரிற்கு இதமாக அங்கங்கே விறகுகளை வைத்து நெருப்பையும் ஏற்றியிருந்தார்கள்.
நாங்கள் எங்கள் இருக்கைகளில் அமர்ந்தவுடன் "சீஷா" என்றழைக்கப்படும் அரேபிய பைப் சிகர் வைக்கப்பட்டது. ஒவ்வொருவரும் மிண்ட், ஆப்பிள் என ஒவ்வொரு வகையை வாங்கி இழுக்க ஆரம்பித்தார்கள். நண்பர்களின் வற்புறுத்தலால் நானும் இழுத்துப் பார்த்தேன். பழக்கமில்லாததாலோ என்னவோ தொண்டையில் ஏதோ கரகரப்பு ஏற்பட்டு இருமல் வந்துவிட்டது!! சிகரட்களில் பஞ்சு செய்யும் வேலையை சீஷாவில் தண்ணிர் செய்கிறது. என்னுடன் வந்திருந்த அலுவலக அன்பர்கள் பலர் சில மணி நேரத்திற்கு சீஷாவை இழுத்துக்கொண்டே இருந்தார்கள்!! அவர்கள் இந்த நேரத்தில் குறைந்தது 300 சிகரட்கள் அளவு இழுத்திருப்பார்கள் என்று நண்பர் ஒருவர் கூறியது அதிர்ச்சியாக இருந்தது!!
உணவுகளை பஃப்பே ( Buffet ) முறையில் எடுக்க ஆரம்பித்த பொழுது எகிப்திய நடனம் ஆரம்பமானது. நீல நிற வண்ணத்தில் உடையை அணிந்து கொண்டு மேடையேறினார் நடனக் கலைஞர். மேடையேறியவுடன் இருந்த இடத்திலேயே கிறு கிறுவென சுழல ஆரம்பித்தவர் ஐந்து நிமிடங்களுக்கு நிற்காமல் ஆடியதைப் பார்த்த பொழுது பார்த்த எங்களுக்கு சுற்ற ஆரம்பித்தது. அரை மணி நேரத்திற்கு தனது சாகசங்களை வெளிப்படுத்திய பொழுது எந்த நாட்டுக் கலையும் எதற்கும் குறைந்ததல்ல என்ற பேச்சு எழுந்தது. பிறகு ஒவ்வொரு மேஜை அருகிலும் வந்து எங்களையும் ஆடவைத்துச் சென்றார்.
விருந்தில் இருந்த உணவு வகைகளில் அசைவமே அதிகமாக இருந்தது. ஆட்டக்கறி, மாட்டுக்கறி, கோழி, மீன் வகைகளில் உணவுகள் இருந்தது. நான் தீயில் வாட்டிய கோழிகளையும், ஹமுர் வகை மீன் துண்டுகளையும், கோழி பிரியாணியையும் எடுத்துக்கொண்டேன். இது போல பஃப்பேக்கள் நடைபெறும் பொழுது சாப்பிடும் அளவை விட இரண்டு மடங்கு வீணடிப்பதையும் பார்க்கத்தான் முடிகிறது.
எகிப்திய நடனம் முடிந்தவுடன் அரங்கின் விளக்குகள் அணைக்கப்பட்டு மேடையின் பின்புறம் அமைந்துள்ள பாலைவன மணலில் குடுக்கை விளக்கைப் பிடித்தவாரே ஒட்டகங்களை அழைத்துச் செல்கிறார். பிறகு குதிரையில் போர்வீரர்கள் போன்ற உடையணிந்து இரு அணியாகப் பிரிந்து சண்டையிடுகிறார்கள். இரவு நேரம், மங்கலான வெளிச்சம், நல்ல குளிர்க்காற்று, குதிரைச் சண்டை, ஒட்டகங்கள் என அரேபிய இரவு அருமையான அனுபவம் தான்!!
