கடந்த வெள்ளியன்று அமீரகத் தமிழ் மன்றத்தினர் "இனியொரு விதி செய்வோம்" என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சியை நடத்தினர். மகளிர் தினத்தைக் கொண்டாடும் வகையில் மகளிர்க்கான சிறப்பு நிகழ்ச்சி அது.
சுவையரசி - 2010 என்ற பெயரில் பெண்களுக்கான சமையல் போட்டி, சவாலே சமாளி, சிறந்த தாய் - மகள் என பெண்கள் மட்டுமே கலந்து கொண்ட போட்டிகளை மிகவும் சுவாரஸ்யமாக அமைத்திருந்தனர் மன்றத்தின் மகளிர் உறுப்பினர்கள்.
மருத்துவர் சுப்புலக்ஷ்மி பாலா அவர்களை அமீரகத்தின் சிறந்த தமிழ்ப்பெண்மணியாகத் தேர்வு செய்தனர். இவரை வாக்கெடுப்பு முறையில் தேர்வு செய்தது சிறப்பு. சமூகத்திற்கு இவரது பங்களிப்பைப் பற்றிக் கீழே உள்ள படத்தில் காணலாம்.
மருத்துவர். முகம்மது பர்வீன் பானு, திருமதி சந்திரா ரவி, திருமதி சுஜாதா வேணுகோபால் ஆகியோர் இவ்வாக்கெடுப்பில் அறிவிக்கப்பட்ட மற்ற மூன்று பேர். அமீரகம் மற்றும் இந்தியாவில் சிறந்த சேவையாற்றி வரும் இம்மூவரும் நிகழ்ச்சியில் கௌரவிக்கப்பட்டனர். தாய் நாட்டில் இருந்து வெளியே வாழ்ந்தாலும் மக்களுக்குச் சேவை செய்து வரும் இவர்களை வாழ்த்துவதற்கு ஒரு வழியை ஏற்படுத்திய அமீரகத் தமிழ் மன்றத்தினருக்கு சிறப்பான வாழ்த்துகள்!!
இந்நிகழ்ச்சியின் சிறப்புகளில் ஒன்று நிகழ்ச்சியைத் தலைமை தாங்கிய சிறப்பு விருந்தினர்: நடிகை ரோகினி!!
"ஏன் நடிகைகளையே கூப்பிடறாங்க.. வேற ஆட்களே கிடைக்கலையா?" என்று நண்பர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் கிடைத்தது நிகழ்ச்சியில் ரோகினி அவர்களைப் பற்றி அறிமுக உரையில்!!
எய்ட்ஸ் நோய் தடுப்பு பற்றி விழிப்புணர்பு, பி.டி. கத்திரிக்காய், விவசாயம் போன்ற இயற்கை சார்ந்த விழிப்புணர்வு, பெண்களுக்கு ஏற்படும் கொடுமைகள் பற்றிய ஆவணப் படங்கள் என சமூகத்திற்கு இவரது பங்களிப்பு வியக்க வைக்கிறது. பாடலாசிரியர், குறும்பட இயக்குனர், விளம்பரப் பட இயக்குனர் என திரையுலகம் சார்ந்த மற்ற வேடங்கள் நமக்கு அறிமுகமாகாதவை!! நிகழ்ச்சியில் உரையாற்ற வந்தவர்.. எதுவுமே எழுதி வைக்காமல் தூய தமிழில் 20 நிமிடங்கள் உரையாற்றினார்.
அவரது உரையில்.. இயற்கை பற்றிய அக்கறை அதிகமாக இருந்தது. பி.டி. கத்திரிக்காய் போன்ற மரபணு மாற்றம் ஏன் தவிர்க்கப் பட வேண்டும் என்பதைப் பற்றி தன் கருத்தைத் தெரிவித்த பொழுது நாம் ஏன் உறங்கிக் கொண்டிருக்கிறோம் என்று தோன்றியது. வேலை தேடி வெளிநாடுகளுக்கு வந்திருப்போர் விவசாயத்திற்கு ஏதாவதொரு வகையில் உதவ வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார். இடையிடையே பாரதியாரின் பாடல்களையும் சேர்த்துக் கொண்டவர், அவரது கவிதையுடன் முடித்துக் கொண்டார்.
அவரது கவிதையுடன் முடிக்கும் முன்பு..
"எல்லாவற்றிற்கும் மேலாக.. எல்லோரிடமும் அன்பை வெளிப்படுத்துங்கள்... ரகு உடல் நலம் குன்றியிருந்த பொழுது நான் கொஞ்சம் கவனித்திருக்கலாமோ? என்ற எண்ணம் வருகிறது. இதை இங்கே அமர்ந்துள்ள என் மகன் முன்பு கூறுகிறேன்" என்ற அவரது வார்த்தையின் உண்மைக்காக அரங்கில் கரகோசம் எழுந்தன.
