அமெரிக்காவில் உள்ள நிறுவனம் அண்மையில் அறிவித்திருந்த "ஐ-பேட்" அமெரிக்காவில் உள்ள வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்க ஆரம்பித்துள்ளது. முன்பதிவு செய்திருந்த 5 லட்சம் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கும் ஏப்ரல் இரண்டாம் தேதி கிடைத்துள்ளது - செய்தி!!
இதைப் படித்த யோக்கியர்கள் கட்சித் தலைவர் புலிகேசி தன் கட்சிச் செயலாளர் மங்குனியை அழைக்கிறார்...
புலிகேசி: எங்கே சென்றீரைய்யா நீர்? எவ்வளவு நேரம் உன்னைத் தேடுவது?
மங்குனி: என்ன ஆச்சு தலைவரே? நீங்கள் ஆட்சி அமைப்பது போல கனவு ஏதாவது கண்டீரா?
புலிகேசி: ம்ம்ம்... என்னை "மன்னர் மன்னா"வென்று கூப்பிடுமாறு எத்தனை முறை கூறியுள்ளேன்.. உன்னை..
மங்குனி: (இதுக்கு ஒன்றும் குறைச்சலில்லை) மன்னித்துவிடுங்கள் மன்னர் மன்னா?
புலிகேசி: இன்று செய்தித்தாளைப் பார்த்தாயா மங்குனி?
மங்குனி: என்ன மன்னா? நீங்கள் நடிகை சரசாவோடு ஜல்சா பண்ணியது வெளியாகிவிட்டதா?
புலிகேசி: சே.. சே... நல்ல விசயம் சொல்ல வந்தால் சரசா.. கிரசானுட்டு... இன்றைய செய்தித் தாளில் அமெரிக்காவில் உள்ள ஆப்பிள் நிறுவனம் ஐ-பேட் என்னும் கருவியை வெளியிட்டுள்ளது. அதைப் பார்த்ததால் தான் கூப்பிட்டேன்..
மங்குனி: ஐ-பேட் என்றால் கிண்டில்(KINDLE)ற்குப் போட்டியாக வந்துள்ளதே அதுவா?
புலிகேசி: என்னய்யா? என்னப் பார்த்துக் கிண்டல் நக்கல் என்றெல்லாம் பேசுகிறாய்?
மங்குனி: இல்லை மன்னா.. ஆப்பிள் நிறுவனத்திற்கு எப்படி "ஐ.பேட்"டோ, அமேசான்(AMAZON) நிறுவனத்திற்கு கிண்டில். சரி.. நமக்கும் ஐ-பேட்டிற்கும் என்ன சம்பந்தம்? அரசியல்வாதிக்கும் நேர்மைக்கும் உள்ள சம்பந்தம் போல...??
புலிகேசி: ம்ம்ம்... உன்னை தலைகீழாகக் கட்டிவிட்டால் தான் சரியாக வருவாய்... கேளும்..
மங்குனி: ??
புலிகேசி: இந்த 'ஐ.பேட்'ஐ செய்தித்தாளாகவோ, புத்தகமாகவோ பயன்படுத்திக்கொள்ளலாமாம்..
மங்குனி: ஆ மன்னா புரிந்துவிட்டது. இந்த 'ஐ-பேட்'ஐ வைத்துப் படித்து நீங்கள் "டாக்டர்" பட்டம் வாங்கிவிடலாம்!! அருமையான யோசனை!!
"பொளீர் பொளீர்"ரென மண்டையில் மங்குனியைக் குட்டிவிட்டு..புலிகேசி தொடர்ந்தார்..
புலிகேசி: சென்ற தேர்தலில் போது அ.ஆ.இ.ஈ.கட்சி... வீட்டுக்குவீடு செல்போன் கொடுக்கிறேன் என்று கூறி "ஆச்சி"யை.. சே.. "ஆட்சி"யைப் பிடித்தார்கள் அல்லவா? அது போல.. இந்த தேர்தலிற்கு நாம் ஒவ்வொரு மாணவருக்கும் "'ஐ-பேட்'ஐ வழங்கிறோம்" என்று அறிவிப்போம்!! எப்படி என் ராஜதந்திரம்?
