Monday, May 3, 2010

புலிகளை எப்படி காப்பாற்றுவது?

"புலிகளைக் காப்பாற்றுவோம்! இந்தியாவில் இன்னும் 1411 (??) புலிகளே உள்ளன!!" தோனியைப் போன்ற விளையாட்டு வீரர்கள் முதற்கொண்டு ஆங்கிலச் செய்திச் சேனல்கள் வரை பரவலாக இதே பேச்சு தான்!!



ஓரிரு நூற்றாண்டுகளுக்கு முன்பு 40 ஆயிரமாக இருந்த புலிகளின் எண்ணிக்கை இன்று வெறும் 1411(-1) தான் உள்ளதாம். திடீரென்று விழித்துக் கொண்டதைப் போல இப்பொழுது எங்கும் புலிகளைப் பற்றிய விழிப்புணர்வுச் செய்திகள். இப்பொழுதாவது செய்திகள் வருகின்றன என்பது நல்ல விசயம்.

உண்மையிலேயே விழித்துள்ளோமா? அல்லது விழிப்பது போல ஒரு மாயையை ஊடகங்கள் உருவாக்கி வருகின்றனவா?

என்.டி.டி.வி. போன்ற செய்திச் சேனல்களைப் பார்த்தால் புலிகளைக் காப்பாற்றும் திட்டம் என்கிறார்கள். கிரிக்கெட் வீரர் தோனி கேமராவின் முன்பு "புலிகளைக் காப்பாற்றுங்கள்!!" என்கிறார்.

இவர்/கள் யாரிடம் சொல்கிறார்/கள்?

கிரிக்கெட் ரசிகர்களிடமா? அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கும் சாமான்ய மக்களிடமா?

சாமான்ய மக்களுக்கும் புலிகளைக் காப்பாற்றுவதற்கும் என்ன தொடர்பு?

என் ஊரான உடுமலைப்பேட்டை இருப்பது இந்திரா காந்தி புலிகள் சரணாலயத்திற்கு மிக அருகில். நான் எத்தனையோ முறை வால்பாறைக்கும், டாப் ஸ்லிப்பிற்கும், மூணாரிற்கும் இச்சரணாலயத்தின் வழியாகச் சென்றிருக்கிறேன். நான் ஒருமுறை கூட புலிகளைப் பார்த்ததில்லை. நான் புலிகளைப் பார்த்ததெல்லாம் வண்டலூரிலும், மற்ற வனவிலங்குகள் (காப்பகம்??) கண்காட்சியகங்களில் தான்!!



வால்பாறை அருகே உள்ள தேயிலைத் தோட்டங்களில் சிறுத்தைகளும், சில சமயங்களில் புலிகளும் வந்துள்ளதாக என் நண்பர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். ஆனால் அவை கூட ஏதோ தடம் மாறி வந்தவையே!! இது போன்ற தருணங்களில் தான் சாமான்ய மக்களால் புலிகளின் உயிரிற்கு ஆபத்து நேர வாய்ப்புள்ளது. இதை மனித-விலங்குகள் ( Human-Animals conflict ) தொடர்பால் ஏற்படும் சண்டைகள் என்பர்!! இது போன்ற சண்டைகளைத் தவிர்க்க சாமான்யர்களால் என்ன செய்ய முடியும்?

தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதை விட்டுவிட்டு வேறிடத்திற்கு புலம்பெயர வேண்டுமா? தேயிலைத் தோட்டங்கள் யார் கட்டுப்பாட்டில் உள்ளன? சாமான்ய மக்களின் கட்டுப்பாட்டிலா?

தமிழகம், கேரளம், கர்நாடகம் போன்ற மாநிலங்களில் இது போன்ற பிரச்சனைகள் என்றால், மத்தியப் பிரதேசம், ஒரிசா, மேற்கு வங்கம் போன்ற இடங்களில் வேறு மாதிரியான பிரச்சனைகள்!!