பச்சைக் கிளி முத்துச்சரம் படத்தில் அவர் எழுதிய "உனக்குள் நானே உருகும் இரவில் "என்று தொடங்கும் பாடலின் வரிகள்... இந்தச் சுட்டியில்...
அவரது கவிதையுடன் முடிக்கும் முன்பு..
"எல்லாவற்றிற்கும் மேலாக.. எல்லோரிடமும் அன்பை வெளிப்படுத்துங்கள்... ரகு உடல் நலம் குன்றியிருந்த பொழுது நான் கொஞ்சம் கவனித்திருக்கலாமோ? என்ற எண்ணம் வருகிறது. இதை இங்கே அமர்ந்துள்ள என் மகன் முன்பு கூறுகிறேன்" என்ற அவரது வார்த்தையின் உண்மைக்காக அரங்கில் கரகோசம் எழுந்தன.
பச்சைக் கிளி முத்துச்சரம் படத்தில் அவர் எழுதிய "உனக்குள் நானே உருகும் இரவில் "என்று தொடங்கும் பாடலின் வரிகள்... இந்தச் சுட்டியில்...
டமிலில் பேசி வரும் நடிகைகளில் மத்தியில் ரோகினி அவர்கள் விண்மீனாகக் காட்சியளித்தார். ( ஆயிரக்கணக்கான ரசிகர் மன்றங்கள் இல்லாமலே சமூகத்திற்கு உதவிவரும் இவரைப் பார்த்தாலாவது... நம்ம... ஸ்டார்கள், தளபதிகள் திருந்துவார்களா? ஏண்டா செந்திலு.. நடக்கறதப் பத்தி பேசு..)
மகளிர்க்கான நிகழ்ச்சியொன்றை அழகாக நடத்தி முடித்த மன்றத்தின் மகளிர் உறுப்பினர்களுக்கு வாழ்த்துகள்!!
*****
சென்ற வாரம் துபாயில் உள்ள இந்தியத் தூதரகத்திற்குச் சென்றிருந்தேன். என் மகனின் கடவுச்சீட்டு தொடர்பான, என் ஒப்புதல் கடிதம் (Affidavit) ஒன்றில் தூதரகத்தில் கையொப்பம் வாங்க வேண்டியிருந்தது.
ஒன்பது மணிக்குத் திறக்கும் தூதரகத்திற்கு 8:30க்குச் சென்றேன். சாஸ்திரி பவனில் பார்ப்பதை விட கூட்டம் அலைமோதியது. எனக்கு முன்பாக ஏறக்குறைய 250 பேர் இருந்தனர். அலுவலகத்தில் வேறு 12 மணிக்கு வந்து விடுவதாக கூறியிருந்தேன். திரும்பி சென்று விடலாமா இருந்து தான் பார்க்கலாமா? என்று நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே "வந்ததே வந்துட்ட.. பார்த்துட்டுப் போடா செந்திலு" (எவ்வளவோ பண்ணிட்டோம்.. ஸ்டைலில்) என்றது மன சாட்சி.
ஒன்பது மணிக்கு வாயில் திறந்தவுடன், பத்து நிமிடத்தில் நான் வாயிலிற்கு வந்துவிட்டேன். அங்கே இருந்த காவலர் சோதனை செய்துவிட்டு, மேலே உள்ள கலையரங்கத்திற்கு செல்லுமாறு கூறினார்.
மேலே சென்றால்.. எனக்கு முன் சென்ற 250 பேரும்.. கையில் டோக்கனுடன் அமர்ந்திருந்தனர். திருமணச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், இறப்புச் சான்றிதழ் மற்றும் இன்னபிற சான்றிதழ்களைத் தூதரக அதிகாரியிடம் ஒப்புதல் கையொப்பம் வாங்கிய பிறகு தான் துபாய் அரசாங்க அமைப்புகளில் ஏற்றுக்கொள்ளப்படும்.
என்ன வியப்பு!!
கடகடவென அனைவரும் அழைக்கப்பட்டு.. என் முறை வர ஒன்றரை மணி நேரம் தான்(!!) ஆகியிருந்தது. என் மகனின் பிறப்புச் சான்றிதழ் மற்றும் கடவுச்சீட்டிற்கான ஒப்புதல் விண்ணப்பத்தையும், இந்திய ஓட்டுனர் உரிமத்தை வைத்திருக்கிறேன் என்பதற்கான ( இந்தக் கதை அடுத்த பதிவில்.. ) ஒரு சான்றிதழையும் சமர்ப்பித்தேன்.
