Friday, March 19, 2010

பாவம்!! வங்கிகளின் கால் செண்டர் ஊழியர்கள்!!

சில சேவைகளைப் பற்றித் தெரிந்து கொள்ள நான் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் வாடிக்கையாளர்கள் தொடர்பு எண்ணைத் தொடர்பு கொண்டேன்...

"வெல்கம் டு XYZ பாங்க்!! டு கண்டினியூ இன் இங்கிலீஸ் ப்ரெஸ் 1, ஹிந்தி மேன் ஜாந்தாரி கேலியே தோ தபாய்"

"1"

"ப்ளீஸ் எண்டர் யுவர் சிக்ஸ் டிஜிட் போன் பாங்கிங் பின் ஃபாலோடு பை #"

"123456#"

"ப்ளீஸ் எண்டர் யுவர் பின்"

"****"

"இஃப் யு ஆர் எக்ஸிஸ்டிங் கஸ்டமர் ப்ரெஸ் 1"

"1"

"ஃபார் கிரெட் கார்டு சர்வீசஸ் ப்ரெஸ் 1, ஃபார் என்.ஆர்.ஐ. சர்வீசஸ் ப்ரெஸ் 2"

"2"

"யுவர் கரெண்ட் பாலண்ஸ் இஸ் ...... ஃபார் அதர் சர்வீஸஸ் ப்ரெஸ் 4, டு ஸ்பீக் டு போன் பேங்கர் ப்ரெஸ் 0"

"0"

ooooooooo


"வணக்கம் திரு செந்தில்வேலன்!! லாவண்யா பேசறேன்!, நீங்கள் போன் பேங்கிங் எண்ணைப் பயன்படுத்தியதமைக்கு நன்றி!!"

"சரீங்க."

"உங்க அம்மா பேரு சொல்லமுடியுமா?"

"பரமேஸ்வரி"

"உங்க ஈ.மெயில் ஐடி சொல்லுங்க"

"abcd@abcd.com"

"மிக்க நன்றி திரு செந்தில்வேலன். உங்கள் அக்கவுண்ட சரி பார்த்துவிட்டோம். உங்களுக்கு நாங்க எப்படி உதவுவது? அதுக்கு முன்னாடி நீங்க இப்ப எங்க இருந்து கூப்பிடறீங்க?"

"துபாய்ல இருந்து.."

"ஓகே. உங்களுக்கு நாங்க எப்படி உதவுவது?"

"எனக்கு மியூச்சுவல் ஃபண்ட்ஸ், டி-மேட் அக்கவுண்ட் திறப்பது பற்றி எல்லாம் தெரிஞ்சுக்கணும்ங்க"

"ஓகே. டி-மேட் அக்கவுண்ட் பத்தி தெரிஞ்சுக்க நீங்க இந்தியா வரும் பொழுது வங்கிக் கிளைக்குப் போகணும்"

"சரி.."

"மியூச்சுவல் ஃபண்ட்ஸ் எஸ்.ஐ.பி. பற்றி சொல்வதற்கு எங்க ஆபீஸர் உங்களக் கூப்பிடுவாரு. உங்க போன் நம்பர சொல்ல முடியுமா?"

"123456789.."

"ஓகே.. அவங்க உங்கள ஒன்னு அல்லது ரெண்டு நாள்ல கூப்பிடுவாங்க"

"சரிங்க."

"உங்களுக்கு நாங்க இன்சுயூரன்ஸ் பத்தி கொஞ்சம் சொல்ல விரும்பறோம்"

"சரிங்க"

"இந்தியால உங்க பெற்றோர் இருக்காங்களா?"

"ஆமாங்க"

"அவங்களுக்கு வயசு என்னங்க ஆகுது?"

"அம்மாக்கு 60.. அப்பாக்கு 70.."

"அவங்களுக்கு ஏற்ற மாதிரி ஒரு இன்சுயூரன்ஸ் பாலிசி இருக்கு"

"??"

"இது ஆக்ஸ்டண்ட் இன்சுயூரன்ஸ்... அவங்களுக்கு வயசாயிடுச்சு இல்லீங்களா? ஏதாவது கால் முறிவு, கை முறிவு எல்லாம் ஏற்பட்டுச்சுன்னா எங்க பாலிஸி கவர் பண்ணிக்கும். அதே போல விபத்தோ அல்லது நடமாட முடியாமப் போயிட்டாங்கன்னாலும்... இது உதவும்.. "

"இது எவ்வளவு ப்ரீ..??"

"திரு செந்தில்வேலன் முதல்ல நான் (எல்லாத்தையும்) சொல்லிடறேன்"

"??"