இங்கே புலிகள் சரணாலயம் அமைந்துள்ள இடங்கள் எல்லாம் கணிம வளம் நிறைந்த பகுதிகளும், நிலக்கரிச் சுரங்கங்களும் நிறைந்த பகுதிகளும் தான். பன்னா புலிகள் சரணாலயத்தில் புலிகள் இல்லாமல் போனதற்குக் காரணம் பன்னாவில் உள்ள கணிம வளங்கள் தான். "மத்தியப் பிரதேசப் பகுதிகளில் உள்ள மலைவாழ் மக்களை வேறிடத்திற்கு குடியமர்த்தும் வேலை நடைபெறுகிறது" என்ற செய்தியைப் பார்த்தேன். இவர்களை காட்டை விட்டு வெளியேற்றுவது புலிகளைக் காக்கவா அல்லது ...??

புலிகள் சரணாலயங்களில் சுற்றுலாவைக் கட்டுப்படுத்தும் முடிவையும் அரசு எடுத்துள்ளது. சரணாலயங்களின் அருகில் குடில்கள், விடுதிகள் என கட்டுமானப் பணிகளைக் குறைக்க இந்த முடிவு உதவும் தான். ஆனால், சுற்றுலாவாசிகள் வராமல் போவது சமூக விரோதிகளுக்கு இன்னும் எளிதாகக் கூடுமே என்ற அச்சமும் வருகிறது.



ஆப்பிரிக்க நாடுகளில் அனுமதிப்பதைப் போல ( Eco Tourism ) இயற்கை சார்- சுற்றுலாவை அனுமதித்தால் நல்லது. இது போன்ற சுற்றுலாவை அனுமதித்தால் விழிப்புணர்வு ஏற்படுவதுடன், சுற்றுப்புறத்தின் மீது கவனமும் அதிகரிக்கும். மேலும், வனங்களை அழிப்பதை தடுக்கும் வழியை அரசாங்கம் எடுக்கும் வரையில் எந்த விதமான முயற்சியும் பலனில்லாமலே போகும்.

இன்று புலிகள் என்றால் இன்னும் சில வருடங்களில் யானைகள்!! "யானைகளைக் காப்பாற்றுங்கள்" என்று சில வருடங்கள் கழித்து மற்றொரு கிரிக்கெட் வீரர் கூறுவதையும் பார்க்க வேண்டியதிருக்கும்.

o

தோனி அண்ணே, நீங்க.. "புலிகளைக் காப்பாற்றுங்கள்" என்று சொல்வது FANஓட ஸ்பெல்லிங் கேட்கற மாதிரி தாங்க இருக்கு!!

ஆங்கிலச் செய்திச் சேனல்கள் "புலிகளைக் காப்பாற்றுவதை" ஏதோ கடமைக்குச் செய்யாமல், தொடர்ந்து புலிகளின் நிலையைப் பற்றி சில வருடங்களுக்குத் தொடர்ந்தால் நன்றாக இருக்கும்.

o

13 comments:

ஈரோடு கதிர் said...

அட யானைய விடுங்க...

நாளைக்கு நாயை காப்பாத்துங்கன்னு ஒரு லோகோ டிசைன் பண்ணிட்டு வந்து போஸ் கொடுப்பானுங்க...

தேனி பக்கம் நியூட்டிரினோ கம்பெனிக்கு இடம் ஒதுக்கத் திறியறவங்கதானே புலிய காப்பாத்துங்கன்னு போஸ் கொடுக்கிறாங்க...

vasu balaji said...

/நாளைக்கு நாயை காப்பாத்துங்கன்னு ஒரு லோகோ டிசைன் பண்ணிட்டு வந்து போஸ் கொடுப்பானுங்க.../

அதென்னுங் கதிர் கூடப்பந்துன்னா புடிக்கிது. கிரிக்கட்டான்னா கசக்குது:)).