"எப்பங்க கிடைக்கும்?" என்று கேட்டது தான் தாமதம்.. "ஒரு மணி நேரம் வெயிட் பண்ணுங்க" என்றார் (தமிழில்) சான்றிதழ்களை சரி பார்த்துக் கொண்டிருந்த அதிகாரி ஒருவர். அடுத்த அரை மணி நேரத்தில் எனக்கு இரண்டு சான்றிதழ்களும் கிடைத்தன. நான் என்னைக் கிள்ளிக் பார்த்துக் கொண்டேன்.
துபாய் தூதரகத்தில், சான்றிதழ்கள், கடவுச்சீட்டு இன்னபிற சேவைகளையும் துரிதமாக வழங்குவது வி.எஃப்.எஸ் என்ற தனியார் அமைப்பினர். விசா சேவைகளில் முன்னோடிகள் இந்த நிறுவனத்தினர்.
தூதரகத்தில் இருந்து வெளியே வரும் பொழுது எனக்கு சாஸ்திரி பவன் நினைவுகள் வருவதைத் தவிர்க்க முடியவில்லை!!
****
24 comments:
ரோகிணிக்கு வணக்கம் பல
நல்ல அருமையான தகவல்கள்..
ரோகிணி உண்மையிலேயே மின்னும் ஒரு நட்சத்திரம்தான்!
சிங்கையிலும் அப்படித்தான், எளிதாய் எல்லாம் கிடைக்கும் அதிக சிரமமில்லாமல்!
பிரபாகர்...
உங்கள் வழக்கமான நகைச்சுவையுடன் அருமையான தகவல்கள். ரோகிணிக்கு வாழ்த்துகள்.
உங்கள் அனுபவங்களை, அருமையாக தொகுத்துள்ள பகிர்வுக்கு நன்றி.
ரோகினி அவர்களின் பேச்சில் வியந்து போனேன்.
ரோகிணிக்கு வாழ்த்துக்கள் . பகிர்வுக்கு நன்றி நண்பரே ! நானும் அமீரகத்தில்தான் இருக்கின்றேன் .
//////"எப்பங்க கிடைக்கும்?" என்று கேட்டது தான் தாமதம்.. "ஒரு மணி நேரம் வெயிட் பண்ணுங்க" என்றார் /(தமிழில்) சான்றிதழ்களை சரி பார்த்துக் கொண்டிருந்த அதிகாரி ஒருவர். அடுத்த அரை மணி நேரத்தில் எனக்கு இரண்டு சான்றிதழ்களும் கிடைத்தன. நான் என்னைக் கிள்ளிக் பார்த்துக் கொண்டேன்./////////
மிகவும் சரியாக சொல்லி இருக்கிறீர்கள் . எனக்கும் இந்த அனுபவம் இருக்கிறது . இந்த மாதத்திற்குள் கிடைத்தால் நலம் என்று எண்ணி சென்ற வேலை இரண்டே நாட்களில் முடித்து கொடுத்தார்கள் .
அமீரக தமிழ் மன்றம் நிகழ்ச்சி ரொம்ப கால தாமதமாக தொடங்கி இரவு 11 .30 ம்ணிக்குமேல் கொண்டு சென்றார்கள்..6 ல் இருந்து 10.30 வரை தான் இருக்க முடியும்.கடைசி நாங்க ரோகினி பேசியதை கேட்க்க வில்லை.இணையதில் பார்க்க முடியுமா?
இந்த மாதிரி நிகழ்சிகளை வியாழ்ன் வைப்பதே சிரந்த்து
//துபாய் தூதரகத்தில், சான்றிதழ்கள், கடவுச்சீட்டு இன்னபிற சேவைகளையும் துரிதமாக வழங்குவது வி.எஃப்.எஸ் என்ற தனியார் அமைப்பினர். விசா சேவைகளில் முன்னோடிகள் இந்த நிறுவனத்தினர்.//
நிறைய பேர் ரோகிணி மேடத்துக்கு வாழ்த்து சொல்லிட்டதால நாம தூதரக கடவுச்சீட்டு இன்ன பிற சேவைகளைப் பார்ப்போம்.ஒரே விதமான மனித திறமைகள் அரசு நிறுவனமென்றால் மெத்தனமும்,தனியார் துறை என்றால் ஆற்றலும் வெளிப்படுவதன் காரணம் என்ன?
வணக்கம் நண்பரே. உங்கள் பதிவு படித்தேன். இது போன்ற நல்ல பதிவுகள் வருதுவது அதிகம் குறைவு. துபாயில் நடக்கும் நிகழ்வுகள் மற்ற அமீரகத்தில் உள்ள நண்பர்கள் அறிய இது போன்ற பதிவுகள் உதவுகிறது. தொடர்ந்து எழுதுங்கள்.. வாழ்த்துக்களுடன் வீரா...
