அதிகாலைச் சிற்றுந்துப் பயணம்
அழகான சாலை சீரான வேகம்
இதமான வாகன அதிர்வில்..
இதமான குறுந்தூக்கம்
வாகன நிறுத்தத்தில்
விலகியது ஜன்னல் திரை
கதிரொளியில் கலைந்தது குறுந்தூக்கம்
அகம்சுளித்துப் புறம் பார்த்தான்
சாலையோரத்தில்
புல்வளர்க்கும் தன்னாட்டவரை!!
**
பரபரப்பான பேருந்து நிறுத்தம்
வாகனத்தை நோக்கித் தாயும் மகளும்
தொலைவில் தெரிகிறதொரு சிற்றுந்து
தவிக்கும் தாய் கலங்கும் மகள்
சட்டென முத்தமிட்டாள் மகளின் கன்னத்தில்
விழிகள் அனைத்தும் வாகன திசையில்
இருவிழிகள் மட்டும் மாற்று திசையில்!!
**
பளபளக்கும் பல்பொருள் அங்காடி
உயிரற்ற சிரிப்புடன் சிப்பந்திகள்
புன்முறுவலால் பதிலளித்தான் பொய்யாக
இறுக்கத்துடன் தேடினான் வேண்டுபொருளை
தள்ளுவண்டியில் சிரித்தது உயிரோவியம்
அலைபேசியில் பார்த்துப் புன்னகைத்தான்
மழலை கொஞ்சும் மகனைப் பார்த்து!!
10 comments:
/சட்டென முத்தமிட்டாள் மகளின் கன்னத்தில்
விழிகள் அனைத்தும் வாகன திசையில்
இருவிழிகள் மட்டும் மாற்று திசையில்!!/
தூக்கிப் போட்டது.
/தள்ளுவண்டியில் சிரித்தது உயிரோவியம்
அலைபேசியில் பார்த்துப் புன்னகைத்தான்
மழலை கொஞ்சும் மகனைப் பார்த்து!!
புரியுது:)
அழகான நடையில், ஒரு அருமையான கவிதை. :-)
ரொம்ப நல்லாருக்கு...உணர்வுகளை புரிஞ்சுக்க முடியுது!
கவிதை அருமை நண்பரே,பன்முக திறமைகள் உங்களிடம் இருந்தும் அடக்கம் தான் வெளியே தெரிகிறது.வாழ்த்துக்கள்
அருமையா இருக்கு செந்தில்..
இதையும் நீங்கள் விட்டு வைக்கவில்லையா! நன்றாக துவக்கியிருக்கிறீர்கள்! நிறைய இதுபோல் எழுதுங்கள்!
பிரபாகர்...
நல்லாருக்கு. வாழ்த்துகள்.
இரண்டும், முதலும் மனதுடன் ஒட்டிக்கொண்டது... நிதர்சனப்பார்வை....
உங்களுக்கு கவிதையும் நன்றாக வருகிறது
சொல்லவே இல்ல. கவிதையிலும் கலக்கக்குரியேடா மாப்ள! படிச்சுட்டு நானும் ரெண்டு வரி எழுதிருக்கேன்.
படிச்சுட்டு புரியுதான்னு சொல்லு. ;)
Post a Comment