எப்பிடியோ ஊருல சனங்களையும் வாழவிடுறதில்ல. காட்டுல மிருகங்களையும் வாழ விடுறதில்ல. அவன புடிக்கிறேன் இவன புடிக்கிறேன்னு காட்டையெல்லாம் அழிச்சி மொட்டையாக்குறானுவ. எங்கயாச்சும் ரெண்டு புலி தப்பிச்சி நின்னு இந்த மனுசப்பய அழிஞ்சி போறானே எப்புடியாவது காப்பாத்தணும்னு காப்பாத்தினா உண்டு.

Chitra said...

I was just writing something similar - story about tigers. Any way, I will go ahead with mine. Your writing style is cool!

பிரபாகர் said...

புலிங்கள பாத்து நாம பயந்தது போய் நம்ம பாத்து அந்த இனமே அழியிற நிலைமையில.... நினைக்கும்போதே வேதனையா இருக்கு... இதுல தேசிய விலங்கு வேற...

பிரபாகர்...

settaikkaran said...

சில விஷயங்களிலே விளம்பரம் தான் தூக்கலா இருக்குதோன்னு ஒரு சந்தேகம் இருந்தது. இப்போ உறுதியாயிடுச்சு! நல்ல பகிர்வு!

கந்தப்பு said...

தமிழக முதல்வர் கருணாநிதிக்கு சொன்னால் 2 மணித்தியாலம் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து புலிகளைக் காப்பாற்றுவார் அல்லது முரசொலியில் சோனியாவுக்கு கடிதம் எழுதிக் காப்பாற்றுவார்.

ஹுஸைனம்மா said...

வீட்டுக்கு ரெண்டு புலி வளர்த்துக் கொடுத்தாப் போதுமாமா?

க.பாலாசி said...

//வனங்களை அழிப்பதை தடுக்கும் வழியை அரசாங்கம் எடுக்கும் வரையில் எந்த விதமான முயற்சியும் பலனில்லாமலே போகும்.//

உண்மைங்க.... சந்தன மரங்களுக்கு கொடுக்கிற முக்கியத்துவத்த காட்டுல உள்ள எல்லாத்துக்கும் கொடுத்தா நல்லாயிருக்கும்....

INDIA 2121 said...

வாழ்த்துகள்
VISIT MY BLOG
www.vaalpaiyyan.blogspot.com
JUNIOR VAALPAIYYAN

செ.சரவணக்குமார் said...

மிக நல்ல பதிவு செந்தில். சுற்றுச்சூழல் ஆர்வலரும் எழுத்தாளருமான சு.தியோடர் பாஸ்கரன் அவர்களின் கட்டுரையைப்போல சமூக அக்கறையோடு கூடிய உங்களின் இந்தப் பதிவு மிக முக்கியமான ஒன்று.

தோனி டி.வியில் தோன்றி சொல்வது யாருக்காக எனும் கேள்வி எனக்குள்ளும் எழுந்தது.

Vetirmagal said...

Well said.

How come we did not even think about this question?. We too were bewildered why should they spread such a message to ordinary people? then we ignored it, as we ignore all other ads.

:-)

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

@@ கதிர்,

நன்றிங்க

@@ வானம்பாடிகள்,

கதிர்க்குத் தெரிவித்துள்ள கருத்தில் ஏதோ உள்குத்து இருக்கும் போல??

@@ சித்ரா,

நன்றிங்க

@@ பிரபாகர்,

நன்றிங்க

@@ சேட்டைக்காரன்,

நன்றிங்க

@@ கந்தப்பு,

நல்லா சொன்னீங்க.

@@ ஹூசைனம்மா,

கலக்கல் ஐடியாங்க :))

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

@@ க.பாலாசி,

நன்றிங்க

@@ வால் பைய்யன்,

நன்றிங்க

@@ செ.சரவணக்குமார்,

நன்றிங்க

@@ வெற்றிமகள்,

நன்றிங்க.

Related Posts with Thumbnails