மங்குனி: (இதுக்கொன்னும் குறைச்சலில்லை) உங்களுக்கு எப்படி இந்த யோசனை வந்தது?
புலிகேசி: கழிவறையில் அமர்ந்து கொண்டு தூங்கிய பொழுது.....
மங்குனி: (ஆரம்பிச்சிட்டார்யா..) அது சரி மன்னா.. இதனால் நமக்கென்ன பலன்?
புலிகேசி: சரியான மங்குனி என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறீரய்யா நீர்!! இப்பொழுதெல்லாம் மக்கள், என்ன இலவசமாகக் கொடுக்கிறோம் எவ்வளவு பணம் கொடுக்கிறோம் என்பதைப் பார்த்துத் தான் ஓட்டே போடுகிறார்கள்!! அதற்காகத் தான் இந்த ஏற்பாடு!!
மங்குனி: அத்தனை "ஐ-பேட்"ஐ இலவசமாக எப்படி வழங்குவீர்கள்?
புலிகேசி: அதற்கும் யோசனை உள்ளது. மத்திய அரசு "பள்ளிக்கல்வியை அடிப்படை உரிமையாக்கும்" சட்டம் போட்டுள்ளது. இப்பொழுது எப்படி மாயாவதி பணம் இல்லை என்கிறாரோ, அதே போல நாமும் கூறி பணம் வாங்கிவிடுவோம். பிறகு ஆப்பிள் நிறுவனத் தலைவர் "ஸ்டீவ் ஜாப்ஸ்"ற்கு காஞ்சிபுரம் அருகில் தொழிற்சாலை அமைக்க 2000 ஏக்கர் இடத்தை 200 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போட்டால் தீர்ந்தது. எப்படி என் திட்டம்?
மங்குனி: மன்னா? காஞ்சிபுரம் அருகே விவசாய நிலங்கள் உள்ளதே.. எப்படி?
புலிகேசி: இந்தப் புலிகேசிக்கு கொடுத்த வாக்கு தான் முக்கியம். விவசாயம்.. மத்ததெல்லாம்.. அப்புறம் தான்.
மங்குனி: மன்னா.. இராஜதந்திரத்தில்.. அ.ஆ.இ.ஈ. கட்சியையே வென்றுவிடுவீர் போல??
புலிகேசி: மங்குனி.. தேர்தலிற்கு முன்பாக நான் ஸ்டீவைச் சந்திக்க வேண்டும். ஏற்பாடு செய்!!
மங்குனி: ஸ்டீவ் எங்கே.. நாம் எங்கே? இன்னும் ஆட்சிக்கே வரவில்லை. எதற்காக ஸ்டீவ்?
புலிகேசி: விசயம் இருக்குதுய்யா!! அந்த ஆள். 5 லட்சம் பேருக்கும் 'ஐ-பேட்'ஐ.. வீட்டிற்கே சென்றடையும் படி செய்திருக்கிறார். அது எப்படின்னு தெரிஞ்சுகிட்டா..
மங்குனி: புரிஞ்சிடுச்சு! தேர்தல்ல தோத்துட்டா அவர் கம்பெனி பொருட்களுக்கு விநியோகஸ்தர் ஆயிடலாம் தானே? நல்ல யோசனை!!
திரும்பவும்.. "பொளீர் பொளீர்"ரென மங்குனியின் மண்டையில் அடித்துவிட்டு..
புலிகேசி: தேர்தலின் போது.. வாக்காளர்களுக்குப் பட்டுவாடா செய்யும் பணத்தில் பாதியை கட்சிச் செயலாளர்களே சுருட்டிவிடுகிறார்களாம். இவரிடம் தொழில்நுட்பத்தைத் தெரிந்துகொண்டால்.. ஒற்றைச் சாளர முறையில் (Centralised Distribution System ) பணத்தைப் பட்டுவாடா செய்துவிடலாம்.. எப்படி?