பிறகு, சிறிய அறிமுகத்துடன் இடுப்பாட்டக் கலைஞர் ( Belly dancer ) மேடையேறினார். அதிரும் அரேபிய இசைக்கு சிரித்தவாரே இடையை நளினமாக அசைக்க ஆரம்பித்தார். பளபளக்கும் உடை, துள்ளளால இசை, அதைவிடத் துள்ளும் இடுப்பு, மாறாத புன்னகை என ஒவ்வொரு ஆட்டம் முடியும் பொழுதும் கரகோசம் அடங்கவே சில நிமிடங்கள் பிடித்தன. பிறகு ஒவ்வொரு குழுவின் இருக்கைக்கு அருகே வந்து எங்களையும் உடன் ஆடவைத்துச் சென்றார். நம் திரைப்படங்களில் பல ரகசியாக்களின் ஆட்டத்தைப் பார்த்துப் பழகிய எனக்கு இந்த இடுப்பாட்டக் கலைஞரின் ஆட்டம் விரசமாகத் தெரியவில்லை.
ஆட்டம் நடக்கும் பொழுது பாப் அல் ஷாம்ஸ் விடுதியைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் எங்களையும் புகைப்படங்களை எடுத்தார். அவை இலவசமாகத் தருவார் என்று நினைத்திருந்தால், ஒரு புகைப்படம் 120 திர்ஹாம் என்றார். "போடா... இந்தப் பணத்திற்கு எங்கூருல எத்தனை படம் புடிக்கலாம் தெரியுமா" என்று சொல்லிவிட்டதால் நான் இருக்கும் புகைப்படங்கள் இல்லை!! அருமையான இரவின் நினைவு மனதில் இருக்குப் பொழுது புகைப்படம் எதற்கு?
அரேபிய இரவு விருந்து முடிந்த கிளம்பும் பொழுது நடுநிசியாகி இருந்தது. இரவு இரண்டு மணிக்கு வீட்டிற்கு வந்த பொழுது மழை தூர ஆரம்பித்தது!! ஆமாங்க அமீரகத்தில் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. இதற்கு இவர்கள் நட்டு வளர்க்கும் மரங்கள் தான் காரணம் என்று நண்பர் கூறினார்.
"பாலைவன தேசத்திலேயே மரங்களை நட்டு வளர்த்து மழை வருகிறது என்றால் நம்மூரில்...."
23 comments:
இங்கு இருக்கிறதையும் புடுங்க ,வெட்டத்தான் ஆட்கள் இருக்கினம்
நல்ல பதிவு
அய்யய்யேயா... வடை போச்சே!! நானும் நேற்று எங்கள் கம்பேனி ஏற்பாடு செய்த பாலைவன சவாரி மற்றும் இடுபாட்டத்துக்கு சென்றிருந்தேன்!! அதுகுள்ள நீங்க முந்திகிட்டீங்க செந்தில்.... அருமையா விவரிச்சிருக்கீங்க... இதுல கொஞ்சம் சுட்டுக்குறேன்!!
ஆனா, நான் போட்டோவோட போடுவோமுல்ல????
//அருமையான இரவின் நினைவு மனதில் இருக்குப் பொழுது புகைப்படம் எதற்கு?//
அதானே....
அனுபவமும் அதை பகிர்ந்துகொண்ட விதமும், முக்கியமாய் புகைப்படங்களும் அருமை...
//"பாலைவன தேசத்திலேயே மரங்களை நட்டு வளர்த்து மழை வருகிறது என்றால் நம்மூரில்...." //
ஒரு பெரிய கேள்விக்குறிதான்.
நல்ல பகிர்வு செந்தில். போட்டோ எல்லாம் நீங்க எடுத்ததா? நெட்டில் சுட்டதா? அருமையாக இருக்கிறது.
என்ன செந்தில் அங்கபோயும் பிரியாணிதானா.?...ம் அனுபவிங்க ....கல்யாணத்துக்கு முன்னால இடுப்பாட்டம் பார்க்கலாம்....கல்யாணத்துக்கு அப்புறம்...தொடப்பாட்டம் தாண்டி!
கடைசி வரி நிறைய யோசிக்க வைத்தது. வழக்கம்போல் உங்களின் விவரித்தல் மிக அருமை.
பிரபாகர்.
நல்ல பகிர்வு. இந்த மரத்தப் பத்தீல்லாம் சொல்லி வெறுப்பேத்தாதீங்க செந்தில்.
ஆமா ..அந்த பெல்லி எங்கே .... டான்ஸர் எங்கே... :-)
the post is not making me interesting without belly dance clippings or links, really this post made me sick, sorry to say that
super senthil...