"அவங்களுக்கு ஏதாவது சாலை விபத்து ஏற்பட்டுச்சுன்னாலும் இந்த பாலிசி கவனிச்சுக்கும்!! ரெண்டு பேருக்கும் சேர்த்து மொத்த கவரேஜ் 25 லட்சம்..இதுக்கு நீங்க மெடிகல் டெஸ்ட் எல்லாம் பண்ண வேண்டாம். இப்போ ஆக்டிவேட் பண்ணினா.. இப்போ இருந்தே பயனிற்கு வந்துவிடும்"

"ஓ.."

"இந்த பாலிசிய நாங்க ஏக்டிவேட் பண்ண நீங்க பண்ண வேண்டியது.."

"ஒரு நிமிசம்ங்க.. இந்த பாலிசி பற்றிய பிரவுசர (Brouchure) எனக்கு மின்னஞ்சல் மூலமா அனுப்ப முடியுமா?"

"இந்த பாலிசிய நாங்க ஏக்டிவேட் பண்ண நீங்க பண்ண வேண்டியது எல்லாம் உங்க கிரெடிட் கார்டு நம்பரக் கொடுத்தா போதும் அல்லது உங்க அக்கவுண்ட்ல இருந்து நாங்க ப்ரீமியத்துக்கு எடுத்துக்குவோம்.."

"லாவண்யா.. நீங்க இன்னும் ப்ரீமியம் எவ்வளவுனு சொல்லவே இல்லீங்க"

"8900 மட்டும் தாங்க வருஷத்துக்கு.."

"ஏங்க இதுல.. மற்ற நோய்களுக்கு எல்லாம் கவரேஜ் இல்லீங்களா?"

"இல்லீங்க. இது வெறும் ஆக்சிரெண்ட் கவரேஜ் மட்டும் தான்.. இத நீங்க ஆக்டிவேட் பண்ண செய்ய வேண்டியது.."

"ஏங்க.. மொதல்ல நான் இந்தப் பாலிசியப் பத்தி படிக்கணும்ங்க.."

"உங்க எண்ணம் எனக்கு புரியுது. ஆனா பாங்க் கைடுலைன்ஸ் படி நாங்க மெயில்லயோ, துபாய்க்கோ அனுப்ப முடியாது. இந்தப் பாலிசிய ஆக்டிவேட் பண்ணிட்டா நாங்க வீட்டுக்கு அனுப்பிடுவோம். வீட்டுல இருக்கறவங்கள FAX பண்ணச் சொல்லலாமே.."

"எனக்கு இப்பவே முடிவு பண்ண முடியாதுங்க..ரெண்டு நாள் கழிச்சு நானே கூப்பிடுறேன்.."

"உங்களுக்கு என்ன யோசனைனு சொல்லுங்களேன். நான் உதவறேன்..."

"இல்லீங்க.. இந்த டைப் இன்சுயூரன்ஸ் பற்றி நான் இன்னும் யோசிக்கலை"

"இந்த ப்ரோடக்ட் இல்லீன்னா.. கொஞ்சம் குறைந்த ப்ரீமியத்துக்கு ஒரு பாலிசி இருக்கு.."

"@#$@%#"

"வருஷத்துக்கு ப்ரீமியம் வெறும் 4500 ரூபாய் தான்.."

"நான் என்ன சொல்ல.."

"பெரியவங்களுக்கு இந்த டைப் இன்சுயூரன்ஸ் ரொம்ப ஹெல்ப்ஃபுல்லா இருக்கும். அவங்க ஏஜ்க்கு என்ன வேணாலும்.."

"எனக்கு ரெண்டு நாள் டைம் கொடுங்க.."

"ஓகே திரு செந்தில்வேலன்!! உங்களுக்கு சொந்த வீடு இருக்கா?"

"ஆமாங்க"

"உங்க பேருல இருக்கா?"

"ஆமாங்க"

"நீங்க ஏன் ஹோம் இன்சுயூரன்ஸ் எடுக்கக் கூடாது?"

(இதுவேறயா?)

"சுனாமி, பூகம்பம், திருடு போன்ற எல்லாவற்றிற்கும் கவரேஜ் இருக்குங்க"

(ஆகா.. டிசைன் டிசைனா பீதியக் கிளம்பறாங்களே..)

"இல்லீங் மேடம். நான் அதப் பத்தியும் யோசிக்கவே இல்லை.."

"ஓகே திரு செந்தில்வேலன். உங்களுக்கு நான் வேற ஏதாவது உதவி...?"

(நான் எதுக்கு போன் பண்ணினேன்?)