மங்குனி: (ம்ம்ம்ம்... நமக்கிருந்த ஒரு வாய்ப்பும் போய்விடும் போலிருக்கே...)
புலிகேசி: நீ என்ன யோசிக்கிறாய் என்று புரிகிறது மங்குனி!! முதலில் ஸ்டீவ் ஜாப்ஸை என்னிடம் பேசச்சொல்..
........
ஸ்டீவ் ஜாப்ஸிடம்.. தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்ற மங்குனிக்குக் கிடைத்த செய்தி.. திடுக்கிடச் செய்தது..
மங்குனி: மன்னா... தொலைக்காட்சியில் வரும் சூடான செய்தியைப் பார்த்தீர்களா?
புலிகேசி: நம்மிடம் ஸ்டீவ் பேசுப்போவது அதற்குள்ளே செய்தியாகிவிட்டதா?
"காஞ்சிபுரத்தில் தொழிற்சாலை அமைப்பதைப் பற்றி அ.ஆ.இ.ஈ கட்சித் தலைவர் ஆப்பிள் நிறுவனத் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸுடன் ஆலோசனை"..
புலிகேசி:??????
o
15 comments:
Iphone வாங்கி ஏமாந்தேன்... இப்போதைக்கு NO!
ஆஹா. இது புதுசா இருக்கே. :))
kalakkal comedy
இங்க என்ன நடக்குது??? :)
அடடா...
என்னா நக்கலு..
என்னா உள்குத்து...
கேர்புல்லா இருங்க...
துபாய்க்கு ஒட்டகத்த அனுப்புனாலும் அனுப்புவாய்ங்க....
வெரைட்டி வெரைட்டியாய் அசத்துகிறீர்கள். வரலாறு, விஞ்ஞானம், அரசியல் என எல்லாம் கலந்து... அருமை... இந்த கான்செப்டில் அடிக்கடி எழுதுங்கள்.
பிரபாகர்...
புதிய செய்தி சொல்லும் நுட்பம் பிடிச்சிருக்குது:)வாழ்த்துக்கள்.
அரசியலும் அறிவியலும் அருமை
ஐ-பேட் குறித்து அதிக விவரங்கள் இருக்கும் என்று வந்தேன். புலிகேசி, மங்குனின்னு என்ன இதெல்லாம், புது முயற்சியா?
ha,ha,ha,ha..... எதுனாலும் பேசி தீத்துக்கோங்க ......!!!
@@ பழமைபேசி..
ஓ.. ஏற்கனவே நீங்க அடிபட்டிருக்கிறீங்களா? அது சரி..
@@ வானம்பாடிகள்,
ஆமாங்க... கொஞ்சம் புதுசா...
@@ ஹாய் அரும்பாவூர்,
நன்றிங்க.
@@ பிரதாப்.
அத ஏன் கேட்கறீங்க
@@ கதிர்,
சரிங்க.
@@ பிரபாகர்,
முயற்சி செய்யறேங்க.
@@ ராஜ நடராஜன்
நன்றிங்க.
@@ பின்னோக்கி,
நன்றிங்க
@@ ஹூசைனம்மா,
மன்னிக்கவும். ஆமாங்க.. புது முயற்சி தான்.
@@ சித்ரா,
சரிங்க. நன்றிங்க.
அய்யோ மன்னிப்பெல்லாம் வேண்டாங்க.
"காஞ்சிபுரத்தில் தொழிற்சாலை அமைப்பதைப் பற்றி அ.ஆ.இ.ஈ கட்சித் தலைவர் ஆப்பிள் நிறுவனத் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸுடன் ஆலோசனை"..
புலிகேசி மன்னா செந்திலை பொது செயலாளர் ஆக்கிவிடுங்கள்
nice comady
ஐ-பேட் குறித்து இன்னும் கொஞ்சம் விபரங்களைச் சேர்த்திருக்கலாம். டெக்னிகல் பதிவில் அரசியல் கலந்து கொஞ்சம் நீர்த்துவிட்ட உணர்வு.
Post a Comment