நன்றி தியாவின் பேனா..
நன்றி கலை. நல்லா எழுதுங்க கலை பெல்லி நடனக் கலையைப் பற்றி.
நன்றி பாலாசி.
நன்றி ஆதவன். 1, 7, 8 படங்கள் சுட்டவை. மற்றவை சுடாதவை :)
வாங்க இஸ்மத் அண்ணே. நன்றி. தொடபாட்டாம் எல்லாம் ஆரம்பிச்சு பல நாளாச்சு :)
நன்றி பிரபாகர்.
நன்றி பாலாண்ணே.
வாங்க குப்பன், சுந்தர் சார். உங்க வேண்டுகோளிற்கிணங்க ஒரு படத்தைப் போட்டாச்சு. நன்றி.
வாங்க பிரதாப் நன்றி.
//இந்த நேரத்தில் குறைந்தது 300 சிகரட்கள் அளவு இழுத்திருப்பார்கள் என்று நண்பர் ஒருவர் கூறியது அதிர்ச்சியாக இருந்தது!!//
கொடுமைங்க...
ஆமாங்கோ நேற்று செம மழை குளிரோ குளிர்..
பாலைவனத்திலும் பொசுபொசுவென்ற மழை..
இவர்கள் நட்டு வளர்க்கும் மரங்கள் தான் காரணம்
May not be True.
வாங்க மலிக்கா.. நன்றி.
வாங்க வடுவூர் குமார். நீங்க சொல்வதும் சரி தான். மழை வருவதற்கு சீதோசன மாற்றமே காரணமென்றாலும், இவர்கள் மரங்களை வளர்ப்பதில் காட்டும் நாட்டம் பாராட்டத்தக்கது.
அருமை நண்பர் செந்தில்வேலன் ,
மிக நல்ல இடுகையும் படங்களும், கண்டிப்பாக இதையெல்லாம் மிஸ்பண்ணவேகூடாது
300 சிகரெட்டா...
அடப்பாவிகளா!!!
//பாலைவன தேசத்திலேயே மரங்களை நட்டு வளர்த்து மழை வருகிறது என்றால் நம்மூரில்//
இங்கியும் வெட்டிப்போட்டு... பாலைவனமாக்கி.. அப்புறம் இவங்க மாதிரி செய்யறோம்னு ஒரு ஐந்தாண்டு திட்டம் போடுவாங்களோ என்னமோங்க
ம்ம்ம்..நல்லா என்ஜாய் பண்ணி இருக்கீங்க தல...
அந்தச் சூழல்,நடனம் - மெல்லிய விளக்கொளியில் காங்கிரஸ் காரிய கமிட்டி மாதிரியான ஒரு அமர்வமைப்பில், ஒரு மென்சோகம் கவிழ்ந்த அந்த மத்திய கிழக்கு இசையி,ல் தேவதைகளின் நடனம் ஒரு அருமையான கலையனுபவம். இங்கே நானும் சில முறை பார்த்திருக்கிறேன், கூட ஆடியிருக்கிறேன், ஒரு மொராக்கன் உணவகத்தில். ம்ம்ம்! அந்தக் காலம் கொஞ்ச நாளாகக் காணாமல் போய்விட்டது. அது ஒரு ”நிலாக்”காலம்!!!
எங்க பாத்தாலும் ரிஸெஷன் புலி பாய்ஞ்சுகிட்டிருக்க நேரத்தில, உங்க கம்பெனியில மட்டும் கடல் பயணமும், டெஸர்ட் ஃபீஸ்ட்டுக்கும் கூட்டிட்டுப் போறாங்க போல!! ரொம்ம்ம்ம்ப்ப்ப நல்லவங்க போலருக்கு!! என் மெயிலுக்கு உங்க கம்பெனி டீடெய்ல்ஸ் அனுப்புங்க, வேலை கிடைக்குமான்னு விஜாரிக்கணும். ;-))
ஷிசாவில் புகையிலை இருக்காது, ஆப்பிள் எசசென்சும் அதேன் மேலே அலுமினிய பேப்பரில் சார்கோல் எரியூட்டி புகைப்பது.. சிகரெட்டுக்கும் இதற்கும் வித்தியாசம் இருக்கிறது .
Post a Comment