ராசல்கைமா
சவுதியிலும் இது போல் தான். மற்றபடி கலை நிகழ்ச்சி எல்லாம் இங்கே நினைத்து கூட பார்க்க முடியாது. வாழ்த்துக்கள் ரோஹிணி மேடம்!!
//ரகு உடல் நலம் குன்றியிருந்த பொழுது நான் கொஞ்சம் கவனித்திருக்கலாமோ? என்ற எண்ணம் வருகிறது.//
இதை பொதுவில் சொல்ல முதலில் ஒரு மனசு வேண்டும்.
//ஏண்டா செந்திலு.. நடக்கறதப் பத்தி பேசு..)//
அதானே...ஏங்க செந்திலு....
ஓ... அந்தப்பாடல் ரோகிணியோடதா... சூப்பர்...
நல்லவேள இங்கண வேலபாக்காம இருந்தீங்க... நம்ம நாட்டுல பிறப்பு சான்றிதழ் வாங்குறதுக்குள்ள ஒரு வயசு ஆயிடும்....
நல்ல நிகழ்வு. நல்லவற்றிக்கு எப்போதுமே நம்ம மக்களின் ஆதரவு குறைவு என்பது தான் வருத்தமான விசயம்.
மகளிர் தின நிகழ்ச்சிகள்(இனியொரு விதி செய்வோம்) அனைத்தும் மிக அருமை....வித்தியாசமாக இருந்தது....ரோகினியின் அனுபவமான உரை அனைவரையும் நிமிரவைத்தது....
பதிவு சூப்பர் செந்தில்.
அமீரகத் தமிழ்மன்றத்தினருக்கு நன்றி.
@@ கதிர்.
நன்றிங்க.
@@ ஸ்டார்ஜான்
நன்றிங்க.
@@ பிரபாகர்,
நன்றிங்க.
சிங்கையிலும் தூதரகப் பணிகள் துரிதம் என்று அறிந்ததில் மகிழ்ச்சி.
@@ வண்ணத்துப்பூச்சியார்.
நன்றிங்க.
@@ சித்ரா,
நன்றிங்க.
@@ சங்கர்,
அமீரகம் என்றால் எங்கே? வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க.
@@ மலர்,
உங்கள் கருத்திற்கு நன்றிங்க. வியாழன் அன்று நடைபெற்ற முந்தைய நிகழ்ச்சிக்கு சரியான நேரத்தில் பலரால் வர முடியாததால் வெள்ளியன்று வைத்திருக்கிறார்கள்.
இணையத்தில் இணைத்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. இணைத்திருந்தால் சுட்டியைப் பகிர்கிறேன்.
@@ ராஜ நடராஜன்,
தனியர் நிறுவனங்களில் இருப்பது போல பணித் திறனை அளவெடுப்பது இல்லை என்று நினைக்கிறேன். மற்றொன்று Key Performance Indicators என்று அளவுகோல் இல்லததே காரணம்.
மெத்தனம் என்பதை பூசி முழுகியுள்ளேன்.
நன்றிங்க.
@@ விடுதலைவீரன்,
நன்றிங்க.
@@ ஹரீகா,
நன்றிங்க.
@@ க.பாலாசி,
இல்லீங்க பாலாசி. என் மகனின் பிறப்புச் சான்றிதழை ஒரு வாரத்தில் கொடுத்தனர் உடுமலை நகராட்சியினர். 30 ருபாய் கட்டணத்துடன் ;))
நன்றிங்க.
@@ அன்பு,
நன்றிங்க.
@@ கிளியனூர் இஸ்மத்,
நன்றிங்க இஸ்மத் அண்ணே.
ரோகினி அவர்களுக்கும், அமீரகத் தமிழ் மன்றத்தினர்க்கும் வாழ்த்துத் தெரிவித்த அன்பர்களுக்கு நன்றி.
மிக்க நன்றி செந்தில். ரோஹினி ஒரு சமூக சேவகி, இயக்குனர், தயாரிப்பாளர், தொடர்களுக்கு திரைகதை வசனம் எழுதியவர், பல நடிகையின் உணர்வில்லாத நடிப்புக்கு உரமாக தன் பின்னணி குரலை தருபவர், பாடலாசிரியை, நடிகை மட்டுமல்லாது ஒரு சிறந்த தாயும் கூட. அவருக்கென்று ஒரு தனிப் பதிவே எழுதலாம்.
நல்ல மனிதர்கள் எந்த நிலையிலும் அடையாளம் காண்ப்பட்டு முன்னிருத்தப்பட வேண்டும்.அந்த வகையில் உங்கள் பதிவு பாராட்டுக்குரியது.
Post a Comment