"இல்லீங்க"

"உங்கள் கேள்விகளுக்கு நல்ல விதத்தில் பதில்கள் கிடைத்திருக்கும்னு நினைக்கறேன். எங்க வங்கிக்குக் கூப்பிட்டதுக்கு ரொம்ப நன்றி!!"

"நன்றிங்க"

போனை துண்டித்த பிறகு "கிர்ர்ர்"ரென்று இருந்தது. அரை மணி நேரம் பேசிய நமக்கே இப்படி என்றால் ஒவ்வொரு வாடிக்கையாளரிடமும் நாள் முழுதும் பேசும் வங்கிகளின் கால் செண்டர் ஊழியர்களின் நிலைமை எப்படி இருக்கும்?

மார்ச் மாதம் 20ம் தேதியாயிற்று.. அவர்கள் என்ன செய்வார்கள்? பாவம்!!
...

9 comments:

க.பாலாசி said...

அய்யோ சாமீ...அரைமணிநேரமாவா....

நீங்க ஜாலியான மூடுல பேசியிருப்பீங்கன்னு நெனைக்கிறேன். அதனாலத்தான் இவ்ளோப்பொருமையா பேசியிருக்கீங்க... சிலபேரு வல்லுன்னு விழுவாங்க...

//"123456789.."// இந்த நம்பரயா கொடுத்தீங்க...??

ஆதங்கம் புரியுதுங்க...

V.N.Thangamani said...

செந்தில் வணக்கம் எப்படி இருக்கீங்க?
கால் சென்ட் வேலை வெளியில் ரொம்ப கவுரவமா தெரியுது.
உள்ளே மூளையிலே ஈயத்தை காய்ச்சி ஊத்தற மாதிரி
இருக்கும் போலே .......
ஐயோ பாவம் ...

vasu balaji said...

=)). இப்படி வரிசையா சொல்லி புரியுதுங்களான்னாங்க. நானும் ஆமாங்கன்னு சொன்னேன். இங்ளீஸுல சொல்லுங்க யெஸ் ஆர் நோன்னுச்சு அம்முனி. நானும் யெஸ்னேன். அடுத்த மாசம் க்ரெடிட் கார்ட் ஸ்டேட்மெண்ட்ல 1000ரூ கட்டு. பதறி போயி என்னாங்கடான்னா, வாய்ஸ்ல யெஸ்னு ஒத்துக்கிட்டனாம். ஓம்புட்ஸ்மேன்கு போவேனு எல்லாம் மெரட்டியும் ஒன்னுமே இல்லாம ஃபைன்னு 50ரூ போட்டான். போராட சக்தியில்லாம கட்டி தொலைஞ்சேன். பாவம் பாக்கவா தோணுது உங்களுக்கு..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

நாமக்கல் சிபி said...

என்ஜாய்!

Unknown said...

:-D))..

//.. "123456789.."..//

உங்க நம்பருக்கு கூப்பிட்டேன், "Welcome to airtel prepaid customer care"னு சொன்னாங்க, அங்கயா வேல செய்யுரிங்க..??!!

இராகவன் நைஜிரியா said...

இது நீங்க கூப்பிட்டு கேட்டு மாட்டிகிட்டீங்க... சமயத்தில் லோன் வேணுமான்னு கேட்டு ஒரு லொள்ளு வரும் பாருங்க...

நான் சில தடவை வேண்டாம் என்றுச் சொல்லுவேன்... ஒரு சமயம் ரொம்ப கடுப்பாகி... லோன் கொடுங்க ... ஆனா திருப்பிக் கட்ட மாட்டேன் பரவாயில்லையான்னு கேட்ட பின்னாடி போன் தொல்லையில்லை.

கண்ணா.. said...

ஓரு முக்கியமான வேலைல இருக்கும் போது போன் பண்ணி வைக்க மாட்டேன்னு அடம்பிடிக்கும் போது வரும் பாருங்க கோவம்...... :)

நல்ல பகிர்வு செந்தில்

ஜோதிஜி said...

நான் சில தடவை வேண்டாம் என்றுச் சொல்லுவேன்... ஒரு சமயம் ரொம்ப கடுப்பாகி... லோன் கொடுங்க ... ஆனா திருப்பிக் கட்ட மாட்டேன் பரவாயில்லையான்னு கேட்ட பின்னாடி போன் தொல்லையில்லை.

மின் அஞ்சலில் படித்த போது பலமுறை சிரித்துக் கொண்டே இருந்தேன்.

ராகவன் பாணியில் பேசியால் இப்போது தொந்தரவு இல்லை.

நல்ல வர்ணனைகள்.

Unknown said...

பேச சொல்றதை பேசுறாங்க. பாவம் அவங்க என்ன பன்னுவாங்க.

Related Posts with Thumbnails